புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
156 Posts - 79%
heezulia
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_m10அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 11:47 am

ஸ்ரீ குருவே நம:

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது

09.09.2016 அன்று ‘நேர்மைக் கடைப்பிடி’ எனும் தலைப்பின் கீழ் ( ஆன்மீகம் – இந்து பகுதியில் ) “குரு அஷ்டகம்” அறிமுகம் மற்றும் முதல் ஸ்லோகம் ஆகிய இரண்டையும் இணைத்து நம் ஈகரையில் பதித்தோம். அப்போதுதான் நாம் புதியதாக இணைந்தமையால், பதிவு விதி நுட்பங்களின் அறியா நிலை. இனி குரு அஷ்டகத்தின் எஞ்சிய பாடல்களை “அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்” என்னும் புதிய தலைப்பில் பதிந்து அறிந்து கொள்வோம்

2. कलत्रं धनं पुत्रपौत्रादि सर्वं गृहं बान्धवाः सर्वमेतद्धि जातम् ।
मनश्चेन्न लग्नं गुरोरंघ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ – २

கலத்ரம் தனம் புக்ரபௌத்ராதி ஸர்வம் க்ருஹம் பாந்தவா:ஸர்வ மேதத்ஹிஜாதம்
மன:சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் - 2

பதப்பொருள் :

முதல் அடி -

कलत्रं –களத்ரம் – நல்ல குணவதியான மனைவி.
धनं – தனம் – அறவழியில் பெறப்பட்ட நற்செல்வம்.
पुत्रपौत्रादि – புத்ரபௌத்ராதி -அறிவும் திறமையும் நிறைந்த புதல்வர்கள் மற்றும் பெயரப்பிள்ளைகள்.
सर्वं -சர்வம் –ஆகிய எல்லாமும்.
गृहं – க்ருஹம் – கூடவே வாழ்வதற்கு வசதியுடன் கூடிய வீடு;
बान्धवाः – பாந்தவா: - தக்க சமயத்தில் கைகொடுத்து உதவக்கூடிய உறவினர் மற்றூம் நண்பர்கள்
सर्वम् एतत् ति जातम्। - சர்வம் ஏதத் தி ஜாதம் – ஆகிய அனைத்தும் இவ்வுலகில் கிடைக்கப்பெற்று இருத்தல்.

இரண்டாவது அடி –

मनः चेत् न लग्नं – மன: சேத் ந லக்னம் – மனம் பதிக்கப்படவில்லை என்றால்
गुरोः अङ्घ्रि पद्मे – குரோ: அங்க்ரி பத்மே – ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில்
ततः किं ततः किं ततः किं ततः किम् – தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்;

தெளிவுரை :

ஒருவனுக்கு நல்ல குணவதியான மனைவி, அறவழியில் பெறப்பட்ட நற்செல்வம், அறிவும் திறமையும் நிறைந்த புதல்வர்கள் மற்றும் பெயரப்பிள்ளைகள், ஆகிய எல்லாமும், கூடவே வாழ்வதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு, தக்க சமயத்தில் கைகொடுத்து உதவக்கூடிய உறவினர் மற்றும் நண்பர்கள் ஆகிய அனைத்தும் இவ்வுலகில் கிடைக்கப்பெற்று இருந்தாலும், அவன், ஞான போதனையை வாரி வழங்கும் ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில் தன் மனத்தைப் பதித்து, அம்மாதவனிடம் தன்னை முழுமையாகச் சமர்ப்பித்து, அந்த தெய்வீக சன்னிதியில் தன் ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆத்ம ஞானம் பயிலவில்லையாகில், அச்செல்வம் மற்றும் வசதி வாய்ப்புக்கள் அமையப் பெற்ற அவனுக்கு அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்.

விளக்கவுரை:

ஒருவனுக்கு நல்ல வீடு, மனைவி, மக்கள், பெயரப்பிள்ளைகள், செல்வம், சுற்றம், நட்பு என எத்தனை விதமான வசதி வாய்ப்புக்கள் இருந்த போதிலும் அவன் ஸ்ரீகுருதேவரை அடைந்து, அவரைப் பணிந்து ஆத்ம வித்யாவைப் பயின்று பழகாவிடில் அத்தனைச் செல்வச் சிறப்புக்களாலும் அவனுக்கு எந்தவித ஆத்ம பயனும் கிடையாது என்பது பொருள்.

ஸ்ரீ குருவே நம:

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 01, 2016 4:38 pm

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது

षडंगादिवेदो मुखे शास्त्रविद्या कवित्वादि गद्यं सुपद्यं करोति ।
मनश्चेन्न लग्नं गुरोरंघ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ – ३

ஷடங்காதி வேதோமுகே சாஸ்த்ர வித்யா கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதி
மனஸ்சேந்ந லக்னம் குரோரங்க்ரி பத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம். - 3

பதப்பொருள் :

முதல் அடி -

षडंगादिवेदः मुखे – ஷடங்காதி வேத: முகே – வேதாங்கங்கள் ஆறும் விரல் நுனியில்
शास्त्रविद्या - சஸ்த்ராதி வித்யா – அனைத்து சாஸ்த்திர ஞானம்.
कवित्वादि गद्यं கவித்யாதி கத்யம் - கவிதைப் புனையக் கூடிய கவித்துவப் புலமை
सुपद्यं – சுபத்யம் – நல்ல உரைநடை நூல்களை எழுதும் ஆற்றல்.
करोति – கரோதி – செய்ய வல்லவன்.

இரண்டாவது அடி –

मनः चेत् न लग्नं – மன: சேத் ந லக்னம் – மனம் பதிக்கப்படவில்லை என்றால்
गुरोः अङ्घ्रि पद्मे – குரோ: அங்க்ரி பத்மே – ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில்
ततः किं ततः किं ततः किं ततः किम् – தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்;

தெளிவுரை :

ஒருவனிடத்தில் வேதாங்கங்களின் ஆறு அங்கங்களாகும் சிக்ஷா (எழுத்திலக்கணம்) , வியாக்ரணம் (சொல்லிலக்கணம்), நிருக்தம் (நிகண்டு), கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பாவிலக்கணம்) மற்றும் ஜோதிஷம் (சோதிடம்) ஆகிய கல்வியறிவாற்றல் முழுவதும் அவனுடைய விரல் நுனியில் இருந்தாலும் , உலகில் பிற அனைத்து சாஸ்த்திர ஞானமும், எடுத்த எடுப்பில் கவிதைப் புனையக் கூடிய கவித்துவப் புலமையும், நல்ல உரைநடை நூல்களை எழுதும் ஆற்றலும் ஆகிய அனைத்தையும் செய்யக் கூட்டிய அனைத்துத் திறமைகளும் அவனிடத்தில் இருந்த போதிலும்,
அவன், ஞான போதனையை வாரி வழங்கும் ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில் தன் மனத்தைப் பதித்து, அம்மாதவனிடம் தன்னை முழுமையாகச் சமர்ப்பித்து, அந்த தெய்வீக சன்னிதியில் தன் ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆத்ம ஞானம் பயிலவில்லையாகில், அச் கல்விச்செல்வமும் இன்னபிற அறிவாற்றல்களும் அவனுக்கு அமையப் பெற்றாலும் அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்.

விளக்கவுரை:

உலகில் இருக்கும் எல்லையில்லா கல்வி மற்றும் கலைஞானங்களும், ஸ்ரீ குருதேவரைப் பணிந்து ஆத்மஞானம் பயிலாவிடில் வீணே என்பது கருத்து.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 8:29 am

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது

विदेशेषु मान्यः स्वदेशेषु धन्यः सदाचारवृत्तेषु मत्तो न चान्यः।
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ॥ – ४

விதேசேஷு மான்ய: ஸதேசேஷு தன்ய: ஸதாசாரவ்ருத்தேஷு மத்தோ ந சான்ய:
மனஸ்சேந்த லக்னம் குரோரங்க்ரி பத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம். – 4

பதப்பொருள் :

முதல் அடி -

विदेशेषु मान्यः விதேசேஷு மான்ய: - வேற்று நாட்டு அரசர்களால் நன்கு மதிக்கப்படுபவன்
स्वदेशेषु धन्यः - ஸ்வதேஷு தன்ய : - தனது நாட்டில் நல்ல செல்வச் செழிப்புடன் இருப்பவன்.
सदाचारवृत्तेषु मत्तः –சதாசர வ்ருத்தேஷு மத்த்: - அனைத்து நன்நடத்தைகளிலும் தனக்கும் பிறருக்கும் ஆனந்தத்தை அளிப்பவன்
न चान्यः – ந ச அன்ய: - அன்னியன் என்று சொல்ல முடியாத வகையில் அனைவரிடமும் நல்ல நட்புடனும் உரிமையுடனும் இருப்பவன்.

இரண்டாவது அடி –

मनः चेत् न लग्नं – மன: சேத் ந லக்னம் – மனம் பதிக்கப்படவில்லை என்றால்;
गुरोः अङ्घ्रि पद्मे – குரோ: அங்க்ரி பத்மே – ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில்;
ततः किं ततः किं ततः किं ततः किम् – தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்;

தெளிவுரை :

வேற்று நாட்டு அரசர்களாலும் மக்களாலும் நன்கு மதிக்கப்படுபவனாகவும், தனது நாட்டில் நல்ல செல்வச் செழிப்புடன் இருப்பவனாகவும், அவனது அனைத்து நன்நடத்தைகளாலும் தனக்கும் பிறருக்கும் ஆனந்தத்தை அளிப்பவனாகவும், மேலும் வேற்றுமை பாராட்டாது அனைவரிடமும் நல்ல நட்புடனும் உரிமையுடனும் இருப்பவனாகவும் ஒருவன் இருந்தபோதிலும் ,
அவன், ஞான போதனையை வாரி வழங்கும் ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில் தன் மனத்தைப் பதித்து, அம்மாதவனிடம் தன்னை முழுமையாகச் சமர்ப்பித்து, அந்த தெய்வீக சன்னிதியில் தன் ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆத்ம ஞானம் பயிலவில்லையாகில், அத்தகைய செல்வச் செழிப்பு, நற்பெயர், நற்புகழ், அன்னியோன்யம் ஆகியவற்றால் அவனுக்கு யாது பயன்! அவற்றால் யாது பயன்! அவற்றால் யாது பயன! அவற்றால் யாது பயன்!!!

விளக்கவுரை:

ஒருவன், எவ்வளவுதான் செல்வச் செழிப்பும், உள்ளூரிலும் வெளியூரிலும் நற்பேரும் புகழும், நன்னடத்தையும், அனைவரிடமும் நேசமும் கொண்டு இருப்பினும் அவன் ஸ்ரீ குருதேவரிடம் தன் மனைத்தை அர்ப்பணம் செய்து ஞானம் பயிலாவிடில் அவை அனைத்தாலும் அவனுக்குக் கிட்டும் ஆன்ம பயன் ஏதும் இல்லை.

ஸ்ரீ குருவே நம:

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 12:57 pm

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது.

क्षमामण्डले भूपभूपालवृन्दैः सदासेवितं यस्य पादारविन्दं ।
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ॥ - ५

க்ஷமாமண்டலே பூப பூபாலவ்ருந்தை: ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம்
மனஸ்சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – 5

பதப்பொருள் :

முதல் அடி -

क्षमामण्डले –ஷமாமண்டலே – உலகம் முழுவதிலும் இருக்கும்;
भूप – பூப – அரசர்கள்;
भूपालवृन्दैः – பூபாலவிந்தை: இளவரசர்கள் எல்லோரும்;
सदासेवितं –சதா சேவிதம் – எப்போதும் வணங்குதல்;
यस्य - யஸ்ய – எவருடைய;
पादारविन्दं –பாதார விந்தம் பாதமலர்கள்;

இரண்டாவது அடி –

मनः चेत् न लग्नं – மன: சேத் ந லக்னம் – மனம் பதிக்கப்படவில்லை என்றால்;
गुरोः अङ्घ्रि पद्मे – குரோ: அங்க்ரி பத்மே – ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில்;
ततः किं ततः किं ततः किं ततः किम् – தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்;

தெளிவுரை :

உலகம் முழுவதிலும் இருக்கும் அரசர்கள், இளவரசர்கள் ஆகிய எல்லோரும், எவருடைய
பாதமலர்களை எப்போதும் வணங்குவதாகும் உயரிய நிலையில் இருக்கும் சிறப்பிற்கு உரியவராக இருந்தபோதிலும் ,
அவரும் கூட ஞான போதனையை வாரி வழங்கும் ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில் தன் மனத்தைப் பதித்து, அம்மாதவனிடம் தன்னை முழுமையாகச் சமர்ப்பித்து, அந்த தெய்வீக சன்னிதியில் தன் ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆத்ம ஞானம் பயிலவில்லையாகில், அத்தகைய உயர்வு மற்றும் சிறப்பு ஆகியவற்றால் அவருக்கு யாது பயன்! அவற்றால் யாது பயன்! அவற்றால் யாது பயன! அவற்றால் யாது பயன்!!!

விளக்கவுரை:

ஒருவர், உலகை ஆளும் அரசர்களாலும் இனி ஆளப்போகும் இளவரசர்களாலும் தம் பாதங்களை வணங்கத்தக்கச் சிறப்பை உடையவாராக உயர்ந்த நிலையில் இருந்த போதிலும், அவர் ஸ்ரீ குருதேவரிடம் தன் மனத்தை அர்ப்பணம் செய்து ஞானம் பயிலாவிடில் அவை அனைத்தாலும் அவருக்குக் கிட்டும் ஆன்ம பயன் ஏதும் இல்லை.
(உயர்வையும் சிறப்பையும் உய்யக் கொண்ட உத்தமனே ஸ்ரீ குருதேவா! நின் மலரடி சரணம்)
ஸ்ரீ குருவே நம:

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 14, 2016 5:37 pm

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது.

यशो मे गतं दिक्षु दानप्रतापा जगद्वस्तु सर्वं करे यत्प्रसादात् ।
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ॥ ६

யசோ மே கதம் திக்ஷு தானப்ரதாபா ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத்
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் -6

பதப்பொருள் :

முதல் அடி -

यशः मे गतं दिक्षु – யஷ: மே கதம் திஷு - உலகின் எல்லா திசைகளிலும் என்னுடைய புகழ்
दानप्रतापा – தானப்தாபாத் – வள்ளல் தன்மையினால்
जगद्वस्तु सर्वं - ஜகத் வஸ்து சர்வம் - உலகில் இருந்துகொண்டு வாழ்பவை
करे यत् प्रसादात् – கரே யத் ப்ரசாதாத் – அது கைகளில் கிடைகப் பெறுதல்.

இரண்டாவது அடி –

मनः चेत् न लग्नं – மன: சேத் ந லக்னம் – மனம் பதிக்கப்படவில்லை என்றால்;
गुरोः अङ्घ्रि पद्मे – குரோ: அங்க்ரி பத்மே – ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில்;
ततः किं ततः किं ततः किं ततः किम् – தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்;

தெளிவுரை :

பொருளையும் அருளையும் அனைவருக்கும் வாரிவழங்கும் என்னுடைய வள்ளல் தன்மையினால் உலகில் இருந்துகொண்டு வாழ்பவை எல்லாவற்றின் கைகளிலும் கிடைக்கப் பெறும்வகையில் இருந்து அதன் விளைவாய் உலகின் எல்லா திசைகளிலும் என்னுடைய புகழ் பரவி இருந்த போதிலும்

ஞான போதனையை வாரி வழங்கும் ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில் என் மனத்தைப் பதித்து, அம்மாதவனிடம் என்னை முழுமையாகச் சமர்ப்பித்து, அந்த தெய்வீக சன்னிதியில் என் ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆத்ம ஞானம் பயிலவில்லையாகில், அத்தகைய வள்ளல் தன்மையாலும் அதனால் கிடைக்கப்பெறும் புகழாலும் எனக்கு யாது பயன்! அவற்றால் யாது பயன்! அவற்றால் யாது பயன! அவற்றால் யாது பயன்!!!

விளக்கவுரை:

நான் மிகு வள்ளல் தன்மை உடையவனாய் இருந்து அதனால் என் புகழ் உலகளாவ இருந்த போதிலும் நான் ஸ்ரீ குருதேவரிடம் என் மனத்தை அர்ப்பணம் செய்து ஞானம் பயிலாவிடில் அவற்றால் எனக்குக் கிட்டும் ஆன்ம பயன் ஏதும் இல்லை.
ஸ்ரீ குருவே நம:

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 15, 2016 10:50 am

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது.

न भोगे न योगे न वा वाजिराजौ न कान्तामुखे नैव वित्तेषु चित्तं ।
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ॥ – ७

நபோகே நயோகே ந வா வாஜிராஜௌ ந காந்தா முகே நைவ வித்தேஷு சித்தம்
மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் - 7

பதப்பொருள் :

முதல் அடி –
न भोगे - ந போகே – சுகபோகங்களால் அல்ல.
न योगे –ந யோகே – யோகங்களினால் அல்ல.
न वा वाजिराजौ – ந வா வாஜிராஜௌ – அல்லது அரசர்களின் பலம் வாய்ந்த படைபலத்தால் அல்ல.
न कान्तामुखे – ந காந்தா முகே – பெண்களின் முக அழகாலும் அல்ல.
न एव वित्तेषु चित्तं – ந ஏவ விதேஷு சித்தம் – மற்றும் பொருள் சம்பாதிப்பதில் வெற்றி அடைவதாலும் அல்ல.

இரண்டாவது அடி –
मनः चेत् न लग्नं – மன: சேத் ந லக்னம் – மனம் பதிக்கப்படவில்லை என்றால்;
गुरोः अङ्घ्रि पद्मे – குரோ: அங்க்ரி பத்மே – ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில்;
ततः किं ततः किं ततः किं ततः किम् – தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்;

தெளிவுரை :

(ஒருவனுக்கு) உலக சுகபோகங்களில் பற்று இல்லை; தவம் யோகம் போன்றவற்றிலும் ஈடுபாடு இல்லை; அல்லது பெரும் அரசர்களைப்போல் படைபல ஆற்றலிலும் ஆசை இல்லை; பெண்களின் வலிமைவாய்ந்த முக அழகிலும் விருப்பம் இல்லை ; மற்றும் பொருள் சம்பாதிப்பதில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணமும் இல்லை . (இவ்வாறாக அனைத்திலும் பற்று இல்லாமல் இருந்தபோதிலும்)

ஞான போதனையை வாரி வழங்கும் ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில் (அவன்) மனத்தைப் பதித்து, அம்மாதவனிடம் (தன்னை) முழுமையாகச் சமர்ப்பித்து, அந்த தெய்வீக சன்னிதியில் (தன்) ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆத்ம ஞானம் பயிலவில்லையாகில், அத்தகைய பற்றற்றத் துறவற நெறியால் (அவனுக்கு) யாது பயன்! அவற்றால் யாது பயன்! அவற்றால் யாது பயன! அவற்றால் யாது பயன்!!!

விளக்கவுரை:

ஒருவன் தன் வாழ்வில் ஆசைகளை ஒழித்து பற்றுக்களை அழித்து உலக இருப்புக்கள் அனைத்திலிருந்தும் விலகிப் துறவு வாழ்வு வாழ்ந்தாலும் அவன் ஸ்ரீ குருதேவரிடம் தன் மனத்தை அர்ப்பணம் செய்து ஞானம் பயிலாவிடில் அவற்றால் அவனுக்குக் கிட்டும் ஆன்ம பயன் ஏதும் இல்லை.
ஸ்ரீ குருவே நம:

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 18, 2016 8:15 am

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது.

अरण्ये न वा स्वस्य गेहे न कार्ये न देहे मनो वर्तते मे त्वनर्घ्ये ।
मनश्र्चेन लग्नं गुरोरङ्घ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किं ॥ – ८

அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே ந தேஹே மனோ வர்ததே மே த்வநர்க்யே
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் -8

பதப்பொருள் :

முதல் அடி –

अरण्ये – அரண்யே – காட்டிலோ அதாவது காட்டில் வாழும் துறவற வாழ்வு
न वा स्वस्य गेहे – ந வா ஸ்வஸ்ய கேஹே – அல்லது தன்னுடைய சொந்த வீட்டில் வாழும் இல்லறவாழ்வு.
न कार्ये – ந கார்யே – செய்யும் செயல்கள்.
न देहे – ந தேஹே – நல்ல திடமும் ஆரோக்கியமும் கூடிய உடல்நலம்.
मनो वर्तते – மனோ வர்த்ததே – நல்ல மன நிம்மதி
मे त्वन् अर्घ्ये –மே த்வன் அர்க்யே - பலரும் என்னை வரவேற்று முன்னின்று எனக்கு மரியாதை தருதல்

இரண்டாவது அடி –

मनः चेत् न लग्नं – மன: சேத் ந லக்னம் – மனம் பதிக்கப்படவில்லை என்றால்;
गुरोः अङ्घ्रि पद्मे – குரோ: அங்க்ரி பத்மே – ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில்;
ततः किं ततः किं ततः किं ततः किम् – தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்;

தெளிவுரை :

கானகத்தில் வாழும் துறவற வாழ்வு அல்லது தன்னுடைய சொந்த வீட்டில் வாழும் இல்லறவாழ்வு; நான் செய்யும் நற்பலங்களைக் கொடுக்கும் செயல்கள்; என் உடம்பை நன்கு ஆரோக்கியமாக வைத்திருப்பது அல்லது மனத்தில் நிம்மதியோடு இருத்தல்; எவ்விடத்தும் எப்போதும் பலரும் என்னை
வரவேற்று எனக்கு முன்னின்று மரியாதை அளித்தல் ஆகிய எவை இருந்தபோதும்

ஞான போதனையை வாரி வழங்கும் ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில் (என்) மனத்தைப் பதித்து, அம்மாதவனிடம் (என்னை) முழுமையாகச் சமர்ப்பித்து, அந்த தெய்வீக சன்னிதியில் (தன்) ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆத்ம ஞானம் பயிலவில்லையாகில், அத்தகைய வாழ்வு, நற்செயல்கள், உடல் மற்றும் மனநலம் , மரியாதை ஆகியவற்றால் (எனுக்கு) யாது பயன்! அவற்றால் யாது பயன்! அவற்றால் யாது பயன! அவற்றால் யாது பயன்!!!

விளக்கவுரை:

ஒருவனுக்கு வாய்க்கும் அவன் விரும்பும் வாழ்வு, அவனுடைய நற்செயல்கள், அவனது உடல் மற்றும் மனநலம் , அவனுக்குக் கிடைக்கும் மரியாதை ஆகியவை இருந்தபோதிலும், அவன் ஸ்ரீ குருதேவரிடம் தன் மனத்தை அர்ப்பணம் செய்து ஞானம் பயிலாவிடில் அவற்றால் அவனுக்குக் கிட்டும் ஆன்ம பயன் ஏதும் இல்லை.
குறிப்பு – இந்த ஸ்லோகத்தில் “ न - ந” என்னும் பதம் , “च, वा, अपि च, अपि वा,- ச, வா, அபிச அபிவா ” என்னும் பொருளில் கொள்ளப்பட வேண்டும்.

ஸ்ரீ குருவே நம:

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:16 am

அறிந்து கொள்வோம் - ஸ்ரீஆதிசங்கரர் அருளும் அத்வைத அமுதம்

குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது.

गुरोरष्टकं यः पठेत्पुण्यदेही यतिर्भूपतिर्ब्रह्मचारी च गेही ।
लभेद्धाञ्छितार्थं पदं ब्रह्मसंज्ञं गुरोरुक्तवाक्ये मनो यस्य लग्नं ॥ – ९

குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ யதிர் பூபதில் ப்ரஹ்மசாரீ ச கேஹீ
லபேத் வாஞ்சி தார்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம் குரோருக்த வாக்யே மனோ யஸ்ய லக்னம் -9

பதப்பொருள் :

முதல் அடி –

गुरोः अष्टकं यः पठेत् – குரோ: அஷ்டகம் ய: படேத் – ஸ்ரீகுருஅஷ்டகத்தை யாவர் படிக்கின்றாரோ
पुण्यदेही –புண்யதேஹீ – அவர் புண்ணியம் செய்த பிறவியாகிறார்.
यतिः – யதி: - ஞானி.
भूपति –ப்போதி – ஆரசன்.
ब्रह्मचारी – ப்ரம்மசாரி –முற்றும் துறந்த முனிவர்
च गेही – ச கேஹீ – மேலும் இல்வாழ்வான்

இரண்டாவது அடி –

लभेत् धाञ्छितार्थं पदं – அவரே மெய்யறிவை அறியும் நிலை அடையப் பெறுகிறார்.
ब्रह्मसंज्ञं - ப்ரம்ம சம்ஞம் – பரம்பொருள் பற்றிய ஞானத் தெளிவை அடைகிறார்.
गुरोः उक्तवाक्ये – குரோ: உக்த வாக்யே – குருவால் உபதேசிக்கப்பட்டதில்
मनः यस्य लग्नं – மன: யஸ்ய ளக்நம் எவருடைய மனம் பதிந்துள்ளதோ.

தெளிவுரை :

ஸ்ரீ குருவால் உபதேசிக்கப்பட்ட இந்த குரு அஷ்டகத்தை யாவர் படிக்கிறாரோ, யாவருடைய மனம் அதில் ஈடுபாடுகொண்டு அதனோடு ஒன்றிவிடுகிறதோ, அவர் ஞானி, அரசன், முற்றும் துறந்த முனிவர்
மேலும் இல்வாழ்வான் ஆகிய எவராக இருந்தாலும் அவரது இப்பிறவி புண்ணியம் செய்ததாகிறது. அவரே மெய்யறிவை அறியும் நிலையை அடையப் பெறுகிறார். பரம்பொருள் பற்றிய ஞானத் தெளிவையும் அடைகிறார்.

விளக்கவுரை:

ஜெகத்குருவாகிய ஸ்ரீ ஆதிசங்கரர் உபதேசித்த இந்த குருஅஷ்டகத்தைப் படித்து, உண்மையான ஞானகுருவை நாடி அடைந்து ஞானபாடமும் அது தொடர்பான பயிற்சியையும் கடைப்பிடித்து இவ்வுலகில் வாழ்கிறார்களோ அவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அவர்களே மெய்யறிவை அறியும் நிலையை அடையப் பெறுகிறார்கள். பரம்பொருள் பற்றிய ஞானத் தெளிவையும் அடைகிறார்கள் என்பது கருத்து.

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீகுரு அஷ்டகம் நிறைவு பெற்றது

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக