ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

2 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

request ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Wed Sep 14, 2016 7:24 am

தெரிந்து கொள்வோம்  தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)
                                          ஔவைக்குறள்  
                                 (ஔவையார் அருளியது)
                                    வீட்டு நெறிப்பால்
                                1.பிறப்பின் நிலைமை.


4.            தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
               உருவத்தா லாய பயன். (1-04)

தெளிவுரை :
உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு  ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு  வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும்  மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் ஆவன.


பதப்பொருள் :
தருமம் – அறம்( தர்மம்).
பொருள்- பொருள் (அர்த்தம்).
காமம் – இன்பம ( காமம்).
வீடு – வீடுபேறு ( மோட்சம்).
உருவம் –உடல் ; பிறவி.
ஆய் – நுண்மை; அழகு.
பயன் – பலன்.

பதவுரை :

தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
- உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு  ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு   வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும்;  
உருவத்தா லாய பயன்
- மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் ஆவன.

விளக்கவுரை:
 மனிதப் பிறவியின் நோக்கமும் ஆக்கமும் இக்குறட்பாவில் உபதேசமாகின்றன.  அன்றாட மானுட வாழ்வை யோசித்திப் பார்த்தால் அது உண்பதும் உறங்குவதுமாக முடிகிறது என்பதுதானே உண்மை. உலக உயிர்கள் அத்தனையின் அன்றாட வாழ்வின் முடிவும் கூட அதேதான்.  
பிறவிகளில் அரியதாக சொல்லப்படும் மனிதனுக்கு இந்த அன்றாட முடிவைத் தவிறவும்  அவனது பிறவியின் நோக்கமும் ஆக்கமும் வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் மனிதப் பிறவி எவ்வாறு அரியதும் உயர்வும் உடையதாகும்!  

நாடு, மதம், மொழி, இனம், காலம்  சமயம், ஆகிய அனைத்தையும் கடந்த உலக மானுடம் முழுமைக்குமாக ஆக்கி வைக்கைப்பட்டுள்ள ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களும் அவற்றின் உபநிஷதங்களும் மானுடப் பிறவியின் நோக்கமும் ஆக்கமும் புருஷார்த்தம் என்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் முயன்று அடைய வேண்டியதே புருஷார்த்தம்- அதாவது அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

இந்நான்கு  நெறிகளின் ஒழுகலாறுகளால் மனிதனுக்கு இவ்வுலகில் வாழும்போதும் இன்பம் – வாழ்விற்குப் பின் மீண்டும் பிறவாமை அமைவதால் அப்போதும் இன்பம். இதையே நம் ஔவைக் குறள் அழகுற விளக்குகின்றது.

உலக மானுடத்திற்கான நான்மறைகள் சமயச் சாயம் பூசப்பட்டு, நமது  பாரததேசத்தின் உடைமை ஆக்கப்பட்டமை  ஒரு மாபெரும் மானுட விபத்து. அவற்றின் கருத்துக்களை அறிவுப்பூர்வமாக மொழிபெயர்க்காமல் சமயநோக்கோடு மொழி பெயர்த்தமையால், உலகில் இதர சமயத்தவரால் அவற்றில் பொதிந்திருக்கும் அற்புத ஞானம் புறக்கணிக்கப் படுகின்றது என்பதே ஒரு கசக்கும் உண்மை.

உலகில் மனிதனின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் அனைத்து உலக மக்களுக்கும் ஆகும்போது, நமது வேதகால ஞானிகளின் மெய்ஞ்ஞானத் தேடலின் முடிவாகிய நான்மறைகளை நாம் நமது உடைமையாக்கிக் கொண்டது போன்ற ஒரு தோற்ற மாயை ஏற்படுத்தப்பட்டமை ஒரு  மானுட பாவச் செயல். அச்செயலின் விளைவாய், வேதங்களின் பரந்த பயன் சுருக்கப்பட்டு, வேதக் கருத்துக்கள் மானுடம் முழுமைக்குமாகப் பயன்படாமல் போவதால்  வேதகால ஞானிகளின் சிந்தனைகளுக்குத் தாழ்ச்சியை உண்டாக்கியது கூடுதலான பாவச்செயல் என்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது!   வேதக் கருத்துக்களை மானுடம் முழுமைக்கும் ஆக்கிவைக்க இனி அறிவுப் பாதையில் சிந்தித்து முயலுவோம்.

அதுவரை , ஏதோ நம் தமிழ்ப்பாட்டி ஔவை, சம்ஸ்க்ருத வேதங்களைத் தம் குறட்பாவில் தமிழ் செய்துள்ளார். வேதங்களின் சாரமாக விளங்கும் இந்த அற்புதக் குறட்பாக்களாவது மானுடம் புரிந்து கொள்ளும் வகையில் இதன் பொருள் உலகம் முழுமைக்கும் ஆகட்டும். மானுடம் மேன்மை அடையட்டும்.
ஸ்ரீகுருவே நம:


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Fri Sep 16, 2016 3:18 pm

தெரிந்து கொள்வோம்  தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்  
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 1.

பிறப்பின் நிலைமை.


  5. நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே
      உலவையிரண் டொன்று விண். (1.05)

தெளிவுரை :

  உலகில்  பஞ்ச பூதங்களாக விளங்குவனவற்றுள்  நிலம் என்னும் பூமி - ஸ்பர்சம்(தொடு உணர்வு ),   சப்தம்(ஓசை), ரசம் (சுவை), கந்தம்(மணம்), ரூபம்(ஒளி-உருவம்) ஆகிய ஐந்து குணங்களைக் கொண்டது;

நீர் என்பது – ஸ்பர்சம் (தொடு உணர்வு ),   சப்தம்(ஓசை), ரசம் (சுவை), ரூபம்(ஒளி-உருவம்) ஆகிய நான்கு குணங்களைக் கொண்டுள்ளது;

ஒளியுடன் கூடிய  நெருப்பு என்பது - ஸ்பர்சம்(தொடு உணர்வு ),   சப்தம்(ஓசை) ரூபம் (ஒளி-உருவம்) ஆகிய மூன்று குணங்களைக் கொண்டு உள்ளது;

காற்று -  ஸ்பர்சம்(தொடு உணர்வு ),   சப்தம்(ஓசை) ஆகிய இரண்டு குணங்களைக் கொண்டுள்ளது;

ஆகாயம் என்னும் வானம் - ஸ்பர்சம்(தொடு உணர்வு ) என்னும் ஒரு குணத்தை மட்டுமே கொண்டுள்ளது.,    

பதப்பொருள்:

நீள் – ஒளி.
அங்கி – நெருப்பு.
உலவை - காற்று

பதவுரை:
நிலம் ஐந்து –  பஞ்ச பூதங்களில் நிலம் என்னும் பூமி - ஸ்பர்சம் (தொடு உணர்வு ),   சப்தம்(ஓசை), ரசம் (சுவை), கந்தம்(மணம்), ரூபம்(ஒளி-உருவம்) ஆகிய ஐந்து குணங்களைக் கொண்டது.

நீர்நான்கு  -  பஞ்ச பூதங்களில் நீர் என்பது -  ஸ்பர்சம்(தொடு உணர்வு ),   சப்தம்(ஓசை), ரசம் (சுவை), ரூபம்(ஒளி-உருவம்) ஆகிய நான்கு குணங்களைக் கொண்டது.

நீளங்கி மூன்றே – பஞ்ச பூதங்களில் வெளிச்சத்தைத் தரும் நெருப்பு  என்பது ஸ்பர்சம்(தொடு உணர்வு ),   சப்தம்(ஓசை), ரூபம்(ஒளி-உருவம்) ஆகிய மூன்று குணங்களைக் கொண்டது.

உலவை இரண்டு - பஞ்ச பூதங்களில்  காற்று என்பது ஸ்பர்சம் (தொடு உணர்வு ),   சப்தம்(ஓசை),   ஆகிய இரண்டு குணங்களைக் கொண்டது.

ஒன்று விண் - பஞ்ச பூதங்களில்  ஆகாயம்  என்பது ஸ்பர்சம் (தொடு உணர்வு) என்னும் ஒரு குணத்தைக் கொண்டது.

விளக்கவுரை :

பஞ்ச பூதங்களின்  வரிசைக்கிரமமான தோற்றம்  - அவற்றின் உருவ மற்றும் அருவ நிலைகளை இக்குறள் கூறுகின்றது. இது உபநிஷத் கருத்தோடு ஒத்து, அதனை மேலும் விளக்குவதாக உள்ளது . அதில்:

1. ஆகாயம் என்னும் வெளி -  பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் .  இது  தொடு உணர்வு என்னும் அருவாகவும் ஆகாயம் என்னும்  உருவாகவும் இருப்பது.

2. காற்று  என்பது ஆகாயத்திலிருந்து தோன்றியது . இது தொடு உணர்வு மற்றும் ஓசை என்னும் இரு அருவ குணங்களும் காற்று என்னும் உருவமும் கொண்டதாகிறது.

3. நெருப்பு என்பது காற்றிலிருந்து தோன்றியது. ஆகவே  இது  காற்றின் இரு அருவத் தன்மைகளுடன் உருவமும்(ஒளி) கொண்டு அருவத்தன்மை மூன்றாகி, நெருப்பு என்று காணும் உருவமாகிறது.

4. நீர் என்பது நெருப்பிலிருந்து தோன்றியது .   ஆகவே நெருப்பின்  மூன்று அருவத் தன்மைகளுடன் சுவையும்(ரசம்) கொண்ட அருவத்தன்மை நான்காகி , நீர் என்று காணும் உருவமாகிறது.

5. நிலம் என்னும் பூமி நீரிலிருந்து தோன்றியதால் நீரின் நான்கு அருவத் தன்மைகளுடன் கந்தம் (மணம்) கொண்ட அருவத்தன்மை ஐந்தாகி , பூமி என்று காணும் உருவமாகிறது.

          பஞ்ச பூதங்களின் வரிசைக்கிரமமான தோற்றம், அவற்றின்  அருவத் தன்மைகள்  விளக்கப்பட்டுள்ளமை வெகு அற்புதம்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Sat Sep 17, 2016 7:15 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 1.

பிறப்பின் நிலைமை.
6 மாயன் பிரம னுருத்திரன் மகேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி யைந்து. (1.06)

தெளிவுரை :
ஆராய்ந்து அறிந்தால், உலகில் உயிர்களைத் தோற்றுவிப்பதும், அவை காப்பாற்றி வளர்க்கப்படுவதும், அவைகளிடம் அறியாமையை உண்டுபண்ணி அவைகளைப் பாவ புண்ணியங்களுக்கு உட்படுத்துவதும் , பின்பு அறிவுத்தெளிவைத் தந்து உண்மை ஞானத்தை அவைகளிடம் ஊட்டுவதும், இறுதியில் அவைகளை உலக வாழ்விலிருந்து நீக்கி ஆன்ம விடுதலையை அளிப்பதும் ஆகிய ஐந்தும் இயற்கையின் நிகழ்வுகளாக இருப்பன.

பதப்பொருள்:
மாயன் – காத்தல்; பாதுகாத்தல்.
பிரமன் – ஆக்குதல்; பிறப்பித்தல்.
உருத்திரன் – மாயையை உண்டுபண்ணுதல்.
மகேசன் - அருளல் ; மாயையை விளக்கி ஞானம் ஏற்படச் செய்தல்.
ஆய்தல் – பிரித்தெடுத்தல்.
சிவன்- அழித்தல்; நீக்குதல்.
மூர்த்தி – தெய்வச்செயல் ; இயற்கையில் நிகழ்பவை.
ஐந்து – ஐந்து வகை.

பதவுரை:
மாயன் பிரம னுருத்திரன் மகேசனோடு
- உலகில் உயிர்களைப் தோற்றுவித்தல், அவைகளை மாற்றத்திற்குள்ளாக்கி வளர்த்தல், அவைகளிடம் மாயை என்னும் அறியாமையை உண்டாக்குதல், பின்பு மாயையை நீக்கி மெய்யறிவை அளித்தல் ஆகியவற்றோடு;

ஆயுஞ் சிவம் மூர்த்தி ஐந்து
- ஆராய்ந்து பிரித்துப்பார்த்தால் பிறப்பித்துக் காக்கப்பட்ட உயிர்களை உலகில் இருந்து நீக்குதல் ஆகிய ஐந்தும் இயற்கையில் நிகழ்பவை.

விளக்கவுரை :
1. உலகில் முதல் உயிரை இயற்கை தாமாகவே பிறப்பிக்கின்றது.
2. அந்த ஜீவனுடைய இருப்பின் நிமித்தமாகக் கர்மங்களைச் செய்விக்கத் தூண்டி உலகில் அதனை அந்த இயற்கையே பாதுகாத்து வாழ்விக்கின்றது.
3. அந்த ஜீவனின் வாழ்நாளில் அது தன் வாழ்வின் நிமித்தமாகக் கர்மங்களைச் செய்யும் போது அதற்கு அஞ்ஞானத்தைக் கற்பித்து அதனுடைய செயல்பாடுகளில் பாவ புண்ணிய விளைவுகளை உண்டாக்கி அவ்வினைப் பயனைச் சுக துக்கங்களாக அனுபவிக்கவும் அதன் மறுபிறவிக்கும் காரணமாக்குகின்றது.
4. இடையில், அறிவுடைமை என்னும் மெய்ஞ்ஞானத் தெளிவையும் ஊட்டிப் பாவ புண்ணியங்களைப் போக்குவிக்கின்றது.
5. இறுதியில் ஆன்மமுக்தி என்னும் மீண்டும் பிறவா நிலையையும் அந்த இயற்கையே அளிக்கிறது.

இந்த ஐந்து நிகழ்வுகளையும் இயற்கையே நடத்துவிக்கின்றது என்னும் அற்புதமான விளக்கத்தை அளிக்கின்றது இக்குறள்.
பொதுவாக இவற்றை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் , அருளல் என்று சைவ சமயம் கூறும்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Sun Sep 18, 2016 4:54 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 1.

பிறப்பின் நிலைமை.

8. தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
        சுக்கிலந் தாதுக ளேழு. (1-8)

தெளிவுரை:
மானுட உடம்பில் தோல்,  இரத்தம்,  தசை, மஜ்ஜை,  கொழுப்பு, எலும்பு, இந்திரியம்                                  (ஆண்களாயின் விந்து; பெண்களாயின் சுரோணிதம்-கருமுட்டை)என்று உடம்பில் இருக்கும் சேர்க்கைக் கூறுகள் ஏழு.

பதப்பொருள்:  
தொக்கு –உடம்பின் தோல்.
உதிரம் – இரத்தம்.
ஊன்  - தசை.
மூளை  -மஜ்ஜை
நிணம் - கொழுப்பு
என்பு -எலும்பு
சுக்கிலம்  -இந்திரியம் ( ஆண்களாயின் விந்து; பெண்களாயின் சுரோணிதம்-கருமுட்டை)
தாது – மூலப்பொருள்; சேர்க்கைக்கூறு


பதவுரை
தொக்கு உதிரத் தோடு ஊன் மூளை நிணம் என்பு
- உடம்பின் தோல்,  இரத்தம்,  தசை, மஜ்ஜை,  கொழுப்பு, எலும்பு,

சுக்கிலம்  தாதுகள் ஏழு
- இந்திரியம் (சுரோணிதம்-கருமுட்டை) என்று உடம்பில் ஏழு சேர்க்கைக் கூறுகள்.  
                       

விளக்கவுரை:
சுக்கிலம் என்னும் பதம் ஆண்களாயின் விந்து என்றும் பெண்களாயின் கருமுட்டை என்றும் பொருள் தருவது.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Mon Sep 19, 2016 4:49 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 1.

பிறப்பின் நிலைமை.
           

9. மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி
    விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. (1-9)

தெளிவுரை:

நிலம், நீர், நெருப்பு,  காற்று, ஆகாயம் ,சூரியன், சந்திரன், பிரபஞ்சப்பேறாற்றல் என்னும் இயற்கை நிகழ்வு ஆகிய எட்டும் என்றும் நிலையானவை.

பதப்பொருள்:  

மண்- நிலம்; பூமி.
நீர்- நீர்.
அங்கி – நெருப்பு.
மதி- சந்திரன்.
காற்று- காற்று.
ரவி - சூரியன்
விண்- ஆகாயம்.
எச்சம்- முடிவில் நிலைப்பவை.
மூர்த்தி - தெய்வச்செயல் ; இயற்கையில் நிகழ்பவை; பிரபஞ்சப்பேராற்றல்.
எட்டு – எண்ணிக்கையில் எட்டு.


பதவுரை

மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி
- நிலம், நீர், நெருப்பு, சந்திரன், காற்று, சூரியன்;

விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு
- ஆகாயம், பிரபஞ்சப்பேராற்றல் என்னும் இயற்கை நிகழ்வு ஆகிய எட்டும் என்றும் நிலையானவை.

விளக்கவுரை:
பஞ்ச பூதங்களும், சூரியன், சந்திரன், மற்றும் பிரபஞ்சப்பேறாற்றல் என்னும் இயற்கைநிகழ்வு ஆகிய எட்டும் எப்போதும் நிலையானவை என்பது கருத்து.இதில் நட்சத்திரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவனிக்கத் தக்கது.   பிரபஞ்சப்பேராற்றல் என்பது பரம்பொருள் என்னும் அர்த்தத்தில் கையாளப்படுகிறது.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Tue Sep 20, 2016 1:14 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 1.

பிறப்பின் நிலைமை.
10. இவையெல்லாங் கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. (1-10)

தெளிவுரை:
முன் குறட்பாக்களில் (7, 8, 9 ஆகிய குறட்பாக்களில் ) முறையே சொல்லப்பட்ட காற்று, நீர், நெருப்பு , சூரியன், சந்திரன், நட்சத்திரங்களோடு ஆறு அருவ ஆற்றல்கள், தோல், இரத்தம், தசை, மஜ்ஜை, கொழுப்பு, எலும்பு, இந்திரியம் (ஆண்களாயின் விந்து; பெண்களாயின் சுரோணிதம்-கருமுட்டை)என்னும் ஏழு சேர்க்கைக் கூறுகள் மற்றும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ,சூரியன், சந்திரன், பிரபஞ்சப்பேறாற்றல் என்னும் எட்டு இயற்கை நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்து , பிரபஞ்சப் பேராற்றலாகும் பரமாத்மாவிற்குத் தங்குமிடம் என்னும் உடம்பாகின்றன. உடம்பும் உடம்புள் உறையும் பரமாத்மாவின் அம்சமும் சேர்ந்ததே ஜீவாத்மா.


பதப்பொருள்:

இவை – மேற்கூறிய (முன் குறட்பாக்களில் சொல்லப்பட்ட)
எல்லாங் கூடி – எல்லாமும் சேர்ந்து
உடம்பு – மானுட உடல்
ஆய –துயிலிடம்; தங்குமிடம்.
ஒன்றுதல்- ஒன்றிணைதல்
விந்து –விதை; சுத்தமாயை; பரமாத்மா

பதவுரை
இவையெல்லாங் கூடி
முன் குறட்பாக்களில் (7, 8, 9 ஆகிய குறட்பாக்களில் ) முறையே சொல்லப்பட்ட காற்று, நீர், நெருப்பு , சூரியன், சந்திரன், நட்சத்திரங்களோடு ஆறு அருவ ஆற்றல்கள், தோல், இரத்தம், தசை, மஜ்ஜை, கொழுப்பு, எலும்பு, இந்திரியம் (ஆண்களாயின் விந்து; பெண்களாயின் சுரோணிதம்-கருமுட்டை)என்னும் ஏழு சேர்க்கைக் கூறுகள் மற்றும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ,சூரியன், சந்திரன், பிரபஞ்சப்பேறாற்றல் என்னும் எட்டு இயற்கை நிகழ்வு ஆகிய அனைத்தும் சேர்ந்து ;

உடம்பாய வொன்றின்
- பரமாத்மாவின் தங்குமிடமாக உடம்பு என்னும் உருவமாக ஒன்றுகின்றன.

அவையெல்லாம் ஆனது விந்து
- அவை எல்லாமும் சேர்ந்ததுதான் பரமாத்மாவின் அம்சமாகும் ஜீவாத்மா என்பதாகும்.

விளக்கவுரை:
உடம்பு என்பது ஆறுவகை அருவ ஆற்றல்கள், ஏழுவகை சேர்க்கைக் கூறுகள், எட்டுவகை இயற்கைநிகழ்வுகள் ஆகியவற்றின் சேர்க்கை. அதுவே பரமாத்மாவின் தங்குமிடமாகவும் ஆகி ஜீவாத்மா எனப்படுகின்றது என்பது கருத்து.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Wed Sep 21, 2016 7:27 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 2.
உடம்பின் பயன்.

01. உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்
உடம்பினி லுத்தமனைக் காண். (2-01)

தெளிவுரை:

மானுட தேகம் என்னும் அற்புதப் படைப்பு, மனிதனுக்கு இப்பிறவியில் கிடைக்கப்பெற்றதன் பலன் யாது என வினவப்படின், அது அந்த உடம்பில் பரம்பொருளின் இருப்பை அறிதலேயாகும்.


பதப்பொருள்:

உடம்பு – மானுட உடல்
பெறுதல்- கிடைக்கப் பெறுதல்.
பயன் – பலன்; உபயோகம்.
உத்தமன் –உயர்ந்தவன்; சிறந்தவன்; பரம்பொருள்
காண் – காணுதல் > அறிந்துகொள்ளுதல்.


பதவுரை :

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்
- மானுட தேகம் என்னும் அற்புதப் படைப்பு, மனிதனுக்கு இப்பிறவியில் கிடைக்கப்பெற்றதன் பலன் யாது என வினவப்படின்;

உடம்பினி லுத்தமனைக் காண்
- அது அந்த உடம்பில் பரம்பொருளின் இருப்பை அறிதலே.


விளக்கவுரை:

எங்கும் நிறைந்த பரம்பொருள் இந்த மானுட உடம்பில் உள்ளது என்பதை அறிதலே இந்த மானுட உடலைப் பெற்றதன் பயனாக இருக்க முடியும்.

எல்லா உயிர்களுக்கும் உடம்பு உள்ளது. அவ்வவற்றிற்கேற்ப அறிவும் உள்ளது. அவ்வுடம்பில் அறிவே வடிவாகும் பரம்பொருளும் உள்ளது. ஆனாலும் மனிதனால் மட்டுமே பரம்பொருளை அடையாளம் காட்டி அறிவுறுத்தும் ஸ்ரீ குருதேவரைச் சென்றடைந்து அவர் கற்பிக்கும் ஆத்மவித்யாவைப் பயின்று, பழகிப் பயன்பெற முடியும்.

அட்டாங்க யோகம் பயில மானுட உடலைத் தவிற பிற ஏனைய எந்த உயிரிகளின் உடம்பும் ஏதுவாகா என்பது தெளிவு. கேட்டல் (சிரவணம்) , சிந்தித்தல் (மனனம்) மற்றும் பழகல்(நிதித்யாசனம்) ஆகியன மூன்றும்கூடி மொத்தமாக, பரம்பொருளை அறியும் மார்க்கங்கள். அவை மனித உடலால் மட்டுமே ஆகக்கூடியவை என்பது கருத்து.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Fri Sep 23, 2016 10:06 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 2.

உடம்பின் பயன்.

02. உணர்வாவ தெல்லா முடம்பின் பயனே
யுணர்க வுணர் வுடையார். (2-02)

தெளிவுரை:

மானுட உடல் மனிதனுக்கு வாய்த்ததின் பலன், அது பரமாத்மாவின் அம்சமாகிய ஜீவாத்மா தானே என்பதை முயன்று தன் சுய அறிவால் தெளிவு பெறுவதேயாகும். இந்த உண்மையை அறிவாற்றலால் தெளிவு பெற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்

பதப்பொருள்:

உணர்வு - அறிவு; தெளிவு; துயில்நீங்குகை; கற்றுணர்கை; ஆன்மா; புலன்.
உடம்பி – மானுட தேகம்
பயன்- பலன்.

பதவுரை

உணர்வு ஆவது எல்லாம் உடம்பின் பயனே
- மானுட உடல் மனிதனுக்கு வாய்த்ததின் பலன் யாது எனில், அது தான் பரமாத்மாவின் அம்சமாகிய ஜீவாத்மா என்பதை முயன்று தன் சுய அறிவால் தெளிவு தெளிவு பெறுவதேயாகும்.

உணர்க உணர் உடையார்
- இந்த உண்மையை அறிவாற்றலால் தெளிவு பெற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.


விளக்கவுரை:
மனிதன் என்பவன், தான் பரமாத்மாவின் அம்சமாகிய ஜீவாத்மா என்று அறிந்து தெளிதல் வேண்டும்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Sat Sep 24, 2016 10:29 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 2.

உடம்பின் பயன்.

03. ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார். (2-13)

தெளிவுரை:

மனிதனுக்கு ஒப்பற்றதும் தனித்தன்மையாவதும் ஆகிய நன்மை, அவனது உடம்பால் அமைவது மட்டுமே. ஆகையால் அத்தகைய நன்மையைத் தரும் இன்பத்தை அளிக்க வல்ல பயனைக் கொடுக்கக் கூடிய ஸ்ரீகுருதேவரைச் சார்ந்து இரு.

பதப்பொருள்:

ஒரு – ஒப்பற்றத் தன்மையாவது.
பயன்- பலன்.
துடம்பின் பயனே- உடம்ப்பால் விளையும் பலன்.
தருபயனாம்- அத்தகைய உடம்பால் பெறக்கூடிய பலனை அடைய.
சங்கரன் –இன்பத்தை அளிப்பவன்
சார்- கூடியிரு; பக்கம் இரு.

பதவுரை

ஒருபயன் ஆவது உடம்பின் பயனே
- மனிதனுக்கு ஒப்பற்றதும் தனித்தன்மையாவதும் ஆகிய நன்மை, அவனது உடம்பால் அமைவது மட்டுமே.
தருபயனாஞ் சங்கரனைச் சார்
- ஆகையால் அத்தகைய நன்மையைத் தரும் இன்பத்தை அளிக்க வல்ல பயனைக் கொடுக்கக் கூடிய ஸ்ரீகுருதேவரைச் சார்ந்து இரு.

விளக்கவுரை:

ஒருவன் தன்னுடைய உடம்பால் மட்டுமே ஒப்பற்றதும் நன்மையைக் கொடுக்கக் கூடியதும் ஆகிய பலனை அடைய முடியும். உடம்பைப் பேணும் உபாயம் ஸ்ரீகுருதேவரிடம் உள்ள அட்டாங்க யோகம் என்னும் யோகசனங்கள், பிராணாயாம் ஆகியன. ஆகையால் ஸ்ரீகுருதேவரைச் சார்ந்திருந்து அவரிடம் மெய்ஞ்ஞான பாடம் பயின்று, அவற்றை அனுதினமும் பழக்கத்தில் கொண்டுவருவது உடம்பை வளர்க்கும் உபாயம். அதனை அறிந்து கொண்டு அக்கல்வியை அனுதினமும் ஆராதித்து அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்ந்திரு என்பது கருத்து.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Ramalingam K Tue Sep 27, 2016 12:08 pm


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்


அதிகாரம் 3.

உள் உடம்பின் நிலைமை

3- 01. கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலாம்
உற்றுடம்பா லாய வுணர்வு. (21)

தெளிவுரை:

உடம்பின் வெளிப்புறமாகத் தென்படும் ஐந்து செயற்புலங்களின் ( பஞ்ச கர்ம இந்திரியங்கள்) மூலமாககப் பற்பல கலைகளை கற்றுக் கொள்ளுதல், கேட்டு அறிதல், பார்த்துத் தெளிதல் ஆகிய எல்லாமும் ஆராய்ந்து பார்த்தால் உடம்பின் உள்ளே இயங்கும் அறிவுப் புலன்கள் ( பஞ்ச ஞான இந்திரியங்கள்) எனப்படும் சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் என்பவைகளால் அடையப்பெறும் அறிவுத் தெளிவே ஆகும்.


பதப்பொருள்:

கற்றல் –கலைகளைக் கற்றுக் கொள்ளுதல்.
கேட்டல் –கேள்வி ஞானம்
காண்டல் –பார்த்து அறிதல்
உற்று -ஆராய்ந்து
உடம்பு – மனித உடம்பு
உணர்வு- தெளிவு


பதவுரை:

கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக் காணலாம்
- உடம்பின் வெளிப்புறமாகத் தென்படும் ஐந்து செயற்புலங்களின் ( பஞ்ச கர்ம இந்திரியங்கள்) மூலமாககப் பற்பல கலைகளை கற்றுக் கொள்ளுதல், கேட்டு அறிதல், பார்த்துத் தெளிதல் ஆகிய எல்லாமும்

உற்று உடம்பால் ஆய உணர்வு.
- ஆராய்ந்து பார்த்தால் உடம்பின் உள்ளே இயங்கும் அறிவுப் புலன்கள் ( பஞ்ச ஞான இந்திரியங்கள்) எனப்படும் சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் என்பவைகளால் அடையப்பெறும் அறிவுத் தெளிவே ஆகும்.


விளக்கவுரை:
உடம்பின் வெளி உறுப்புக்களால் நாம் கற்கும் எல்லாமும் உண்மையில் உடம்பின் உள் இயங்கும் அறிவுப் புலன்களாலேயே அறிந்து தெளியப்படுகின்றன என்பது பொருள்.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

request Re: ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum