புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
7 Posts - 44%
ayyasamy ram
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
6 Posts - 38%
mohamed nizamudeen
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
3 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
429 Posts - 73%
heezulia
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
8 Posts - 1%
prajai
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தேவி – சினிமா விமரிசனம் Poll_c10தேவி – சினிமா விமரிசனம் Poll_m10தேவி – சினிமா விமரிசனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவி – சினிமா விமரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84944
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 19, 2016 12:14 pm

தேவி – சினிமா விமரிசனம் HK9b7CsxR3qPLnuETgmT+19
-
நாகரிக மனைவிக்குக் காத்திருக்கிறவனுக்கு,
கிராமத்துப் பெண் மனைவியாக வந்தால்…

இறந்து போன ஒரு நடிகையின் ஆவி அவள் உடலில்
குடியேறினால்… அதுதான் ‘தேவி’. மும்பையில்
நண்பர்களுடன் கொட்டமடிக்கிற பிரபுதேவாவிற்கு
எப்பவும் நவநாகரிக பெண்மணிகளே இஷ்ட
தெய்வங்கள்.

பலரிடம் காதலைச் சொல்லிச் சொல்லி அலுக்கிறார்.
பாட்டி சொல்லுக்காக கிராமத்து தமன்னாவை மணக்க
நேரிடுகிறது. மும்பைக்கு வந்து சேர்ந்த மனைவியை,
அவரின் சாயலிலேயே இருக்கும் ஆவி பிடித்துக்கொள்ள…
அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் பரபரப்பு முடிவே
க்ளைமேக்ஸ்!

ஏற்கனவே மிஷ்கின், ‘பேய்கள் மனிதனைவிட ஆபத்து
குறைந்தவை’ எனச் சொல்லிவிட்டதால், இதில் பேயுடன்
பிரபுதேவா போடும் ஒப்பந்தம் வரைக்கும் பார்த்து நாம்
சுலபமாக ரசிக்கிறோம்.

பேயைப் பார்த்து பயப்படாமல் சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால்
போதும் என முடிவெடுத்திருக்கிறார் டைரக்டர் விஜய்.

குறும்புக் காதலன், அப்பாவிற்கு பயந்தவர், தோழன், கணவன்
என அத்தனை அம்சங்களிலும் அசர வைக்கிறார் பிரபுதேவா.
நெடுநாளாக பார்க்க நினைத்திருந்த பிரபுதேவா ஸ்பெஷல்
நடனம் தடாலடி.

அவரின் ஸ்டெப்ஸ் நம்மை மூச்சிரைக்க வைக்கிறது.
கூடவே எமியும் எக்கச்சக்க இளமையில் கலக்குகிறார்.
பிரபுதேவாவுக்கு சீக்கிரம் கைக்கு வரும் காமெடியும் இதில்
குறைவில்லை.
----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84944
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 19, 2016 12:15 pm

தேவி – சினிமா விமரிசனம் Vjh2SRmTIqn14hLFIGHl+devi233434-13-1476347630
-

பேயை முதன்முதலில் உணர்வதில் ஆரம்பித்து, தட்டுப்பட்ட
இடங்களில் எல்லாம் ‘அதனோடு’ முரண்படுவதும், சண்டை
போவதும், மிரட்டுவதுமாக அவரே முழுமூச்சாக படத்தில்
நிற்கிறார். ஒவ்வொரு தடவையும் பேயைப் பார்த்துவிட்டு
நடுங்கும் காட்சிகளில் பிரபுதேவா நேற்று பார்த்த மாதிரி துறுதுறு.

பேயை சமாதானப்படுத்தி கையெழுத்து வாங்கும் சீன்
ரொம்பவே ஓவர் என்றாலும், தியேட்டர் கலகலக்கிறது.

அழகிய பார்பி பொம்மை போல ஷோகேஸில் சும்மாவாச்சும்
இருந்த தமன்னாவா இது! மாடு மேய்த்துக்கொண்டு கிராமத்தில்
வரும்போது ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

அவரே ‘சிக்’ உடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு
பேய் பார்வை பார்ப்பது கலவரம். எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும்,
முகத்தைப் பாவம் போல் வைத்துக்கொள்வதில் யாரும் தமன்னாவை
மிஞ்ச முடியாது.

சந்தானம் ஹீரோவாகப் போய்விட்ட பிறகு, கருணாகரன், சதீஷ்,
ஆர்ஜே. பாலாஜி காத்திருக்கிறார்கள் போல. இவர்களில் யார்
கால்ஷீட் கிடைக்கிறதோ அவர்களை வைத்து காமெடி செய்கிறார்கள்.

அந்த மாதிரி இதில் ஆர்ஜே. பாலாஜி. சோனு சூட் அதிகமாகவே
வருகிறார் என்றாலும், நடிப்பை முகத்தில் காட்டுவேனா என அடம்
பிடிக்கிறார். கதை ஒரு கட்டத்தில் அவரையும் வைத்து சுழலும்
போதுதான் அவர் படத்தின் இந்தி புரொடியூசர் எனத் தெரிகிறது.

லாஜிக் மீறல்களில் நகர்ந்தாலும் பிரபுதேவாவின் நடிப்பில் மறக்க
முடிகிறது. ‘பேசாமல் பேசிப் பார்த்தேன்’, ‘ரங் ரங் ரங்கோலி’
என மறைந்த நா.முத்துக்குமாரின் வரிகளில் சாஜித் வாஜித் இசை
இதம். பின்னணி இசையில் கோபிசந்தர் ஸ்கோர் செய்கிறார்.

மனுஷ்நந்தனின் கேமரா, குளுமையும் பயமும் அழகும் கலந்த
காக்டெயில். புதிதாக குடி புகுந்த வீடு, இவ்வளவு பழமையாக
ஒட்டடை பிடித்தா இருக்கும்? காட்சிகளை ஒவ்வொன்றாக யூகிக்க
முடிகிற அளவுக்கு திரைக்கதையை பலவீனமாக வைத்துக்
கொள்ளலாமா?

கிராமத்து காட்சிகளில் யதார்த்தம் மிஸ்ஸிங்.
‘சோனு சூட் வில்லனா, நல்லவனா’ என யூகத்தில் விட்டு
விடுகிறீர்களே… இப்படி கேள்விகள் இருந்தாலும், ‘தேவி’யை
பதறாமல் ரசிக்க முடியும்.

————————————
குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக