புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம்
Page 1 of 1 •
ஸ்ரீ குருவே நம:
13. மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம்
(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது)
உலகில் எங்கும் அஞ்ஞானமாகிய இருள் மூடியிருந்த அந்த காலத்தில் , ஞானமாகிய சுடர் ஒளிர்ந்து பிரகாசித்ததால் நமது நாடு பாரதம் என்னும் பெயர் பெற்றது. பாரதம் என்னும் சொல்லிற்கு , ‘ஒளிரும் ப்ரகாசம் (shining brightness) என்று பொருள்.
அஞ்ஞானம்(அறியாமை) என்றால் உண்மை அல்லாத ஒன்றை உண்மை என்று தவறாகப் புரிந்து கொள்ளுதல். ஞானம்(அறிவுடைமை) என்பது உண்மையை உண்மை என்றும், உண்மை அல்லாததை உண்மை அல்லாதது என்றும் அறிந்து கொள்ளுதல். உண்மை என்றால் எப்போதும் மாறாதது. உண்மை அல்லாதவை என்றால் மாற்றத்திற்கு உள்ளாவது.
சூரியன் ஆகாய வெளியில் பயணிக்கின்றது என்று நினைத்தால் அது அஞ்ஞானம். சூரியன் இருக்கும் இடத்திலேயே தான் இருக்கின்றது; ஆனாலும் பூமியின் சுழற்சியாலும் சூரியனைச் சுற்றிப் பூமியின் நீள்வட்டப் பயணத்தாலும், நிலையாக இருக்கும் சூரியன், பயணிப்பதைப்போல் தோற்றம் அளிக்கின்றது என்று அறிந்து கொண்டால் அதுவே ஞானம்.
ஞானம் யாவற்றிலும், அனைத்தையும் அறிந்த ஞானமாவது மெய்ஞானம். இந்த மெய்ஞானத்தை ஒவ்வொருவரும் தனக்குள் அறிந்துகொண்டால் அது உடம்பை (மெய்யை)ப் பற்றிய ஞானம் – தனக்கு அப்பால் இருக்கும் இந்த உலகத்தில் அறிந்துகொண்டால் அதுவே உண்மை ஞானம்.
இத்தகைய மெய்ஞானத்தை உலகில் முதலில் கண்டறிந்து உலக மானுடம் யாவைக்கும் தெரிவித்தவர்கள் நமது பாரத நாட்டின் மெய்ஞ்ஞானிகள். இம்மெய்ஞ்ஞானிகளால்தான் நமது நாட்டின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் உருவாக்கப்பெற்றன. உபநிஷதம் என்னும் வேதாந்தங்களும் அத்தகையவர்களாலேயே படைக்கப்பட்டன.
இந்த வேதங்களை அடிப்படையாகக் கொண்டு வேதகாலத்திற்குப் பின் தோன்றிய ஞானிகளால் –இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும், பலவகையான புராணங்களும், யோக நூல்கள் மற்றும் ஞான நூல்களும் படைக்கப்பட்டன. பிற்காலத்தில் இத்தகைய புராணங்களைக் கொண்டு பற்பல பக்தி இலக்கியங்கள் தோன்றின.
வேதக்கருத்துக்களின் அடிப்படையில் பற்பல ஞான இலக்கியங்களைத் தந்த மாமேதைகள் பலருள்ளும், ஸ்ரீஆதிசங்கரர் மிகவும் உன்னத நிலையில் வைத்துப் போற்றத்தக்கவர். இல்லறம் சார்ந்த வித்யா ஞானத்தையும் , துறவறம் சார்ந்த ஆத்ம ஞானத்தையும் பக்தியோடு குழைத்துப் பஞ்சாமிர்தமாகப் பற்பல ஞான நூல்களைச் சாதாரண மானுடனும் புரிந்து கொள்ளும் வகையில் உலக மானுடம் யாவைக்கும் அளித்த பெருமை ஸ்ரீஆதிசங்கரருக்கே உரித்தானது.
அம்மகான் உலகத்திற்கு அளித்த ஞானக் களஞ்சியங்களில் விவேகசூடாமணி மற்றும் ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா ஆகிய இரண்டு நூல்களும் மணிமகுடமாக விளங்குபவை.
இன்றைய காலகட்டத்தில் கல்வி ஒரு இலாபம் தரக்கூடிய வாணிபமாகிவிட்டது. கல்வி வியாபாரம், எங்கும் கொடிகட்டிப் பறப்பதால் அதனை வாங்குவோருள்ளும் போட்டி மனப்பான்மை உண்டாகி விற்பனையாளர்கள் வெகுவாகப் பெருகி இலாபத்தை ஈட்டுகிறார்கள். கல்வி இயந்திரத்தனமாகி மதிப்பெண்களுக்காகவும் அதிக பணம் ஈட்டும் நோக்கத்தோடும் மட்டுமே கற்பிக்கவும் கற்கவும் படுகிறது.
கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்ளும் சாதனமாக இல்லாமல் ஆகிவிட்டது. மாணவப்பருவம் என்பது கற்கும் பருவம் என்றும் நிலையிலிருந்து மாறி அதுவே ஒரு மானுட வாழ்வின் ஆரம்பகாலத் தொழிலாகத் திரிக்கப்பட்டு விட்டது. அதனால் வாழ்க்கைக் கல்வி அறிவையோ அல்லது ஆத்மக் கல்வியறிவையோ இக்காலக் கல்வி பிள்ளைகளுக்குக் கொடுக்க வாயிப்பில்லாமல் ஆகிவிட்டது.
இதன் விளைவாய் மனித நேயம் காணாமல் போய்விட்டது.பற்பல வசதிகளும் ஆடம்பரங்களும் வாழ்வில் மலிந்து காணப்பட்டாலும் மன நிம்மதியும் மனஅமைதியும் கல்விச்சந்தையில் காணாமல் போய்விட்டன. ஆகையால் தற்போதைய மானுடம், பகட்டு, படாடோபம், வஞ்சகம் ஆகியவற்றின் பிரிதிபலிப்பாகவே விளங்குவது கண்கூடு. பிள்ளைகளிடமும், பெற்றோருக்குள்ளும் கூட ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் நேரில் பேசிக்கொள்ளாமல், கைப்பேசியில் பேசிக்கொள்ளும் அவலம் நெஞ்சைக் கனக்கவைக்கின்றது.
இயந்திரக் கல்வியறிவு மிகுந்து விட்டகாரணத்தால் ,மனிதருக்குள் சாதி, மதம், இனம், மொழி ஆகியன முன்னிறுத்தப்பட்டு மானுடம் பின்னுக்குச்சென்று மறைந்துவிட்டது. இந்த நிலை மாறி, மானுடம் முன்னிறுத்தப்பட வேண்டும் என்னும் உயர் நோக்கத்தோடு நாம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற ஞானப் புதையல்களைக் கொஞ்சம் தோண்டிப்பார்க்கும் முயற்சிதான் இப்போது நாம் கையாள்வது.
உலகம் யாவையும் ஒன்றே என்னும் அத்வைத அறிவை நமக்கு நமது நாட்டு வேதங்களில் இருந்து எடுத்துக் கூறி உலக மானுடத்தை வழிநடத்தியவர்தான் நம் போற்றுதலுக்குரிய மகான் ஸ்ரீ ஆதிசாங்கரர். அத்தகைய மாமேதையின் இன்னுமொரு படைப்பான “ மனீஷா பஞ்சகம்” என்னும் ஞான நூலை, “மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம்” என்னும் பொருளில் நாம் இனி காணலாம்.
மனீஷா என்றால் மனத்தால் ஆராய்ந்து தெளிந்து உறுதிப்படுத்தப்பட்ட முடிவு என்று பொருள். அதாவது நிச்சயிக்கப்பட்ட ஞானம் என்பது பொருள். பஞ்சகம் என்றால் ஐந்தின் தொகுப்பு என்று பொருள். ஆக ‘மனிஷா பஞ்சகம்’ என்பது மனத்தால் ஆராய்ந்து தெளிந்து நிச்சயிக்கப்பட்ட ஐந்து பாடல்களாலான முதிர் அறிவைக் கொண்டது என்பதுபொருள்.
ஆனால் மனிஷா பஞ்சகம் என்னும் நூல் மொத்தத்தில் ஏழு பாடல்களைக் கொண்டது. முதல் இரண்டு பாடல்கள் சமுதாய அவலநிலையைக் கேள்வியாக அமைத்துப் பின் வரும் ஐந்து பாடல்களில் அந்த அவல நிலையை எடுத்தெறிய உபதேசிக்கப்படும் ஞானம்தான் ஸ்ரீ ஆதிசங்கரரின் மனீஷா பஞ்சகம்.
ஏழுபாடல்களைக் கொண்டு ஒரு நூலா என்பது நமக்கு வியப்பைத் தரலாம். ஆனால் ஸ்ரீ ஆதிசங்கரர் ஒரே ஒரு பாடலில் கூட ஒரு நூலைப்படைத்துள்ளார் என்றால் அது மிகு வியப்பளிக்கும். அந்நூல் “ ஏக ஸ்லோகி” என்பதாகும். நமது தமிழில் இத்தகையவை தனிப்பாடல்கள் என்று கூறப்படும். ஆனால் ஸ்ரீஆதிசங்கரின் “ ஏக ஸ்லோகி” , தனிப்பாடலாகாது. அது சதுர்மறைகளின் கூற்றான பரம்பொருளின் இருப்பை ஒரே பாடலில் விளக்கிவிடுவதால் அதற்கு ஒருமுழுமையான நூல் என்னும் நிலையும் சிறப்பும் ஏற்புடையதே.
ஸ்ரீஆதி சங்கரர் இப்பூவுலகில் 32 ஆண்டுகளே இருந்தார் எனப்படுகின்றது. அவரது காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டு எனவும், கி.பி. ஏழாம் நூற்றண்டு எனவும் வாதம் புரிவோர் உண்டு. ஆனாலும் அவர் கி.பி 788–820 இல் வாழ்ந்தவர் என்பது ஒருவாறாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய கேரள மாநிலத்தில் காலடி என்னும் சிற்றூரில் அவர் பிறந்தார்.
இன்றைக்குச் சற்றேறக் குறைய 1200 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீஆதிசங்கரரது காலத்தில் , மனிதனுக்கு மனிதன் தீண்டாமை எனும் மாபாதகக் கொடுமையைச் செய்து கொண்டிருந்த காலம் அது. மிக அதிக அளவில் அக்கொடுமை இருந்திருக்க வேண்டும். இக்கொடுமை அத்வைதம் போதித்த ஸ்ரீஆதிசங்கரருக்கு ஏற்புடையதல்லாததாக இருந்திருக்கவேண்டும். உலகம் யாவையும் பரம்பொருளின் இருப்பே என்ற மகான், எவ்வாறு மனிதருள் சாதிப் பிறிவினையை ஏற்றிருப்பார் ! வெறும் வாக்காக சொன்னால் யாரும் கேட்கப் போவது இல்லையே, எப்படி இவர்களைத் திருத்துவது என்ற எண்ணத்தில் எழுந்த அவரது ஆத்மத் தெளிவுதான் இந்நூலின் தோற்றம்.
ஸ்ரீஆதிசங்கரரின் வாழ்வில் ஒரு நாள் , அவர் கங்கையில் நீராடிவிட்டுக் காசி நகரத்தில் இருந்த தன் ஆசிரமத்திற்குக் குறுகலான பாதையில் திரும்பும்போது ஒரு நாய்மாமிசம் உண்ணும் புலையன் எதிர்ப்பட்டான். அவன் தன் மனைவியுடன், நான்கு நாய்களை இழுத்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியின் கையில் மதுக் குடம். அவன் கீழ்சாதிக்காரன். ஆகையால் அவன் தீண்டத்தகாதவன் மட்டுமல்ல - அவனது மூச்சுக்காற்றும் கூட உயர்சாதிக்காரர்களின் மீது பட்டுவிடக்கூடாது என்றிருந்த காலம். அதனால் ஸ்ரீஆதிசங்கரரின் சீடர்கள் அப்புலையனை, “வழியை விட்டு விலகிப் போ - வழியை விட்டு விலகிப் போ” என்றார்கள்.
இதனைக் கேட்ட அப்புலையன் சிரித்துக் கொண்டே வழியை விட்டு, "யாரை விலகச் சொல்கிறீர்கள்? நான் கொண்டிருக்கும் இந்த உடம்பையா அல்லது என் உடலில் உள்ள ஆன்மாவையா ? எதை விலகச் சொல்கிறீர்கள்?" என்று பொருள்படும் வகையில் ஸ்ரீஆதிசங்கரரைப் பார்த்துக் கேட்டான்.
புலையனின் கேள்வியால் அதிர்ச்சியுற்ற ஸ்ரீஆதிசங்கரர் ,“ இவனே உண்மையான ஆத்மஞானி- இவன் வணங்கத்தக்கவன்” என்று முடிவுசெய்து அவனது காலடியில் அப்போதே அதே வீதியில் தரையில் விழுந்து வணங்கி அப்புலயனைத் தனக்கு ஆத்ம ஞானம் போதித்த தன் குருமார்களில் அவனும் ஒருவன் என்று ஏற்று ஆத்ம தத்துவத்தை விளக்கி ஐந்து பாடல்களைப் பாடினார். அப்பாடல்கள்தான் “ மனீஷா பஞ்சகம்” .
புலையனின் கேள்வி இரண்டு பாடல்களாகவும் , அக்கேள்வியின் விளைவாய் ஸ்ரீஆதிசங்கரரால் நிச்சயிக்கப்பட்ட ஞானம் ஐந்து பாடல்களாகவும் , மனீஷா பஞ்சகம் , மொத்தம் ஏழு பாடல்களாலானது. ஒட்டுமொத்த ஞானக் கருவும் ஐந்து பாடல்களில் இருப்பதால் இது பஞ்சகம் எனப்படுகிறது.
ஸ்ரீஆதிசங்கரர் மனீஷா பஞ்சகம் இயற்றுவதற்கு பின்னணி நிகழ்வாகச் சொல்லப்படும் இக்கதையை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் முடிவு. அடியவனைப் பொறுத்த மட்டில் அது ஒரு மிகைப்படுத்தப்பட்டதாகக் கூட இருக்கலாம் என்பதே. ஞானக் கனியாகியாகிய ஸ்ரீ ஆதிசங்கரரே மானுட அவலம்போக்க ஒரு கேள்வியைக் கேட்டு அதற்குப் பதிலாக இந்த மனீஷா பஞ்சகத்தை அஞ்ஞானிகளாகும் நமது அறிவிற்கு ஆகட்டும் என்று போதித்து இருக்கலாம். பிற்காலத்தில் அந்த கேள்விக்கு ஏற்ப ஒரு கதை புனையப்பட்டிருக்கலாம் அல்லது ஒருவேளை அக்கதை ஒரு உண்மை நிகழ்வாகவும் கூட இருந்திருக்கலாம். எது எப்படியோ இருந்துவிடட்டும். நமக்குக் கிடைத்தது ஒரு அற்புத ஞானம் என்பது மட்டும் தெளிவு. இனி அந்த அற்புத ஞானப் புதையலை- களஞ்சியத்தை நாளை முதல் சுவைப்போம்.

காசி நகர வீதியில், வழியை விட்டுத் தன்னை விலகிப் போ என்று கூறிய சீடர்களின் குருவான ஸ்ரீஆதிசங்கரரைப் பார்த்து நாயின் மாமிசத்தை உண்ணும் புலையன் கேட்கும் முதல் கேள்வி:
अन्नमयात् अन्नमयं अथवा चैतन्यमेव चैतन्यात् ।
द्विजवर दूरीकर्तुं वाञ्चसि किं ब्रूहि गच्छ गच्छेति ॥
அன்னமயாத் அன்னமயம் அதவா சைத்தன்யமேவ சைத்தன்யாத் |
த்விஜவர தூரிகர்தும் வாஞ்ச்ஸி கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி ||
( சில பதிப்புக்களில் द्विजवर த்விஜவர என்னும் பதம் यतिवर –யதிவர என்றுள்ளது. यतिवर –யதிவர என்றால் முனிவர்களில் சிறந்தவரே என்று பொருளாகும்)
பதப்பொருள் :
अन्नमयात् – அன்னமயாத் – உணவிலான உடம்பிலிருந்து;
अन्नमयं – அன்னமயம் - உணவிலான உடம்பை;
अथवा - அதவா- அல்லது;
चैतन्यमेव –சைத்தன்யமேவ - அழியாத அறிவே வடிவான ஜீவாத்மாவாக மட்டுமே விளங்கும்.
चैतन्यात् - சைத்தன்யாத் – அழியாத அறிவே வடிவான ஜீவாத்மாவிலிருந்து.
द्विजवर - த்விஜவர – இருபிறப்பாளரே ( முறையாக ஞானோபதேசம் பெற்றவரே ) !
दूरीकर्तुं - தூரிகர்தும் – விலகிப்போக வேண்டியது.
वाञ्चसि – வாஞ்சஸி - விரும்புகிறாய் ( விரும்புகிறீர்கள் ).
किं - கிம் – எதனை.
हि – ஹி – உண்மையில்.
गच्छ – கச்ச – போ ( என்று).
गच्छेति (गच्छ इति) கச்சேதி – கச்ச இதி.
गच्छ - கச்ச – போ ( என்று).
इति – இதி – இவ்வாறு(கேட்டான்).
தெளிவுரை:
ஸ்ரீ ஆதிசங்கரரை நோக்கிப் புலையன் இவ்வாறு (கேட்டான்):
முறையாக ஞானோபதேசம் பெற்றதனால் இருபிறப்பாளர் என்னும் தகுதிவாய்ந்தவரே (முனிவர்களில் சிறந்தவரே) !
உணவிலான அந்த உங்களுடைய உடம்பும் இந்த என்னுடைய உடம்பும் உணவைத் தவிர வேறு வேறானவற்றால் ஆகாதமையால் உணவிலான அந்த உடம்பிலிருந்து அதே உணவிலான இந்த உடம்பையா அல்லது எங்கும் எப்போதும் எதிலும் அழியாத அறிவே வடிவானதாக மட்டுமே விளங்கும் தங்கள் உடலில் இருக்கும் ஜீவாத்மாவிலிருந்து என் உடலில் இருக்கும் ஜீவாத்மாவையா உண்மையில் எதனை “விலகிப்போ விலகிப்போ” என்று விரும்பி வெறுப்பை உமிழ்கிறீர்கள் ?
விளக்கவுரை:
உலகில் எல்லா ஜீவராசிகளின் உடலும் உணவால் ஆனவையே. அந்தந்த உயிரும் அதனதன் படைப்பிற்கேற்ற உணவை உண்டு உடம்பால் வளர்கிறது. உணவுகள் தத்தம் வகையால் பலப்பல ஆவன. மனிதன் என்னும் படைப்பும் ஒரே தன்மையான உடலமைப்பைக் கொண்டது. உடலமைப்பில் உள்ளும் புறமும் எந்த வேறுபாடும் மனிதர்களுக்கிடையே இல்லை.
தாயின் வயிற்றில் கருவாகும் முறை, கருவில் வளரும் தன்மை, கருவில் இருக்கும் காலம், தாயின் வயிற்றிலிருந்து பூமியில் பிறக்கும் முறை, பிறந்த பின் உடம்பு, உயிர், மனம், ஆத்மா ஆகியன, உணவால் உடம்பும், காற்றால் உயிரும் வாழ்தல், இறுதியில் இறப்பு ஆகிய எல்லாமும் உலகெங்கிலும் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரி சமமானவைதானே.
உண்ணும் உணவு உடலில் எந்த விதமான உயர்வு தாழ்வுகளையும் உண்டு பண்ணுவதில்லை. சுவாமி! தாங்கள் பழம், பால், நெய் போன்ற உணவை உண்பதால் தம் உடலில் பாலையும் பழங்களையும் நெய்யையும் காண முடிவதில்லை. அதுபோலவே நான் நாயின் மாமிசத்தை உண்டு மதுவைக் குடிப்பதால் என் உடலில் நாயின் மாமிசமும், மதுவும் காணப்படுவதும் இல்லை. இருவரது உடம்பிலும் தசை, எலும்பு, நரம்பு, இரத்தம், தோல் போன்ற எல்லாமும் ஓரே விதமாகவும் ஒரே எண்ணிக்கையிலும் தானே இருக்கின்றன. உட்கொள்ளும் இயக்கமும் வெளித்தள்ளும் இயக்கமும் ஒரே மாதிரியானதாகத்தானே இருக்கின்றன. இரண்டிலும் எந்த வேறு பாடும் காணப்படவில்லையே. ஆகையால் எந்த உடம்பை எந்த உடம்பிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்!
மேலும் உடம்போ மாற்றத்திற்கு உள்ளாவதும் அழியும் தன்மையையும் உடையது.அதற்கென்று தனித்த அறிவு கிடையாத சடம் – அதாவது அசத் . தங்களின் கூற்றை சடமான உடல் எவ்வாறு புரிந்து கொள்ளும் ! அவ்வாறு இருக்க நீங்கள் அந்த சடமான உடம்பை விலகிப்போ என்றால் அந்த காரியத்தை உடம்பால் எவ்வாறு செய்ய முடியும்!
அதனைத் தவிர்த்து , உடலுக்குள் இயங்கும் ஆத்மாவை விலகிப்போ என்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால்கூட , ஆத்மா இல்லாத இடம் இந்த உலகில் எங்கே இருக்கின்றது ! அது இல்லாத இடம் என்று ஒன்று இருந்தால், அதனை அங்கு விலகி இருக்கச் சொல்லலாம். ஆகவே அத்தகைய செயல் இயலாத காரியம். மேலும் தங்களின் உடலில் இருப்பதும் என்னுடலில் இருப்பதும் ஓரே பிரம்மத்தின் அம்சமான ஆத்மாதானே. ஒன்றேயானதை எப்படி விலக்கி வைக்கமுடியும் !
ஆகையால் விலகிப்போ என்று என்மீது வெறுப்பை உமிழ்வது முறையோ ! அடியவனுக்கு அருளுரையுங்கள் முனிவர்களில் சிறந்தவரே என்பது இப்பாடலின் கருத்து.
இவ்வளவு ஞானம் ஒரு சாதாரணமான கல்வி அறிவில்லாத புலயனுக்கு அந்த கால கட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே , இக்கேள்வி ஸ்ரீஆதிசங்கரராலேயே கேட்கப்பட்டு பதிலும் சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்பதே அறிவுப் பூர்வமானதும் ஆக்கப் பூர்வமானதுமான சிந்தனையாகும். ஸ்ரீ ஆதிசங்கரரின் ப்ரஸ்னோத்ர ரத்னமாலிகா என்னும் நூலும் இவ்வாறே படைக்கப்பட்டது என்பதை நினைவு கூர்ந்தால் இக்கருத்து விளங்கும். ஆகவே புலயனின் கதை பிற்காலத்தவரால் புனையப்பட்டிருக்க வேண்டும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை என்பதைத் தெளியலாம்.
இதனால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு பாராட்டுவது வீண் பாவம் என்பதை ஸ்ரீஆதிசங்கரர் உபதேசிக்கின்றார் என்பதே உண்மை. 1200 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக ஒரு மாபெரும் ஞானோத்தமரால் சொல்லி விளக்கப்பட்ட ஞானம், இப்போதும் கூட பின்பற்றப்படவில்லையாகில் அது மானுடத்தின் முழு மடமை என்றே சொல்லவேண்டியதாகிறது. இன்னமும் மனிதருள் சாதிபேதம் பாராட்டுவோரை மனிதன் என்று கூறுவதைத் தவிர்த்து மக்கட்பதடி – அதாவது எவருக்கும் பயனற்ற மனித உருவம் கொண்டுள்ளவர்கள் எனலாம்.

காசி நகர வீதியில், வழியை விட்டுத் தன்னை விலகிப் போ என்று கூறிய சீடர்களின் குருவான ஸ்ரீஆதிசங்கரரைப் பார்த்து நாயின் மாமிசத்தை உண்ணும் புலையன் கேட்கும்
இரண்டாவது கேள்வியின் முதல் பாதி:
प्रत्यग्वस्तुनि निस्तरन्ग सहजानन्दावबोधाम्बुधौ विप्रो |
अयम् श्वपचोयमित्यपि महान् को अयम् विभेद भ्रमः ||
ப்ரத்யக்வஸ்துனி நிஸ்தரங்க சஹஜானந்தாவபோதாம்புதௌ விப்ரோ |
அயம் ஸ்வபசோயமித்யபி மஹான் கோ அயம் விபேத ப்ரம: ||
பதப்பொருள் :
प्रत्यक् – ப்ரத்யக் – எதிரில் இருக்கும்; காண்பதற்கு அருகிலிருக்கும்.
वस्तुनि – வஸ்துனி - பொருள்களும்
निस्तरन्ग – நிஸ்தரங்க – அசைவற்ற; அமைதியான, நிலையான(மாறாத)
सहज –சஹஜ - இயற்கையிலான
आनन्द – ஆனந்த - ஆனந்தமான
अवबोध – அவபோத - விழிப்புணர்வாகும் அறிவு
अम्बुधौ நீரை உடையது; ஈரம் உடையது; கருணை நிரம்பியது;
विप्रो (विप्रः)– ஆத்மனை அறிந்த பண்டிதர்
अयम् – அயம் – இவ்விடத்தில் ( என்னிடம் காண்பிக்கும் வெறுப்பு)
श्वपचः - நாயின் மாமிசத்தைப் புசிப்பவன்(புலையன் ).
अयम् - அயம் – இவன்.
इति- இதி – இவ்வாறு.
अपि –அபி – எனமேலும்
महान् –மகான் – உயர்ந்தவர்.
को अयम् - கோ அயம் – எதனால் இம்மாதிரியான
विभेद – விபேத : - வேறு பாடு
भ्रमः - ப்ரம்ம – பிரம்மம்.
தெளிவுரை :
ஆத்ம ஞானத்தை அறிந்த பண்டிதரே !
நம் அருகிலேயே , நாம் காணும் உலகில் இருக்கும் எல்லாவற்றிலும் நம்முடைய காட்சிக்கு எளியதாகி எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகாமல் அவற்றில் நிலையாகவும் இயல்பாகவும் ஆனந்தமயமாக இருந்து கொண்டு அவரவர் விழிப்புணர்வால் எதனையும் அறியக் கூடிய அறிவாக விளங்குவதும் பெருங்கருணையுடையதும் அல்லாவா இந்த ஆத்மா.
என்னிடம் வெறுப்பு காண்பிக்கும் விதத்தில் நாயின் மாமிசத்தை உண்ணும் நானாகிய ஆத்மாவைப் புலையன் என்றும், உயர்ந்தவராகக் கருதிக்கொள்ளும் நீங்களாக இருக்கும் ஆத்மாவை அந்தணன் என்றும் எவ்வாறு ஓரே ஆத்மாவை உங்களால் வேறு படுத்திப் பார்க்கமுடிகிறது !
விளக்கவுரை:
முதல் கேள்வியின் முதல் பகுதியில், “மானுட உடம்பானது மனிதன் உண்ணும் உணவால் ஆவது. உண்ணும் உணவின் பேதத்தால் மானுட உடம்பு பேதப்படுவதில்லை . எனவே உயர்சாதிக்காரன் , தாழ்சாதிக்காரன் என்று உடம்பின் அமைப்பில் வேறுபாடு இல்லை . ஆகையால் இரண்டாகக் காட்சியாகும் பேதமில்லாத ஒன்றை எப்படி பேதப்பட்டதாக வேறுபடுத்தி விலக்க முடியும்!” என்று ஸ்ரீ ஆதிசங்கரரைப் பார்த்துப் புலையன் கேட்கின்றான். அதாவது விலகவேண்டியதாகச் சொல்லப்பட்ட புலயனின் உடலும், விலகு என்று சொல்லிய அந்தணனின் உடலும் உருவ அமைப்பில் ஓரே அன்னமயமாவதால் எந்த உடலை எந்த உடலில் இருந்து விலக்க முடியும் என்பதுதான் அவனது வாதம்.
அதே கேள்விப்பகுதியில் விலகச்சொல்பவன், விலகுமாறு சொல்லப்பட்டவன் ஆகிய இருவருள்ளும் இருப்பது ஒரே ஆத்மாவே. அந்த ஆத்மா உலகில் இல்லாத இடம் இல்லை. ஆகவே எந்த உடலில் இருக்கும் ஆத்மாவை விலக்கி எங்கு வைப்பது என்பது புலயனின் அடுத்த வாதம்.
மேலும் அதே கேள்வியின் பின்பகுதியில், மானுட உடம்பின் தத்துவத்தையும் எடுத்துரைக்கின்றான். அதாவது எல்லா மனிதர்களுடைய உடலும் தோற்றம், மாற்றம், மற்றும் மறைவு ஆகியவற்றிற்கு உள்ளாவதாகும் ஜடம் . மாற்றத்திற்குள்ளாகும் எல்லாமும் அறிவு வடிவாகாத ‘அசத்’ எனப்படுபவை. அசத்தாகிய அழியும் உடம்பிற்கு, அறியும் தன்மை இல்லாததால் அது எவ்வாறு ஸ்ரீஆதிசங்கரரின் சீடர்கள் விலகிக் கொள்ளுமாறு கூறுவதை புரிந்து கொண்டு தானாகவே விலகும் என்று தன் வாதத்தை முன் வைக்கின்றான்.
அதாவது எல்லா மானுட உடலும் அன்னமயமாவதால் ( உண்ணும் உணவால் உண்டாவதால்) அவைகளுக்குள் பேதமில்லையே. ஆதலால் ஒன்றேயான அந்த உடம்பு தன் இருப்பிலிருந்து விலக முடியாது. அது மட்டும் அல்லாமல் உடம்பு ‘அசத்’ என்னும் ஜடமாவதால் அதற்கு அறிந்து கொள்ளும் அறிவு இல்லாததாலும் அது தானாகவே விலக முடியாது என்பதுதான் புலயனின் முதல் கேள்வியிலுள்ள வாதம். அப்போது ‘அசத்’ தத்துவம் விளக்கப்பட்டது.
இந்த இரண்டாவது கேள்வியில், உடலில் இருந்து இயங்குவதும் உடலை இயக்குவதும் ஆகும் ஆத்மா தத்துவத்தைப் பற்றிப் புலையன் பேசுகிறான். அதாவது “ ஆன்மா – சத் என்னும் அறிவு வடிவானது. அது நம் அருகிலேயே நம்மைச் சுற்றி நாம் காணும் உலகில் எல்லாவற்றிலும் உள்ளது. நம்முடைய காட்சிக்கு எளியதாகிறது. எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகாமல் அவற்றில் நிலையாக இருப்பது. தன் இயல்பால் ஆனந்தமயமாக இருப்பது- அதாவது ஆன்மா துன்பத்தால் துவளாது இன்பத்தால் இறுமாந்துபோகாது எப்போதும் ஓரே நிலையாக ஆனந்தமயமாக இருப்பது. அவரவர் விழிப்புணர்வால் எதனையும் அறியக் கூடிய அறிவாக விளங்குகிற பெருங்கருணையுடைது. அறிவு என்னும் ‘சத் ’ தாகிய அது மாற்றத்திற்கு உள்ளாகாத ஒன்றேயானது. உலகின் எல்லா உயிர்களிலும் ஓரே தன்மையதானது” என்பதை ஆத்ம ஞானியான தாங்கள் அறிந்ததுதானே என்கிறான்.
ஆகையால் என்னிடம் வெறுப்பு காண்பிக்கும் விதத்தில் நீங்கள், ‘ நாயின் மாமிசத்தை உண்ணும் நானாகிய ஆத்மாவைப் புலையன் ’ என்றும், உயர்ந்தவராகக் கருதிக்கொள்ளும் நீங்களாக இருக்கும் ஆத்மாவை அந்தணன்’ என்றும் ‘எவ்வாறு எங்கும் எதிலும் எப்போதும் ஒன்றேயான ஆத்மாவை உங்களால் வேறு படுத்திப் பார்க்கமுடிகிறது ! ’ என்கிறான். உலகில் ஓரறிவு முதல் ஆற்றறிவு வரையிலான எல்லா சீவ ராசிகளிலும் இருப்பது ஒரே பரம்பொருளின் அம்சமான ஆத்மாதானே. அதை எவ்வாறு வேறுபடுத்திப் பார்த்து என்னை வெறுத்து விலகச் சொல்கிறீர்கள்.
ஒரு உதாரணத்திற்கு, இராகவன் என்பவன் ஒரு குடும்பத்தில் வாழ்கிறான். அக்குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உறவு முறையால் அவன்:
1. அவனைப் பெற்றெடுத்த வாசுதேவனுக்கு மகன்;
2. அவனது மகனாகிய தாமரைக்கண்ணனுக்குத் தந்தை;
3. தன் உடன் பிறந்த தமக்கை வாசுகிக்குத் தம்பி;
4. தன் தங்கை வளர்மதிக்கு அண்ணன்;
5. தன் மனைவி சுபலாவிற்குக் கணவன்;
6. தன் அண்ணன் சதாசிவத்திற்குத் தம்பி;
7. தன் தம்பி வரதனுக்கு அண்ணன் என்றாகிறான்.
எங்கும், எப்போதும் ஒருவனாகவே இருக்கும் இராகவனை மகன் , தந்தை, தம்பி, அண்ணன், கணவன் என்று அவ்வாறு தனித்தனியாகப் பிரித்து விலக்க முடியும் என்பதுதான் நாம் புரிந்து கொள்ளவேண்டியது. அவ்வாறே எங்கும், எதிலும், எப்போதும் ஒன்றே ஆகிய ஆத்மனை எவ்வாறு பிரித்து விலக்கமுடியும் என்பதுதான் நாய் மாமிசம் உண்ணும் புலையனுடைய இக்கேள்வியின் முதல் பாதியில் இருக்கும் வாதம்.
(ஆத்ம தத்துவ விசார வாதம் இந்த கேள்வியின் அடுத்த பாதியிலும் தொடர்வதைப் பின்பு பார்க்கலாம்)

காசி நகர வீதியில், வழியை விட்டுத் தன்னை விலகிப் போ என்று கூறிய சீடர்களின் குருவான ஸ்ரீஆதிசங்கரரைப் பார்த்து நாயின் மாமிசத்தை உண்ணும் புலையன் கேட்கும் இரண்டாவது கேள்வியின் அடுத்த பாதி:
किम् गंगाम्बुधि बिंबितेम्बर मणौ चंडाल वीधी पयः|
पूरेवा अन्तरमस्ति कांचनघटी मृत्कुम्भयोर्वांबरे ||
கிம் கங்காம்புதி பிம்பிதே அம்பரமணௌ சாண்டாளவீதீபய
பூரே வா அந்தரமஸ்தி காஞ்சனகடி ம்ருத்கும்பயோர்வா அம்பரே||
பதப்பொருள் :
किम् – கிம் -என்ன.
गंगा – கங்கா - கங்கா நதி
अम्बुधि - அம்புதி – நீர் இருக்குமிடம்.
पय –பய - நீர்
पूरे – பூரே -தேங்கி இருக்கும் இடம்
वा – வா- அல்லது
चंडाल – சண்டாள -நாய் மாமிசம் உண்ணும் புலையன்
वीधी – வீதீ -தெரு
बिंबित –பிம்பித – பிரிதிபலிப்பது.
अम्बर –அம்பர - ஆகாயம்
मणौ - மணௌ - மணி ( சூரியன் )
अन्तरम् - அந்தரம் -வேறுபாடு
अस्ति –அஸ்தி - இருக்கிறது
कांचनघटी - காஞ்சன கடீ - தங்கக் குடத்தில்
मृत्कुम्भयोः – ம்ருத்கும்பயோகோ : - மண்குடத்தில்
अम्बरे – அம்பரே - ஆகாயத்தில் .
தெளிவுரை:
“கங்கா நதி நீர் இருக்குமிடம் அல்லது நாய் மாமிசம் உண்ணும் புலையன் வசிக்கும் தெருநீர் தேங்கி இருக்கும் இடம் ஆகிய இரண்டிலும் ஆகாயத்தின் ஒளியாகிய ஓரே சூரியனின் பிம்பம் ஓரே மாதிரியாகவே பிரதிபலிக்கின்றது. அதுபோலவே எங்கும் பரந்துள்ள ஓரே வெளி(ஆகாசம்) தங்கத்தால் செய்யப்பட்ட குடத்தினுள்ளும் நிறைந்துள்ளது – களிமண்ணால் செய்யப்பட்ட குடத்தினுள்ளும் நிறந்துள்ளது. பின் ஏன் இந்த வேறுபாட்டைக் காண்கிறீர்கள் ” என்று புலையன் ஸ்ரீ ஆதி சங்கரரிடம் கேட்டான்.
விளக்கவுரை:
இக்கேள்வியின் முதல் பாதியில் காட்சிக்கு எளியதாகி எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகாது அழியாமலும் , நிலையாகவும், இன்பதுன்பங்களற்ற இயல்பாகவும் அவரவர் விழிப்புணர்வால் எதனையும் அறியக் கூடிய அறிவாக எல்லாவற்றிலும் விளங்குவதும் பெருங்கருணையுடையதும் ஒன்றேயாகியது ஆத்மா என்று கூறிய புலையன், நாயின் மாமிசத்தை உண்ணும் உடம்பில் இருக்கும் ஜீவாத்மாவை புலைய ஆத்மா என்று பார்ப்பதும், உயர்ந்தவராகக் கருதிக்கொள்ளும் அந்தணனின் உடலில் இருக்கும் ஆத்மாவை அந்தண ஆத்மா என்றும் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று கேட்டான்.
இந்த கருத்தை மேலும் வலிமைப்படுத்த உதாரணங்கள் மூலமாகவும் தெளிவாக இரண்டாவது கேள்வியின் இந்த இறுதிப் பாதியில் வாதிக்கின்றான்.
ஆகாயத்தில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் ஒரே சூரியனின் பிம்பம் கங்ககைநீரிலும் பிரதிபலிக்கின்றது.
நாய் மாமிசம் உண்ணும் புலையன் வசிக்கும் தெருநீர் தேங்கி இருக்கும் இடத்திலும் பிரகாசிக்கின்றது. கங்கை என்னும் புனித நீரில் பிரதிபலிக்கும் சூரியபிம்பம் புனிதமானதாகவும், நாய் மாமிசம் உண்ணும் புலையன் வசிக்கும் தெருநீர் தேங்கி இருக்கும் இடத்தில் பிரகாசிக்கும் சூரியபிம்பம் புனிதமற்றதாகவும் இருக்கக் கூடுமா!
அதுபோலவே ஒரே ஆகாயம் என்னும் பரந்த வெளி தங்கத்தினால் செய்யப்பட்ட குடத்திற்குள்ளும் , களிமண்ணால் செய்யப்பட்ட குடத்திற்குள்ளும் இருக்கின்றது. தங்கக் குடத்தில் இருக்கும் ஆகாயத்திற்குப் பெருமையும் உயர்வும் கிடைத்து விடுமா ! களிமண் பானையில் இருக்கும் ஆகாயத்திற்குச் சிறுமையும் தாழ்ச்சியும் உண்டாகுமா !
[ஒரு விளக்கம் - பாத்திரங்களில் வேறு பொருட்கள் இல்லாதபோது அவைகளில் ஆகாயம் நிறைந்துள்ளது என்பதை நம்மில் பலர் எண்ணிப்பார்ப்பதில்லை. வெற்றிடம் என்று எங்கும் எதுவும் எப்போதும் கிடையாது. எங்கும் எப்போதும் வெளி என்னும் ஆகாயமே நிறைந்துள்ளது. உண்மையில் சொல்லப்போனால் நாம் பூமிக்குமேல் ஆகாயத்தில்தான் வாழ்கின்றோம். வானோர் என்பது மனிதர்கள்தான். மனிதர்களுக்கு வேறானவர்கள் என்பதெல்லாம் கற்பனை என்பது தெள்ளறிவால் விளங்கும்.]
எந்த நிலையில் சூரியனின் பிம்பம் எந்த இடத்தில் காணப்பட்டாலும் உயர்வு- தாழ்வோ, பெருமை- சிறுமையோ சூரியனுக்கும், ஆகாயப் பெருவெளிக்கும் உன்டாவதில்லை. அவற்றின் இருப்பிடத்தால் அவை தத்தம் நிலையிலும் தன்மையிலும் மாறுபடுவதும் இல்லை - வேறுபடுவதும் இல்லை.
தங்கக் குடத்தில் இருப்பதால் ஆகாயம் உயர்வையும் மண்குடைத்தில் இருப்பதால் தாழ்வையும் அடையுமா ! அதனால் ஆகயத்திற்கு ஏற்றமோ தாழ்ச்சியோ உண்டாகுமா !
ஆகையால் பலவாக உள்ள மானுட உடலில் என்றும் மாறாததும் அழியாததும் உண்மை வடிவாகவும் ஒன்றேயாகவும் ஆகிய சுத்த சைத்தன்யம் என்னும் ஆன்மாவிடத்தில் நீங்கள் வேறுபாடு பாராட்டி வெறுத்துப் பேசி என்னை விலகிப் போகச் சொல்வது எவ்வாறு சரியானதாகும் என்று புலயன் கேட்டான்.
இவ்வாறு புலயனால் கூறப்பட்ட வாதங்களின் உண்மைப்பொருளை உணர்ந்த ஸ்ரீ ஆதிசங்கரர் அந்த புலயன் ஒரு ஆத்மஞானி என்பதாகத் தெரிவு செய்கிறார். ஆகையால் தானே விரும்பி தன்னை அவனிடம் சரணாக ஆக்கிக் கொள்கிறார். அதன் விளைவாய், எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் அனுபூதியை அடைந்த ஒருவர், எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எத்தகைய நிலைமையில் இருந்தாலும், தன்னால் குரு என ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்பதை முடிவு செய்து கொண்டு அதன் பயனாய்த் தான் கண்டு உணர்ந்து தெளிந்த முடிவை உலகமும் அறியவேண்டும் என்னும் விழைவில் ஒப்புதல் வாக்கு மூலம் போன்ற ஐந்து பாடல்களால் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார். அதுவே மனீஷா பஞ்சகம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ ஆதிசங்கரரின் மனத்தால் ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்று சரியானதே என்று அவரால் உறுதி படுத்தப்பட்ட ஞானம்(நிச்சயிக்கப்பட்ட ஞானம்) என்பதாகும்.
இனி மனீஷா பஞ்சகத்தை அறிவோம் .

காசி நகர வீதியில், வழியை விட்டுத் தன்னை விலகிப் போ என்று கூறிய சீடர்களின் குருவான ஸ்ரீஆதிசங்கரரைப் பார்த்து நாயின் மாமிசத்தை உண்ணும் புலயனால் கூறப்பட்ட வாதங்களின் உண்மைப்பொருளை உணர்ந்த ஸ்ரீ ஆதிசங்கரர், அந்த புலயன் ஒரு ஆத்மஞானி என்று தெளிவடைகிறார்.
ஆகையால் தானே விரும்பித் தன்னை அவனிடம் சரணாக ஆக்கிக் கொள்கிறார். அதன் விளைவாய், எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் அனுபூதியை அடைந்த எவராயினும் , அத்தகையவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எத்தகைய நிலைமையில் இருந்தாலும், தன்னால் குரு என ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்பதை முடிவு செய்து கொண்டு அதன் பயனாய்த் தான் கண்டு உணர்ந்து தெளிந்த முடிவை உலகமும் அறியவேண்டும் என்னும் விழைவில் ஒப்புதல் வாக்கு மூலம் போன்ற ஐந்து பாடல்களால் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார்.
அதுவே மனீஷா பஞ்சகம் என்று போற்றப்படுகின்றதும் ஸ்ரீ ஆதிசங்கரரின் மனத்தால் ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்று சரியானதே என்று அவரால் உறுதி படுத்தப்பட்டதும் ஆகிய ஞானம்(நிச்சயிக்கப்பட்ட ஞானம்) என்பதாகும். இனி மனீஷா பஞ்சகத்தின் முதல் பாடல்:
जाग्रत्स्वप्न सुषुत्पिषु स्फुटतरा या संविदुज्जृम्भते
या ब्रह्मादि पिपीलिकान्त तनुषु प्रोता जगत्साक्षिणी |
सैवाहं न च दृश्य वस्त्विति दृढ प्रज्ञापि यस्यास्तिचे
च्चण्डालोस्तु स तु द्विजोस्तु गुरुरित्येषा मनीषा मम ||
ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்விதுஜ்ஜ்ரும்பதே
யா ப்ரஹ்மாதி பிபிளிகாந்ததனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணி|
ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்திவதி த்ருடப்ரக்ஞாபி யஸ்யாதி சேத்
சண்டாளோஸ்து ஸ து த்விஜோஸ்துகுருரித்யேஷா: மணீஷா மம ||
முதல் அடி :
जाग्रत् – ஜாக்ரத் – விழிப்பு நிலை.
स्वप्न - ஸ்வப்ன – உறக்க நிலை.
सुषुत्पिषु – சுஷுப்திஷு – விழிப்பும் உறக்கமும் அற்ற மெய்மறந்த நிலை.
स्फुटतरा -ஸ்புடதரா – மிகத் தெளிவாக.
या संवित् – யா சம்வித் – எது யாவற்றிலும் அறிவு மயமாக.
जृम्भते –ஜ்ரும்பதே – பேசப்படுவதாக விளங்கிக் கொண்டுள்ளதோ.
இரண்டாம் அடி:
या ब्रह्म आदि - யா ப்ரம்ஹ ஆதி - எது வரம்பற்ற பரம்பொருள் முதற்கொண்டு.
पिपीलिका अन्त – எறும்பு முடிவாக.
तनुषु –தனுஷு – உடலைக் கொண்டு விளங்குகிறதோ.
प्रोता – ப்ரோதா - அவ்வுடல்களுக்குள் கோர்க்கப் பட்டதாக.
जगत् साक्षिणी – ஜகத் சாக்ஷிணீ - உலக இயக்கங்ககுக்கெல்லாம் சாட்சியாக உள்ளதோ.
மூன்றாம் அடி:
च एव अहम् – ச ஏவ அஹம் – அதுவே நான்.
न च दृश्य – ந ச த்ருஷ்ய - மேலும் புலங்களால் அறியப்படாத.
वस्तु इति – வஸ்து இதி - பொருளாகிய இது.
दृढ प्रज्ञा अपि –த்ருட ப்ரக்ஞா அபி - உறுதியான தன்னுணர்வாகக் கூடிய.
यस्य अस्ति चेत् – யஸ்ய அஸ்தி சேத் - எதனுடைய அவ்வாறு இருக்கும் தன்மையை.
நான்காம் அடி:
चण्डालः अस्तु – சண்டாள: அஸ்து - புலையனாக இருக்கட்டும்.
स तु – ச து - அதுபோலவே .
द्विजः अस्तु - த்விஜ: அஸ்து – இருபிறப்பாளன் என்னும் பூணூல் அணிந்தவனாகட்டும்( அந்தணனாகட்டும்).
गुरुः इति – குரு: இதி – அப்படிப்பட்டவரே ஞானாச்சாரியன் என்பது.
एषा मनीषा मम - ஏஷா மனீஷா மம – இதுவே என்னுடைய தீர்மானமாகும் முடிவான அறிவு.
தெளிவுரை:
விழிப்பு நிலை, உறக்க நிலை மற்றும் விழிப்பும் உறக்கமும் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட மெய்மறந்த நிலை ஆகிய வாழ்வில் ஒருவனுக்கு உண்டாகும் மூன்று நிலைகளிலும் எது உலகில் காணப்படும் எல்லாப் பொருள்களிலும் மிகத் தெளிவான அறிவு மயமாக பேசப்படுவதாக விளங்கிக் கொண்டுள்ளதோ;
எது வரம்பற்ற பரம்பொருள் முதற்கொண்டு, எறும்பு முடிவாக எல்லாவகை உயிரினங்களிலும் உடலெடுத்த ஜீவனாக விளங்குகிறதோ; மேலும் அவ்வுடல்களுக்குள் ஊடுருவி உலக இயக்கங்களுக்கெல்லாம் சாட்சியாக உள்ளதோ;
புலன்களால் அறியப்படாத பொருளாகியதாக இருக்கிறதோ; அவ்வாறு இருக்கும் அதனுடைய எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகாத நிலையான தன்மையைத் தன்னுணர்வு என்னும் ஆத்மாவே என்று எவரால் அறியப்படுகிறதோ;
அத்தகையவர் தாழ்ந்த சாதிக்காரன் என்னும் புலையனாக இருப்பவரானாலும், அதுபோலவே இருபிறப்பாளன் என்னும் பூணூல் அணிந்த உயர்ந்த சாதிக்காரன் என்னும் அந்தணராக இருப்பவரானாலும் , அப்படிப்பட்டவரே என்னுடைய ஞானாச்சாரியன் என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு.
விளக்கவுரை :
உலகில் அஞ்ஞானிகளாகிய மானுடரின் வாழ்வு மூன்று நிலைகளில் அடங்கிவிடும். அவை விழிப்பு நிலை, உறக்க நிலை மற்றும் விழிப்பும் உறக்கமும் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட மெய்மறந்த நிலை ஆகிய மூன்றுமாவன. இல்லற மற்றும் துறவற வாழ்விற்காகும் அனைத்துப் பணிகளும் இம்மூன்று நிலைகளிலேயே முடிந்து விடுகின்றன.
ஆனால் மெய்ஞ்ஞானிகளுக்குத் தியானநிலை (துரியம்) மற்றும் சமாதி நிலை (துரிய அதீதம்) ஆகிய இரண்டு நிலகள் கூடுதலாக உள்ளன. ஸ்ரீஆதிசங்கரர் இந்த முதல் மூன்றிற்கும் கடைசி இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வாழும் மனிதர்களைக் குறிப்பிடுகிறார்.
முதல் மூன்று நிலைகளை வாழ்வாகக் கொண்டு வாழ்பவர்கள்:
- உலகில் காணும் யாவற்றிலும் மிகத் தெளிவாக அறிவு மயமாக பேசப்படுவதாக விளங்கிக் கொண்டு இருப்பது ஆத்மா என்னும் மெய்யறிவே ;
- வரம்பற்ற பரம்பொருள் முதற்கொண்டு, எறும்பு முடிவாக உடலெடுத்த அனைத்து ஜீவனாக விளங்குவதும் ஆத்மா என்னும் மெய்யறிவே;
- அவ்வுடல்கள் அனைத்திற்குள்ளும் ஊடுருவி இருப்பதும் ஆத்மா என்னும் மெய்யறிவே;
- உலக இயக்கங்களுக்கெல்லாம் சாட்சியாக இருப்பதும் ஆத்மா என்னும் மெய்யறிவே;
- மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களால் அறியப்படாத பொருளாக இருப்பதும் ஆத்மா என்னும் மெய்யறிவே;
- அவ்வாறு ஆத்மாவாக இருப்பது எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகாத நிலையான தன்மையை உடையது;
- அந்த ஆத்மாவே பிற உயிர்களின் உடம்பில் இருப்பதுபோலவே தன்னுடம்பிலும் தன்னுணர்வு என்று கூறும்படி உள்ளது;
- அந்தத் தன்னுணர்வு அதாவது ப்ரக்ஞை எனப்படுவதே அந்த ஆத்மா ( ப்ரக்ஞானாம் பிரம்மம் - प्रज्ञाणाम् ब्रह्म ) என்று
எவரால் அறியப்படுகிறதோ;
அவர் தாழ்ந்த சாதிக்காரன் என்னும் புலையனாக இருப்பவரானாலும், அதுபோலவே இருபிறப்பாளன் என்னும் பூணூல் அணிந்த உயர்ந்த சாதிக்காரன் என்னும் அந்தணராக இருப்பவரானாலும் , அப்படிப்பட்டவரே என்னுடைய ஞானாச்சாரியன் என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு.
கருத்துரை:
புலயனின் வாதத்தில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொண்ட பின் ஸ்ரீஆதிசங்கரர், ஒரு தெளிவான முடிவிற்கு வந்து விடுகிறார்.
i. பரமாத்மா என்னும் பிரபஞ்சப் பேராற்றலே, தன்னுடைய அம்சத்தால் ஜீவாத்மா என்று உலகில் காணப்படும் எல்லா உயிர்களிலும் ஜீவனாக ஊடுருவி நிற்கின்றது;
ii. அந்த ஜீவாத்மா அந்தந்த உயிர்களைத் தாங்கி இருக்கும் உடல்களின் உருவ வேறுபாட்டாலோ அல்லது அவற்றின் ஒழுகலாறுகளின் வேறுபாட்டாலோ மாறாது விளங்கும் நிலைத்தன்மையை உடையது;
iii. ஜீவன் தாங்கியிருக்கும் உடம்போ உண்ணும் உணவு என்னும் ஒரு பொதுமையால் வளர்வது;
iv. உண்ணும் உணவின் வேறுபாட்டால் ஜீவனின் உடம்பு எவ்வகையிலும் இயற்பியல் (பௌதிகம்) வேறுபாடு அடைவதில்லை;
v. ஜீவன் என்னும் ஜீவாத்மா மரம், செடி, கொடி ஆகியன, ஊர்வன; பறப்பன, நீரில் வாழ்வன, நிலத்தில் வாழ்வன, நீர்-நிலம் ஆகிய இரண்டிலும் வாழ்வன, அசையும் தன்மையன, அசையாத தன்மையன ஆகிய எல்லாவற்றிலும்(மனிதன் உட்பட) ஒன்றேயாக மாறாததாக நிலைத்துள்ளது;
vi. எனவே உலகம் யாவையும் தாம் உள ஆக்குவதும், அவற்றில் நிலைபெறுவதும் பரமாத்மா என்னும் ஒன்றே;
vii. மனிதருக்குள்ளும் அல்லது இன்னபிற ஜீவன்களுக்குள்ளும் உயர்வு-தாழ்வு காண்பது அறியாமையால் செய்யப்படும் பாவச்செயல்;
என்னும் பேருண்மையை எவர் ஒருவர் அறிந்துள்ளாரோ அவரே ஆத்மஞானி. அத்தகையவரே உலகோரால் குருவாக ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்பது இப்பாடலின் திரண்ட கருத்து.
இந்த ஆத்மஞானத் தெளிவை உலக மானுடம் அறியவேண்டும் என்றும், அதனால் மனிதருக்குள் உயர்வு –தாழ்வு என்னும் சாதித்துவேஷம் ஒழியவேண்டும் என்றும், அதன் விளைவாய்த் தத்தம் வாழ்வில் ஒவ்வொருவரும் மனநிறைவும் மனநிம்மதியும் பெற்று நிறைவாழ்வு வாழவேண்டும் என்றும் இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆசைப்பட்ட நம் ஜெகத்குரு ஸ்ரீஆதிசங்கரை மனம், மொழி, பெய்யாலே நாமும் உலகம் உள்ளளவும் வணங்கி அவரது முடிவின்படி வாழ்ந்து நலம் பெற அம்மகானே நமக்கு நல்லறிவை நம்முள் வளரச் செய்ய வேண்டுமென்று வேண்டி அவரையே மீண்டும் மீண்டும் வணங்குவோம்.
மனிதருக்குள் சாதி பேதம் ஒழிய உபதேசம் தந்த மாமேதையே !
ஆதிப்ரம்மத்தின் அத்வைதத்தை அகிலத்தோருக்கு விளங்கவைத்த அருளாளரே !
ஸ்ரீஆதிசங்கரர் என்னும் அற்புதமே !
தாம் உபதேசித்த அத்தகைய அத்வைதத் தெளிவை அடியவனும் பெறும் வகையில் எம்
ஸ்ரீகுருதேவரின் அருளாசிகளோடு பெற்ற அடியவனின் பணிவான முதல் வணக்கத்தை ஏற்றுக்
கொள்ளுங்கள், பிரபுவே!
ஸ்ரீகுருவே நம:

ஸ்ரீ ஆதிசங்கரரின் மனத்தால் ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்று சரியானதே என்று அவரால் உறுதி படுத்தப்பட்ட ஞானம்(நிச்சயிக்கப்பட்ட ஞானம்) மனீஷா பஞ்சகத்தின் இரண்டாவது செய்யுள்(ஸ்லோகம்):
ब्रह्मैवाहमिदं जगच्च सकलं चिन्मात्रविस्तारितं
सर्वं चैतदविद्यया त्रिगुणयाशेषं मया कल्पितम् |
इत्थं यस्य दृढा मतिः सुखतरे नित्ये परे निर्मले
चण्डालोस्तु स तु द्विजोस्तु गुरुरित्येषा मनीषा मम||
பிரஹ்மோவாஹமிதம் ஜக்ச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா திரிகுண்யாs சேஷம் மயா கல்பிதம்|
இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகரே நித்யேபரே நிர்மலே
சண்டாளோs ஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனிஷா மம||
பொருளுரை :
முதல் அடி
ब्रह्म - ப்ரம்ம - பிரம்மம்.
एव – ஈவ – உண்மையில்.
अहम् –அஹம் – நான்.
इदम् – இதம் – இங்கே.
जगत् च¬ –ஜகத் ச – மேலும் இந்த உலகில்.
सकलं - சகலம் – முழுமையிலும்.
चिन्मात्र – சின்மாத்ர – அறிவின் வ்டிவாக
विस्तारितं - விஸ்தாரிதம் - வியாபித்திருத்தல் ; எங்கும் நிறைந்திருத்தல்.
இரண்டாவது அடி:
सर्वं - சர்வம் – இங்குள்ள அனைத்தும்.
च एतत् अविद्यया – ச ஏதத் அவித்யயா – மேலும் இந்த அறியாமை என்னும் அஞ்ஞானத்தால்.
त्रिगुणया- திரிகுணயா – தாமஸம், ராஜசம், சாத்வீகம் என்னும் முக்குணங்களால்.
शेषं – சேஷம் – எஞ்சி இருப்பது
मया –மயா - என்னுடைய
कल्पितम् -கல்பிதம் – கற்பனை.
மூன்றாவது அடி :
इति अयम् –இதி அயம் – இங்கே இவ்வாறு
यस्य – யஸ்ய - எவருடைய
दृढा मतिः – த்ருடா மதி: - உறுதியான அறிவு.
सुखतरे – சுகதரே – முடிவான ஆனந்தம்
नित्ये – நித்யே - நிரந்தரமாக
परे – பரே - மேன்மையில்
निर्मले – நிர்மலே - குறைகளின்றி
நான்காவது அடி

மேலும், உண்மையில் நான் என்னும் தன்னுணர்வாகும் அறிவின் வடிவாக இங்கே இருக்கும் இந்த உலகம் முழுமையும் எங்கும் நிறைந்திருப்பது பிரம்மம் என்னும் பிரபஞ்சப்பேராற்றலே என்றும்;
அவ்வாறாக இந்த உலகில் உள்ள அனைத்தும் தாமஸம், ராஜசம், சாத்வீகம் என்னும் முக்குணங்களால் ஆகியவை என்றும், அவை உண்மையில் இருப்பதாக எண்ணுவது தன்னுடைய அறியாமை என்னும் அஞ்ஞானத்தால் உண்டாகிய கற்பனை என்றும்;
இங்குள்ள எவர் தம் உறுதியான அறிவால் தீர்மானித்துக் குறைகளின்றி துயரங்களற்ற முடிவான ஆனந்தம் என்னும் மேன்மையில் நிரந்தரமாக திளைத்துள்ளாரோ ;

பஞ்சகத்தின் முதல் செய்யுளில் மனித வாழ்வின் மூன்று நிலைகளை முறையே விழிப்பு நிலை, உறக்க நிலை மற்றும் விழிப்பும் உறக்கமும் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட மெய்மறந்த நிலை என்று
வாழ்வில் ஒருவனுக்கு உண்டாகும் மூன்று நிலைகளிலும் உலகில் காணப்படும் எல்லாப் பொருள்களிலும் மிகத் தெளிவான அறிவு மயமாக பேசப்படுவதாக ஆன்மா விளங்கிக் கொள்ளப்படவேண்டும் என்றார்.
இச்செய்யுளில் அந்த மூன்று நிலைகளில் விழிப்பு நிலையை சாத்வீக குணம் என்றும், உறக்க நிலையை தாமஸ குணம் என்றும், விழிப்பும் உறக்கமும் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட மெய்மறந்த நிலையை ராஜஸ குணம் என்றும் குறிப்பிடுகின்றார்.
அதாவது தாமஸம் என்னும் தாழ்ந்த குணத்தை அதம குணம் என்பர். அதம குணம் உடையவர்கள் பிறர் நலம் ஏற்காத மிருகத்தனம் கொண்ட சுயநலக் காரர்கள்.இத்தகையவர்கள் இந்த உலகில் ஜீவிக்க வந்த ஜீவாத்மாக்கள். அறிவுத் தெளிவற்ற அஞ்ஞானம் என்னும் மாயையில் வாழ்நாளைக் கழிப்பவர்கள். தாமஸ குணத்தவர்கள் தர்மம் - அதர்மம் என்று பாராமல் தங்களது மனம்போன போக்கில், தத்தம் மனத்தால் வாழ்பவர்கள். ஆதலால் மனிதர்கள் எனப்படுகின்றனர்.இவர்கள் பிறரது துன்பத்திலும் தாம் இன்பம் காண்பவர்கள் . நமது பாரத நாட்டு இதிகாச புராணங்கள் இத்தகையோர்களை அசுரர்கள் என்று குறிப்பிடுகின்றன. உதாரணத்திற்கு இராமாயணத்தில் வரும் இராவணன், ஸ்ரீமத்பாகவத புராணத்தில் வரும் கம்சன், சாணூரன் போன்ற காதாப்பத்திரங்கள்.
இராஜஸம் என்னும் இடைப்பட்ட குணத்தை மத்திம குணம் என்பர். மத்திம குணம் உடையவர்கள் பிறர் நலம் மற்றும் தன் நலம் ஆகிய இரண்டையும் ஏற்பவர்கள். இவர்களிடம் சாத்வீக குணமும் தாமஸ குணமும் கலந்திருப்பவை. தம் சுயநலத்தில், சுயநலம் மட்டுமே முழுவதும் அல்லாமல் கொஞ்சம் பொதுநலமும், தம் பொதுநலத்தில் பொதுநலம் மட்டுமே முழுவதும் அல்லாமல் கொஞ்சம் சுயநலமும் கொண்டு வாழ்பவர்கள். இராஜஸம் என்னும் மத்திம குணத்தவர்கள் தர்மம் - அதர்மம் என்று தம் செயல்களைத் தத்தம் புத்தியால் பிரித்துப்பார்த்து தங்களது புத்தியின் முடிவால் வாழ்பவர்கள் . ஆதலால் புத்தர்கள் என்று போற்றப் படுகின்றனர். மத்திம குணத்தவரின் செயல்பாடுகளில் சுயநலம் குறைந்து பொதுநலம் மிகுந்திருந்தால் அவர் உயர்ந்தவர் – புத்தர்- மகாத்மா என்றும், பொதுநலம் குறைந்து சுயநலம் மிகுந்து இருந்தால் அவர் தாழ்ந்தவர் – மனிதர் – ஜீவாத்மா என்றும் குறிப்பிடப்படுகிறார். துன்பத்தில் துன்பத்தையும் , இன்பத்தில் இன்பத்தையும் காண்பவர்கள். நமது பாரத நாட்டு இதிகாச புராணங்கள் இத்தகையோர்களை நரர்கள் என்று குறிப்பிடுகின்றன. உதாரணத்திற்கு இராமாயணத்தில் வரும் விபீஷணன் ஆகியோர் மகாத்மாக்கள் என்றும், தசரதன், கைகேயி ஆகிய கதாபாத்திரங்கள் தாழ்ந்தவர்கள் என்றும் , ஸ்ரீமத் பாகவத புராணத்தில் வரும் உத்தவர் போன்ற காதாப்பத்திரங்கள் மகாத்மாக்கள் என்றும், கோபியர்கள் போன்றோர் தாழ்ந்தவர்கள் என்றும் கருதப்படுகின்றனர்.
சாத்வீகம் என்னும் குணத்தை உத்தம குணம் என்பர். உத்தம குணம் உடையவர்கள் பிறர் நலத்தில் மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றுவர். தத்தம் ஒவ்வொரு செயலிலும் பாவம் – புண்ணியம் என்பன வற்றைப் பார்ப்பவர்கள். சுய நலத்தைக் கருதாதவர்கள். பொதுநலத்திலும் பாரபட்சம் காண்பிக்காத நடுநிலையாளர்கள். இவர்களிடம் சாத்வீக குணம் மட்டுமே காணப்படும். இவர்களை நமது இதிகாச புராணங்கள் சுரர்-அதாவது தேவர் என்கின்றன. இவர்கள் இன்பத்தை விழையாது துன்பத்தை இயல்பு என்று எண்ணி தத்தம் வாழ்வை அதனதன் போக்கிலேயே விட்டு விட்டு ஆத்ம முக்தியை நாடி வாழ்பவர்கள். தேவர்கள் என்றால் சான்றோர்கள். மனிதனாகப் பிறப்பிக்கப்பட்ட இராமன், கிருஷ்ணன் ஆகியோர் தத்தம் சாத்வீக குணத்தால் தேவ நிலையை அடைந்ததால், அவர்களைத் தேவர்களே மனிதப்பிறவி எடுத்தாக மறுதலையாகக் கொள்ளப்படுகின்றது.
மனிதர்களாகப் பிறவி எடுத்தவர்கள், அசுரர்(அதமம்-தாமஸம்) என்றும், நரர்(மத்திமம்- இராஜசம்) என்றும், சுரர்(உத்தமம்- சாத்வீகம்) என்றும் மூவகைக் குணங்களால் ஆனபோதிலும்:
- அம்மூவகை குணத்தோருள்ளும் உறைவது உண்மையில் யாவரிடமும் இருக்கும் நான் என்னும் தன்னுணர்வாகும் அறிவாகிய ஆத்மாதான் என்றும் ;
- அவ்வாறு முக்குண இயல்பாக இங்கே இருக்கும் இந்த உலகம் முழுமையும் எங்கும் நிறைந்திருக்கும் அது பிரம்மம் என்னும் பிரபஞ்சப்பேராற்றலே என்றும்;
- ஆனாலும் அம்மூவகையாளரிடமும் வேற்றுமை பாராட்டுவது தன்னுடைய அறியாமை என்னும் அஞ்ஞானமே என்றும்;
- ஆக மூவகை குணங்களைத் தவிற இவ்வுலகில் பிறவாக எதுவும் எஞ்சி இருப்பதாக எண்ணுவது தன்னுடைய கற்பனை என்றும்
இங்குள்ள எவர் தம் உறுதியான அறிவால் தீர்மானித்துக் குறைகளின்றி துயரங்களற்ற முடிவான ஆனந்தம் என்னும் மேன்மையில் நிரந்தரமாக திளைத்துள்ளாரோ, அவர் தாழ்ந்த சாதிக்காரன் என்னும் புலையனாக இருப்பவரானாலும், அதுபோலவே இருபிறப்பாளன் என்னும் பூணூல் அணிந்த உயர்ந்த சாதிக்காரன் என்னும் அந்தணராக இருப்பவரானாலும் , அப்படிப்பட்டவரே என்னுடைய ஞானாச்சாரியன் என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகிய முடிவான அறிவு என்று ஸ்ரீஆதிசங்கரர் உபதேசம் செய்கிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரரின் மனத்தால் ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்று சரியானதே என்று அவரால் உறுதி படுத்தப்பட்ட ஞானம்(நிச்சயிக்கப்பட்ட ஞானம்) மனீஷா பஞ்சகத்தின் மூன்றாவது செய்யுள்(ஸ்லோகம்):
शश्वन्नश्वरमेव विश्वमखिलं निश्चित्य वाचागुरोरः
नित्यं ब्रह्म निरन्तरं विमृशता निर्व्याज शान्तात्मना,
भूतं भावि च दुष्कृतं प्रदहता संविन्मये पावके
प्रारब्धाय समर्पितं स्ववपुरित्येषा मनीषा मम ॥
சச்வன்ன ச்வரமேவ விச்வமகிலம் நிச்சித்ய வாசாகுரோர:
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருசதா நிர்வ்யாஜசாந்தாத்மனா|
பூதம் பாதி ச துஷ்க்ருதம் ப்ரதஹதா ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்பிதம் ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம||
பத்ப்பொருள் :
முதல் அடி:
शश्वन् – ஷஷ்வன் – காண்பதற்கு உறுதியானதாக இருப்பதைப்போல் இருந்துகொண்டு
नश्वरम् एव – நஷ்வரம் ஏவ – உண்மையில் அழிந்துகொண்டே இருக்கிறது என்பதாகிய
विश्वम् –விஸ்வம் – உகலப் பொருட்கள்
अखिलं - அகிலம் – எல்லாமும்.
निश्चित्य –நிஸ்சிதய - மனதில் உறுதிப்படுத்திக் கொண்டு
गुरोः वाचा – குரோ: வாசா – ஸ்ரீ குருதேவரின் வாக்குப்படி
இரண்டாவது அடி-
नित्यं –நித்யம்- எப்போதும் மாறாத நிலைத்ததான
ब्रह्म - ப்ரம்ஹ - பிரம்மம்
निरन्तरं –நிரந்தரம் – மாறுபாடற்றது.
विमृशता – இவ்வுணர்வோடு எப்போதும்
निर्व्याज – களங்கமற்றதான தூய அறிவுடன் கூடிய
शान्त आत्मना – சாந்த ஆத்மனா- ஒருமுகப்பட்ட மனத்தை உடையவனால்
மூன்றாம் அடி :
भूतं -பூதம் – கடந்த காலம்.
भावि च – பாவி ச - மற்றும் எதிர்காலம் (நிகழ்காலம் என்ற ஒன்று உண்மையில் இல்லை).
दुष्कृतं – துஷ்க்ருதம் - அறியாமையால் செய்யப்பட்ட வினைகள்.
प्रदहता –ப்ரதஹதா – முற்றும் அழிக்கப்பட்டு.
संविन्मये – வின் மயே – மிகச்சிறந்த ஞானத்தில்
पावके –பாவகே - எரியும் தீயாகிய ஞானத்தில்
நான்காம் அடி:
प्रारब्धाय – ப்ராரம்பாய – நுகர்வினை என்னும் இப்பிறவிக்கான விதிப்பயன்கள்
समर्पितं -சமர்ப்பிதம் – முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுதல்.
स्ववपुर - ஸ்வவபுர – தன் பரு உடல்.
इति - இதி –இவ்வாறு.
एषा – ஏஷா - இவர்(எவர்)
मम मनीषा –மம மனீஷா - என்னுடைய மனத்தால் நிச்சயிக்கப்பட்ட அறிவு.
தெளிவுரை :
உலகப் பொருட்கள் எல்லாமும் காண்பதற்கு நிலையாகவும் உறுதியாகவும் இருப்பதைப்போல் தோன்றினாலும் அவைகள் ஒவ்வொரு கணப்பொழுதிலும் உண்மையில் அழிந்துகொண்டே இருக்கின்றன என்பதை ஸ்ரீ குருதேவரின் வாக்குப்படி மனதில் உறுதிப்படுத்திக் கொண்டு ;
ஆனாலும் எப்போதும் மாறாமல் நிலைத்தத் தன்மையதான பிரம்மம் மாறுபாடற்றது என்னும் இவ்வுணர்வோடு எப்போதும் களங்கமற்றதான தூய அறிவுடன் கூடிய ஒருமுகப்பட்ட மனத்தை எவர் உடையவராக உள்ளாரோ;
முற்பிறவிகளாகிய கடந்த காலங்களில் அறியாமையால் செய்யப்பட்ட சஞ்சித கர்மங்கள் (தொகுப்பு வினை), மற்றும் எதிர்காலத்தில் அறியாமையால் செய்ய உள்ள ஆகாமிய கர்மங்கள் ( வருவினை) ஆகிய க யாவும் முற்றுமாக எரியும் தீயாகிய மிகச்சிறந்த ஞானத்தில் அழிக்கப்பட்டு;
நுகர்வினை என்னும் இப்பிறவிக்கான விதிப்பயன்கள் முழுவதுமாக விருப்பு வெறுப்பு இல்லாமல் தன் பரு உடலால் ஏற்று அனுபவிக்கப்படவேண்டும் என்று இவ்வாறு எண்ணம் உடையவராகிறாரோ அப்படிப்பட்டவரே என்னுடைய ஞானாச்சாரியன் என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு.
விளக்கவுரை :
கணபங்க வாதம் (க்ஷண பங்க வாதம்) - அதாவது உலகில் உள்ள அனைத்தும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது கௌதம புத்தரின் கண்டு பிடிப்பு என்பது பலரது கருத்து. ஆனால் உண்மையில் அது புத்தர் பிரானுக்கு முன்பாகவே நமது உபநிஷத்களில் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மையை ஒருவன் தன் ஸ்ரீகுருதேவர் கூறக்கேட்டு அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதோடு, பரம்பொருள் என்னும் பிரபஞ்சப் பேராற்றலே எப்போதுமே மாற்றத்தை அடையாத நிலைத்த தன்மையை உடையது என்னும் உணர்வோடு, எப்போதும் களங்கமற்றதான இத்தகைய தூய அறிவுடன் கூடிய ஒருமுகப்பட்ட மனத்தை எவர் உடையவராக உள்ளாரோ அவர் ஒரு மெய்ஞானி ஆகிறார்.
அதோடு மட்டும் அல்லாமல், அவர் தன் முற்பிறவிகளின் சஞ்சித கர்மங்கள் (தொகுப்பு வினை), மற்றும் எதிர்காலத்தில் வரப்போகும் ஆகாமிய கர்மங்கள் ( வருவினை) ஆகியனவற்றை முற்றுமாகத் தம் ஞானமாகிய தீயில் எரித்து சாம்பலாக்கி அழிக்க வேண்டும்.
அதோடு அவர் , நுகர்வினை என்னும் இப்பிறவிக்கான விதிப்பயன்கள் முழுவதுமாக விருப்பு வெறுப்பு இல்லாமல் தன் பரு உடலால் ஏற்று அனுபவிக்கப்படவேண்டும் என்று கருதவேண்டும். அதனால் அத்தகையவர் தன் தற்போதைய பிறவியால் தமக்கு அமையும் வாழ்வில் எத்தகைய இடர் வரினும் துயரப்படுவதில்லை.
இவ்வாறாகிய எண்ணத்தையும் செய்கைகளையும் உடையவராய் எவர் ஓருவர் இப்பூமியில் வாழ்கிறாரோ அப்படிப்பட்டவரே என்னுடைய ஞானாச்சாரியன் என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு.

ஸ்ரீ ஆதிசங்கரரின் மனத்தால் ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்றுச் சரியானதே என்று அவரால் உறுதி படுத்தப்பட்ட ஞானம்(நிச்சயிக்கப்பட்ட ஞானம்) மனீஷா பஞ்சகத்தின் நான்காவது செய்யுள்(ஸ்லோகம்):
या तिर्यङ्नरदेवताभिरहमित्यन्तः स्फुटा गृह्यते
यद्भासा हृदयाक्षदेहविषया भान्ति स्वतो चेतनाः,
ताम् भास्यैः पिहितार्कमण्डलनिभां स्फूर्तिं सदा भावय
न्योगी निर्वृतमानसो हि गुरुरित्येषा मनीषा मम ||
யா திர்யங்நர தேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேகவிஷயா பாந்தி ஸ்வதோ சேதனா
தாம் பாஸ்யை: பிஹிதார்கமண்டலநிபாம் ஸ்பூர்தி ஸதா பாவய
ன்யோகீ நிவ்ருதமானஸோ ஹி குருரித்யேஷா மணீஷா மம||
பதப்பொருள்:
முதல் அடி:
या – யா -எது
तिर्यङ – திர்யங் –மிருகம்( அசுரர்)
नर – நர –மனிதர்(நரர்)
देवताभिः –தேவாபி: - சான்றோர்கள் (சுரர்)
अहम्– அஹம் –நான்
इति –இதி - என்றவாறு
अन्तः- அந்தக: - மனத்தில்
स्फुटा –ஸ்புடா= மிகத்தெளிவாக
गृह्यते – க்ருஹ்யதே – உணந்து ஏற்கப்படுதல்
இரண்டாவது அடி:
यत् भासा –– யத் பாசா -எந்த அறிவு
हृदय अक्ष देह विषया – ஹ்ருதய அக்ஷ தேக விஷயா – இதயம், கண், உடல் ஆகியவற்றால்
भान्ति – பாந்தி - உணரப்படுவது
स्व अत: चेतनाः – ஸ்வ: அத: சேதனா: அது தானே என்று அறிபவர்கள்
மூன்றாவது அடி:
ताम् -தாம் – அதுவே ( அந்த ஆத்மாவே)
भास्यैः – பாஸ்யை: - அறிவால்
पिहिता –பிஹிதா - மறைக்கப்பட்டுள்ளமை
अर्क मण्डल -அர்க மண்டல – சூரிய மண்டலம்
निभां –நிபாம் – ஒப்பு –உதாரணம்.
स्फूर्तिं -ஸ்பூர்தம் - விளக்கமாக இருக்கும் அறிதல்
सदा -சதா – எப்போதும்.
भावयन् – பாவயன் – நினைத்துக் கொண்டு இருத்தல்
நான்காவது அடி:
योगी -யோகீ – முழுமையான ஞானத்தில் திளைத்த மெய்ஞானி
निर्वृत – நிர்வ்ருத - உலகப் பற்றுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனித்த சுகத்திலிருப்பவன்.
मानसः – மானஸ: - தன்னுடைய அந்த எண்ணத்திலேயே இருப்பவன்.
हि गुरुः – ஹி குரு : - உண்மையில் குரு.
इति एषा मनीषा मम - இதி ஏஷா மனீஷா மம - அப்படிப்பட்டவரே என்னுடைய ஞானாச்சாரியன் என்பது
என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு.
தெளிவுரை :
எது, மிருகக் குணம் (தாமஸ குணம்-அசுரகுணம்) கொண்டவற்றிடமும், மனிதகுணம்( ராஜஸ குண-நர குணம்) கொண்டவற்றிடமும், சான்றாண்மை குணம்( சத்வ குணம் – சுர குணம்) கொண்டவற்றிடமும்
அவைகளுடைய உடலில் இருந்துகொண்டு அங்கேயே இயங்குவதாகவும் மேலும் அவ்வுடல்களை இயக்குவதாகவும் எப்போதும் நிலைபெற்றதாக இருக்கின்றதோ , அதுவே என்னுள் இருக்கும் நான் என்னும் ஒன்றேயாகும் பரமத்மாவின் அம்சமாகும் ஜீவாத்மனே என்றவாறு தன்னுடைய மனத்தில் மிகத்தெளிவாக எவர் உணர்ந்து ஏற்றுக்கொள்கிறாரோ;
எந்த அறிவால் அகஉணர்வு, மற்றும் உடலின் கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் ஆகியவற்றால் உணரப்படும் புற உணர்வு ஆகியவைகள் அறியப்படுகின்றனவோ அந்த அறிவே, நான் என்னும் ஜீவாத்மனே என்று அறிபவர் ஆகிறாரோ;
சூரிய ஒளியால் காண முடிவதாகிய மேகம், அந்த சூரிய ஒளிக்கதிர்களையே மூடி
மறைப்பதற்கு ஒப்பாகத் தன் ஆத்மாவால் உலகை விளங்கிக் கொள்ளப்படும் அறிவாக எது உள்ளதோ, அந்த அறிவே அதனுடைய அஞ்ஞானம் என்னும் தன்மையால் அந்த ஆத்மாவை மறைத்துக் கொண்டுள்ளது என்பதை எப்போதும் நினைவில் கொண்டிருப்பவராகிறாரோ
உலகப் பற்றுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டும், தனித்த சுகத்தில் இருந்துகொண்டும் தன்னுடைய அந்த எண்ணத்திலேயே இருப்பவரான முழுமையான ஞானத்தில் திளைத்த அந்த மெய்ஞானியே என்னுடைய ஞானாச்சாரியன் என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு.
விளக்கவுரை:
உலகில் காணப்படும் முக்குண இயல்பினதாகும் யாவற்றினுடைய உடம்பில் இருந்து இயங்குவதாகவும், அவ்வுடல்களை இயக்குவதாகவும் காணப்படுவது, தன்னுடைய உடலில் இருந்து கொண்டு இயங்கியும் தன்னுடலை இயக்குவதும் ஆகும் அதே பரம்பொருளின் அம்சமாகும் ஆத்மனே என்று அறிந்து கொண்டவரும்,
தன்னைப் பற்றி அறிந்து கொள்ளவும், தன்னைத்தவிர்த்த இந்த உலக பிறவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளவும் ஆவது எதுவோ அதுவே அந்த ஆத்மா என்று தெளிந்து கொண்டவரும்,
சூரிய ஒளியைக்கொண்டு காண முடிவதாகிய மேகம், அந்த சூரிய ஒளிக்கதிர்களையே மூடிமறைப்பதைப் போல் தன்னுள் இருக்கும் ஆத்மாவால் விளங்கிக் கொள்ளும்படியான அந்த அறிவுதான், அதனுடைய அஞ்ஞானம் என்னும் தன்மையால் அந்த ஆத்மாவை மறைத்துக் கொண்டுள்ளது என்பதை எப்போதும் நினைவில் கொண்டிருப்பவரும்,
உலகப் பற்றுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டும், தனித்த சுகத்தில் இருந்துகொண்டும் தன்னுடைய அந்த எண்ணத்திலேயே இருப்பவருமான முழுமையான ஞானத்தில் திளைத்த அந்த மெய்ஞானியே என்னுடைய ஞானாச்சாரியன் என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு.
மனத்தில் பதிக்க மனீஷா பஞ்சகம்
(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது)
ஸ்ரீ ஆதிசங்கரரின் மனத்தால் ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்றுச் சரியானதே என்று அவரால் உறுதி படுத்தப்பட்ட ஞானம்(நிச்சயிக்கப்பட்ட ஞானம்) மனீஷா பஞ்சகத்தின் ஐந்தாவது செய்யுள்(ஸ்லோகம்):
यत्सौख्याम्बुधि लेशलेशत इमे शक्रादयो निर्वृता
यच्चित्ते नितरां प्रशान्तकलने लब्ध्वा मुनिर्निर्वृतः
यस्मिन्नित्य सुखाम्बुधौ गलितधीर्ब्रह्मैव न ब्रह्मविद्
यः कश्चित्स सुरेन्द्रवन्दितपदो नूनं मनीषा मम ॥
யதிஸௌக்கியாம்புதி லேசலேசத இமே சக்ரதயோ நிர்வ்ருதா
யச்சித்தே நிதராம்ப்ரசாந்தகலனே லப்தவா முனிர்நிர்வ்ருத: |
யஸ்மின்னித்ய ஸுகாம்புதௌ கலிததீர்ப்ரஹ்மைவ ந ப்ரம்ஹவித்
ய: கச்சித்ஸ ஸுரேந்த்ர வந்திதபதோ நூனம் மணீஷா மம ||
பதப்பொருள்:
முதல் அடி:
यत् -யத் - எது ( எந்த ஆத்மா);
सौख्य –சௌக்ய – சுகமான ஆனந்த;
अम्बुधि –அம்புதி – கடலில்.
लेशलेशत् -லேசலேசத் – துளித் துளியாக.
इमे – இமே – இவ்விடத்தில்.
शक्र – சக்ர – சக்திவாய்ந்த தன்மை
आदयः – ஆதய: பெற்றுள்ளவர்
निर्वृता -நிர்வ்ருதா – திருப்தி அடைதல்
இரண்டாவது அடி:
या –யா – எவர்;
च्चित्ते – சித்தே – சித்தம் என்னும் ஆழ்மனத்தில்;
न इतरां - ந இதராம் – உலகில் காணும் வேறு எதனிடத்திலும் அல்லாது;
प्रशान्तकलने -ப்ரசாந்த கலனே – மேலான ஆனந்தத்தைத் தரக்கூடியதில்;
लब्ध्वा –லப்த்வா – கிடைக்கப்பெற்று;
मुनिः -முனி: - உலக சுக போகங்களில் பற்று விட்ட முனிவர்கள்;
र्निर्वृतः – நிவ்ருத்த: - திருப்தி அடைபவர்;
மூன்றாவது அடி:
यस्मिन् –யஸ்மின் – எதனிடத்தில்( எந்த ஆத்மாவிடத்தில்);
नित्य -நித்ய – எப்போதும் நிலைதிருக்கும்
सुखाम्बुधौ – சுகாம்புதௌ –ஆனந்தக் கடலில்;
गलितधीः –கலிததீ: - முற்றிலும் தம்மைக் கரைத்துக் கொள்ளுதல்;
न ब्रह्मविद्- ந ப்ரஹ்ம வித் –அவர்கள் பரம்பொருளைப் பற்றி அறிந்தவர்கள் அல்ல
ब्रह्मैव – ப்ரஹ்ம ஏவ – அவர்கள் பரம்பொருளே ஆகிறார்கள்.
நான்காவது அடி:
यः – ய: - எவர்
कश्चित्स – கஸ்சித்ச – அவர் எவராகினும்
सुरेन्द्र – சுரேந்ர – சான்றோர்களுக்கெல்லாம் தலைவனாகுபவர்
वन्दित – வந்தித – வணங்கக் கூடிய
पदो –பதோ- பாதங்கள்
नूनं -உண்மையில்
मनीषा मम - என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு.
தெளிவுரை :
அதிக ஆற்றல் படைத்தவர்கள், சுகமாகிய ஆனந்தக் கடலாகும் எந்த ஆத்மாவினிடத்தில் சிறுகச் சிறுக அந்த ஆனந்தத்தை அனுபவித்துத் திருப்தி அடைகிறார்களோ;
உலக சுக போகங்களில் பற்று விட்ட முனிவர்கள் (சித்தர்கள்), உலகில் காணும் வேறு எதனிடத்திலும் அல்லாது மேலான ஆனந்தத்தைத் தரக்கூடியதாகிய எந்த ஆத்மாவிடத்தில் அந்த ஆனந்தம் கிடைக்கப்பெற்று தம் சித்தம் என்னும் ஆழ்மனத்தில் திருப்தி அடைகிறார்களோ;
எந்த ஆத்மாவிடத்தில் எப்போதும் நிலைத்திருக்கும் ஆனந்தக் கடலில் எவர் தம்மை முற்றிலும் கரைத்துக் கொள்ளுகிறாரோ அவர் பரம்பொருளைப் பற்றி அறிந்தவராகும் பிரம்ம ஞானி எனப்படுபவர் அல்லாது அவர் பரம்பொருளே ஆகிறார்.
அவர் எவராகினும் (அதாவது- அவர் புலையனாக இருப்பவரானாலும், அதுபோலவே இருபிறப்பாளன் என்னும் பூணூல் அணிந்த உயர்ந்த சாதிக்காரன் என்னும் அந்தணராக இருப்பவரானாலும் ) அப்படிப்பட்டவருடைய பாதங்கள் உண்மையில் சான்றோர்களுக்கெல்லாம் தலைவனாகுபவர் வணங்கக் கூடியவை என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு.
விளக்கவுரை :
இந்த ஐந்தாவது பாடலில் தன்னுடைய இறுதியான ஆராய்ந்து அறிந்த அறிவின் தெளிவான முடிவை ஸ்ரீ ஆதிசங்கரர் தெரிவிக்கின்றார். கடந்த நான்கு பாடல்களிலும் பற்பல உயர்தன்மைகளாகும் ஆத்மஞானத் தெளிவு பெற்றவர்களை அவர் எக்குலத்தில் பிறந்தவராயினும் தன்னுடைய ஆச்சாரியன்- அதாவது குரு என்று உறுதியாக முடிவு செய்தார்.
ஆனால் இறுதியாக இப்பாடலில்:
- அத்தகைய ஆத்மஞானத் தெளிவு பெற்று அந்த ஆதமானந்த சாகரத்தில் திளைத்துச் சிறுகச் சிறுக அந்த ஆத்மானந்தத்தை அனுபவிப்பவர்கள்;
- அத்தகைய ஆத்மானந்தம் தம் ஆழ்மனத்தில் கிடைக்கப்பெற்று மகிழும் சித்தர்களாகுபவர்கள்;
- அத்தகைய ஆத்மானந்த சாகரத்தில் தம்மை முழுவதுமாகக் கரைத்துக் கொண்டவர்கள் ;
- ஆகிய யாராக இருந்தாலும் அவர்கள் ஆத்மாவை அறிந்துள்ள ஆத்ம ஞானிகள் மட்டும் அல்ல;
- அவர்களே ப்ரம்மம் என்னும் பரம்பொருளாவார்;
- அப்படிப்பட்டவர் நாய்மாமிசம் உண்ணும் புலையனாக இருப்பவரானாலும், அதுபோலவே இருபிறப்பாளன் என்னும் பூணூல் அணிந்த உயர்ந்த சாதிக்காரன் என்னும் அந்தணனாக இருப்பவரானாலும்;
- அவர்களை நான் எனது ஞானச்சாரியனாக ஏற்பது என்பது மட்டுமல்ல;
- பரம்பொருளேயாகும் அத்தகு புண்ணியாத்மாக்களின் பாதங்கள் சுரேந்திரன் என்னும் தேவர்களின் தலைவனும்( அதாவது சான்றோர்களுக்கெல்லாம் தலைவனாகுபவர்) வணங்கக் கூடியவை என்பது என்னுடைய தீர்மானிக்கப்பட்டதாகும் முடிவான அறிவு
என்று வெகு அழகாக தன் அற்புத முடிவை உலக மக்களாகிய நமக்குப் போதிக்கின்றார்.
ஸ்ரீ ஆதிசங்கரரோ இந்த ஜகத்குரு. அவரது திருவாக்கு நம் அனைவராலும் போற்றி வணங்கப்பெற வேண்டிய உண்மை. ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’ என்பது திருமூலரது வாக்கு. அப்படிப்பட்ட உலக மானுடம் யாவைக்குமாகும் ஜகத்குருவே இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பாகவே :
- மனிதர்கள் யாவரும் உடம்பாலும் ஆத்மாவாலும் பிரிவற்ற ஒன்றே ஆகுபவர்கள் ;
- மனிதருக்குள் உயர்வு-தாழ்வு காண்பது ஒரு பாவச்செயல்;
- மனிதருள் எவர் ஆத்மாவை அறிந்த ஆத்மஞானியோ அவரையே அனைவரும் குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்;
- மேலும் அந்த ஆத்மஞானத்தில் தம்மை முழுவதுமாகக் கரைத்துக்கொண்டு, ஆத்மானந்தத்தில் திளைக்கின்றவர்கள் , புலையனாக இருப்பவராகவோ, அதுபோலவே இருபிறப்பாளன் என்னும் பூணூல் அணிந்த உயர்ந்த சாதிக்காரன் என்னும் அந்தணராகவோ உலகில் வழ்பவர்களானாலும் அவர்கள் ஆத்மஞானிகள் என்பது மட்டுமல்ல;
- அத்தகையவர்கள் உண்மையில் உலக மக்கள் எல்லோராலும் பரம்பொருளாகவே மதித்துப் போற்றி வணங்கப்பட வேண்டியர்கள்
என்று நமக்கு ஆத்மஞான உபதேசத்தைத் தெள்ளத் தெளிவாக நம்மிடம் அவர் கொண்ட பெருங்கருணையினால் சொல்லிவைத்துள்ளார். முடிந்தால் நாம் அனைவரும் இந்த அற்புதரின் அருளுபதேசத்தைப் பின்பற்றி நமது வாழ்வில் நிம்மதி அடைய முயலுவோம்

ஸ்ரீ ஆதிசங்கரரின் மனத்தால் ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்றுச் சரியானதே என்று அவரால் உறுதி படுத்தப்பட்ட ஞானம்(நிச்சயிக்கப்பட்ட ஞானம்) மனீஷா பஞ்சகத்தின் முடிவுரைச் செய்யுள்(ஸ்லோகம்):
दासमस्तेहं देहदृष्ट्यास्मि शंभो
जातस्तेंशो जीवदृष्ट्या त्रिदृष्टे ।
सर्वस्यात्मन् अत्मदृट्या त्वमेव
त्वेवं मे धीर्निश्चिता सर्वशास्त्रैः ॥
தாஸமஸ்தேகம் தேஹத்ருஷ்ட்யாஸ்மி சம்போ
ஜாதஸ்தேம்சோ ஜீவத்ருஷ்ட்யா த்ரித்ருஷ்டே
சர்வஸ்யாத்மன் ஆத்மத்ருட்யா த்வமேவ
த்வேவம் மே தீர்னிஸ்சிதா சர்வசாஸ்த்ரை:
பதப்பொருள்
முதல் அடி:
दासम् – தாஸம் – பணியாளன்; சேவகன்.
अस्ते – அஸ்தேகம் - இருக்கிறது
अहं – அஹம் – நான்
देहदृष्ट्यास्मि - காண்பதற்கு உடலால் காணப்படுபவனாக இருக்கிறேன்
शंभो –சம்போ – உலக உயிர்கள் யாவற்றிடமும் இரக்கம் கொண்ட பரம்பொருளே
இரண்டாவது அடி:
जात – மனித உடலைக் கொண்டு பிறவி எடுத்தது.
अस्ते - அஸ்தே – இருக்கிறது.
अंशः –அம்ச: - அம்சம்.
जीव – ஜீவ – வாழ்வது.
दृष्ट्या – த்ருஷ்ட்யா – கண்ணால் காணப்படுவது.
त्रिदृष्टे – த்ரித்ருஷ்டே – முக்குணங்களுக்கு அப்பாற்பட்டது.
மூன்றாவது அடி:
सर्वस्य – சர்வஸ்ய – எல்லா உயிர்களுடைய
आत्मन् – ஆத்மன் - ஆத்மாவக
आत्म दृष्ट्या – ஆத்மத்ருஷ்ட்யா - ஆத்மவால் பார்க்கப்படுகிற
त्वमेव -தவனேவ – நீ மட்டுமே.
நான்காவது அடி:
त्व – த்வ – நீ.
ऐवं – ஏவம் - மட்டுமே .
मे -மே – என்னுடைய.
धीर्निः – தீர்நி – பிரிந்த.
चिता – சித்தா – என்னுள் வைக்கப்பட்டுள்ளது.
सर्व – சர்வ –அனைத்து.
शास्त्रैः – சாஸ்த்ரை: - நூல்களிலும்.
தெளிவுரை
உலக உயிர்கள் யாவற்றிடமும் இரக்கம் கொண்ட பரம்பொருளே !
- புறக்கண்களுக்கு உடம்பு என்னும் உருவமாக அடையாளம் காணப்படுபவனாக இருப்பதாகிய எனது உடல் உனக்குச் சேவைசெய்யவே உள்ளது ;
- முக்குணங்களுக்கு அப்பாற்பட்டதாகிய உனது அம்சமான நான் என்னும் இந்த ஆத்மா, எனது இந்த உடம்பாகக் காணப்படுவதாக மனித உடலைக் கொண்டு பிறவி எடுத்து வாழ்கிறது.
- உலகில் எல்லா உயிர்களுடைய ஆத்மாவாக, நீ மட்டுமே ஆத்மாவால் பார்க்கப்படுவதாகிறாய்.
- நான் என்னும் ஜீவாத்மனாக என்னுடைய இந்த உடம்பினுள் வைக்கப்பட்டுள்ளது உன்னில் இருந்து பிரிந்துவந்த நீ மட்டுமே என்று அனைத்து நூல்களிலும் கூறப்படுகிறது.
விளக்கவுரை:
நூலின் முடிவுரையாக ஸ்ரீ ஆதிசங்கரர் இப்பாடலைச் செய்துள்ளார். நாய் மாமிசம் உண்ணும் புலையனின் ஞானப்பூர்வமாகிய மனித உடல் மற்றும் உடலில் உறையும் ஆத்மா பற்றிய வாதத்தால் தெளிவடைந்து , பிரபஞ்சப் பேராற்றலாகும் பரம்பொருளை உலக உயிர்கள் யாவற்றிடமும் இரக்கம் கொண்டதாக அறிகிறார். ஏனெனில் அதுவே தனது அம்சமாக உடலெடுத்த அனைத்திலும் ஜீவாத்மாவாக உறைகிறது.
அவ்வாறாகிய தன் உடலில் உறையும் ஆத்மா, மனித உடலெடுத்ததின் நோக்கம் அப்பரம்பொருளுக்குச் சேவை செய்யவே என்கிறார். இங்கு சேவை என்பது, எல்லா உடம்பினுக்குள்ளும் உறைவது அந்த பரம்பொருளே என்று உலக மக்களைத் தெளிவித்து, அவர்களிடையே நிலவிவரும் பிறப்பால் ஏற்றாத்தாழ்வு உண்டு என்னும் அறியாமையைப் போக்குதல் என்பதே ஆகும்.
முக்குணங்களுக்கு அப்பாற்பட்டதாகிய அந்த பரம்பொருளினுடைய அம்சம்தான், ‘நான் என்னும் ஜீவாத்மனாக ஒவ்வொரு உடலிலும் உறைகிறது. அதுவே அவரவரது உடம்பாகக் காணப்படுவதாக மனித உடலைக் கொண்டு பிறவி எடுத்து வாழ்கிறது’ என்று அச்சேவையை இப்பாடலிலேயே தொடங்கியும் வைக்கின்றார்.
அவரது இம்முடிவிற்கு ஆதாரமாக அனைத்து நூல்களிலும் (சாஸ்திரங்களும்) உலகில் எல்லா உயிர்களுடைய ஆத்மாவாக, பரம்பொருள் மட்டுமே ஆத்மாவால் பார்க்கப்படுவதாகிறது. ‘நான்’ என்னும் ஜீவாத்மனாக ஒவ்வொருவருடைய உடம்பினுள்ளும் வைக்கப்பட்டிருப்பது அந்த ஒரேபரம்பொருளில் இருந்து பிரிந்துவந்த அது மட்டுமே என்று கூறப்படுகிறது’ என்று அத்தாட்சியையும் காண்பித்து நூலை முடித்து வைக்கின்றார்.
உலக மனிதர்கள் யாவருக்குள்ளும் பிறப்பாலும், உடம்பாலும் ஏற்றத்தாழ்வு என்பது இல்லவே இல்லை என்று இப்படி விளக்கமான ஒரு நூலை ஸ்ரீ ஆதிசங்கர அற்புதரைத் தவிர்த்து வேறு எவரால் எழுத முடியும்!
அதனால்தான் அப்பெருமான் , சாதி, மதம், மொழி, இனம், நாடு மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகிய எதனாலும் உயர்வு தாழ்வு பாராட்டாமல் உலக மக்கள் அனைவருக்கும் ஜெகத்குரு என்று போற்றி வணங்கப்படுகிறார்.
இந்த நூலில் மனிதர்கள் பின்பற்றும் எந்த மதத்தையோ, அம்மதத்தவர் வழிபடும் கடவுளையோ , மொழியையோ, நாட்டையோ , அவர் தம் பண்பாடுகளையோ ஆகிய எதனையும் அம்மகான் குறிப்பிடவில்லை. ஏன் , அவர் அளித்த எந்த நூல்களிலும் அவ்வாறு இல்லை.
அந்த மனிதநேய – ஜீவ காருண்ய – அனைத்திலும் சம நோக்கு கொண்ட - ஞான வள்ளலை நம் பாரதமும் சைவ சமயமும் மட்டுமே சொந்தம் கொண்டாடும் நமது அஞ்ஞானத்தைப் போக்கி மானுடம் தழைக்க உத்தித்த அப்பரம்பொருளை உலகம் யாவைக்கும் ஆக்கிவைக்க நாம் அனைவரும் முயற்சித்துப் பாடுபடுவோம் !
அம்முயற்சியில் நமக்கு வெற்றி கிட்ட அம்மாதவனின் திருவடிகளையே சரண்டைவோம்!!
அஞ்ஞானம் அகற்றி நாமும் அறிவுத்தெளிவைப் பெற்று அகிலத்தில் அமைதி மற்றும் ஆனந்தம்
பொங்க ஒற்றுமையுடன் வாழ்வோம் . ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘என்னும் கணியன் பூங்குன்றனாரை நினைவில் கொள்வோம். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வவையகம்’ என்ற திருமூலரை த் துணைக் கொள்வோம். மானுட வாழ்வு சிறக்கட்டும் – மகிழ்ச்சியில் மனமெல்லாம் திளைக்கட்டும்!!!
ஸ்ரீ ஆதிசங்கரரின் மனீஷா பஞ்சகம் நிறைவு பெற்றது.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1