ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளில் காணும் நிறை

4 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

குறளில் காணும் நிறை - Page 4 Empty குறளில் காணும் நிறை

Post by Ramalingam K Tue Sep 13, 2016 12:41 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7  – ( திருக்குறள் )

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும்  அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும்  பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது.  அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)

தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.


பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.

பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.

கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்

விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு  அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர்  மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.

என்றும் பணிவுடன்,    
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.  
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down


குறளில் காணும் நிறை - Page 4 Empty Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K Fri Oct 14, 2016 5:26 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்

அரசியல்
அதிகாரம் 43
அறிவுடைமை.

422. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. (43-02)

தெளிவுரை :

கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து , அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.

பதப்பொருள் :

செலவு – தன்னை விட்டு அகலுதல்.
தீது –தீமைகள் ; துன்பங்கள்.
ஒரீ- நீக்குதல்.
நன்று- நன்மை.
உய்த்தல்- கொண்டுபோதல்.
அறிவு -– கல்வி மற்றும் கேள்வியால் பெறப்படும் அறிவு.

பதவுரை :

சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரீஇ
- கல்வி கற்ற ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அவரைவிட்டு அகலாது அவருடனேயே இருந்து அவருக்கு ஏற்பட இருக்கும் துன்பங்களை நீக்குவதோடு;

நன்றின்பால் உய்ப்பது அறிவு
- அவருக்கு நன்மைகள் உண்டாகும் விதமாகவே அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெறப்பட்ட அறிவு அவரைக் கொண்டு சேர்க்கும்.

விளக்கவுரை :
உலகில் எங்கிருந்தாலும் கல்வியாளருக்கு அவர் கல்வி மற்றும் கேள்வியால் பெற்ற அறிவு அவரை விட்டு விலகாது அவருடனேயே இருந்து தீமைகளை விலக்கி அவருக்கு நன்மையைக் கொடுக்கும் என்பது கருத்து.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

குறளில் காணும் நிறை - Page 4 Empty Re: குறளில் காணும் நிறை

Post by Ramalingam K Fri Oct 28, 2016 5:07 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44
குற்றங்கடிதல்.

436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. (44-06)

தெளிவுரை :

தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் தன்னிடம் இருந்து நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில், அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.

பதப்பொருள் :

தன்குற்றம் – தன்னிடம் தானே காணும் பிழைகள்
நீக்குதல் – களைதல்
பிறர்குற்றம்- பிறரிடம் தான் காணும் பிழைகள்.
காணல் - சொல்லுதல்
என்குற்றம் – எம்மாதிரியான பிழை
ஆகும் – ஏற்பட முடியும்
இறை – சான்றோர்.

பதவுரை :

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
- தனக்கும், பிறருக்கும் தெரியும் வண்ணம் தன்னிடம் இயல்பாகவே இருக்கும் பிழைகளை எவர் ஒருவர் முதலில் நீக்கிவிட்டுப் பின்பு மற்றவர்களிடம் இருப்பதாகத் தான் எண்ணும், பிழைகளைக் காண்பாராகில்;

என்குற்ற மாகும் இறைக்கு
- அவ்வாறான பிழைகள் எதுவும் மற்றவர்களிடம் இருப்பாதாக அத்தகைய சான்றோர்கள் கருதமாட்டார்கள்.


விளக்கவுரை :

பிறரிடம் இருப்பதாகத் தான் கருதும் பிழைகளைத் தன்னிடமும் அவை இருக்கின்றனவா என்று கருதிப்பார்த்து, தன்னிடம் இருக்கும் அத்தகையப் பிழைகளை நீக்கிவிடுவாராகில், அத்தகையவர் சான்றோர்கள் என்னும் தன்மையை அடைந்து பிறரிடமும் அத்தகையப் பிழைகளைக் கூறமாட்டார்கள் என்பது கருத்து.


+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

குறளில் காணும் நிறை - Page 4 Empty Re: குறளில் காணும் நிறை

Post by சிவனாசான் Sat Oct 29, 2016 3:50 pm

அய்யனார் வள்ளுவர் அறியாதது ஒன்றுமே இல்லை. அவர்கூறியுள்ளது
அனைத்தும் நிறைவே>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

குறளில் காணும் நிறை - Page 4 Empty Re: குறளில் காணும் நிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum