புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
29 Posts - 60%
heezulia
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
194 Posts - 73%
heezulia
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
8 Posts - 3%
prajai
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
3 Posts - 1%
Barushree
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_m10உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 1:42 pm



உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா
முருகா….
(உள்ளம் உருகுதய்யா)

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)

பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம் உருகுதய்யா)

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம் உருகுதய்யா)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 1:46 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 1:47 pm

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே JjfmiztuQeKXvCUdK1iv+eb71f-andavanpichai-writerofullamurugathaiya
-
ஆண்டவன் பிச்சை


(எ) முருகப் பெண் துறவியே இப்பாடலை எழுதியது!)
-
;நன்றி- முருகன் அருள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 26, 2016 5:23 pm

இந்த பாட்டை TMS பாடி கேட்கையில்
உள்ளம் உருகாதார் யாரும் இருக்க முடியாது .
ஆண்டவன் பிச்சை என்ற பெண் துறவி எழுதியது என்பது புதிய தகவல் .
இன்றுதான் அறிந்தேன் . நன்றி .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 26, 2016 5:56 pm


ஆண்டவன் பிச்சை

என்னும் அம்மாவின் படமும் அவரது பாடலும், சௌந்தர்ய ராஜனின் கம்பீர த்வனியும் கல்லையும் கரைய வைப்பன- கவலையை மறக்கவைப்பன.

எல்லாம் ஈசனின் திருவிளையாடல் - மீண்டும் நம் வாழ்வில் வருமோ அந்த தேமதுரத் தமிழோசை.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016

Postprajai Mon Sep 26, 2016 8:01 pm

சக்தி விகடன் - 14 ஏப்ரல் 2015 - க.புவனேஸ்வரியின் கட்டுரை

கந்தக் கடவுளின் நினைவு நம் மனதில் எழும் மாத்திரத்தில், கூடவே அந்த அழகு முருகனைப் போற்றும் தமிழ்ப்பாடல்களும், அவற்றை உள்ளம் உருகிப் பாடிய டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றிய நினைவும் நம் மனதில் எழுவது நிச்சயம்! குறிப்பாக, 'உள்ளம் உருகுதய்யா...’ பாடலைக் கேட்டு உருகாத தமிழ் உள்ளங்களே இல்லை எனலாம். ஆனால், அந்தப் பாடல் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருப்பது பலருக்கும் தெரியாது.

ஒவ்வொரு கிருத்திகைக்கும் டி.எம்.எஸ்., பழநிக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவார். அப்படி அவர் அங்கே தங்கிய ஒரு நாளில், அங்கு பணிபுரியும் ஒரு பையன் அவனுக்குத் தெரிந்த ராகத்தில், 'உள்ளம் உருகுதடா’ என்று ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு, அந்தப் பாடலின் சொல்லிலும் பொருளிலும் மனம் லயித்துப்போனார். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பையனிடம் அந்தப் பாடல் குறித்து விசாரித்தார். அதை யார் எழுதியது, எப்படி அது தனக்குத் தெரிய வந்தது என்கிற விவரமெல்லாம் அந்தச் சிறுவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏனோ தனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடித்துவிட்டதால், மனதில் பதிந்துவிட்டதாகச் சொன்னான். அவனிடம் அந்தப் பாடல் முழுவதையும் வரிக்கு வரி சொல்லச் சொல்லி, எழுதி வாங்கிக்கொண்டார் டி.எம்.எஸ். பின்னர் சென்னைக்கு வந்ததும், அந்தப் பாடலில் 'அடா’ என்று வருகிற இடத்தையெல்லாம் 'ஐயா’ என மாற்றி, இசை அமைத்துப் பாடி வெளியிட, லட்சக்கணக்கான தமிழர்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது 'உள்ளம் உருகுதய்யா...’ என்கிற அந்தப் பாடல். இந்த விவரத்தைதான் டி.எம்.எஸ். தாம் கச்சேரி செய்கிற இடங்களில் எல்லாம் கூறிவந்தார்.

பாடல் பிரபலமாகி, பலப்பல வருஷங்கள் கடந்த நிலையில், 'இமயத்துடன்...’ என்னும் தலைப்பில் டி.எம்.எஸ். பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு முதல்நாள் பூஜை போடுவதற்காக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள் டி.எம்.எஸ்ஸும் இயக்குநர் விஜய்ராஜும். பூஜை முடிந்ததும், அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் அவர்களை துர்கை சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கல்வெட்டில் 'உள்ளம் உருகுதடா...’ என்கிற அந்தப் பாடல் செதுக்கப்பட்டு, அதன் அடியில் 'ஆண்டவன்பிச்சை’ என அதை எழுதியவர் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைக் கண்டு, வியப்பும் திகைப்புமாய் அந்த 'ஆண்டவன் பிச்சை’ யார் என்ற தேடலில் இறங்கியபோது, அவர்களுக்குச் சில தகவல்கள் கிடைத்தன.

குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வயது முதிர்ந்த நிலையில் அநாதரவாகத் திரிந்து கொண்டிருந்த மரகதம் என்கிற பெண்மணி, ஒருமுறை காஞ்சி மடத்துக்குச் சென்றிருந்தார். அங்கே இருந்த சிலர் அவரைப் பிச்சைக்காரி என எண்ணி கேலி செய்து துரத்த, அதைக் கவனித்துவிட்ட மஹா பெரியவா, அவரை அழைத்து ஆறுதல் சொல்லி, 'வருத்தப்படாதே! நீ ஆண்டவன்பிச்சை’ என்று அனுக்கிரஹம் செய்த துடன், பிரசாதமும் கொடுத்து அனுப்பினார். இறைவனின் அனுக்கிரஹத்தைப் பூரணமாகப் பெற்ற ஆண்டவன்பிச்சை, பின்பு அதே பெயரில் கோயில் கோயிலாகச் சென்று, பல தெய்விகப் பாடல்களைப் பாடினார். அப்படி அவர் இந்தக் காளிகாம்பாள் கோயிலில் பாடியதுதான், 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல். அந்தப் பெண்மணி தன்னைப் பற்றி எழுதியிருந்த 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல், தன்னையே நாளும் பொழுதும் வழிபடும் டி.எம்.எஸ். அவர்களின் தெய்விகக் குரலில் உலகமெல்லாம் பரவவேண்டும் எனத் திருவுள்ளம் கொண்ட அந்தப் பழநியாண்டவன்தான், இஸ்லாமியச் சிறுவன் மூலமாக இப்படி ஓர் அருளாடலை நிகழ்த்தினான்போலும்!

டி.எம்.எஸ். அவர்களின் 93வது பிறந்த நாள் (மார்ச் 24) நினைவாக இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டவர் இயக்குநர் விஜய்ராஜ்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 26, 2016 8:22 pm

சிலிர்க்குதய்யா தகவல் கேட்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 26, 2016 8:48 pm

எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாட்டு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 26, 2016 9:11 pm

ஆண்டவன் பிச்சை பாட்டு கலெக்க்ஷன் கிடைக்குமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 26, 2016 9:33 pm

அறிந்த பாடல்; அறிந்திராத பெண் புலவர்!
-
என்ற தலைப்பில்
-தாயம்மாள் அறவாணன் அவர்கள் எழுதிய கட்டுரை
17-4-16 தமிழ்மணியில் (:தினமணி) வெளியாது
-
ஆண்டவன் பிச்சை குறித்த அக்கட்டுரை:
-
-----------------
1899 இல் மயிலாப்பூரில் சங்கர நாராயண சாஸ்திரிக்கும் சீதாலட்சுமிக்கும் ஒரு மகள் பிறந்தது. அதற்கு மரகதவல்லி எனப் பெயரிட்டனர். தந்தையார் தம் மகளுக்குக் கல்வி அறிவு ஊட்டி வளர்த்தார். தனியாகப் பாடம் சொல்லிக்கொடுக்க ஏற்பாடுகளும் செய்தார். இளவயதிலேயே மரகதத்தின் தாயார் இறந்துவிட்டார். மரகதம், தன் தாய் மாமன் வெங்கட சுப்பா ஐயரின் உதவியுடன் கல்வி கற்றார். மரகதம் திருமணப் பருவத்தை அடைந்ததும், அவள் தந்தை, தன் உறவினரான நரசிம்மன் என்பவருக்கு மரகதத்தைத் திருமணம் செய்து கொடுத்தார்.
-
÷மரகதம் தன் பாட்டி வழியாகத் திருத்தணி முருகக் கடவுளின் கதைகளை அறிந்தவர். தாய் வீட்டிற்கு வந்த ஒரு நாள், பாட்டியிடம் முருகப்பெருமானின் கதைகளைக் கேட்டுவிட்டுத் தூங்கியபோது முருகன், மரகதவல்லியின் கனவில் தோன்றினார். கனவு
கண்ட நாள் முதல் அவள் மனத்தை முருகன் கொள்ளை கொண்டார். அவள் வாழ்வு, திறமை, பக்தி யாவும் முருகன் அளித்த பிச்சையாகக் கருதத் தொடங்கினார் மரகதம். அதனால் தன்னை "ஆண்டவன் பிச்சை' என்று கொண்டார். பல கவிதைகள் படைக்கத் தொடங்கினார். அதில் ஒரு பாடல்:

"உள்ளம் உருகுதையா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதையா
............ ................... ................... ...........
ஆறு திருமுகமும் உன்னருளை
வாரி வழங்குதையா.....!'

என்ற பாடல் டி.எம்.சொந்தர்ராஜன் பாடியதால் பலரும் அறிந்த பாடலானது. ஆனால், அதைப் பாட்டாக எழுதியவர் மரகதவள்ளி என்கிற ஆண்டவன் பிச்சையாவார். இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர், ""முருகன் என் மீது காதல் கொண்டான்; என் கனவில் வந்து என் கைகளைத் தொட்டான்; என்னை ஆட்கொண்டான்; அவனின் அடியாராக என்னை ஏற்றுக் கொண்டான்; நான் திருத்தணி முருகனின் கரங்களில் இணைந்து விட்டேன்; அவன் என்னைக் கவிஞராக மாற்றினான்; தமிழ் மாலைகள் தந்தான்; அவன் அருளால் நான் தமிழ்க் கவிதைகளைப் புனையப் போகிறேன்; தமிழ்க் கவிஞரான ஆண்டாளை ஆட்கொண்ட அரங்கநாதனைப் போல் நானும் முருகன் மீது கவிதைகள் பாடப்போகிறேன்.

என்னிடமிருந்து கவிதை சரமாரியாக இயற்கையாக வருகின்றன. இறைவன் என் உள்ளத்தில் சிம்மாசனம் இட்டுள்ளான். அவனே கவிதை படைக்கிறான்'' என்று கூறினார். மரகதத்தின் பெற்றோரும் உற்றார் உறவினரும் வியப்படைந்தார்கள்!

÷கனவில் கண்டதிலிருந்து மரகதம் முருக பக்தையாகவே வாழ்ந்தார். முருகனையே கணவனாக வரித்துக் கொண்டாள். கணவனையும் பிள்ளைகளையும் உறவினரையும் மனதளவில் விட்டுப் பிரிந்தாள். அவள் மனம் மட்டும் இறைவன் முருகனோடு இணைந்தே இருந்தது.

÷சில நாள்களுக்குப் பிறகு மரகதவள்ளிக்கு ஒரு குழந்தை மருத்துவமனையில் பிறந்தது. அங்கும் மரகதவள்ளி முருகனையே எண்ணி இருந்தாள்; முருகனைப் புகழ்ந்து பாடினார்; அவன் அழகையும் தன்மையையும் பாடிக்கொண்டே இருந்தார். குழந்தை அழுவதுகூட மரகதத்தின் காதில் விழவில்லை. குழந்தையைக் கவனிக்காமல் முருகன் மீது பக்திப் பாடல்களை மட்டும் எழுதி வைத்தாள் மரகதம். உறவினர் அப்பாடல்களை எல்லாம் எடுத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைத்தனர்.

÷பல நிகழ்ச்சிகள் நடந்தேறின. மரகதம் மட்டும் முருக பக்தையாக வாழ்ந்தாள். கவிதை எழுதினாள். "முருகா! என் கண்ணில் நீ தோன்றமாட்டாயா?' என்று வேண்டி அழுதாள். அப்போது முருகன் தோன்றி, என்னை உன் மனத்தில் தேடு. உன் மனக்கண்ணுக்குத் தென்படுவேன் என்று கூறினான்.

÷1948இல் மரகதம் அவர் வாழ்வில் ஒரு நிகழ்வு. படிக்கட்டிலிருந்து அவர் வழுவி விழுந்தார். பலத்த அடி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நினைவிழந்த நிலையிலும் (கோமா) நினைவிலுமாக ஆறு மாதம் இருந்தார். அப்போது அவர் மாமியார் இரும்புப் (டிரங்கு) பெட்டியிலிருந்து மரகதம் எழுதிய கவிதைகளை எடுத்துத் "திருப்புகழ்மணி' என்ற பெரியவரிடம் கொடுத்தார்.

அவர் மரகதத்தின் பாடல்களைப் பாராட்டி அச்சாக்கி வெளியிட முனைந்ததாக நண்பர் ஒருவர் மரகதத்திற்குக் கூறினார்.

÷1950இல் மரகதம் தன் தோழிகளுடன் திருவண்ணாமலை சென்றபோது நடை அடைத்த நிலையில், சிறுவன் வடிவில் கோயில் வாயிலில், தண்டபாணி என்ற சிறுவன் பூசை செய்து பிரசாதம் கொடுத்தான். அது முருகன்தான் என்று மரகதம் கூறினாராம்.

÷திருத்தணிகை மும்மணிக்கோவை, வைஷ்ணவி பஞ்சதபிப் பாமாலை, வைஷ்ணவி அருள் பத்து, வைஷ்ணவி அநுக்கிரக மணிமாலை, ஸ்ரீபகவத் கீதை போதம், தேவி நவசக்ர கீர்த்தனைகள் ஆகியவை ஆண்டவன் பிச்சை எழுதிய நூல்கள். அவரது கவிதைக்கு ஒரு சான்று:


ஏலார் குழலி ஏகாம் பரர் இடப்
பாகத் தமர்ந்த காமாக்ஷி
பாலார் மொழியாய் பங்கய விழியாய்
பாதகம் தீர்த்திடும் பதமுடையாய்
சேலார் வயல் சூழ் திருமுல்லை வன
நாயகி நாரணர் úஸாதரியே
மேலார் தவத்தால் தோன்றிய வடிவே
மேன்மைமிகும் திரு வைஷ்ணவியே!

பகவத்கீதை ஸ்லோகங்கள் முழுவதும் படித்து உள்வாங்கி, அதன் கருத்தையொட்டி 79 ஸ்லோகங்களைத் தனிக் கவிதைகளாக, தமிழ்ப்பா வகையில் தெளிவான நடையில் தந்திருக்கிறார்.

-தாயம்மாள் அறவாணன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக