புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
53 Posts - 42%
heezulia
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
304 Posts - 50%
heezulia
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
21 Posts - 3%
prajai
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_m10கடவுள் இருக்கிறாரா, இல்லையா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Mon Sep 19, 2016 7:39 pm

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை.

முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்...... படித்துப் பாருங்கள்..!


      குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்.நான் அதை அறிந்து கொண்டேன்,நீங்கள் அதை அறியவில்லை,அதுதான் வித்தியாசம் என்று கூறி வாதிட்டான். இதை அவன் கண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறி கொண்டிருந்தான்.அந்த கிராமத்து மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன் வாதிடுவதில் வல்லவனாக இருந்தான்.அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தார் தவித்தனர்.


அவன் அவர்களிடம் நீங்கள் கூறும் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்.நான் அதை ருசித்து பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை,தொட்டு பார்க்கிறேன். அதன் பின்தான் நான் நம்ப முடியும்.என்று கூறினான். வெளிச்சத்தை தொடமுடியாது,ருசிக்க முடியாது.நுகரவும் முடியாது.கேட்கவும் முடியாது.ஆனால் இந்த குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ இந்த நான்கு புலன்களும்தான். ஆகவே அவன் வெற்றியடைந்து விட்டதாக சிரிப்பான்.பாருங்கள் ஒளி என்று கிடையாது.உண்டு எனில் எனக்கு நிருபித்து காட்டுங்கள் என்று கூறுவான்.

புத்தர் அந்த கிராமத்துக்கு வந்த போது அங்குள்ளவர்கள் அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். அவனது வரலாறு முழுவதையும் புத்தர் கேட்டார்.அதன் பின் அவர் இவனுக்கு நான் தேவை இல்லை.வெளிச்சத்தை பற்றி இவனிடம் பேசுவது முட்டாள்தனம்.இவனோடு நீங்கள் வாதிட்டால் அவன்தான் வெற்றி பெறுவான்.அவனால் வெளிச்சம் இல்லை என்பதை நிருபிக்க முடியும்.எனவே இவனை என் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். என்று கூறினார். ஆறு மாத காலத்தில் புத்தருடைய மருத்துவர் அவனை குணப்படுத்தினார். அவன் புத்தர் கால்களில் வந்து விழுந்தான்.

நீங்கள் மட்டும் இல்லையெனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தை பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன்.ஆனால் வெளிச்சம் உள்ளது.இப்போது நான் அதை அறிகிறேன்.என்று கூறினான். இப்போது புத்தர் நீ அதை நிருபிக்க முடியுமா?வெளிச்சம் எங்கே உள்ளது?நான் அதை ருசிக்க வேண்டும்.அதை தொட வேண்டும்.நுகர வேண்டும். என்று கேட்டார். உடனே அந்த முன்னாள் குருடன்.அது முடியாத காரியம் அதை பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன்.அதை அடைவதற்கு வேறு வழி இல்லை.என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை. எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும்இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது.





இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 8:44 pm

இந்தக் கதை உண்மையாக இருக்குமேயாயின், நாம் நம் ஓஷோவைப் பற்றிப் பரிதாபப்பட வேண்டியதுதான் நியாயம்.

கைப்புண்ணைப் பார்ப்பதற்குக் கண்ணாடியின்  தேவை எதற்கு !

தானே ஆத்மன் என்பதை அவர் எப்படி அறியாமல் போனார் ! இவ்வளவு பேரும் புகழும் பின் ஏன் அவருக்கு!

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடினார்கள் போலும் இத்தனைக் காலமும் . அடப் பாவமே !

ஆத்திகன் தோல்வி அடையலாம்- அவன் அஞ்ஞானி. அது சரியானதே.
யோகி ஆன்மீகவாதி –  தோல்வி என்பது அவன்  அறியாதது- ஏனெனில் அவன் மெய்ஞ்ஞானி.

ஆஸ்திகம் என்பது வேறு – ஆன்மீகம் என்பது வேறு. இது கூடவா அந்த மகானுக்குப் புரியவில்லை.

புத்தர், பிறவிக்குருடனைக் குருடனாகவே வைத்துப் பரம்பொருளை அவனுக்கு நிரூபித்திருக்கலாம்.  அதன் பின்பு அந்த அகங்கார அந்தகனின் குருட்டை நீக்கி இருக்கலாம். ஏனோ அச்செயலை அவர் செய்யவில்லை. காரணம் அதான் புத்தர் !!

பாவம் நம் ஓஷோ !



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 20, 2016 10:30 am

கட உள் கடவுள்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 20, 2016 8:08 pm

நல்ல சோதனை. விளக்கம் விவேக செயல் அருமையான கதை.

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 608
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Sep 21, 2016 6:45 pm

Ramalingam K wrote:இந்தக் கதை உண்மையாக இருக்குமேயாயின், நாம் நம் ஓஷோவைப் பற்றிப் பரிதாபப்பட வேண்டியதுதான் நியாயம்.

கைப்புண்ணைப் பார்ப்பதற்குக் கண்ணாடியின்  தேவை எதற்கு !

தானே ஆத்மன் என்பதை அவர் எப்படி அறியாமல் போனார் ! இவ்வளவு பேரும் புகழும் பின் ஏன் அவருக்கு!

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடினார்கள் போலும் இத்தனைக் காலமும் . அடப் பாவமே !

ஆத்திகன் தோல்வி அடையலாம்- அவன் அஞ்ஞானி. அது சரியானதே.
யோகி ஆன்மீகவாதி –  தோல்வி என்பது அவன்  அறியாதது- ஏனெனில் அவன் மெய்ஞ்ஞானி.

ஆஸ்திகம் என்பது வேறு – ஆன்மீகம் என்பது வேறு. இது கூடவா அந்த மகானுக்குப் புரியவில்லை.

புத்தர், பிறவிக்குருடனைக் குருடனாகவே வைத்துப் பரம்பொருளை அவனுக்கு நிரூபித்திருக்கலாம்.  அதன் பின்பு அந்த அகங்கார அந்தகனின் குருட்டை நீக்கி இருக்கலாம். ஏனோ அச்செயலை அவர் செய்யவில்லை. காரணம் அதான் புத்தர் !!

பாவம் நம் ஓஷோ !
மேற்கோள் செய்த பதிவு: 1222132

ராமலிங்கம் ஐயா, இதைத் தரவிறக்கிப் படித்துப்பாருங்கள்.

http://www108.zippyshare.com/v/qbzyb7np/file.html

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 21, 2016 9:13 pm


ஐயா !

தங்களின் ஆலோசனைப்படி அடியன் " நான் ஒரு வாசல் " -ஓஷோ என்னும் நூலைத் தரவிறக்கம் செய்து படிக்க முற்பட்டேன் .

121 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் முழுமையாகப் படிக்க மனம் ஏனோ ஈடுபாடுகொள்ளவில்லை.

நம்முடைய கருத்தே- கீழ்க்கண்ட பத்தியில் கூறப்பட்டது பற்றியதே:

"ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை. எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும்இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாது".


ஆத்திகன் ஒருவேளை கடவுளின் இருப்பை நிரூபிக்கத் தவறலாம். ஏனெனில் ஆத்திகம் என்பது ஒரு நம்பிக்கை.

ஆனால் ஆன்மீகம் என்பது அறிவு பூர்வமான ஆய்வு. ஆன்மாவின் இருப்பை நிரூபிக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

ஆன்மாவின் இருப்பை நிரூபிக்க இயலாது என்பது நம் ஓஷோவின் அறியாமை என்பதில் அடியனுக்குச் சிறிதளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

தங்களுக்கு அடியனின் கருத்தில் மாறுபாடும் நம் ஓஷோவின் ஆன்மா பற்றிய இந்த கருத்தில் ஏற்பும் இருக்குமானால், தங்களின் எப்படிப்பட்ட சந்தேகத்தையும் எம் ஸ்ரீகுருதேவர் அடியனுக்குப் போதித்த ஞான போதனையின் வழிகாட்டுதலின் துணையோடு தங்களுக்கு விளக்கம் அளிக்கக் காத்திருகின்றேன்.

அடியனது இந்த சமர்ப்பணத்தைத் தற்செறுக்கு என்றோ ஆணவம் என்றோ கருதவேண்டாம். தெளிவான ஞானம் கற்பிக்கப்பட்டதால் வரும் உண்மையானத் துணிவு என்றே கொள்ளவேண்டுமென்று விழைகிறேன்.

கடவுளின் அவதாரமாகக் கருதப்பட்ட ஸ்ரீராமரே தாம்பாலத்தில் இருந்த தண்ணீரில் காணப்பட்ட அந்த நிலாவின் பிம்பத்தை நிலா என்றே அறியாமையால் குழைந்தைப்பருவத்தில் பிடிக்க முயன்றபோது, நமக்கும் - நம் ஓஷோவுக்கும் அறியாமை இருக்கலாமே. அறிவுடைமையைப் போல் அறியாமையும் அனைவருக்கும் பொதுவுடைமை.

ஞானியோ, பண்டிதரோ எவராகிலும் யாவருக்கும் அறியாமை ஒருசில இடங்களில் பொதுமையாகலாம்.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 608
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Sep 21, 2016 10:40 pm

நல்லது ஐயா, விளக்கம் அளிக்க முன்வந்ததற்கு மிக்க நன்றி!

"ஆஸ்திகம் என்பது வேறு – ஆன்மீகம் என்பது வேறு. இது கூடவா அந்த மகானுக்குப் புரியவில்லை. " என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். அஷ்டவக்ரரின் மஹாகீதை பற்றிய அவரது ஹிந்தி பேச்சைக் கேட்டிருந்ததால், இது அவருக்கு நன்றாகத் தெரியும் என்று எனக்குத் தோன்றிற்று. அது தமிழில் கிடைகாததால், கிடைத்ததைக் கொடுத்தேன்.

எனக்கு "ஆன்மீக" விஷயங்களில் ஞானமும் இல்லை, அதுபற்றி விவாதிப்பதில் ஆர்வமும் இல்லை.

நன்றி ஐயா.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Sep 22, 2016 8:30 am

வணக்கம்    ஐயா !

கண்டிப்பாக நம் ஓஷோ அவர்களுக்கு ஆன்மீகம் தெரியாது என்றால் அது அவ்வாறு சொல்பவரின் அறியாமையாகத்தான் இருக்கவேண்டும்.

1. பொதுவாக ஒன்றைத் தெரிந்திருப்பது வேறு.
2. தெரிந்ததைப்பற்றித்  தெரிந்தவர்கள் பிறருக்குத் தெரிவிப்பது வேறு.

இதில் நம் ஓஷோ அவர்களை இக்கருத்தைப் பொறுத்தவரை  2வது நிலையில்தான் எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கின்றது. மனித சுபாவம் இத்தகையது.

“இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே” என்று திருமந்திரம் கூறுகிறது.  இதனைப் பக்தர்கள்  இரவும் பகலும் இல்லாத இடத்தில் திருமூலர் இருந்தார் என்பதைத்தான் இவ்வாறு தெரிவிக்கின்றார் என்பார்கள்.   ‘இரவும் பகலும் – அதாவது இருளும் வெளிச்சமும்’  இல்லாத இடம் என்று உலகத்தில் – பிரபஞ்சத்தில் ஒன்று இருக்கவே முடியாது. அவ்வாறு சொல்பவர்களுக்கே இந்த உண்மை நன்றாகத் தெரியும். ஆனாலும் சொல்வார்கள்.

இங்கே இரவு என்றால், இருள் > அஞ்ஞானம் > அறியாமை என்றும் , பகல் என்றால் வெளிச்சம்> மெய்ஞ்ஞானம்> அறிவுடைமை என்றும் பொருள்கொண்டு, திருமூலர் சொல்வது ‘ஞானமும் அஞ்ஞானமும் அற்ற நிலையில் நான் என்னை இருத்திக் கொண்டுள்ளேன் - அதாவது நான் சுத்த ஆத்மாவாகிறேன்’  என்றே சொல்கின்றார் என்று சொன்னால் அதனைப் பக்தி மார்க்கத்தில் இருக்கும் பெரும்பாலான பண்டிதர்கள்  அது ஏற்புடையதே என்றாலும் ஏற்கமாட்டார்கள். காரணம் அதுதான் மனித இயல்புக்குணம்.

இன்று கடவுளாக நாம் வழிபடும் பெரும்பாலும் எல்லாருமே நம்மைப்போலவே  பெற்றோர்களுக்குப் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள் என்றே சொல்லப்படுகின்றார்கள். ஆக மனிதன்தான் , தன் நற்குண இயல்புகளால், கடவுள்( மேலான்) நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.

ஜீவாத்மா > மகாத்மா> பரமாத்மா . இதில் நம்மில் பெரும்பாலோர் ஜீவாத்ம நிலையிலேயே தங்கிவிடுகிறோம். நாம் தெரிந்து கொண்ட வகையில்,  உலகிலேயே நமது தேசத் தந்தை ஒருவர் மட்டுமே மகாத்மா  என்ற நிலையை எட்டியவர்.  எஞ்சி இருக்கும் அனைவரும் பரமாத்ம நிலையை – கடவுள் நிலையை அடைந்தவர்கள்.

ஆன்மா என்பது ஒரு ஆற்றல்- சக்தி – அதாவது energy . ஆகையால் ஆத்மாவிற்கு அறிவு என்பது இல்லை. ஏனென்றால் ஆன்மா அறிவே வடிவானது.  அறிவே வடிவான ஒன்றிற்குத் தனியே அறிவு என்று எப்படி இருக்க முடியும் !

நெருப்பிற்குச்  சூடு என்று ஒன்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை – நெருப்பே சூடாகியதால்.

நீரால் நீரை நனைக்கமுடியாது – நீரே நனைதல் ஆவதால்.
நெருப்பைச்  சுடவே முடியாது  - நெருப்பே சூடு ஆவதால்.
காற்றை உலர வைக்க முடியாது – உலர்தலும் உலர்த்தலும் காற்றே ஆவதால்.
ஆகாயத்தை  வேறு இடத்திற்குப் பெயர்த்து வைக்கமுடியாது – ஆகாயமேஅனைத்து இடமும் ஆவதால்.
இனிப்பிற்கு இனிப்பு என்றால் என்ன என்று தெரியாது – அதுவே இனிப்பாவதால்.

இவ்வாறாகும் ஆற்றல்தான் ஆத்மா என்கின்றன வேதாந்தங்கள். இனி இதனை விட்டு விலகி ,  நம் அமுதத் தமிழை சுவைத்து மகிழலாம். ஆன்மா இருந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ இன்றைய  நமது  மனதின்   நிம்மதிக்கு அந்த  ஆராய்ச்சியால் எந்த பயனும் இருக்க வாய்ப்பில்லை.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 608
இணைந்தது : 19/06/2016

Postprajai Thu Sep 22, 2016 12:31 pm

நல்லது ஐயா, விளக்கத்திற்கு மிக்க நன்றி!

SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Thu Sep 22, 2016 3:20 pm

அன்புள்ள  ஐயா

ஜீவாத்மா > மகாத்மா> பரமாத்மா

மகாத்மாவை பற்றி  சற்று புரியவையுங்கள்

மகாத்மா என்பது ஒரு இடைச்சேர்க்கை. மகாத்மா  என்பதற்கு அறுதிட்ட விளக்கம் இருந்தால் எடுத்துக்காட்டுடன் கூறவும். சிறந்த செயல்களை , தியாகங்களை செய்தவர்களை மிகைபடுத்தி காட்ட மகாத்மா என அழைக்கலாம்.

மகா + ஆத்ம = மகாத்மா    (உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்)

மகாத்மா என்று அழைக்கப்படுவர்களை  அனைவருக்கும்  மகாத்மா என்று கருதவேண்டிய நிர்பந்தம் இல்லை. இடத்திற்கு இடம் , காலத்திற்கு காலம் மாறுபடலாம். வரையறுக்கப்பட்ட எல்லை கோடுகள் இல்லை.

ஆனால்   பரமாத்மா  அண்டமாகவும் , ஜீவாத்மா பிண்டமாகவும் கணக்கிடப்படுகிறது. (ஜீவாத்மா)  பிண்டமானது பக்குவப்பட்டு சமாதி அடையும்போது பரமாத்மா உடன் கலப்பதாகவும் (அல்லது) பரமாத்மாவின் தன்மை பெற்றுவிட்டதாகவும் கருதலாம். இதுவே கீதையில் உள்ள விளக்கம்.

பரமாத்மாவின்  சொரூபத்தை அறிய   துறவியாக மட்டுமே   இருக்க நிர்பந்தம் இல்லை அல்லது புலனடக்கம் மட்டுமே தகுதி இல்லை.

மகாத்மாவை  கடந்துதான் பரமாத்மாவை அடைய/அறிய முடியும் என்றால்  சீதையின் தந்தை ஜனகரை பற்றி விளக்கவும்.

சம்சாரத்துடன் பிறந்த நாம் சம்சாரத்தில் உழன்று அலைபாயும் ஆசா பாசங்களுக்கு  அடிமையானவனே ஜீவாத்மா. இருந்தும் இல்லாமலும் , சேர்ந்தும் ஆனால் ஒட்டாமல்  சமாதி  அடைந்த நிலையே ஞானி, அவனே  பரமாத்மாவாக   உணரப்படும்.

வணக்கம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக