புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
#1222067- SRINIVASAN GOVINDASWAMYபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
பத்து குறளின் சிறுகுறிப்பு தொகுதி :
கூடநட்பு பகைவனின் வில்லென வளைந்தும், பரத்தையின் சொல்லென நெளிந்தும் இனிமை காட்டும். ஆனால் உண்மையில் அது கொல்லனின் உலைக்கல்லுக்கு ஒப்பாகும். மேலும் பகைவர் தொழும் கைக்குள் ஆயுதம் போல் வஞ்சகரின் சதி திட்டமும் அவரின் கண்ணீரால் மறைக்கப்படும்.எனவே அதனை அகத்தில் விலக்கி புறத்தில் நகைத்து சமயத்தில் விலக்கவும்.
விளக்கம் :
அகத்தே பகைமை கொண்டு முகத்தால் நண்பர்போல் இனிமை காட்டும் வஞ்சகரின் போலி நட்பானது, உள்ளொறு எண்ணம் வைத்து நகைமுகம் காட்டும் பொதுமகளிரின் ஊடலை போன்றது. நமக்கு உறுதுணை போல் தோன்றும் வஞ்சகரின் இந்த சுயநல நட்பானது இரும்பை தாங்கி பிடித்து, பின்பு அதனையே சிதைக்க உதவும் கொல்லனின் உலைகல் போல் நம்மை நம்ப வைத்து பின்பு அழிக்கும் வல்லமை வாய்ந்தது. இத்தகைய நட்பை துரோகத்திற்கு இணையாகவும் கருதலாம். பற்பல நல்லொழுக்க நூல்களை கற்றபோதும், சிரித்துப் பேசி நம்மை சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் இத்தகைய போலி நட்பே அஞ்ச வேண்டிய கூடாநட்பு.
மனதால் நம்மை இகழ்ந்துமகிழும் இவ்வஞ்சகர்கள் சொல்ல வேண்டியதை வளைந்து பேசினாலும்,சிறு புத்தி கொண்ட இவர்களின் பணிவு சொற்களை நம்பி எத்தகைய செயலுக்கும் துணிய கூடாது. ஏனெனில் பகைவனின் வில் வளைவது தீமை செய்யவே அன்றி நன்மை தராதவை என்பதனை விரைவில் அறிந்து கொள்ளலாம்.
தக்க தருணத்தில் கண்ணீர் கொட்டி அழுதிடும் வஞ்சகர் நெஞ்சில் மறைத்திருக்கும் சதித்திட்டமானது, வணங்கி தொழும் பகைவர் கைக்குள் ஒளிந்திருக்கும் கொலைக்கருவி போன்று நமக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்க கூடியது.
காலச்சூழலால் தவிர்க்க முடியாத இப்பகைவரின் நட்பை நலிவடைய செய்ய, நாமும் அகத்தால் விலகி முகத்தளவில் மட்டும் நட்பை காண்பித்தது வாய்ப்புக் கிடைக்கும் போது விட்டுவிடும் யுக்தியை கையாள வேண்டும்.
இதனையே!!
"உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" எனவும்
"கூட நட்பு கேடாய் முடியும்" என்றும் சுருங்க சொன்னார்கள்
வஞ்சகரின் நட்பை உணர்வது எப்படி ???
கண் பார்த்து பேசார், கண்டிக்க மாட்டார்
இடித்துரைப்பினும் இன்முகம் காட்டுவார்.
தயங்கி பேசுவார்,தனிமையில் பழகுவார் ,
நன்பும்படி நடிப்பார் , நாணி கோணுவர்,
வளைந்து பேசுவார்,நெளிந்து பழகுவார்.
பொய்யுரைப்பார், பொல்லாங்கு பேசுவார்.
சிறுகுற்றம் காணினும் சீறி பாய்வார்,
உற்ற நேரத்தில் உதவிக்கு வாரார்.
உண்மையில் அவர்தான் ஊறு செய்வாரே!! - இது என்னுரை
நன்றி! வாழ்க வளமுடன்!!!

Re: திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
#1222075- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1222067SRINIVASAN GOVINDASWAMY wrote:வஞ்சகரின் நட்பை உணர்வது எப்படி ???
கண் பார்த்து பேசார், கண்டிக்க மாட்டார்
இடித்துரைப்பினும் இன்முகம் காட்டுவார்.
தயங்கி பேசுவார்,தனிமையில் பழகுவார் ,
நன்பும்படி நடிப்பார் , நாணி கோணுவர்,
வளைந்து பேசுவார்,நெளிந்து பழகுவார்.
பொய்யுரைப்பார், பொல்லாங்கு பேசுவார்.
சிறுகுற்றம் காணினும் சீறி பாய்வார்,
உற்ற நேரத்தில் உதவிக்கு வாரார்.
உண்மையில் அவர்தான் ஊறு செய்வாரே!! - இது என்னுரை
நன்றி! வாழ்க வளமுடன்!!!
கூடாநட்பின் இலக்கணம் சொன்ன தங்கள் உரை மிகவும் நன்று .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
#1222080- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நண்பருக்கு ,
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும் . ( கூடா நட்பு )
இக்குறளில் " மகளிர் " என்னும் சொல்லுக்கு சில உரையாசிரியர்கள் பொருட்பெண்டிர் என்று பொருள் கொண்டாலும் , பரிமேலழகர் அவ்வாறு கொள்ளவில்லை . பெண்பாலார் மனம்போல வேறுபடும் என்றே பொருள் கொள்கிறார் . " மகளிர் ' என்னும் சொல்லுக்கு " பொருட்பெண்டிர் " என்று பொருள்கொள்ளுதல் சரியாகப்படவில்லை .
குலமகளிரும் மனம் மாறுதல் உண்டு என்பதற்கு இராமாயணத்தில் வருகின்ற கைகேயி சான்று . கூனியின் போதனையால் கைகேயி மனம் மாறியதாகத்தானே இராமாயணம் சொல்கிறது .
தங்கள் உரையில் குற்றம் காண்பதாக எண்ணவேண்டாம் . மாற்றுப் பொருளும் உண்டு என்பதற்காகவே சொன்னேன் .

#1222094- SRINIVASAN GOVINDASWAMYபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
அன்புள்ள நண்பர்கள் சபைக்கு வணக்கம்,
உங்கள் கருத்தை சிரத்தையுடன் உள் வாங்குகிறேன்
எனது பதிவை கருத்தூன்றி படித்தமைக்கு நன்றி. நான் மிகவும் பெருமைகொள்கிறேன். இன்னும் அதிக தர நிர்ணயத்தை நண்பர்களிடம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எனது பதிலுரை
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும் . ( கூடா நட்பு )
வள்ளுவனின் வார்த்தைக்கு நேரடி பொருள் கொண்டால் மகளிர் என்றே பொதுவாக கருத முடிகிறது.
பதம் - "மகளிர் மனம்போல வேறு படும்"
1. மகளிர் மனம் வேறுபாடும் என்பதை - மகளிர் மனம் அவ்வப்போது வேறுபடும் (சூழ்நிலைக்கு ஏற்ப) என பொருட்கொண்டால் வஞ்சமே சிந்தனையாக கொண்டு பழகும், கூட நட்பு அதிகாரத்தில் அவர் உதாரணத்தை சாதாரணமாக மகளிராக கருத முடியவில்லை.
2. மகளிர் மனம் வேறுபாடும் என்பதை - அடிப்படையில் (எப்போதும்) அனைத்து (தாய் , மனைவி , மகள் , சகோதரி , காதலி , தோழி , அதிகாரி , பொதுமகள் , குலமகள் ) மகளிரின் மனமும் "உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும்" பண்புடையது என அரிதிட்டும் கூற மனமில்லை.
3. மேலும் இதை கூறிய வள்ளுவன் மீதே குறை காண்கிறேன். மகளிர் என்ற பதத்தை மிகப்பெரிய உதாரணத்திற்கு எப்படி சர்வ சாதாரணமாக ( பொத்தாம் பொதுவாக) பயன்படுத்த எண்ணினான்.
3A. மேலும் ஒரு கருத்து - வஞ்சனையோடு பழகும் பகைவரிடம் அவன் போலவே பழகி (நடிக்கவேண்டும்) பின்பு விலக வேண்டும் என்ற கருத்தும் என இயல்புக்கு முரண்பட்டே தோன்றுகிறது. நாம் நாமாக இருந்தே வஞ்சகனின் நட்பை விலக்க முயற்சிக்கலாமே?? (எதற்கு சண்டை , எதற்கு கள்ள தனம் , எதற்கு நடிப்பு , எதற்கு முரண்பட்ட குணாதிசயம்) (ராமனையும் , தருமனையும் கருத்தில் கொள்ளுங்கள்)
3B.. வரலாற்றில் ஒரு பக்கம் - சரணடைந்த கோரி முகம்மதுவுக்கு வாழ்வளித்தான் ப்ரித்தீவீ , ஆனால் அவனாலே தலை இழந்தான் அடுத்த காட்சியில். கோரி முகமது கொல்ல பட்டிருந்தால் வரலாற்றின் பாதை மாறியிருக்கலாம். போர்தர்மம் கருதி விடுவித்தான் ப்ரித்தீவீ முன்பு. தலை இழந்து வரலாற்றில் இடம் பிடித்தான் பின்பு. ஒரு வேளை ப்ரித்தீவீ திருக்குறள் படித்திருந்தால் அவன் இயல்பும் மாறியிருக்கலாம் , இந்திய வரலாறும் சுவாரசியம் அற்று போயிருக்கும்.
கூட நட்பு அதிகாரத்தில் இதை ஓர் எடுத்துக்காட்டு உவமை அணியாக கருதினால், மகளிர் என்ற பதம் (இராமாயணத்தில் எடுத்துக்காட்டியது போல்) 95% வரலாற்று அல்லது இதிகாச பெண்களுடன் இவ்உவமை ஒத்துப்போகவில்லை.
மேலும் வஞ்சம் என்பது திட்டமிட்டு நண்பனாக கூடி கெடுப்பது. அதில் வாதிக்கு நேரடி பலன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கைகேயி கோபம் மற்றும் மனமாற்றம் திட்டமிட்டு கூனியின் கூடாநட்பால் ஏற்பட்ட மனமாற்றம். மேலும் தர்மத்தை தவிர்த்து இப்படி சுயநலமாக சிந்திக்க கூடாது என சித்தரிக்கும் கதா பாத்திரமே ராமாயண கைகேயி. எக்காலத்திலும் குல மகளிரின் சிந்தனை மற்றும் மனமாற்றம் எல்லாம் தன் கணவன் மற்றும் பிள்ளைகள் நலன் சார்ந்தே இருக்கும். அதனை கூனியின் குடிகெடுக்கும் தன்மையோடு ஒப்பிடமுடியாது.
ஆனால் 98% பொதுமகளின் இன்முகம் எல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்தே அமைகிறது. அவர்களின் காரியங்களின் காரணத்தில் சுயநலமே ஓங்கி நிற்கும். விலைக்கு ஏற்ப விளக்கும் பிரகாசிக்கும். இதனை அகத்தே ஒத்த நட்பாகவோ அல்லது காதலாகவோ கருதமுடியாது என்ற கருத்தை அழுத்தம் கொடுக்கவே இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
கூட நட்பின் தன்மையை அழுத்திவிளக்க மகளிரை பொத்தாம் பொதுவான பொருளாக கண்டால் இல்லறத்திற்கும் வள்ளுவனின் காமத்துப்பாலுக்கும் வேலை ஏது.
எனவே இதனை ஒரு பொருளுரையாக கருதாமல் கருத்துரையாக மனதிற்கொண்டு கூட நட்பை தக்க சமயத்தில் விலக்க வேண்டும்.
இதுவே எனது முதற்கட்ட வாதம். வர்றவங்க எல்லாம் வரலாம்

#1222133- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பழங்காலத்து காவியங்கள் , அந்தந்த காலத்துக்கேற்ப , எழுதப்பட்டன .
இக்காலங்களில் அதை ரசிக்கும் போது ,அந்தந்த காலத்திற்கு நம்மை நாமே அழைத்து செல்லவேண்டும் .
அதை இந்த காலத்துடன் ஒப்பிட்டு , எழுதியவரை குறை காணுதல் சரியில்லை என எனக்கு படுகிறது .
கருத்தில் மாற்றங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் . வாதத்திற்கும் /விவாதத்திற்கும் அப்பாற்பட்டது என்பது எந்தன் கருத்து . அவரவர் கருத்தை தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
#1222136- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மணக்குடவர் உரை:
நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது .
மகளிர் என்ற சொல்லுக்கு மணக்குடவரும் " பெண் " என்றுதான் பொருள் கொள்கிறார் . மகளிர் அடிக்கடி மனம் மாறும் குணமுடையவர்கள் என்று உரை எழுதினால் பெண் குலத்தின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சியதாலோ என்னவோ பெரும்பாலான உரையாசிரியர்கள் " மகளிர் " என்ற சொல்லுக்கு " விலைமகளிர் " என்று பொருள்கொண்டனர் .
நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது .
மகளிர் என்ற சொல்லுக்கு மணக்குடவரும் " பெண் " என்றுதான் பொருள் கொள்கிறார் . மகளிர் அடிக்கடி மனம் மாறும் குணமுடையவர்கள் என்று உரை எழுதினால் பெண் குலத்தின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சியதாலோ என்னவோ பெரும்பாலான உரையாசிரியர்கள் " மகளிர் " என்ற சொல்லுக்கு " விலைமகளிர் " என்று பொருள்கொண்டனர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
#1222143சிந்திக்க வேண்டிய சிந்தனைத் துளி:
( திருக்குறள் - பொருளதிகாரம் – நட்பியல் –கூடாநட்பு)
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும் . 822
பதப்பொருள் :
இனம் – பணிவு.
கேண்மை – நட்பு, ஒழுக்கம்.
மகளிர் – சிறுவர்.
மனம் - எண்ணம்
வேறுபடுதல்- வேறாதல்.
பதவுரை :
இனம்போன்று இனமல்லார் கேண்மை
- பணிவுடையவர்கள்போல் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளும் பணிவில்லாதவர்களுடனாகும் நட்பு
மகளிர்மனம்போல
- சிறுவர்களுடைய எண்ணம் போல
வேறு படும்
- அடிக்கடி வேறாகும்.
தெளிவுரை :
பணிவுடையவர்கள்போல் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளும் பணிவில்லாதவர்களுடனாகும் நட்பு
சிறுவர்களின் மனத்தைப்போன்று அடிக்கடி தன் சுய நலத்தின் பொருட்டு அறிவு முதிர்ச்சி இன்மையால் வேறுபடும் தன்மையது .
விளக்கவுரை :
மகளிர் என்னும் சொல்லுக்குப் பெண்டிர் என்பது யாவரும் அறிந்த பொதுப்பொருள்.
ஆனால் மகளிர் என்றால் சிறுவர் என்றும் பொருளுண்டு.
எவ்வாறெனில்:
மக என்னும் பதத்திலிருந்து வருவன மகன், மகள் என்பன.
யாழ் நிகண்டு “மக” என்னும் பதத்திற்கு “இளமை” என்று பொருள் வரையறை செய்கிறது.
இளமை என்பது சிறுபருவம் என்று பொருளாகிறது.
சிறுபருவத்தினர் சிறுவர் ஆகிறார்கள்.
சிறுவர் என்பது மேலும் மலர்ந்து அறிவு முதிர்ச்சி பெறாதோர் என்று பொருள் தருகிறது.
ஆக மகளிர் என்ற சொல்லிற்கு அறிவு முதிர்ச்சி பெறாத சிறுவர் என்பதும் ஏற்கக் கூடிய பொருள்.
அறிவு முதிர்ச்சி பெறாததால் சிறுவர்களுடைய மனம் நிலைத்தன்மை அற்றது. அவர்கள் எதை நினைக்கிறார்கள் > என்ன செய்கிறார்கள் > முடிவாக எதை எப்படி எப்போது செய்யப் போகிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது அல்லது அவர்களுடன் இருப்பவர்களுக்கும் தெரியாது. சம்பந்தா சம்பந்தம் இல்லாதனவற்றைச் சடுதியில் செய்துவிட்டு விளைவை அறியாமல் விழிப்பதும் விளையாடுவதும் சிறுவர் செயல்.
தாயோடு ஒட்டியிருக்கும் சிறுபிள்ளைக்கு அதனுடைய அத்தை அது விரும்பும் ஒரு சிறிய இனிப்பைக் கொடுப்பாளாகில் , உடனே தன் தாயைத் தள்ளிவைத்துவிட்டு அத்தையிடம் தாவிக் கொண்டு மகிழும் – கூடவே தாயை வேண்டாம் என்று “ காய்” விடும். தாயும் அத்தையும் குழந்தையின் செயல் கண்டு குதூகளிப்பார்கள்.
அத்தை கொடுத்த அந்த இனிப்பு தீர்ந்த உடன், தன் சித்தி ஒரு பொம்மையைக் கொடுத்தால் உடனே அத்தையை அப்புறப்படுத்திவிட்டு சித்திதான் அதன் சொத்து, உறவு, சேர்க்கை எல்லாமே. இப்போது அன்னை, அத்தை, சித்தி மூவரும் மகிழ்வர். பிள்ளையின் செயலால் பிரியப்பட்டு அதனைக் கிள்ளி மகிழந்து, “ சமர்த்து” என்ற பாராட்டு வேறு அப்பிள்ளைக்கு.
இந்த கருத்தைத்தான் நம் தமிழ்வேதநாயகன் வள்ளுவப் பெருந்தகை நமக்கு அழகுற இக்குளில் விளக்குவதாகவும் கொள்ளலாம்.
ஆக இனமல்லா இனம்போல்வாரின் நட்பு சிறுவர்களின் மனத்தைப்போன்று அடிக்கடி தன் சுய நலத்தின் பொருட்டு அறிவு முதிர்ச்சி இன்மையால் வேறுபடும் தன்மையது என்பது பொருத்த மானது தானே !
கூடவே வள்ளுவர் தரும் அறிவுரை - இனமல்லா இனம்போல்வாரின் செயலுக்கு வருந்தாது அவர்தம் அறியாமையை எண்ணி மகிழுங்கள் என்பதுமாகும்.

#1222144“பெண் ஒரு தியாகி;
பெண்மை ஒரு தெய்வீகம்;
பெண் ஒரு தெய்வம்”.
பெண்ணின் பெருமை நம் தமிழ் மறை தந்த மேதைக்குத் தெரியாதா என்ன !
பெண் - அவள் விலைமாதே ஆனாலும் வணங்கத்தக்கவளே.
விலைமாது தன் தியாகத்தால் மற்ற இல்லறப் பெண்களின் கற்புக்குக் காவலாகும் தெய்வமாகிறாள் என்பதை மறுக்க முடியாதே - தான் தழலில் எரிந்து பிறருக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திபோல்.
பெண்மையே நீ எதுவாகினும் உன்னால் – உன் தியாகத்தால் உலகம் நன்மையையே அடைகிறது. முக்காலத்திலும் வணங்கத்தக்க ஒரே தெய்வம் நீ அல்லவோ.
உன்னை எப்படி அறிவுஜீவி வள்ளுவர் கொச்சைப் படுத்துவார் !
Re: திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
#1222145ஐயா!
பொய்யா மொழி அமரகாவியம் அல்லவா !
முக்காலத்திற்கும் மூவுலகிற்கும் நிலையானதல்லவா !
காலத்திற்குக் காலம் மாறாத ஓர் அற்புதம் அல்லவா!
அது தரும் அறிவுரையும் நீதியும் மானுடம் முழுமைக்கும், மானுடம் உள்ளவரை
நிலைக்கும் – நீடிக்கும் தானே !
அடியனின் இக்கருத்து ஏற்புடையது அன்று எனின், இதனை மகளிர் பண்பென பொருத்து பூரிப்படைய வேண்டுகின்றேன்.

#1222146- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும் . ( கூடாநட்பு -822 )
இக்குறளில் " மகளிர் " என்னும் சொல்லைப் " பொருட்பெண்டிர் " என்ற கருத்திலே வள்ளுவர் எழுதியிருப்பார் என்று தோன்றவில்லை .அக்கருத்து ஐயனின் உள்ளத்தில் இருந்திருக்குமாயின் " பரத்தை " என்ற சொல்லை பெய்திருக்கக்கூடும் .
இனம்போன்று இனமல்லார் கேண்மை பரத்தை
மனம்போல வேறு படும் . ( கூடாநட்பு -822 )
ஈண்டு " பரத்தை " என்ற சொல்லை வைத்தாலும் வெண்பாவின் இலக்கணம் மாறவில்லை என்பது நோக்கத்தக்கது . மேலும் அச்சொல் வள்ளுவன் அறிந்த ஒன்றே ! கீழ்வரும் குறட்பாவைக் கவனியுங்கள் .
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு . ( புலவி நுணுக்கம் - 1311 )
மனம்போல வேறு படும் . ( கூடாநட்பு -822 )
இக்குறளில் " மகளிர் " என்னும் சொல்லைப் " பொருட்பெண்டிர் " என்ற கருத்திலே வள்ளுவர் எழுதியிருப்பார் என்று தோன்றவில்லை .அக்கருத்து ஐயனின் உள்ளத்தில் இருந்திருக்குமாயின் " பரத்தை " என்ற சொல்லை பெய்திருக்கக்கூடும் .
இனம்போன்று இனமல்லார் கேண்மை பரத்தை
மனம்போல வேறு படும் . ( கூடாநட்பு -822 )
ஈண்டு " பரத்தை " என்ற சொல்லை வைத்தாலும் வெண்பாவின் இலக்கணம் மாறவில்லை என்பது நோக்கத்தக்கது . மேலும் அச்சொல் வள்ளுவன் அறிந்த ஒன்றே ! கீழ்வரும் குறட்பாவைக் கவனியுங்கள் .
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு . ( புலவி நுணுக்கம் - 1311 )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2