புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
20 Posts - 3%
prajai
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் வலி ஏற்பட வாயு காரணமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Sun Sep 25, 2016 11:28 pm

பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை.

வயிற்று வலி, நெஞ்சு வலி, தசை வலி என எல்லா உடல் வலிகளுக்கும் வாயுக் கோளாறு ஒரு காரணம் என்கிறார்கள். இது சரியா?

சரியில்லை.

இந்த இடத்தில் பொருத்தமான ஓர் உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். என் நண்பரின் தந்தைக்குத் திடீரென நெஞ்சில் வலி வந்தது. அவரோ, அது ‘கேஸ் டிரபி’ளாக இருக்கும் என நினைத்துக் கவனிக்காமல் விட்டுவிட்டார். நாளாக ஆக வலி அதிகரித்தது, நண்பர் வலுக்கட்டாயமாக என்னிடம் அவரை அழைத்துவந்தார். பரிசோதித்துப் பார்த்தபோது, அவருக்கு இதயத் தமனிகளில் மூன்று அடைப்புகள் இருந்தன. தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல்நலம் தேறிவிட்டார். வாயுக் கோளாறு என இன்னும் சிறிது காலம் அவர் அலட்சியமாக இருந்திருந்தால், அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

உடலில் வலி ஏற்படுவதற்கும் வாயுக்கும் தொடர்பில்லை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் பிரச்சினையை ‘வாயுத் தொல்லை’ (Flatulence) என்கிறோம். இது வயிற்றில் மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சினை. ஆனால், பொதுவாக வாயுவுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சு வலி, முதுகு வலி, முழங்கால் மூட்டு வலி, விலா வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

வாயு எப்படி உற்பத்தியாகிறது எனும் அறிவியலைத் தெரிந்துகொண்டால் இதன் உண்மை புரியும். நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதையிலும் உணவுப் பாதையிலும் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக்கொண்டிருப்பது போலத் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டிருப்பது இல்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.

நாம் அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப்பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

குடலில் உணவு செரிக்கும்போது அங்குள்ள தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் மூலம் பல வேதிமாற்றங்களை ஏற்படுத்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இப்படி நாள்தோறும் சுமார் ஏழு லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, ரத்தத்தில் இது உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாகக் குடலில் 600 மி.லி. வாயு இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நல்லதுதான்.

சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் பிரியும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்க்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாகக் கெட்ட வாடையுடன் வெளியேறும்.

புரத உணவுகள், கிழங்குகள், வெங்காயம், முட்டைக்கோஸ், பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற காய்களை அதிகமாகச் சாப்பிடுவதாலும், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல் காசநோய், புற்றுநோய் போன்றவற்றாலும் வாயு அதிகமாகலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 5:54 am

உடல் வலி ஏற்பட வாயு காரணமா? 103459460 உடல் வலி ஏற்பட வாயு காரணமா? 3838410834
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 27, 2016 5:32 pm

நல்ல தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 6:03 pm


ஐயா !

இவை மருத்துவ ரீதியிலாகும் காரணமாகலாம்.

ஆனால் யோகம் என்னும் மெய்ஞ்ஞானம் வேறுவிதமாகக் கூறுகிறது. இதற்கு விஞ்ஞான விளக்கம் கேட்டால் கிடைக்காது. ஏனெனில் அது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.

சுவாசித்தலால் காற்று உடலுக்குள் புகுகிறது. இது மனித உடலுக்குள் பத்தாகக் கிளைக்கின்றது. அவை:
1.பிராணன்; 2. அபானன், 3. சமானன், 4.உதானன், 5. வியானன், 6. நாகன், 7.கூர்மன், 8. கிரீதரன், 9. தேவதத்தன், 10.தனஞ்செயன் என தச வாயுக்கள் என்ற பெயரும் பெறுபவை.

இவற்றின் பணிகள் மனித உடலில் அளப்பரியனவாம். விளக்கம் நெடிதாகும் .ஆதலால் தவிர்த்தோம். வாயுத்தொல்லை என்பது அபான வாயுவின் ஆதிக்கத்தால் விளைவதாம் என்பது யோகபாடத்தில் நமக்கு எம் ஸ்ரீகுருதேவரால் கற்பிக்கப்பட்டது. அவை சரிதான் என்று ஆராய்ந்து அறிந்து அடியனால் ஏற்கப்பட்டவை.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Tue Sep 27, 2016 6:48 pm

அதிகமான அசதி, உடல் வலி, சோம்பேறித்தனம், களைப்பு  ஆகியவற்றிக்கு   ஹீமோகுளோபின் குறைபாடும்  ஒரு காரணம்.

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Sep 27, 2016 7:20 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1222883

SRINIVASAN GOVINDASWAMY wrote:அதிகமான அசதி, உடல் வலி, சோம்பேறித்தனம், களைப்பு  ஆகியவற்றிக்கு   ஹீமோகுளோபின் குறைபாடும்  ஒரு காரணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1222892

நன்றி! "ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் உணவில் சிறிதளவு வெந்தயம் மற்றும் துளசி போன்றவற்றி சேர்த்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும்." என்று "மனிதன்" என்ற தளம் கூறுகிறது.

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Sep 27, 2016 7:22 pm

Ramalingam K wrote:
ஐயா !  

இவை மருத்துவ ரீதியிலாகும் காரணமாகலாம்.

ஆனால் யோகம் என்னும் மெய்ஞ்ஞானம் வேறுவிதமாகக் கூறுகிறது. இதற்கு விஞ்ஞான விளக்கம் கேட்டால் கிடைக்காது. ஏனெனில் அது மெய்ஞ்ஞானம். மெய்ஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.

சுவாசித்தலால் காற்று உடலுக்குள் புகுகிறது. இது மனித  உடலுக்குள் பத்தாகக் கிளைக்கின்றது. அவை:
1.பிராணன்; 2. அபானன், 3. சமானன், 4.உதானன், 5. வியானன், 6. நாகன், 7.கூர்மன்,                       8. கிரீதரன்,  9. தேவதத்தன், 10.தனஞ்செயன் என தச வாயுக்கள் என்ற பெயரும் பெறுபவை.

இவற்றின் பணிகள் மனித உடலில் அளப்பரியனவாம். விளக்கம் நெடிதாகும் .ஆதலால் தவிர்த்தோம். வாயுத்தொல்லை என்பது அபான வாயுவின் ஆதிக்கத்தால் விளைவதாம் என்பது யோகபாடத்தில் நமக்கு எம் ஸ்ரீகுருதேவரால்  கற்பிக்கப்பட்டது. அவை சரிதான் என்று ஆராய்ந்து அறிந்து அடியனால் ஏற்கப்பட்டவை.
மேற்கோள் செய்த பதிவு: 1222886

நல்லது ஐயா. வாயுத்தொல்லைக்கு யோகம் ஏதாவது பரிகாரம் கூறுகிறதா என்று  தெரிவித்தால் ஆர்வமுள்ளோர்க்குப் பயனுள்ளதாயிருக்கும்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 7:56 pm

ஆம் ஐயா!

நிலையான உடல் நலத்திற்கு யோகாசனங்கள்;
நீடித்த ஆயுளுக்குப் பிராணாயாமங்கள்;
நிறைவான மனதின் நிம்மதிக்கு தியானம்.

மருந்து மற்றும் மருத்துவம் இன்றியே மனிதனின் உடம்பு, உயிர், மனம் -இவை மூன்றையும் கட்டிக் காத்து நிறைவேற்றி வைப்பத்துதான் அஷ்டாங்க யோகம் என்னும் ஆத்ம வித்யா. இதனை ஒருவருடைய உடல்வாகு, வயது, புரிந்து கொள்ளும் திறன், மேலும் சுலமாக பழகும் விதம் ஆகியவற்றை நேரில் பார்த்து ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஆசனங்களைக் கற்பித்துப் பழக்கவேண்டும். அவற்றைக் கற்றுப் பழகினால் உடலின் அனைத்து குறைபாடுகளும் நீங்கும் என்பது உண்மை.

ஆனால் கூட்டமாக சேர்த்து Drill class போல் கற்பிக்கப்படுவது அல்ல யோகாசனங்கள். எழுத்திலோ தொலைபேசியிலோ கற்பிக்க இயலாதது. யோகாசனங்கள் நேரில் கற்க வேண்டுவது.

இல்லறத்தாருக்கு 72 தலையாசனங்களும், 163 கிளையாசனங்களும் உள்ளன. இவற்றில் எதனை யாருக்கு அவரைப் பார்க்காமல் கற்பிப்பது.

வாயுத்தொல்லை உள்ளவர் இருவர் வந்தால் அவரவர் உடல்வாகு, வயது, பழகும் பக்குவம் ஆகியனவற்றை நேரில் கற்பித்துத், தேவைப்படும் பட்சத்தில் ஒருவருக்கொருவர் ஆசனங்களை மாற்றியும், வரிசைத் தொடரை மாற்றியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கொடுக்கவேண்டும். அப்போது பூரண உடல் நலம் நிச்சயம். உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.

நாள் ஒன்றுக்குக் காலையோ அல்லது மாலையோ, பத்து நிமிடம் முதல் 20 நிமிடம் வ்ரையிலான யோகாசனப் பயிற்சி எவருக்கும் 5 வயது முதல் 100 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் கூட ஆண்-பெண் இருபாலருக்கும் யோகாசனங்கள் பொருந்துபவை - நலம் பயப்பவை.

அடியன் ஏதோ கற்பனையில் கூறுவதாகக் கருத வேண்டாம்.

மேலே கூறிய அனைத்தும் உண்மை.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2016 9:04 pm

தினமும் பிராணாயாமம் செய்தல் /த்யானம் --உடலுக்கு மிகவும் நல்லது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2016 9:10 pm

நல்ல தகவல் பரிமாறல்கள் . பகிர்ந்தவர் /இணைந்தவர் அனைவருக்கும் நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக