ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by Ramalingam K Fri Sep 16, 2016 8:30 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”
                                           
  நூல்.

1. அன்னையும் பிதாவும் முன்னறி  தெய்வம்.

பதப்பொருள்:

அன்னை – தன்னைப் பெற்றெடுத்தத் தாய்.
பிதா – தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை.
முன் – காலத்தாலும் இடத்தாலும் முதலாவதாக இருத்திக்கொளல்.
அறி – அறிந்து , அறிகின்ற, அறியும்.
தெய்வம் – வினை விநாசகர்; துயரங்களைப் போக்குபவர்.

தெளிவுரை:

தன்னைப் பெற்றெடுத்தத் தாய்  மற்றும் தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை ஆகிய  இருவர் மட்டுமே   தம் வாழ்நாளின் முக்காலத்திலும் தமது துன்பங்களைப் போக்குபவர்கள் என்பதை ஒருவன் அறியவேண்டுவனவற்றுள் எல்லாம்  முதலாவதாக அறிந்து கொள்ள வேண்டும்.

விளக்கவுரை:

ஔவையின் ஆத்திச்சூடி  இருசீர் கொண்ட ஓரடிச் செய்யுள்- இகவாழ்விற்கான இல்லறநெறி.

ஆனால் கொன்றைவேந்தன் நான்கு சீர்கொண்ட ஓரடிச்செய்யுள்- பரவாழ்விற்கான ஞானநெறி.

உயர்விற்கேற்ப சீர்களையும் ஔவைப்பாட்டி இரட்டிப்பாக உயர்த்திய திறன் வியப்பை அளிக்கின்றது.

அறிதெய்வம்  என்பது வினைத்தொகைச் சொல் – அதாவது  காலம் கரந்த பெயரெச்சம். அச்சொல் அறிந்த தெய்வம், அறிகின்ற தெய்வம், அறியும் தெய்வம் என முக்காலத்திற்கும் பொருந்துவது.

“மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆச்சார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ”

என்னும் தைத்ரிய உபநிஷத் வேத வாக்கியம்  ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.


ஒருவனது துயரத்தை எக்காலத்திலும் தீர்க்கவல்லவர்கள் அவனது பெற்றோர்கள்தான் என்பது யாவரும் முதன்மை அறிவாகக் கொள்ளவேண்டும் என்பது கருத்து.

காலம், பணம், ஆற்றல் ஆகியனவற்றை வீணடித்து விடியலைத்
தேடிக்கொண்டிருக்கும் இன்ன பிற எதுவும் ஒருவனது துயரத்தை எக்காலத்திலும் தீர்க்கவல்லவைகள் அல்ல என்பது மறைபொருள்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down


நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by Ramalingam K Sun Sep 25, 2016 10:15 pm


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”


1. ஐயம் புகினும் செய்வன செய்

பதப்பொருள்:

ஐயம் – தங்குதடை.
புகுதல் – ஏற்படுதல்; உண்டாதல்.
செய்வன- விதிக்கப்பட்டவை.
செய்தல் –செய்து முடித்தல்.

தெளிவுரை:

உலகில் எது ஒன்றினுடைய, குற்றமற்றதாகும் சாதக பாதகங்களை நன்கு ஆலோசித்தபின் அதற்கான செய்கை தனக்கும் பிறருக்கும் குற்றமற்ற நன்மையையே பயக்கவல்லதும் அறநெறிக்கு உட்பட்டதுமானால், அதனைச் செய்து முடிக்கவேண்டும் என்று தீர்மானித்து எடுத்துக் கொண்ட முயற்சிகளில் தங்குதடை ஏற்பட்டாலும் அவைகளைப் பொருட்படுத்தாது அதனைச் செய்து முடிக்கவேண்டும்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by T.N.Balasubramanian Mon Sep 26, 2016 5:45 pm

பெரிய அரிய விஷயங்களையும்,
சுருங்க கூறி விளங்க வைக்கிறார் ஒளவை .

நன்றி ,
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by Ramalingam K Tue Sep 27, 2016 6:57 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

10. ஒருவனைப் பற்றி ஓரகத் திரு .

பதப்பொருள் :

ஒருவன் - ஒப்பற்றவன்; பரம்பொருள்.
பற்றுதல் – ஏற்றுக் கொள்ளுதல்.
அகம் – அந்தராத்மா.
இரு – வாழ்தல்.

தெளிவுரை:

உன் உடம்பில் இருப்பதும் அவ்வுடலை இயக்குவதுமாகும் அந்தராத்மா எனப்படும் ஜீவாத்மா என்பது ஒப்பற்றப் பரம் பொருளாகும் பரமாத்மாவின் அம்சம் என்பதை அறிந்துகொண்டு, தானும் (ஜீவாத்மனும்)அந்த பரமாத்மாவை அடையும் செய்கையாகிய ஆன்மவிடுதலையைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மறுபிறவிக்குக் காரணமாகும் பாவம்-புண்ணியம் ஆகிய இரு விளைவுகளை உண்டாக்கும் செயல்களைச் செய்வதிலிருந்து விலகி வாழ்ந்து கொண்டிரு.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by T.N.Balasubramanian Tue Sep 27, 2016 8:43 am

"ஒருவனைப் பற்றி ஓரகத் திரு ."

அந்த நாலு வார்த்தையில் இவ்வளவு உள்ளர்த்தமா ? நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by Ramalingam K Wed Sep 28, 2016 8:03 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி

11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.

பதப்பொருள்:

ஓதுதல் - கற்றலும் கற்பித்தலும் ஆகும் நெறி.
நன்று- சிறப்பு ; இன்பம் தருவது.
வேதியர் – கல்வியறிவில் சிறந்தவர்.
ஒழுக்கம்- நடத்தை.


தெளிவுரை :

உலகில் பற்பல வகையான கலைகளைப் பற்றிய அறிவைக் கற்றலும் கற்பித்தலும் ஆகும் நெறியைக் கடைப்பிடிக்கும் கல்வியறிவாளர்கள்,

தாமும் அவ்வகை அறிவால் உண்டாகும் நன்நெறிகளைத் தத்தம் அன்றாட வாழ்வின் நடைமுறைகளில் கடைப்பிடித்து வாழ்தல் என்னும் நன்நடத்தை ,

அத்தகையோர்களுக்கும் அவர்களால் கற்பிக்கப்படுபவர்களுக்கும் அவ்வாறு கற்பிக்கப்படும் கல்வி அறிவிற்கும் உயர்வையும் சிறப்பையும் தரும்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்” – குறள் 664

சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

“சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும்
சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்
எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள்
எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார் . . . . .. ” - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

ஆகியன ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by Ramalingam K Thu Sep 29, 2016 6:50 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் )

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

(ஔவையார் அருளியது)

“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

12.ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு

(ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு)

பதப்பொருள்:

ஔவியம் – கோபம்
பேசுதல் – சத்தமிடுதல்
ஆக்கம் – செல்வம்
அழிவு - தாழ்ச்சி

தெளிவுரை :

பிறரிடம் கோபப்பட்டு சத்தமிடுதல் தன்னுடைய அனைத்து வகையான செல்வங்களுக்கும் தாழ்ச்சியை உண்டாக்கும்.
“. . . . . . ..தன்னையே கொல்லும் சினம் ” - குறள் .305
“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி . . . . . .” - குறள் .306

விளக்கம்:

அழுக்காறு(பொறாமை) , அவா (பேராசை) , வெகுளி(கோபம்), இன்னாச்சொல்( வன்சொல்) ஆகிய நான்கும் மனிதனின் மிகப் பலம் வய்ந்த பகையாவன. அவற்றுள் வெகுளி என்னும் ஔவியம் இருப்பன அனைத்திலும் மிகு கொடுமையான பகை என்பது கருத்து.கோபம் அனைத்துவகையான செல்வங்களையும் அழித்து எதனையும் இல்லாததாக்கி விடும்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by T.N.Balasubramanian Thu Sep 29, 2016 7:03 am

ஒளவியம் என்றால் கோபமா ? இல்லையே !

ஒளவியம் பேசேல் என்றால் ..............

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by M.Jagadeesan Thu Sep 29, 2016 7:13 am

T.N.Balasubramanian wrote:ஒளவியம் என்றால் கோபமா ? இல்லையே !

ஒளவியம் பேசேல் என்றால் ..............

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஒளவியம் என்றால் பொறாமை .

ஒளவியம் பேசேல் என்றால் பொறாமையான வார்த்தைகளைப் பிறரிடம் பேசாதே என்று பொருள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by Ramalingam K Thu Sep 29, 2016 8:38 am


ஐயா !

ஔவியம் என்பதற்கு அழுக்காறு; பொறாமை; வஞ்சகம், மனக்கோட்டம், எரிச்சல், கோபம் என பல பொருட்கள் உள்ளன. அதில் பொறாமையே பெரும்பாலோர் பொதுவாக கொள்ளும் பொருள்.

ஔவியம் என்றால் கோபம் என்றும் பொருள் அகராதியில் சிறாப்பாகவே உள்ளது என்பது அடியனேனின் பணிவான சமர்ப்பணம்

பொறாமை கொள்வதாலோ அதைப் பிறரிடம் பேசுவதாலோ பெரும்பாலும் யாருக்கும் தொல்லை வெகுவாக இருக்காது.

அது கோபமாக உருவெடுக்கும்போதுதான் அழிவே ஆரம்பம் ஆகிவிடுகிறது.

மகாபாரதத்தில் துரியோதனனுக்கும் அவன் அப்பா த்ருதராஷ்டிரனுக்கும் மாமன்னன் பாண்டுவின்மீதும் அவனது பிள்ளைகள் பாண்டவர்கள் மீதும் இருந்த பொறாமைதான் கோபமாக வெளிப்பட்டுக் குருக்ஷேத்ர போரில் அனைவரின் அழிவிற்கும் காரணமானது நாம் அறிந்ததே.

ஆகவே பொறாமை என்றால் கோபம் என்றும் பொருளாகிறது.

பொறாமை என்பது விதை – கோபம் என்பது விருட்சம்.

விதையும் விருட்சமும் ஒன்றுதானே - ஒன்றிலிருந்து பிறிது உருவாவதால்.

ஆக நம் ஔவை ஔவியம் என்று கோபத்தைக் கூறுகிறார் என்பதே சாலப் பொருந்துவதாக இருக்கும் என்பது அடியனனின் கருத்து.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by T.N.Balasubramanian Thu Sep 29, 2016 1:45 pm

ஒளவியம் என்றால் கோபம் என்று நான் அறிந்தவரை எந்த தமிழ் அகராதியிலும் உள்ளதாக தெரியவில்லையே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்   - Page 2 Empty Re: நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum