ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

+3
விமந்தனி
கே. பாலா
பாலாஜி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by பாலாஜி Mon Nov 07, 2016 6:02 pm

சிறு வயதிலேயே குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கம் என்ற விதையை மனதில் விதைத்தால்தான், அவர்கள் பெரியவர்களாகி சம்பாதிக்கும்போது, மாதம் முடிவதற்கு முன்பே பேலன்ஸ் ‘நில்’ என்றில்லாமல், ‘சேவிங்ஸ் ஃபுல்’ ஆக இருக்கும்’’ என்கிறார், மயிலாடுதுறையைச் சேர்ந்த சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் ‘பேஸ்’ மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ.ராமன். சேமிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்க சொல்லும் டாப் 10 வழிமுறைகள் இங்கே!

1. சேமிப்புத் திட்டங்கள் பற்றியும், குடும்பத்தில் இப்போது என்ன வகையில் சேமித்து வருகிறோம் என்பதையும் குழந்தைகள் முன்னிலையில் பேசுங்கள். அது, ‘நாமும் சேமிக்கணும்’ என்கிற எண்ணத்தை அவர்களிடம் தூண்டும்.

2. குழந்தைகளிடம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவரச் சொல்லும்போது, அவர்கள் ‘கமிஷன்’ கேட்பார்கள். அந்த கமிஷனை அவர்கள் சேர்த்துவைக்க, கையோடு ஒரு உண்டியல் வாங்கித் தாருங்கள். உண்டியல் நிரம்பியவுடன், அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுத்து, சேமிக்கக் கற்றுத் தாருங்கள். இப்படி சேமித்த பணத்தில் அவர்களுக்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

3. உண்டியலில் சேமிக்கத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ஏதேனும் ஒரு விளையாட்டுப் பொருளைப் பார்த்து, உண்டியலில் சேமித்து வைத்த காசில் அதை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பது குழந்தைகளின் இயல்பு. அப்போது, ‘தரமான பொருளை பிற்பாடு வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லி சமாதானப் படுத்துங்கள். பிறகு நீங்கள் சொன்னபடியே தரமான விளையாட்டுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். இது, பொருட்களைத் தரம் பார்த்து வாங்கும் பழக்கத்தை அவர்களிடம் உருவாக்கும்.  

4. ஷாப்பிங் செல்லும்போது, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அநாவசிய, ஆடம்பரப் பொருட்கள் தவிர்த்து, அவசியத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கக் கற்றுக்கொடுங்கள். கடைக்காரரிடம் பணம் தரும்போது, குழந்தைகளிடம் தந்து தரச்  சொல்லுங்கள். இவையெல்லாம் செலவு, சிக்கனம் பற்றி அவர்களைப் புரிய வைக்கும்.

5. ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கான பட்ஜெட் போடும்போது, என்னென்ன வாங்கலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பேசும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.  அவர்களிடமும் ஐடியா கேளுங்கள். வீட்டு பட்ஜெட்டுக்கு ஆகும் செலவினை அவர்களிடம் விளக்கிச் சொன்னால், அடிக்கடி அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதை அவர்களே குறைத்துக்கொள்வார்கள்.

6. என்றைக்காவது ஒருநாள் ஹோட்டலுக்குச் சென்றால் பரவாயில்லை. அடிக்கடி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் உணவை வீட்டில் சமைத்துத் தந்து, அதே உணவை ஹோட்டலில் சாப்பிட்டால்  எவ்வளவு பணம் கூடுதலாகச் செலவாகி இருக்கும் என்கிற கணக்கை பக்குவமாகச் சொல்லுங்கள்.

7. எங்கு செல்வதாக இருந்தாலும் முடிந்தவரை ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்வதைவிட பேருந்தில் சென்றால், நிறைய பணம் மிச்சமாகும். கொஞ்சம் வசதிக் குறைவு என்றாலும் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை சிறுவயது முதலே சொல்லிக்கொடுங்கள்.  

8. பாக்கெட் மணி கொடுப்பது தவறில்லை. ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ‘இதுதான் ஒரு மாதத்துக்கான பாக்கெட் மணி’ என்று சொல்லிக் கொடுத்து, அதற்குள் செலவைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள்.

9. விலை உயர்ந்த போன், வீடியோ கேம்ஸ், விளையாட்டுப் பொருட்களைக் கேட்கும்போது, அதனால் படிப்பு கெடாதபடி இருக்குமா என்று பாருங்கள். அதை சரியாக பயன்படுத்தும் வயதில் வாங்கித் தந்தால் பிரச்னை இருக்காது.

10. விலை உயர்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும், குழந்தை கேட்கிறானே என்பதற்காக வாங்கித் தராதீர்கள்.  அது உங்கள் பட்ஜெட்டுக்கு மீறிய செலவு என்பதை புரிய வையுங்கள். வளர்ந்த பின் அவர்கள் ஆடம்பரச் செலவு செய்யாமல் இருக்க இது உதவும்.

ந.விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by கே. பாலா Mon Nov 07, 2016 6:35 pm

அருமையான யோசனைகள்,,, பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி பாலாஜி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by விமந்தனி Mon Nov 07, 2016 9:42 pm

நல்ல பகிர்வு. குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  1571444738


குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by பாலாஜி Tue Nov 08, 2016 12:29 pm

கே. பாலா wrote:அருமையான யோசனைகள்,,, பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி பாலாஜி
மேற்கோள் செய்த பதிவு: 1226343

பதிவை விட உங்கள் பின்னுட்டம் மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது ...தொடர்ந்து வர முயற்சி செய்யுங்கள் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by T.N.Balasubramanian Tue Nov 08, 2016 2:38 pm

நல்ல யோசனைகள் நல்ல பகிர்வுதான் .
எவ்வளவு பெற்றோர்கள் நடைமுறைப்படுத்த விரும்புவார்கள் .
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போய் சம்பாதிக்கின்றனர் .
அலுத்து சலித்து வீடு வரும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பை சமாளிக்க
அவர்களுக்கு நவீன கேட்ஜெட்கள் வாங்கி தருகின்றனர் .
பையன்களும் அதை பள்ளிக்கூடம் கொண்டு சென்று மற்றவர்களுக்கு காண்பிக்க,
மற்ற பையன்கள் அவர்கள் பெற்றோர்களை நச்சரிக்க ................
இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை .

கட்டுரையையும் பகிர்வையும் குறைகூறவில்லை புன்னகை புன்னகை

(நம்முடைய ஸ்மைலி /emoji பட்டம் பெற்றுள்ளார் போலிருக்கே . தலையிலே ஒரு கன்வேகேஷன் தொப்பி தெரிகிறதே !)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 4:13 pm

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  103459460 குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  3838410834
-
குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  7GEHNokLRs2VRsDI5c8w+48p2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by பாலாஜி Tue Nov 08, 2016 5:22 pm

ayyasamy ram wrote:குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  103459460 குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  3838410834
-
குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  7GEHNokLRs2VRsDI5c8w+48p2
மேற்கோள் செய்த பதிவு: 1226448

நான் பதிவு செய்யும் பொழுது இது போன்ற புகைப்படங்களை தவிர்த்து விடுவேன் ... ஆனால் நீங்க சரியாக அந்த புகைப்படங்களை பதிவியேற்றம் செய்து விட்டீர் ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by உமா Tue Nov 08, 2016 5:52 pm

நேற்றுதான் வர்ஷாவிற்கு உண்டியல் வாங்கி கொடுத்தேன் பாலாஜி....சியர்ஸ்

ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா அதிர்ச்சி சிரி சிரி சிரி
நல்ல பதிவு சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by T.N.Balasubramanian Tue Nov 08, 2016 7:08 pm

உமா wrote:நேற்றுதான் வர்ஷாவிற்கு உண்டியல் வாங்கி கொடுத்தேன் பாலாஜி....சியர்ஸ்

ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா அதிர்ச்சி சிரி சிரி சிரி
நல்ல பதிவு சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1226462

பாலாஜி அறிவுரைபடி உண்டியல் வாங்கி கொடுத்து இருந்தால் ,
பாலாஜி பணம் தராமல் இருப்பாரா என்ன ?
வர்ஷாவை சமாதானப்படுத்தவும் .

ரமணியன் அய்யோ, நான் இல்லை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by சிவனாசான் Wed Nov 09, 2016 3:13 am

சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த மிகச்சரியான கருத்துக்கள் குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  3838410834
மேலும் சிறுவர்கள் அதாவது 10 வயது ஆனவர்கள் அஞ்சலகங்களில்
ரூ.50 க்கே சேமிப்பு கணக்கை அவர்களே தொடங்கலாம் .வங்கியை
விட அஞ்சலகத்தில் எளிமை, ஆன் லைன் ஆகிவிட்டதால் இந்தியாவில்
ஆன்லைன் வசதி உள்ள எந்த அஞ்சலகத்திலும் பணம் கட்டலாம்.
மாதாமாதம் 10 ரூ செலுத்தி வளரும் மாத சேமிப்பு கணக்கைக்கூட (RD)
தொடங்கலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!  Empty Re: குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum