புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
90 Posts - 78%
heezulia
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
255 Posts - 77%
heezulia
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
8 Posts - 2%
prajai
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அம் மா மரம் – சிறுகதை Poll_c10அம் மா மரம் – சிறுகதை Poll_m10அம் மா மரம் – சிறுகதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம் மா மரம் – சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 2:06 pm

அம் மா மரம் – சிறுகதை GuTGnoFGSYSmrXWTx2HX+k12
-
"டேய், இரண்டு கொத்து மாவிலை பறிச்சிண்டு வாடா, வாசல் நிலைப்படியில தோரணம் கட்டணும்'' என்றாள் அம்மா. ஏதோ வீட்டில் சின்ன விசேஷம். ஓடிச்சென்று, காம்பவுண்ட் சுவரில் ஏறி, கைக்கெட்டிய கிளைகளிலிருந்து மாவிலைகளைக் கிள்ளி எடுத்து வந்தேன்.
-
அக்கம்பக்கத்துலேயும், எங்கள் வீட்டிலேயும் வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, சங்கராந்தி எல்லா நாட்களுக்கும் தோரணம் அந்த மாமரத்து இலைகள்தான்.
-
மரத்துக்கு சுமார் என்ன வயதிருக்கும்? தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அந்த மரம் அங்கே உள்ளது. எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாகிறது.
கோயிலுக்கு எதிர்த்த வீட்டில், மூன்று அறைகள் வரிசையாகக் கொண்ட ஒரு சைட் போர்ஷன். அங்குதான் அம்மாவின் முப்பத்தைந்து வருட வாழ்க்கை. அறைகள், விருந்தினர் வந்தால், வரவேற்பறையாகவும், கையில் தட்டுடன் அமர்ந்தால், டைனிங் ஹாலாகவும், படுக்கை விரித்தால், படுக்கையறையாகவும் மாறிவிடும்,
-
ஒரு தேர்ந்த நாடக மேடை மாதிரி. முன் அறையிலிருந்து, உள் வழியாக மாடிக்குச் செல்லப் படிகள் உண்டு. மொட்டை மாடிதான். மாமரக்கிளைகள் மாடி வரையில் சிறிது எட்டிப் பார்ப்பதால், காலையில் கொஞ்சம் நிழல் விழும். மாடிப்படிகளுக்குக் கீழே, இரண்டு பேர் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொள்ளத் தக்க இடமும் உண்டு. வீட்டில் மழைநீர் ஒழுகாத இடமும் அது ஒன்றுதான்.
-
எங்கள் போர்ஷனுக்கும், பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவருக்கும் இடையே சுமார் முப்பது அடி தூரம் வெற்று இடம். சுவருக்கருகே, எங்கள் போர்ஷனை நோக்கிச் சிறிது சாய்ந்தாற்போல் சிநேகமாய் நிற்கும் அந்த மாமரம். கிளைகளும், மாவிலைகளும் பந்தல் போலப் பரந்து, வெய்யிலே தெரியாமல் நிழலாய்க் குளுமையாய் இருக்கும்.
-
உடலில் ஆங்காங்கே மரப்பட்டைகள் உரிந்தும், பிளந்தும், நீளவாக்கில் பல விரிசல்களுடனும், மரம் தன் வயதைச் சொல்லிக் கொண்டிருந்தது. மழை நீரும், சிவப்பு நிற கட்டை எறும்புகளும் அந்த விரிசல்களில் எதிர் திசைகளில் சென்று கொண்டிருக்கும்.
-
அம்மாவுக்குத் தன் குழந்தைகளைப் போலவே, அந்த மாமரத்து மேலேயும் மிகுந்த பாசம். பிற்பகல் வேளைகளில், வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு, மரத்தைப் பார்த்து மகிழ்ந்து போவாள். மாலைக் காற்றில், சலசலக்கிற பச்சை இலைகளையும், லேசாகத் தலையசைக்கிற கிளைகளையும், தாவி ஓடுகிற அணிலையும், எப்போதாவது வந்து பழம் கொத்தும் கிளியையும் பார்த்து ஆனந்தப்படுவாள்.
-
அந்த மரத்தை எப்போதும் தன்னுடனேயே வசிக்கின்ற தோழியாகவோ அல்லது சகோதரியாகவோ நினைத்து, அதனுடன் தன் சுக துக்கங்களைப் பேசுவாளோ? என்று கூட எனக்குத் தோன்றும்.
பின் போர்ஷன் கழிவுநீர், மழைநீருடன் கலந்து, தெருவில் கலக்கச் செல்லும் வழியில் இம்மரத்து வேர்களை நனைத்தபடி செல்லும். இருந்தாலும் தினம் வாசலில் தண்ணீர் தெளிக்கும்போது இரண்டு பக்கெட் தண்ணீர் மரத்து வேரிலும் ஊற்றுவாள் அம்மா. ""பாவம் வெய்யலில் வாடறது'' என்பாள்.
-
ஒருநாள், ஜன்னலை மறைக்கிறது என்று, அந்தப் பக்கக் கிளைகளை வெட்டிவிட்டார் பக்கத்து வீட்டு முதலியார்.
-
"அவர் நியாயம் அவருக்கு. எனக்குத்தான் கிளைய வெட்டின இடத்தப் பார்த்தா, கண்ணுல தண்ணி வருது'' என்று வருந்தினாள் அம்மா.
"மரம்தானே அம்மா, அதுக்கு ஏன் இவ்வளவு கவலைப்படறே? கொஞ்ச நாளிலெ துளுத்துடப் போறது?'' என்றேன் யதார்த்தமாக.
-
"மரமா அதுக்கு வலிக்காதுன்னு நீ எப்படிச் சொல்றே? அதுக்கும் உயிர் இருக்கு. பூக்கறது, காய்க்கறது. அதுவும் நம்பள மாதிரி. ம்.. ஹூம்... நம்பளவிட ஒசத்தியான ஒரு ஜீவன்டா... அதுக்கு, மனுஷா கிட்டே பாரபட்சமெல்லாம் கெடையாதுடா. அதெல்லாம் நமக்குதான். எல்லாருக்கும் நிழலும், காயும், பழமும் எப்பொவும் தரும்டா'' என்றாள். அம்மாவுக்கு அந்த மாமரத்து மேல அவ்வளவு வாஞ்சை.
-
கோடைக்காலத்தில் நிறைய மாம்பூக்களும், இளந்துளிர் மாவிலைகளுமாக தரையெங்கும் தூவி, காற்றில் மரமே அசைந்து, சாமரம் போல் குளிர்ந்த காற்றை வீசும் சுகமே அலாதி.
-
தரையெங்கும் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்ன மாவடுக்களை எல்லாம் எடுத்து (பொறுக்கு வடு), உப்பும் காரமுமாய் மாவடு ஊறுகாய் போட்டு வைப்பாள் அம்மா. சீசனில் மாங்காய் காய்த்துக் குலுங்கும் "தட்' டென்ற சத்தத்துடன் ஓட்டின் மீது விழும் மாங்காய், சில நேரங்களில் அணில் கடித்த அரைப்பழமாகவும் இருக்கும் ரோட்டில் போவோர் கல்லடியும், இவ்வளவு காய்களா? எனக் கண்ணடியும் படும் அந்த மரம். அம்மா, மரத்துக்கு உப்பு சுத்திப் போட்ட வருடங்களும் உண்டு.
-
எதிர் வீட்டு பாபு, பப்பி, பக்கத்து வீட்டு குரு, ராஜி மற்றும் பின் போர்ஷன் சின்னா, சேகாச்சி, கடைசி வீட்டு ஸ்ரீராம் எல்லோரும் கோடை வெய்யில் தெரியாமல் மாமர நிழலில் ஆட்டம் - கொக்கோ, நொண்டி, கவர்பால் கிரிக்கெட் என்று ஒருமினி ஒலிம்பிக் போட்டியே நடக்கும். இடையிடையே கல்லால் மாங்காய் அடிக்க, அம்மா வந்து, ""டேய், கல்லால அடிக்காதீங்கடா. மாடிக்குப் போய், அந்தத் தொரட்டுக்குச்சியால, கிளைய ஒடிக்காமெ, மெதுவா மாங்காய மட்டும் பறிங்கடா'' என்பாள் கூடவே உப்பு, மிளகாய்ப் பொடியும் தொட்டுக்கக் கொடுப்பாள். மரத்துக்கும் வலிக்குமோ?
-
வீட்டின் பின்புறம் இரண்டு மாமரங்கள் உண்டு ஒன்றின் மாங்காய்கள் மிகவும் இனிப்பாக இருக்கும் (ஒட்டு மாங்காயோட கிராஸ் இது என்பாள் அம்மா).
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 2:07 pm

மற்றது, மாங்கொட்டையே பிரதானமாயும், புளிப்பாயும் இருக்கும். கொட்டகாச்சி என்ற பெயர். அணில் மட்டுமே வருவித் தின்னும் .
-
இவை தவிர, ஒரு அருநெல்லிக்காய் மரமும், வாசற்புரம் ஒரு புன்னை மரமும், காம்பவுண்ட் சுவரைப் பிளந்தாற்போல் ஒருவேப்ப மரமும் வீட்டில் உண்டு. மரத்தடி நிலத்தைப் பெருக்கி, சுத்தமாக வைத்திருப்பாள் அம்மா அதில் விழும் வேப்பம்பூவைச் சேகரித்து, காய வைத்துத் தமிழ்ப் புத்தாண்டுக்கு பச்சடியும், ரசமும் வைப்பாள். பக்கத்து மர மாங்காய் வெல்லப் பச்சடியும் உண்டு. இவை யாவும் இயற்கை நமக்கு அளித்த கொடை என்று சொல்லி மகிழ்வாள்.
-
வீட்டுக்காரர், அந்த வருடம் மாமரங்களைக் குத்தகைக்கு விட்டு விட்டார். நீளமான கம்புகளில் கறுப்பு வலைகளுடன் வந்தவர்களிடம், ""பார்த்துப்பா, கிளைகளையெல்லாம் ஒடிச்சிடாமெ, மாங்காய்களை மட்டும் ஜாக்கிரதையாக பறிச்சிட்டுப் போங்க'' என்று சொன்னவள், அன்று முழுவதும் சாப்பிடாமல், அவர்களைக் கண்காணித்தவறே இருந்தாள்.
-
ஒவ்வொரு மழைக்கும், காத்துல மாமரம் ஆடறதப் பார்த்து, "எங்கே மரம் உடைந்தோ அல்லது வேரோடு பெயர்ந்தோ நம்ப வீட்டு மேல விழுந்திடுமோ?'ன்னு பயப்படுவாள் அம்மா. மாடிப்படிக்குக் கீழே இருக்கிற அந்தச் சின்ன இடம்தான் ஈரமில்லாமல், பாதுகாப்பான இடம் என்று, ஒரு சாக்கைப் போட்டு, குழந்தைகளை அங்கேயே உட்கார வைத்து சாப்பாடு போடுவாள்.
-
மின்னல், இடின்னா, மரத்தை எட்டிப்பார்த்து, பயந்துகொண்டே "அர்ஜுனா, அர்ஜுனா' என்பாள். மரமும் இப்போ விழுந்து விடவா என்பதுபோல முன்னும், பின்னும் அசைந்து பாவ்லா காட்டியபடியே இருக்கும். மரத்துக்கும் அம்மாவைப் பிடிக்கும்தானே? மீண்டும் "அர்ஜுனா, அர்ஜுனா'.
-
ஏதோ ஒரு செட்டியாரம்மா சொன்னாங்கன்னு, ஒரு நாள் மாமரத்தடியை நல்லா பெருக்கி, கோலம் போட்டு, மரத்துக்கு மஞ்சள், குங்குமம் வெச்சு, வெற்றிலை, பாக்கு, பழமெல்லாம் நைவேத்தியம் செய்து பூஜை செய்தாள் அம்மா. மரங்களைப்போற்றி, வளர்த்து பூஜைகள் செய்தால் நம்ம சந்ததிகள் நன்றாக இருப்பார்கள் என்று யாரோ சொன்னார்களாம்.
-
திடீரென்று அம்மாவுக்கு ஏதோ உடம்பு சரியில்லை தலைவலி. ஆஸ்பத்திரிக்குப் போகும்போது, மாமரத்தைப் பார்த்துக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள்.
-
"இரண்டு நாளாய் தண்ணீயே விடலை, நீயாவது ஊற்றக் கூடாதா?'' என்றாள். அன்றுதான் அம்மா மாமரத்தைக் கடைசியாகப் பார்த்தது.
-
இரண்டு நாட்கள் சிகிச்சை பலனில்லாமல், உயிரற்ற உடலாய் அம்மாவைக் கொண்டு வந்தோம். இறுதிச் சடங்குகள், அவள் பாசமுடன் நேசித்த அந்த, மாமர நிழலில்தான் நடந்தேறின.
-
மரத்தில் ஓர் இலை கூட அசையவில்லை கிளம்பும்போது அம்மாவின் முகம் வானத்தை நோக்கி மாமரக் கிளைகளையும், இலைகளையும் பார்த்தவாறு சிறிது இதழ்விரித்து சினேகமாகப் புன்னகைத்த மாதிரி இருந்தது. இரண்டு மாவிலைத் துளிர்கள் சுழன்று, தரையிறங்கி அம்மாவின் மடியில் விழுந்தன. இறுதி மரியாதையோ? எத்தனை வருட பந்தம்? "மரத்துக்கும் உயிர் இருக்குடா'' - அம்மாவின் குரல் காற்றில்கேட்பது போல் இருந்தது.
-
அம்மா போய் சில வருடங்களில் எல்லாரும் டெல்லி, கல்கத்தா, யூஎஸ் என்று சிதறி விட்டோம். வீட்டுக்காரரும் அந்த வீட்டை இடித்து அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப் போவதாகச் சொன்னார்.
"இந்த மாமரத்தை மட்டும் வெட்டிடாதீங்கோ, எங்க அம்மாவோட ஆன்மா இதுலெதான் இருக்கு''. அவருக்கு என்ன புரிந்ததோ? தெரியாது.
-
தினமணி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 3:51 pm

மீண்டும் சந்திப்போம்

சென்று வா அம்மா

வரவேற்க கத்திருக்கிறோம்

வா அம்மா

:நல்வரவு:



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக