Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா
Page 1 of 1
கோலாகலமாகக் கொண்டாடப்படும் மைசூர் தசரா விழா
-
நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும்,
மைசூர் தசராவுக்கு தனிச்சிறப்பு உண்டு.
10 நாள்கள் நடைபெறும் தசரா விழாவில் பல்வேறு
நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப்புகழ்பெற்ற
நிகழ்வாக மாறியுள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர்
மாதங்களில் தசரா விழா கொண்டாடப்படுவது
வாடிக்கை. மைசூர் தசரா விழாவை கண்டுகளிக்க
இந்தியா மட்டுமன்றி, உலகின் பல திசைகளில்
இருந்தும் மக்கள் குவிவதைக் காணலாம்.
ஒன்பது நாள்கள் நவராத்திரி நோன்பிருந்து, பத்தாவது
நாளில் விஜயதசமி கொண்டாடுவதை தசரா என்று
அழைக்கிறார்கள். தீமையை வீழ்த்தி உண்மை வெற்றி
கொண்டதை விஜயதசமி குறிக்கும் என்றாலும், மைசூர்
நகரை ஆண்ட மகிஷாசுரன் என்ற அரக்கனை
சாமுண்டீஸ்வரி அம்மன் வதம் செய்து கொன்றதன்
வெற்றிவிழாவாகத்தான் தசரா கொண்டாடப்படுகிறது.
கர்நாடகத்தின் பெரும்பகுதியைத் தங்கள் வசம்
வைத்திருந்த விஜயநகர பேரரசர்கள் 15-ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் தசராவிழா கொண்டாடும் பழக்கத்தை
சிறிய அளவில் தொடங்கியுள்ளனர். விஜயநகரப் பேரரசின்
வீழ்ச்சிக்குப் பிறகு, இது நின்றுபோனது.
1578 முதல் 1617-ஆம் ஆண்டு சுமார் 39 ஆண்டுகாலம்
மைசூரை ஆண்ட ராஜா உடையார், தலைநகரத்தை
ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு மாற்றிய பிறகு 1610-ஆம் ஆண்டில்
முதல் முறையாக அரச விழாவாக தசராவிழா நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தசராவிழா கர்நாடகத்தில், குறிப்பாக
மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
சாமுண்டிமலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி
அம்மனுக்கு அரச குடும்பத்தினர் சிறப்புப் பூஜை செய்வதன்
மூலம் தசரா தொடங்குவது மரபு.
1805-ஆம் ஆண்டு முதல் தசரா காலத்தில் அரசவைக்கூட்டம்
நடத்தும் பழக்கத்தை மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
தொடக்கி வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் அரச குடும்பத்தினர், சிறப்பு அழைப்பாளர்கள்,
அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்பது பழக்கம். இந்த மரபை
அரச குடும்ப வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்குப்
பின் முதன்முறையாக அரச குடும்பத்தின் வாரிசு
யதுவீர் கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையார் தொடங்கியுள்ளார்.
மகாநவமி நாளில் யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் புடைசூழ
அரசரின் வாளை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபடுவது வழக்கம்.
கர்நாடகத்தில் தசரா மாநில விழாவாகக் கொண்டாடப்படுவதால்,
மைசூரில் உள்ள அரண்மனை, அரசு அலுவலகங்கள், சாலைகள்
அலங்காரம் செய்து அழகுபடுத்தப்படும். விழாக்காலத்தில்
தினமும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு லட்சம்
விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அரண்மனை
ஒளிவெள்ளத்தில் மின்னும்.
அந்தவளாகத்தில் கலாசார மற்றும் மதரீதியான நிகழ்ச்சிகள்
நடத்தப்படும். இசை, நடனம், கவியரங்கம், மல்யுத்தம்,
விளையாட்டுகள், சிறுவர் போட்டிகள், சாகசங்கள் போன்ற
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
விஜயதசமி நாளன்று பாரம்பரிய தசரா ஊர்வலம் நடைபெறும்.
ஜம்போ சவாரி, யானைகள் ஊர்வலம் போன்ற பெயர்களால்
அழைக்கப்படும் தசரா ஊர்வலத்தைக் காண தெருவெங்கும்
மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அலங்காரம் செய்யப்பட்ட
யானையின் மீது வைக்கப்பட்டிருக்கும் தங்க அம்பாரியில்
சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க ஊர்வலம் தொடங்கும்.
முக்கிய வீதிகளில் உலா செல்லும் யானைகளைப் பின்
தொடர்ந்து அலங்கார ஊர்திகள், நடனக்குழுக்கள், இசைக்
குழுக்கள், யானை, ஒட்டகம் மற்றும் குதிரை பட்டாளம் அணி
வகுக்கும்.
அரண்மனையில் தொடங்கும் ஊர்வலம் பண்ணி மண்டபத்தை
அடையும். அஞ்ஞான வாசத்தின் போது பாண்டவர்கள் தங்கள்
ஆயுதங்களை பண்ணிமரத்தில் ஒளித்து வைத்ததாக காப்பியம்
கூறுவதால், போரில் வெற்றியைக் குவிக்க இங்கு பூஜை செய்து
விட்டுச் செல்வதை உடையார் அரசர்கள் பழக்கமாகக்
கொண்டிருந்தார்கள்.
அந்த மரபின்படி, பண்ணிமண்டபத்தில் சிறப்புப் பூஜை செய்து
வழிபடுவதோடு, தசராவிழாவை நிறைவு செய்வதைக் குறிக்கும்
வகையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப்படும். தசரா விழாவை
முன்னிட்டு மைசூரில் அரண்மனை எதிரே அமைந்துள்ள
மைதானத்தில் ஒருமாத காலம் பொருள்காட்சி நடத்தப்படுவது
பழக்கம்.
1880-ஆம் ஆண்டில் தசராவின்போது பொருள்காட்சி திறக்கும்
வாடிக்கையை பத்தாம் சாமராஜ உடையார் தொடக்கிவைத்தார்.
அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது.
10 நாள்களும் மக்கள் வெள்ளத்தில் மைசூர் விழாக்கோலம்
பூண்டிருக்கும்.
நிகழாண்டில் அக்.1-ஆம் தேதி தொடங்கிய தசரா விழா
அக்.11-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
-
-------------------------
தினமணி
Similar topics
» மைசூர் தசரா விழா இன்று துவக்கம்
» திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா
» மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம்
» மைசூரில் தசரா விழா வரும் 29-ம் தேதி துவக்கம்
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
» திருச்செந்தூரில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா
» மைசூரில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம்
» மைசூரில் தசரா விழா வரும் 29-ம் தேதி துவக்கம்
» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|