ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?

3 posters

Go down

 சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Empty சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?

Post by ayyasamy ram Tue Oct 25, 2016 6:04 pm

சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்! -
சமூக வலைத்தளங்களில் இந்த கோஷம் கடந்த
சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
-
இந்த ஆவேச தேசபக்திக்கு இரண்டு காரணங்கள்.
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை
தீவிரவாதிகள் கொன்றதற்குப் பின்னணியாக
இருந்தது, ‘ஜெய்ஷ் இ மொகமது’ அமைப்பின்
தலைவன் மசூத் அசார்.
-
தடை செய்யப்பட்ட அமைப்பாக இதனை அறிவிக்க
ஐ.நா.வில் இந்தியா எடுத்த முயற்சிக்கு சீனா முட்டுக்
கட்டை போட்டது.
-
 சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Cpq5W8MSTanBuLYh0QRH+20
-
அணுசக்தி பொருட்களை சப்ளை செய்யும் நாடுகள்
குழுவில் இணைய இந்தியா முயற்சித்தது.
-
அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளின் ஏகோபித்த
ஆதரவு இருந்தும், சீனா தடுத்ததால் இந்தியா அதில்
இணைய முடியவில்லை. ‘இப்படி எப்போதும் நம்
முதுகிலும் முகத்திலும் குத்திக்கொண்டே இருக்கும்
ஒரு எதிரியின் பொருட்களை நாம் வாங்க வேண்டுமா?
-
சீனப் பொருட்களை வாங்க நாம் கொடுக்கும் பணம்,
மறைமுகமாக நம் நாட்டை சிதைக்கும் தீவிரவாதிகளின்
கைகளுக்குப் போகிறது’ என்பதே இந்தப்
புறக்கணிப்புக்கு அடிப்படைக் காரணம்.
-
---------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Empty Re: சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?

Post by ayyasamy ram Tue Oct 25, 2016 6:05 pm

சீனப்பொருட்களை வாங்கும் எல்லோரையும்
‘தேசபக்தி இல்லாதவர்கள்’ என முத்திரை குத்திவிட
முடியாது. ஏன் வாங்குகிறார்கள் என்பதை கவனிக்க
வேண்டும். பல வண்ணங்களில் வானில் வர்ணஜாலம்
காட்டும் சீன ராக்கெட் பட்டாசு வெறும் 50 ரூபாய்.
-
அதில் இந்தியத் தயாரிப்பு 200 ரூபாய் விலை. கடந்த
2012ம் ஆண்டு ரிசர்வ் வங்கிக் குழு ஒன்று, சீன
இறக்குமதிப் பொருட்களை ஆய்வு செய்தது.
-
‘சீனாவிலிருந்து வந்த பொருட்களில், மூன்றில் ஒரு
பங்கு பொருட்களின் விலை, அதே தரமுள்ள இந்தியத்
தயாரிப்புகளைவிட மலிவு விலையில் இருந்தன’
என்றது அந்த ஆய்வு அறிக்கை.
-
சீனாவிலிருந்து கப்பல்களில் ஏற்றி வரும் செலவு, மொத்த
வியாபாரி வைக்கும் லாபம் என எல்லாவற்றையும் மீறி
சீனத் தயாரிப்புகள் இந்தியப் பொருட்களை விட பல
மடங்கு விலை குறைவாக இருக்கக் காரணம் என்ன?
இதை சரிசெய்யாமல் புறக்கணிப்புகளில் எந்த
அர்த்தமும் இல்லை.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Empty Re: சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?

Post by ayyasamy ram Tue Oct 25, 2016 6:07 pm

வலதுசாரி சிந்தனையுள்ள சில இந்துத்வா தலைவர்கள்
இந்தப் பிரசாரத்தை ஆரம்பித்து வைக்க, மிடில் கிளாஸ்
மத்தியில் இது பரபரப்பாகப் பரவியது.
-
பல நகரங்களில் வர்த்தக அமைப்புகள் ‘சீனப்
பொருட்களை வாங்கி விற்க மாட்டோம்’ என தீர்மானம்
போட்டன. உலக நாடுகளே உற்று கவனிக்கும் அளவுக்கு
இது தீவிரமானது.
-
தீபாவளி நேரத்தில் சீனப் பட்டாசுகளும் எலெக்ட்ரானிக்
பொருட்களும் பெருமளவு விற்கும். இந்த ஆண்டு இவற்றின்
விற்பனை சரிந்துள்ளது. இதுவே இந்தப் பிரசாரத்தின்
வெற்றி.

ஆனால் சீன அரசு பத்திரிகைகள், ‘இந்த பிரசாரத்தைத்
தாண்டியும் அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் தளங்களில்
மூன்றே நாட்களில் 5 லட்சம் ஜியோமி போன்கள் விற்றன’
என எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.
-

இந்தியாவில் ‘சைனா மேக்’ அயிட்டங்கள் இல்லாத
வீடுகளைப் பார்க்க முடியாது. குழந்தைகள் விளையாடும்
பொம்மையிலிருந்து பிளாஸ்டிக் அயிட்டங்கள்,
எலெக்ட்ரானிக் பொருட்கள் என எல்லா இடங்களிலும்
சீனா ஊடுருவியுள்ளது.
-
நுகர்வோர் மின்னணு பொருட்கள், லேப்டாப், சோலார்
மின்சக்தி கருவிகள், பிளாஸ்டிக் பொருட்கள், உரங்கள்,
தொழில் துறைக்குத் தேவையான இயந்திரங்கள் என
பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
-
பட்டாசு, பொம்மைகள், எலெக்ட்ரானிக் அயிட்டங்களை
மக்கள் வாங்காமல் விடுவதால் காங்சூ மற்றும் யிவு என்ற
இரு நகரங்களிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும்
சிறு வியாபாரிகளைத் தாண்டி சீனாவில் பெரிய பாதிப்பு
இருக்காது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Empty Re: சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?

Post by ayyasamy ram Tue Oct 25, 2016 6:08 pm



-
பி.ஜே.பி ஆளும் ஹரியானா மாநில விளையாட்டு அமைச்சர்
அனில் விஜ், ‘சீனப் பொருட்களை புறக்கணிப்போம்’
என ட்விட்டரில் எழுதுகிறார். ஹரியானா மாநில அரசு, ஸ்மார்ட்
சிட்டி அமைப்பது உள்ளிட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக்கு
சமீபத்தில்தான் சீனாவின் ‘வாண்டா’ நிறுவனத்துடன்
67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
புறக்கணிப்பை மக்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா?
-
குஜராத் மாநில வர்த்தகக் கூட்டமைப்பு, ‘சீனப் பொருட்களை
வாங்கி விற்க மாட்டோம்’ என சொல்கிறது. ஆனால் குஜராத்
மாநில பி.ஜே.பி அரசு, துறைமுக நகரங்கள் மேம்படுத்தலுக்கு
சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுகிறது.
-
பிரிட்டிஷ் காலத்தில் இந்தியா பிரிட்டனுக்கு பருத்தியை
ஏற்றுமதி செய்தது. அங்கிருந்து ஆடைகளை இறக்குமதி
செய்தது. இப்போது சீனாவுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி ஆகிறது.
-
அங்கிருந்து இரும்பை இறக்குமதி செய்கிறோம். ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே துருப்பிடிக்காத இரும்புத்தூணை
நிறுவும் வல்லமை பெற்றிருந்த இந்தியர்கள் இன்னும் இரும்பு
இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
-
சீன இரும்பு வராவிட்டால், கடன் வாங்கி வீடு கட்டும் மிடில்
கிளாஸில் ஆரம்பித்து எல்லோரும் காஸ்ட்லி இரும்பை வாங்க
வேண்டும்.
-
இந்தியாவின் மருந்து உற்பத்தித் தொழிற்சாலைகள்,
சீனாவிலிருந்து வரும் கச்சாப் பொருட்களையே 90 சதவீதம்
நம்பியுள்ளன. இவை வராவிட்டால், பல உயிர்காக்கும்
மருந்துகளின் விலை தாறுமாறாக எகிறிவிடும். நாம் எந்த
வல்லரசின் உதவி இல்லாமலும் ராக்கெட் மற்றும் செயற்கைக்
கோள்களையே செய்யும் வல்லமை பெற்றுவிட்டோம்.
-
ராக்கெட் செய்கிறவர்களால் சாதாரண இரும்பை உருவாக்க
முடியாதா என்ன? இதற்கான வழிகளை உருவாக்குவதில்தான்
‘தேசபக்தி’ இருக்கிறது, புறக்கணிப்பில் அல்ல!
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Empty Re: சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?

Post by ayyasamy ram Tue Oct 25, 2016 6:09 pm


சில புள்ளிவிவரங்கள்!

* கடந்த 2011-12ல் இந்தியாவின் மொத்த இறக்குமதியில்
பத்தில் ஒரு பங்கு சீனாவிலிருந்து வந்தது. 2015-16ல்
ஆறில் ஒரு பங்கு சீனாவிலிருந்து வந்தது.

* இந்தியாவில் சீனாவின் முதலீடும் தாறுமாறாக
அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டைவிட 2015ம் ஆண்டில்
6 மடங்கு முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில்
சீனா இந்தியாவில் 5800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

* கடந்த ஆண்டு மட்டும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு
4 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

* ஒரு நாட்டிலிருந்து இறக்குமதி அதிகமாகச் செய்துவிட்டு,
ஏற்றுமதியைக் குறைவாகச் செய்தால் ‘வர்த்தகப்
பற்றாக்குறை’ உள்ளதாகக் குறிப்பிடுவார்கள்.

இந்தியா சீனாலிருந்து இறக்குமதி செய்யும் மதிப்பைவிட
ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 7 மடங்கு குறைவு.
உலகிலேயே மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில்தான் உள்ளது.

* சீனாவிலிருந்து நாம் வாங்குவது அதிகரிக்க, சீனா
நம்மிடமிருந்து வாங்குவது குறைந்துள்ளது. 2011-12ல்
சீனாவுக்கு 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்
ஏற்றுமதி ஆகின. 2015-16ல் இது 58 ஆயிரம் கோடி ரூபாயாகக்
குறைந்துள்ளது.
-
-----------------------------------------

- அகஸ்டஸ்
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Empty Re: சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?

Post by ராஜா Wed Oct 26, 2016 9:50 am

சூடு சொரணை இல்லாத அரசாங்கமும் , பொருளின் தரத்தை விட விலை குறைவாக இருந்தாலே போதும் என்று நினைக்கும் மக்களும் இருக்கும் வரை உலகம் முழுவதும் சீனாவின் தரமற்ற பொருட்கள் இருந்துகொண்டு இருக்கும்.


இங்கு கத்தரிலும் எங்கு பார்த்தாலும் மலிவான தரமற்ற சீன தயாரிப்புகள் பெறுக ஆரம்பித்துள்ளது.
சீன அல்லாத நாடுகள் இப்பல்லாம் தங்களின் தயாரிப்புகள் மீது made in என்று பெரிதாக போடஆரம்பித்துள்ளனர். மக்களுக்கு எளிதாக சீன பொருட்களை ஒதுக்கி தள்ள முடிகிறது புன்னகை விரைவில் இது இந்தியாவிலும் நடக்கும் என்று நம்புவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Empty Re: சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?

Post by T.N.Balasubramanian Wed Oct 26, 2016 1:53 pm

நடந்தால் நல்லது .
மக்களின் ஒத்துழைப்பும் , ஒரு விழிப்புணர்வும் , தேசபக்தியும் அவசியம் .
அரசே கூட இதில் தன் கடமையை செய்யலாம் . இறக்குமதி லைசென்ஸ் எப்பிடி கொடுக்கிறார்கள் ?
இறக்குமதி செய்பவர்கள் நாட்டின் துரோகிகள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா? Empty Re: சீனா தயாரிப்புகளை வாங்காமல் இருக்க முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum