ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

+3
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Empty கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by ayyasamy ram Wed Sep 28, 2016 4:40 pm

First topic message reminder :

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 IQElZZ2uQqm9KJ5JwQKy+kanchi_2861159f

-
தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திரம் தீர்த்தம் முதலிய
பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும்.

நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும்
பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களை
எல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம்
செய்து கரைத்திட வேண்டும்.
-
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்
படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை
என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது.
-
நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட
வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம்
பரம லேசாகிவிடும்.
-
'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன்
பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள்
ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும்
தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும்.

ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும்
என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும்,
இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம்
ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி?
கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி
எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும்
அதோடு விட்டுவிடுவோம்.

ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம்.
எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும்
-
---------------------------------------
--காஞ்சிப்பெரியவர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by badri2003 Thu Sep 29, 2016 3:20 pm

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 VznE4AAtSTeh4HZxKflz+11

அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.
ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.
உலகில் 5 கோடி பேர் டென்னிஸ் போட்டியில் விளையாடுகிறார்கள்.
அதில் 50 ஆயிரம் பேர் முக்கிய கட்டங்களில் ஜெயிப்பார்கள்.
அவற்றுள் 5 ஆயிரம் பேர் நாட்டின் முக்கிய போட்டிகளில் விளையாட தகுதி பெறுகிறார்கள்.
அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் வரை வருகிறார்கள்.
அதில் 2 பேர் மட்டுமே இறுதி போட்டி… இறுதியில் ஒரே ஒரு நாள் விம்பிள்டன் பட்டத்தைப் பெறுகிறார். என் கையில் விம்பிள்டன் பட்டம் வந்தபோது அதை அதிர்ஷ்டமாக ஏற்றதைப் போல் இதையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
“பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.
“வெற்றி பெறும்போது “ஏன் நான்?” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.
அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.
‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.
ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!
badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by M.Jagadeesan Thu Sep 29, 2016 4:26 pm

கடவுளை திட்டுவதென்ன ;அடித்தவர்களும் உண்டு .

சாக்கிய நாயனார் - கல்லால் அடித்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார் - பித்தா எனப்பேசி சொல்லால் அடித்தார் .
கண்ணப்ப நாயனார் - செருப்பால் உதைத்தார் ..
மதுரை மாறன் - பிரம்பால் அடித்தார்

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by Ramalingam K Thu Sep 29, 2016 4:41 pm

கடவுளை எதுவும் செய்யலாம் என்பதும் , கடவுள் அவற்றை எல்லாம் பொருட்படுத்துவதில்லை என்பதும் நமது பாரதப் பாரம்பரியம்.  கருணா மூர்த்தியான அவ்வள்ளல் அவற்றை அன்புனே ஏற்கிறார்.

அத்தகையவர்களுக்குக்  காட்சியும்  கொடுத்து  ஆத்ம விடுதலையையும் கொடுத்தாரே.

நம்  பாரதிக்குப் பரம்பொருள் சேவகனுன் ஆனானே.

கடவுளை ஆனும் பெண்ணும்  போட்டி  போட்டுக் கொண்டு காதலிக்கவும் செய்தார்களே.

கண்ட தெய்வமாகும் ஸ்ரீகுருதேவர் முன் நம் திருமூலர் :

ஏனோ அழுதார் ; அரற்றினார்; பின்பு அவரைத் தூங்கவும் விடாமல் இரவும் பகலும் புகழ்ந்து கொண்டே இருந்தார்.

போதாக் குறைக்குக் குருதேவரைக் கடித்தார் கடித்து எடுத்ததைத் தின்றார். கண்டித்துத் திருத்தினார்.

அனைத்துமே பக்தியின் மேலீடு

அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே. -திருமந்திரம்

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by SRINIVASAN GOVINDASWAMY Thu Sep 29, 2016 5:45 pm

badri2003 wrote: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 VznE4AAtSTeh4HZxKflz+11

அமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.
ஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய் என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே?” எனக்கேட்டார்.
உலகில் 5 கோடி பேர் டென்னிஸ் போட்டியில் விளையாடுகிறார்கள்.
அதில் 50 ஆயிரம் பேர் முக்கிய கட்டங்களில் ஜெயிப்பார்கள்.
அவற்றுள் 5 ஆயிரம் பேர் நாட்டின் முக்கிய போட்டிகளில் விளையாட தகுதி பெறுகிறார்கள்.
அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் வரை வருகிறார்கள்.
அதில் 2 பேர் மட்டுமே இறுதி போட்டி… இறுதியில் ஒரே ஒரு நாள் விம்பிள்டன் பட்டத்தைப் பெறுகிறார். என் கையில் விம்பிள்டன் பட்டம் வந்தபோது அதை அதிர்ஷ்டமாக ஏற்றதைப் போல் இதையும் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.
“பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்?” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே?” என திருப்பிக்கேட்டார்.
“வெற்றி பெறும்போது “ஏன் நான்?” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்?“ என தொடர்ந்தார் ஆர்தர்.
அவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.
‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.
ஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...!
மேற்கோள் செய்த பதிவு: 1223066

மனதை வருடும் நிகழ்வு . மிகவும் அருமை.
நெஞ்சை உரமாக்கும் ஒரு எடுத்துக்காட்டான பதிவு

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 103459460
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by M.Jagadeesan Sat Oct 01, 2016 10:52 am

ஐயன் வள்ளுவனும் ஓரிடத்தில் ஆண்டவனைச் சபிக்கின்றார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் .

ஒருவன் பாலும் பழமும் உண்டு பட்டு மெத்தையில் புரள , மற்றொருவன் பஞ்சைப் பராரியாய் , உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றி பிச்சையெடுத்து வாழ என்ன காரணம் ?

இதுபோல படைப்பிலே மாறுபட்ட மக்களைப் படைத்த இறைவன் கெட்டு ஒழியட்டும் என்று சபிக்கின்றார் .

" உலகியற்றியான் " என்பதை " அரசன் " என்று கொள்வாருமுளர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by Ramalingam K Sat Oct 01, 2016 12:57 pm

M.Jagadeesan wrote:ஐயன் வள்ளுவனும் ஓரிடத்தில் ஆண்டவனைச் சபிக்கின்றார்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் .

ஒருவன் பாலும் பழமும் உண்டு பட்டு மெத்தையில் புரள , மற்றொருவன் பஞ்சைப் பராரியாய் , உண்ண உணவின்றி , உடுக்க உடையின்றி பிச்சையெடுத்து வாழ என்ன காரணம் ?

இதுபோல படைப்பிலே மாறுபட்ட மக்களைப் படைத்த இறைவன் கெட்டு ஒழியட்டும் என்று சபிக்கின்றார் .

" உலகியற்றியான் " என்பதை " அரசன் " என்று கொள்வாருமுளர் .
மேற்கோள் செய்த பதிவு: 1223228

இன்னாசெய்யாமையை அறத்துப்பால் -32 வது அதிகாரத்தில் அறிவுறுத்திய வள்ளுவப் பெருந்தகை, கடவுள் என்ற ஒருவர் உண்மையிலேயே இருந்தாலும் அவரையும் சபிக்கமாட்டார். ஏனெனில் அம்மகான் சொல்லியவண்ணம் செய்பவர்- திரிகரண சுத்தியைக் கடைபிடிக்கும் புனிதர்.

இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இக்குறள் யாசிக்கை என்னும் செயல் இல்லாமல் போகவேண்டும் என்ற அவரது விழைவாகவே விளங்குவதைக் காணலாம்.

இனி, குறளையும் பொருளையும் மீண்டும் சிந்திப்போம்!

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். #1062

தெளிவுரை :

பிறரிடம் அடிமைசெய்து யாசித்தல்தான் ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க இன்றியமையாத வழி என்றால் அத்தகைய யாசகம் என்னும் உலக வழக்குக் குறைந்து இல்லாமல் போகட்டும்.

விளக்கம் :

இக்குறள் இரவச்சம் என்னும் 107 வது அதிகாரத்தில் வருகிறது.

இரவு – யாசித்தல்.
அச்சம் – துயரம் ; வலி

ஆக யாசித்தல் என்னும் செயல் துயரத்தைத் தரும் கொடுமையானது என்ற பொருளில் உபதேசம்

அதற்கு முந்தைய 105 வது அதிகாரம் – நல்குரவு என்னும் வறுமை பற்றிய உபதேசம்
106 வது அதிகாரம் யாசித்தல் – வறுமையின் பொருட்டு யாசித்தல் உபதேசிக்கப்படுகிறது.
107 வது அதிகாரம் யாசித்தல் என்பதே ஒரு துயரச் செயல் என்று உபதேசமாகிறது.

ஐயன் வள்ளுவர் இக்குறளில் யாசித்தல் என்னும் செய்கை உலகில் குறைந்து இல்லாமல் போக வேண்டும் என விழைகிறார் என்பது மிகவும் ஏற்புடையதாக இருக்கலாம்.

பதப்பொருள் :

இரத்தல் - யாசித்தல் ; கும்பிடுதல்; அடிமைத்தனம் செய்தல்.
உயிர் – உயிர்வாழ்பவன்.
வாழ்தல் – மகிழ்தல்.
வேண்டுதல் - இன்றியமையாதல்
பரத்தல் – சிதர்தல்; குறைதல்.
உலகு – உலகியல்.
இயற்றுதல் - அமைத்தல்.
கெடுதல் – இல்லையாதல்.

பதவுரை :

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்
- பிறரிடம் அடிமைசெய்து யாசித்தல்தான் ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க இன்றியமையாத வழி என்றால் ;

பரந்து கெடுக உலகியற்றி யான்

- அத்தகைய யாசகம் என்னும் உலக வழக்கு சிதறிக் குறைந்து இல்லாமல் போகட்டும்

ஆன்- ஒரு சாரியைச் சொல் ;

இது அடியன் கண்ட பொருள். சான்றோர்களுக்கு ஏற்புடைத்தானால் நன்று. மாறானால் குறை இன்று.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

 கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா? - Page 2 Empty Re: கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum