புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
75 Posts - 40%
T.N.Balasubramanian
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
2 Posts - 1%
prajai
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
2 Posts - 1%
சிவா
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
441 Posts - 47%
heezulia
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
30 Posts - 3%
prajai
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்

Page 1 of 2 1, 2  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 12:27 pm

ஸ்ரீ குருவே நம:
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்
(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்)

வடலூர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் – மானுட சமயங்களைக் கடந்த ‘சத்’ நெறியாளர். அவர் உலக மக்களுக்குக் கண்பிக்க விழைந்தது  ஒளியாகிய அறிவே வடிவான பரம்பொருள் –  உலக ஜீவராசிகள் அனைத்தும் அறிவைக் கொண்டு வாழ்தலால் அது சமயப் பொதுமை .ஆகையால் அருட்பா அகவல்
ஈகரையில் இலக்கியப் பகுதியில் பதிவிடம் காண்கின்றது.  

தேமதுரத் தமிழில் பரம்பொருளை அழைத்து - வாழ்த்தி மகிழும்  வடலூர்  அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் அருளிச்செய்துள்ள “திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்”  , உண்மையும் - குழப்பம் இல்லாததும் - உயர்ந்த தத்துவங்களைக் கொண்டதுமான  அழகிய  கருத்துக்களாலாகும் அற்புத மெய்ஞானத் தெளிவு.  அதன் முழு விளக்கத்தையும் எளிய தமிழில் சிக்கல் இல்லாமல் அறிவுப் பூர்வமாக அறிந்து மகிழ்தலே இந்த ‘அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்’ பகுதி நமது ஈகரை வலைதளத்தில் உலகத் தமிழ் உறவுகளுக்காக பதிகின்றோம்.

யாம் பெற்ற இன்பம் முதலில் நம் தமிழ் உறவுகள் பெறட்டும். பின்பு உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டு இவ்வையகமும் பெறட்டும்.

“அருட்பெருஞ்ஜோதி” என்றால் ,  உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருள் என்று பொருள்.

“அகவல்” என்றால்  அழைத்தல், கூவுதல்; மயிலின்குரல்; இசைத்தல்; பாடுதல்; கூத்து; கூத்தாடல்; ஆசிரியப்பாவுக்குரியஓசை; ஆசிரியப்பா என்று பொருள்.

திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல் – 1596 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் பரம்பொருளை அழைத்தல் என்னும் பொருளது.

வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் பதியில் உள்ள திருமாளிகையில் ஒரே இரவில் வள்ளலாரால்  எழுதி நமக்காக வழங்கப்பட்டதாக சொல்லப்படுவது.

யோகமும் தவமும் கூடிய மெய்ஞான நூற்பாக்கள் இவை.

நாள் ஒன்றுக்கு நான்கு அடிகளாக அறிந்து கொள்ளலாம்.

உருவமற்ற பரம்பொருளோடு கலந்து அதில் தானும் கரைந்து போகும் வள்ளலாரின் சீர்மையும் சிறப்பும் யாவரையும் நெகிழ வைப்பன.

இனி திருவருட்பா – அருட்பெருஞ்ஜோதி அகவல் :

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 2
அருசிவ நெறிசார் அருட்சிவ நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி 4

பதப் பொருள் :

அருள் -  தொடர்பு  பற்றாதும் கைம்மாறு கருதாதும்  எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகச் செல்லும் இரக்க அன்பு; தயை; கருணை.
பெரும் – அளவிட முடியாத
ஜோதி – சோதி – ஒளி; ஞானம்; பரம்பொருள்
சிவம் - மங்களம்; உயர்வு; களிப்பு; நன்மை; முத்தி; பரம்பொருளின்அருவுருநிலை.
நெறி – மார்க்கம்; வழி; ஒழுங்கு.
சார்தல் - பொருந்தியிருத்தல்; கலந்து இருத்தல் ; ஒத்து இருத்தல்.
நிலை – உறுதியாய் நிலைத்து இருத்தல்.
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; விதிப்படிஒழுகுதல்.
பதி - மூத்தோன்; குரு; பரம்பொருள்.

பதவுரை :

அருட்பெருஞ்ஜோதி  
- உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

அருசிவ நெறிசார்
- நீ  யாவைக்கும் இரக்கங் காட்டுதல் என்னும் உயர்வு உடையவனாய் எக்காலத்திலும்  இருக்கிறாய்.

அருட்சிவ நிலைவாழ்
- அதுபோலவே நீ  யாவைக்கும் கருணையுடன் நன்மையைக் கொடுப்பதில் எக்காலத்திலும் உறுதியாய் நிலைத்து இருக்கிறாய்.

அருட்சிவ பதியாம்
- அப்படிப்பட்ட நீயே  தயையின் இருப்பிடமாக  உலகம் யாவற்றிற்கும் ஆதியாகவும் விளங்குகின்றாய்.

தெளிவுரை:

இப்பாடலில் உயர்திணை என்னும் உயரிய நிலையில் வாழும் மனிதனின்:

சிறுமூளையின் இயக்கமாகும் மனத்தில் அறிவாக விளங்கும் பரம்பொருளை ஒருமுறை அருட்பெருஞ்ஜோதி என்றும்,  

பெரு மூளையின் இயக்கமாகும் புத்தியில் அறிவாக விளங்கும் பரம்பொருளை  ஒருமுறை அருட்பெருஞ்ஜோதி என்றும்,

முகுளத்தின் இயக்கமாகும் சித்தத்தில் அறிவாக விளங்கும் பரம்பொருளை  ஒருமுறை அருட்பெருஞ்ஜோதி என்று மூன்று முறையும் ,  

மேலும் அஃறிணை உயிர்களாகும் ஏனைய  உயிர்களிடத்தில் அறிவாக  விளங்கும் பரம்பொருளை  அருட்பெருஞ்ஜோதி என்று மீண்டும் ஒருமுறையுமாக  மொத்தம் நான்கு முறை  பரம்பொருள் ,  அருட்பெருஞ்ஜோதி என்று விளிக்கப்பட்டுள்ளது.

உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

நீ  யாவைக்கும் இரக்கங் காட்டுதல் என்னும் உயர்வு உடையதாய் எக்காலத்திலும்  இருக்கிறாய். அதுபோலவே நீ  யாவைக்கும் கருணையுடன் நன்மையைக் கொடுப்பதில் எக்காலத்திலும் உறுதியாய் நிலைத்து இருக்கிறாய்.

அப்படிப்பட்ட நீயே  தயையின் இருப்பிடமாக  உலகம் யாவற்றிற்கும் ஆதியாகவும் விளங்குகின்றாய்.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 4:47 pm

பதிவு எண் # 1 கும் 2 கும் என்ன வித்தியாசம் ராமலிங்கம் அவர்களே ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 4:52 pm

ஐயா இரண்டும் ஒன்றேயாம், இரண்டாவதாக தவறுதலாக சொடுக்கப்பட்டுவிட்டது. அதனை நீக்க அடியனுக்கு விளங்கவில்லை.
தவறுதலுக்கு வருந்துகிறேன்.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 01, 2016 4:34 pm

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்
(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்)

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின்று ஒங்கிய அருட்பெருஞ்ஜோதி - 6
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி - 8

பதப் பொருள் :

ஆகமம் – வேதசாத்திரங்கள்; வேதாந்தங்களில் ஆராய்ந்து தெளிந்தது.
முடி – முடிவு.
ஆரணம் – வேதம்.
இகம் - இம்மை; இகலோக வாழ்வு.
பரம் – வீடுபேறு; பிறவிநீக்கம்;தொடர்ச்சி.
அகம் – மறைவு; உள்ளே.
அருட்பெருஞ்ஜோதி – உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

பதவுரை :

ஆகம முடிமேல் - வேதாந்தங்களில் ஆராய்ந்து தெளிந்ததின் முடிவாகவும்,
ஆரண முடிமேல் – வேதம் அனைத்திலும் கூறப்பட்டதின் முடிவாகவும்,
ஆகநின்று ஒங்கிய – இருப்பதாக விளங்கி உயர்ந்து சிறந்த
அருட்பெருஞ்ஜோதி - உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

இகநிலைப் பொருளாய் – இப்பிறவியில் என் இகலோக வாழ்வுக்காகும் அனைத்தும் நீயே.
பரநிலைப் பொருளாய் – என்னைப் போலவே இதர எல்லா உயிரினங்களின் தொடர்ந்த வாழ்வுக்காகும் அனைத்தும் நீயே
அகமறப் பொருந்திய - இவ்வாறாக நீ ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றிலும் பொருந்தி விளங்குகின்றாய்.
அருட்பெருஞ்ஜோதி - உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

தெளிவுரை:
உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

நீயே வேதாந்தங்களில் ஆராய்ந்து தெளிந்ததின் முடிவாகவும், வேதம் அனைத்திலும் கூறப்பட்டதின் முடிவாகவும் இருப்பதாக விளங்கி உயர்ந்து சிறந்திருக்கிறாய்.

நீயே இப்பிறவியில் என் இகலோக வாழ்வுக்காகும் அனைத்துமாகவும் , என்னைப் போலவே இதர எல்லா உயிரினங்களின் தொடர்ந்த வாழ்வுக்காகும் அனைத்துமாகவும் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றிலும் பொருந்தி விளங்குகின்றாய்.

(இப்படிப்பட்ட உன்னை என்னவென்று வியப்பேன் ! )

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 1:47 pm

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்

(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்)

ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி -10
உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி -12

பதப் பொருள் :

ஈனம் – இழிநிலை; குறைபாடு; கீழ்மை, தாழ்வு.
இகம் – இகம் - இம்மை; இகலோக வாழ்வு.
பரம் – வீடுபேறு; பிறவிநீக்கம்;தொடர்ச்சி.
மேல் – மேலிடம்; அதிகப்படி; தலைமை; மேன்மை.
பொருள் – சொற்பொருள்; உண்மைக்கருத்து; தத்துவம்; மெய்ம்மை; அறிவு; கொள்கை; பயன்.
ஆனல் – ஆனதால் ; ஆகியதால்
நிற்றல் – நிலைத்து இருத்தல்
ஓங்குதல் – உயர்தல்; வளர்தல்; பரவுதல்; பெருமையடைதல்; பெருகுதல்.
உரை – சொல்; பொருள்விளக்கம்.
மனம் – நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்.
அரைசு – அரசு –அரசாட்சி.
அருட்பெருஞ்ஜோதி – உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

பதவுரை :

இகபரத்து ஈனம் இன்றி – இப்பிறவியில் நானும் பிறரும் வாழும் வாழ்க்கைக்கு எவ்வித குறைவும் இல்லாமல்

இரண்டின் மேற்பொருளாய் – நானும் பிறரும் வாழும் வாழ்க்கையாகும் இரண்டிலிருந்தும் மேம்பட்ட மெய் அறிவாகும் தத்துவமாக நீயே

ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி - நிலைத்து நிற்பதால் நீயே பெருமையுடையதாகிறாய்.

ஒரு பெரு வெளி- இந்தப் பிரபஞ்சத்தினுடைய பெரிய வெளி முழுமையும் ஒன்றாகச் சேர்த்து
உரைமனங் கடந்த மேல் – கற்பனையிலும் எண்ணிப்பார்க்கவும், சொல்லாலும் பொருள்விளக்கம் கொடுக்க இயலாத வகையிலும் இருந்தும் அவை அனைத்திற்கும் மேலாய் விளங்கி
அரைசுசெய் தோங்கும் – நீயே நிர்வகித்துக் கொண்டு உயர்ந்து விளங்குகின்றாய்.

அருட்பெருஞ்ஜோதி - உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே

தெளிவுரை:

உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

இப்பிறவியில் நானும் பிறரும் வாழும் வாழ்க்கையில் அவரவர் விதிப்படி சிறிதளவும் எவ்வித குறைவும் இல்லாமல் அவர்களுடைய சுக துக்கங்களை அனுபவிக்க வைத்து, எங்கள் வாழ்க்கையாகும் இரண்டிலிருந்தும்(இகம்-பரம்) மேம்பட்ட மெய் அறிவாகும் தத்துவமாக நீயே நிலைத்து நிற்பதால் நீ யாவற்றிலும் பெருமையுடையதாகிறாய்.

இந்தப் பிரபஞ்சத்தினுடைய பெரிய வெளி முழுமையும் ஒன்றாகச் சேர்த்துக் கற்பனையிலும் எண்ணிப்பார்க்கவும், சொல்லாலும் பொருள்விளக்கம் கொடுக்க இயலாத வகையிலும் இருந்தும் அவை அனைத்திற்கும் மேலாக விளங்கி நீயே நிர்வகித்துக் கொண்டு உயர்ந்து விளங்குகின்றாய்.
(இப்படிப்பட்ட உன்னை என்னவென்று வியப்பேன் ! )

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 7:22 am

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்

(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்)

ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி 14
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி 16

பதப் பொருள் :

ஊக்கம் – உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; உண்மை.
உணர்ச்சி - உணர்வு; அறிவு; மனம்.
ஒளி – சோதி; விளக்கம்; பார்வை; அறிவு; மதிப்பு; அழகு; நன்மதிப்பு; புகழ்.
ஆக்கை – யாக்கை – மனநெகிழ்வு(கசிவறு மனத்தினேனும் - தணிகைப்பு. அவையடக். 2); சிறப்பு .
ஆக்கம் – கைகூடுகை; உண்டுபண்ணுகை.
அருள் –தொடர்பு பற்றாதும் கைம்மாறு கருதாதும் எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகச் செல்லும் இரக்க
இருள் – அறியாமை ; அஞ்ஞானம்.
கடத்துதல் – கடக்கச்செய்தல்; செலுத்துதல்; வேறிடம்கொண்டுசெல்லல்.
அல்லல் –துன்பம்
நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; அழித்தல்; அகற்றுதல்; மாற்றுதல்.
அருட்பெருஞ்ஜோதி – உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

பதவுரை :

அருட்பெருஞ் ஜோதி - உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

ஊக்கமும் உணர்ச்சியும்- வாழ்வில் முயற்சிக்கு ஆதாரமாகவும், அம்முயற்சியால் கிடைக்கும் அனுபவ அறிவாகவும்

ஒளிதரு மாக்கையும் – முயற்சி, அனுபவம் ஆகிய இரண்டும் அவரவர் விதியின்படியே என்னும் விளக்கமாகவும்,.

ஆக்கமம் அருளிய - அவ்விதியை விளங்கிக் கொள்ளும் மனதின் நெகிழ்ச்சியாகவும் ஆவது நீயே !

என் அல்லலை - என்னுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணமாவதை;

எல்லையில் பிறப்பு- இறப்பு எனும் இருங்கடல் - விரிந்து பரந்ததும் மிகவும் ஆழமாவதும் ஆகிய கடல்போல்

எல்லையிட்டு குறிப்பிட முடியாத எண்ணிக்கையில் விதியாய் அமைந்துள்ள அஞ்ஞானம் என்னும் அறியாமையால் உண்டாகும் பிறப்பு இறப்புகளை

நீக்கிக் கடத்திய – விடுவித்து வேறிடமாகிய பிறவா நிலைக்குக் கொண்டுசென்று ஆன்ம முக்தியை அளிவதும் நீயே.

அருட்பெருஞ்ஜோதி - உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே

தெளிவுரை:

உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

வாழ்வின் முயற்சியாகவும், அம்முயற்சியால் கிடைக்கும் அனுபவ அறிவாகவும், மற்றும் முயற்சி, அனுபவம் ஆகிய இரண்டும் அவரவர் விதியின்படியே என்னும் விளக்கமாகவும்,அவ்விதியை விளங்கிக் கொள்ளும் மனதின் நெகிழ்ச்சியாகவும் ஆவது நீயே !

என்னுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணமாவதை, விரிந்து பரந்ததும் மிகவும் ஆழமாவதும் ஆகிய கடல்போல் எல்லையிட்டு குறிப்பிட முடியாத எண்ணிக்கையில் விதியாய் அமைந்துள்ள அஞ்ஞானம் என்னும் அறியாமையால் உண்டாகும் பிறப்பு இறப்புகளில் இருந்து விடுவித்து வேறிடமாகிய பிறவா நிலைக்குக் கொண்டுசென்று ஆன்ம முக்தியை அளிப்பதும் நீயே.

(இப்படிப்பட்ட உன்னை என்னவென்று வியப்பேன் ! )

கருத்துரை :

உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகப் பரம்பொருள் திகழ்கிறது.

மனிதவாழ்வு, வாழ்விற்கான முயற்சி, முயற்சியின் விளைவாய்க் கிடைக்கும் பலன், அப்பலனால் ஏற்படும் மன நெகிழ்ச்சி, எண்ணிக்கையில் அளவிட முடியாத பிறப்பு-இறப்பு என்னும் பிறவிச் சுழற்சியால் உண்டாகும் துயரங்கள் ஆகியவற்றிலிருந்து ஆத்மாவை விடுவித்து பிறவா நிலை என்னும் ஆன்ம முக்தியை அளிப்பது பிரபஞ்சப் பேராற்றலாகும் பரம்பொருளே என்பது கருத்து.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 7:42 am

அறிவோம் அருட்பெருஞ்ஜோதி அகவல்
(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா)

ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி -18
ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி -20

பதப் பொருள் :

ஏறுதல் – உயர்தல், மேலேசெல்லுதல் ;ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல்.
நிலை - நிலைமை; இடம்.
ஆறு – நதி; வழி; பக்கம்; சமயம்; அறம்; விதம்; இயல்பு.
ஐயம் – சந்தேகம்; ஐயக்காட்சி; குற்றம்.
திரிபு – வேறுபாடு; தோன்றல், திரிதல் ; முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீதஉணர்ச்சி.
உடம்பு – மனம்.
அறுத்தல் - நீக்குதல்; இல்லாமற்செய்தல்.
அருட்பெருஞ்ஜோதி – உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

பதவுரை :

ஏறா நிலைமிசை ஏற்றி என்தனக்கே – அஞ்ஞானிகளால் உயரமுடியாத உயர்ந்த இடத்தில் என்னை ஏற்றிவைத்தாய்; மேலும் எனக்கே

ஆறு ஆறு காட்டிய அருட்பெருஞ் ஜோதி- மற்றவர்களையும் அந்திலைக்கு நான் அவர்களை உயர்த்துமாறு இயல்பான வழியையும் காட்டினாய்.

ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள் - எனது மனத்தினுள் இருந்த எது நித்தியம் எது அநித்தியம் என்னும் மனக்குழப்பதையும் அவைகளைப் பிழையாக உணர்ந்துகொள்ளும் தன்மையையும் என்னிடமிருந்து நீக்கி என்னிடம் இல்லாமல் செய்துவிட்டாய்.

ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – உன்னுடைய அந்த அற்புத செய்கையால் நான் என் ஐயக்காட்சி என்னும் சந்தேகங்கள் நீங்கி தெளிவு பெற்றேன்.

அருட்பெருஞ்ஜோதி - உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே

தெளிவுரை:

உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே!

அஞ்ஞானிகளால் உயரமுடியாத உயர்ந்த இடத்தில் என்னை ஏற்றிவைத்தாய்; மேலும் எனக்கே
மற்றவர்களையும் அந்திலைக்கு நான் அவர்களை உயர்த்துமாறு இயல்பான வழியையும் காட்டினாய்;

இந்த உலகில் காணப்படுவனவற்றுள் எது நித்தியம், எது அநித்தியம் என்று புரிந்து கொள்ள இயலாத வகையில் எனது மனத்தினுள் இருந்த குழப்பதையும் அவைகளைப் பிழையாக உணர்ந்துகொள்ளும் தன்மையையும், என்னிடமிருந்து நீக்கி என்னிடம் அவைகள் இல்லாமல் செய்துவிட்டாய்;

உன்னுடைய அந்த அற்புத செய்கையால் நான் என் ஐயக்காட்சி என்னும் சந்தேகங்கள் நீங்கி தெளிவு பெற்றேன் (இப்படிப்பட்ட உன்னை என்னவென்று வியப்பேன் ! ).

கருத்துரை :

உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகப் பரம்பொருள் திகழ்கிறது. அதுவே:

ஜீவன்முக்தி என்னும் பற்றற்ற உயர்ந்த நிலையை மனிதர்களுக்கு அளிக்கின்றது.

மேலும் மற்றவர்களையும் அந்திலைக்கு உயர்த்துமாறு இயல்பான வழியையும் ஸ்ரீகுருதேவர் மூலமாய்க் காட்டிவைக்கிறது;

இந்த உலகில் காணப்படுவன வற்றுள் எது நித்தியம் எது அநித்தியம் என்று புரிந்து கொள்ள இயலாத வகையில் மனக்குழப்பத்தில் இருப்பவர்களுடைய குழப்பத்தையும் நீக்குகிறது;

நித்திய அநித்தியங்களைப் பிழையாக உணர்ந்துகொள்ளும் தன்மையையும் மனிதர்களிடமிருந்து நீக்கி அவர்களிடம் அவ்வாறான பிழைபட புரிந்து கொள்ளும் தன்மையை இல்லாமல் செய்துவிடுகிறது;

தன்னுடைய அந்த அற்புத செய்கையால் மனிதர்கள் தத்தம் ஐயக்காட்சி என்னும் சந்தேகங்கள் நீங்கி தெளிவு பெறுகிறார்கள் என்பது கருத்து.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2016 12:24 pm

Ramalingam K wrote:ஐயா இரண்டும் ஒன்றேயாம், இரண்டாவதாக தவறுதலாக சொடுக்கப்பட்டுவிட்டது. அதனை நீக்க அடியனுக்கு விளங்கவில்லை.
தவறுதலுக்கு வருந்துகிறேன்.
[You must be registered and logged in to see this link.]

நீக்கப்பட்டுவிட்டது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 1:18 pm

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் 1571444738

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 7:10 am

அறிவோம் அருட்பெருஞ்ஜோதி அகவல்
(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா)

ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி -22
ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி -24

பதப் பொருள் :

ஓதுதல் – படித்தல்; கற்பித்தல்.
உணர்தல் – அறிதல்; நினைதல், தெளிதல்; துயிலெழுதல்; பகுத்தறிதல் .
ஒளி – விளக்கம்; அறிவு.
ஆதாரம் – பற்றுக்கோடு; ஆதரவுச்சாதனம்; மூலம்.
அருட்பெருஞ்ஜோதி – உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

பதவுரை :

ஒன்றென விரண்டென வொன்றிரண் டென – உலக மக்கள் தத்தம் அறியாமையால் ,ஒரு சாரார் நீ ஒருவனே என்றும் ஒன்றேயானவன் என்றும் சொல்கிறார்கள். இன்னொரு சாரார் நீ இரண்டுதன்மையன் என்கிறார்கள். வேறுசிலரோ நீ ஒன்றும் இரண்டும் ஆனவன் என்று பேசுகிறார்கள்.

இவையன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி – ஆனால் நீயோ இவையாவும் அல்லாமல் நீயே எல்லாமும் ஆனவனாய் விளங்குகிறாய் என்பதை அவர்கள் அறிவதில்லையே.

ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே – மேலும் எவராலும் கற்பிக்கப்படாமலேயே நான் உன்னைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வண்ணம் எனக்கு நீயே மெய்ஞானத் தெளிவை அளித்தாய்.

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி- அதோடு எங்கும் நிறைந்த உன்னை எப்போதும் பற்றிக்கொண்டு நான் ஆன்ம விடுதலையடைய எனக்குப் பற்றுக்கோடாகவும் நீயே அமைகிறாய்..

அருட்பெருஞ்ஜோதி - உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே

தெளிவுரை:

உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே!

உலக மக்கள் தத்தம் அறியாமையால் , ஒரு சாரார் நீ ஒருவனே என்றும் ஒன்றேயானவன் என்றும் சொல்கிறார்கள். இன்னொரு சாரார் நீ இரண்டுதன்மையன் என்கிறார்கள். வேறுசிலரோ நீ ஒன்றும் இரண்டும் ஆனவன் என்று பேசுகிறார்கள்.
ஆனால் நீயோ இவையாவும் அல்லாமல் நீயே எல்லாமும் ஆனவனாய் விளங்குகிறாய் என்பதை அவர்கள் அறிவதில்லையே.
மேலும் எவராலும் கற்பிக்கப்படாமலேயே நான் உன்னைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வண்ணம் எனக்கு நீயே மெய்ஞானத் தெளிவை அளித்தாய்.
அதோடு எங்கும் நிறைந்த உன்னை எப்போதும் பற்றிக்கொண்டு நான் ஆன்ம விடுதலையடைய எனக்குப் பற்றுக்கோடாகவும் நீயே அமைகிறாய்.
(இப்படிப்பட்ட உன்னை என்னவென்று வியப்பேன் ! ).

கருத்துரை :

உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகப் பரம்பொருள் திகழ்கிறது. அதுவே:
உலக மக்களின் அறியாமையால் பரம்பொருள் ஒருவனே (அத்வைதம்) என்றும், இரண்டு தன்மையன்(த்வைதம்) என்றும், ஒன்றும் இரண்டும் ஆனவன் (விசிஷ்டாத்வைதம்) என்றும் பேசப்படுகிறது.
ஆனால் இவ்வுலகில் இருப்பவை யாவும் பரம்பொருளே என்பதை எவரும் அறிவதில்லை.
மேலும் எவராலும் கற்பிக்கப்படாமலேயே பரம்பொரும் தன்னை அடையாளம் காட்டி விளங்குவதை அறிந்து கொள்ளும் பக்குவத்தையும் அது அனைவருக்கும் அளித்துள்ளது.
அதோடு அதனையே எப்போதும் பற்றிக்கொண்டு உலகமக்கல் ஆன்ம விடுதலையடைய அவர்களுக்கு ஆதாரமாகவும் விளங்குகிறது என்பது கருத்து.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக