புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
குறளில் காணும் நிறை - Page 3 I_vote_lcapகுறளில் காணும் நிறை - Page 3 I_voting_barகுறளில் காணும் நிறை - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளில் காணும் நிறை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 13, 2016 12:41 pm

First topic message reminder :

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7  – ( திருக்குறள் )

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.

பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும்  அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும்  பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது.  அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)

தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.


பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.

பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.

கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்

விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு  அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர்  மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.

என்றும் பணிவுடன்,    
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.  
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 7:14 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அரசியல்

அதிகாரம் 42

கேள்வி




411. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை (42-01)

தெளிவுரை :

தாமே அனுபவப் பூர்வமாகக் கற்று அறிதல் உட்பட அறியப்படும் எல்லாவகையான கல்வி அறிவோடு , பிறர் அவர்தம் அனுபவமாகக் கூறக் கேட்டு அறிதலும் கல்வியறிவே . அவ்வாறாகிய கேள்வி அறிவு, பிற அனைத்துவகையான கல்வி அறிவால் பெறப்படும் அறிவு அனைத்திலும் உயர்ந்ததாகும்


பதப்பொருள் :

செல்வம் – கல்வி; செழிப்பு.
செவிச்செல்வம் - பிறர் கூறும் அனுபவக் கல்வி அறிவு.
தலை – உயர்ந்தது; சிறந்தது.

பதவுரை :

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்
- ஒருவரால் தாமே அனுபவப் பூர்வமாகக் கற்று அறிதல் உட்பட அறியப்படும் எல்லாவகையான கல்வி அறிவோடு, பிறர் தம் அனுபவமாகக் கூறக் கேட்டு அறிதலும் கல்வியறிவே.

அச்செல்வம்
- அவ்வாறாகிய கேள்வி அறிவு;

செல்வத்துள் எல்லாந் தலை
- பிற அனைத்துவகையான கல்வியால் பெறப்படும் அறிவிலும் உயர்ந்ததாகும்.


விளக்கவுரை :

குருவிடம் கற்கும் கல்வியோ அல்லது தாமே நேரிடையாகக் குருவின் துணை இல்லாமல் கற்கும் கல்வியோ - இரண்டுமே ஏட்டறிவே(Theory). அந்த ஏட்டறிவு பட்டறிவால் ( அனுபவ அறிவால்- Pactical) மட்டுமே நிறைவடைவது.

ஆக, யாதொன்றைப்பற்றியும் முழுமையான அறிவைப் பெற ஒருவர் முதலில் ஏட்டறிவை முயன்று படிக்க வேண்டும்; பின்பு அதனை அனுபவத்தில் ஆராயவேண்டும். இந்த செயல்பாடுகளில், கல்வி கற்பவர் பெரும் உழைப்பிற்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டு, நேரம், பொருள் மற்றும் ஆற்றல் ஆகியனவற்றையும் செலவிடவேண்டி உள்ளன. பின்புதான் அதனைப்பற்றிய முழுமையான அறிவு ஒருவருக்குக் கிடைக்கிறது.

ஆனால் கேள்வியறிவில், அந்தவகையான அனைத்து உழைப்பு, நேரம், பொருள் மற்றும் ஆற்றல் ஆகியனவற்றை முழுவதுமாக, சொல்பவரே செய்து முடித்து, பலனாகிய அறிவை மட்டும் கொடுப்பதால், கேள்வி ஞானம் அனைத்திலும் உயர்ந்ததாக ஐயன் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 12:10 pm

உங்கள் விளக்கங்கள் ஏட்டறிவுடன் கூடிய பட்டறிவு போல் தோன்றுகின்றது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 12:10 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அதிகாரம் 42

கேள்வி

அரசியல்

412. செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (42-02)

தெளிவுரை :

வாழ்வின் நித்தமாக அறிவுரைகளைக் கேட்டு இடர்நீங்குதல் என்னும் நல்வேளை தடைப்படும் பொழுது, கிடைக்கும் அந்த இடைப்பட்ட கொஞ்ச நேரத்தில் கேள்வி ஞானம் துய்த்தல் என்னும் நியமத்தில் இருந்து விலகி, உடற்பசிக்கும் உணவு உண்ணலாம்

பதப்பொருள் :

செவி - அறிவுரை
உணவு - இளைப்பாறுகை; இடர்நீங்குதல்
போழ்து -நல்வேளை
சிறிது – அலுக்குதல்; சிறிது அசைத்தல்
வயிறு - பசி
ஈதல் – கொடுத்தல்

பதவுரை :

செவிக்கு உணவு இல்லாத போழ்து
- அறிவுரைகளைக் கேட்டு இடர்நீங்குதல் என்னும் நல்வேளை தடைப்படும் பொழுது

சிறிது
- அறிவுரைகளைப் பருகுதல் என்னும் நியமத்தில் இருந்து கொஞ்சம் விலகி

வயிற்றுக்கும் ஈயப் படும்
- உடற்பசிக்கும் உணவு உண்ணலாம்.



விளக்கவுரை :

வாழ்நாள் முழுமைக்கும் கேள்வி ஞானம் கிடைக்குமாகின், அந்த ஞானாமிர்தம் தடைப்படும் கால அவகாசத்தில் கேள்வி ஞானம் துய்த்தல் என்னும் நியமத்தில் இருந்து விலகி வயிற்றுப் பசிக்கும் உணவு உண்ணலாம் என்பது கருத்து.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 04, 2016 4:56 pm

விளக்க உரைக்கு நன்றி .
சில இடங்களில் double spacing ஐ தவிர்க்கலாமே .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 5:55 pm

தவிர்க்கிறேன் ஐயா இனிமேல்.
நன்றி ஐயா.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 10:24 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்
அதிகாரம் 42

அரசியல்

கேள்வி

413. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (42-03)

தெளிவுரை :

ஆப்த வாக்கியம் என்னும் பிறரது அனுபவ அறிவைச் செவிகளால் கேட்டு அதன்மூலம் அறிவுத்தெளிவு பெற்றவர்கள், உலகில் தானே முயன்று ஏட்டறிவு மற்றும் பட்டறிவு ஆகியனவற்றைக் கற்றதால் ஞானம் பெற்ற சான்றோர்களோடு சமமாகவே கருதப் படுவர்.

பதப்பொருள் :

செவியுணவு
- ஆப்த வாக்கியம் என்னும் பிறரது அனுபவ அறிவைச் செவிகளால் கேட்டல்.

கேள்வி உடையார்
- அவ்வாறு கேட்டு அதனால் அறிவுத்தெளிவு பெற்றவர்கள்.

அவித்தல் – வேகவைத்தல் ( தானே முயன்று ஏட்டறிவு மற்றும் பட்டறிவு ஆகியன வற்றை முயன்று கற்றல்)
உணவு – அனுபவ ஞானம்.
ஆன்றாரோடு - சான்றோர்களோடு.
ஒப்பர் – சமமாகவே கருதப் படுவர்.
நிலத்து – உலகில்.


பதவுரை :

செவியுணவில் கேள்வி உடையார்
- ஆப்த வாக்கியம் என்னும் பிறரது அனுபவ அறிவைச் செவிகளால் கேட்டு அவ்வகையில் அறிவுத்தெளிவு பெற்றவர்கள்;

அவி உணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
- உலகில் தானே முயன்று ஏட்டறிவு மற்றும் பட்டறிவு ஆகியனவற்றைக் கற்றதால் ஞானம் பெற்ற சான்றோர்களோடு சமமாகவே கருதப் படுவர்

விளக்கவுரை :
முழுமை ஞானத்தை ஒருவர் தாமே முயன்று படித்து அனுபவித்துத்தான் பெறவேண்டும் என்னும் அவசியமில்லை. ஆப்த வாக்கியம் என்னும் பிறரது அனுபவ அறிவைச் செவிகளால் கேட்டு, அதன்மூலம் அறிவுத்தெளிவு பெற்றாலே போதும். அவ்வகையில் உலகில் இருசாராருமே சம அறிவுத் தெளிவு பெற்றவர்களாவர்தான் என்கிறது இக்குறள்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 4:42 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள்)

குறளில் காணும் நிறை

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42

கேள்வி.

413. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. (42-03)

தெளிவுரை :

ஆப்த வாக்கியம் என்னும் பிறரது அனுபவ அறிவைச் செவிகளால் கேட்டு அதன்மூலம் அறிவுத்தெளிவு பெற்றவர்கள், உலகில் தானே முயன்று ஏட்டறிவு மற்றும் பட்டறிவு ஆகியனவற்றைக் கற்றதால் ஞானம் பெற்ற சான்றோர்களோடு சமமாகவே கருதப் படுவர்.

பதப்பொருள் :

செவியுணவு
- ஆப்த வாக்கியம் என்னும் பிறரது அனுபவ அறிவைச் செவிகளால் கேட்டல்.

கேள்வி உடையார்.
- அவ்வாறு கேட்டு அதனால் அறிவுத்தெளிவு பெற்றவர்கள்.

அவித்தல் – வேகவைத்தல் ( தானே முயன்று ஏட்டறிவு மற்றும் பட்டறிவு ஆகியன வற்றை முயன்று கற்றல்)

உணவு – அனுபவ ஞானம்.

ஆன்றாரோடு - சான்றோர்களோடு.

ஒப்பர் – சமமாகவே கருதப் படுவர்.

நிலத்து – உலகில்.

பதவுரை :

செவியுணவில் கேள்வி உடையார்
- ஆப்த வாக்கியம் என்னும் பிறரது அனுபவ அறிவைச் செவிகளால் கேட்டு அவ்வகையில் அறிவுத்தெளிவு பெற்றவர்கள்;
அவி உணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
- உலகில் தானே முயன்று ஏட்டறிவு மற்றும் பட்டறிவு ஆகியனவற்றைக் கற்றதால் ஞானம் பெற்ற சான்றோர்களோடு சமமாகவே கருதப் படுவர்

விளக்கவுரை :

முழுமை ஞானத்தை ஒருவர் தாமே முயன்று படித்து அனுபவித்துத்தான் பெறவேண்டும் என்னும் அவசியமில்லை. ஆப்த வாக்கியம் என்னும் பிறரது அனுபவ அறிவைச் செவிகளால் கேட்டு, அதன்மூலம் அறிவுத்தெளிவு பெற்றாலே போதும். அவ்வகையில் உலகில் இருசாராருமே சம அறிவுத் தெளிவு பெற்றவர்களாவர்தான் என்கிறது இக்குறள்.






+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 10:34 am

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை

பொருட்பால்

அதிகாரம் 42

கேள்வி

அரசியல்
420 . செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். (42-10)

தெளிவுரை :

கல்விச்சாலைக்குச் சென்று முறையாகக் கல்வி பயின்று அறிவைப் பெற இயலாதவர்கள், அதே அறிவைச் சான்றோர்களின் அனுபவ வாக்காக அறிந்து கொள்ள விரும்பாமல், வீண் வாய்ப் பேச்சாலும் உணவை உண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளுவதிலும் காலத்தைப் போக்கும் மனிதர்கள், இவ்வுலகத்தில் உயிர்வாழ்ந்தாலும் அல்லது அத்தகையவர்கள் உலகிலேயே இல்லாமல் போனாலும்தான் என்னவாகிவிடப் போகிறது!

பதப்பொருள் :

செவிச்சுவை- ஆப்தவாக்யம் என்னும் சான்றோர்களின் அறிவுத் தெளிவு.
உணர்தல் –ஆராய்ந்து அறிதல் .
வாய்உணர்வு – உண்பதிலும் வீண் பேச்சு பேசுதலில் விருப்பம்
மாக்கள் -மனிதர்கள் .
அவிதல் –இல்லாததாதல்.
வாழ்தல் - உயிர்வாழ்தல்.

பதவுரை :

செவியில் சுவை உணரா
- கல்விச்சாலைக்குச் சென்று முறையாகக் கல்வி பயின்று அறிவைப் பெற இயலாதவர்கள், அதே அறிவைச் சான்றோர்களின் அனுபவ வாக்காக அறிந்து கொள்ள விரும்பாதவர்கள்;

வாய் உணர்வின் மாக்கள்
- ஆனாலும் வீண் வாய்ப்பேச்சாலும் உணவை உண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளுவதிலும் காலத்திப்போக்கும் மக்கள்;

அவியினும் வாழினும் என்
- இவ்வுலகத்தில் உயிர்வாழ்ந்தாலும் அல்லது அத்தகையவர்கள் உலகிலேயே இல்லாமல் போனாலும் என்னவாகிவிடப் போகிறது.

விளக்கவுரை :

முறையாகக் கல்விக்கூடம் சென்று கல்வி பயில முடியாமல் போனாலும், ஆப்தவாக்கியம் என்னும் கேள்வி ஞானத்தில் விருப்பம் கூட இல்லாமல், வீணாக உண்டும் தேவையற்றனவற்றைப் பேசியும் காலத்தைக் கழிக்கும் மானுடர்கள் இவ்வுலகில் இருந்தாலென்ன அல்லது இல்லாமல் போனால்தான் என்ன என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 12:44 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )

குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42
கேள்வி.

419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. (42-09)

தெளிவுரை :
கேள்வி ஞானத்தை மிகவும் நுட்பமாகக் கேட்டு அறிந்து கொண்டு, அவற்றை ஆராய்ந்து பார்த்தால் தவிற , அத்தகைய ஞானத்தை எவரும் தம் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வதோ அல்லது பிறரை அத்தகைய ஞானத்தின் வழி வாழுமாறு எடுத்துரைப்பதோ அவருக்கு இயலாதவகையில் மிகவும் அரிய செயலாகிவிடும்

பதப்பொருள் :

நுணங்குதல் -நுட்பமாதல்
வணங்குதல் –வழிபடுதல் ; வாழ்வில் கடைப்பிடித்தல்.

பதவுரை :

நுணங்கிய கேள்விய ரல்லார்
- கேள்வி ஞானத்தை மிகவும் நுட்பமாகக் கேட்டு அறிந்து கொண்டு, அவற்றை ஆராய்ந்து பார்த்தால் தவிற

வணங்கிய வாயின ராதல் அரிது
- அத்தகைய ஞானத்தை எவரும் தம் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வதோ அல்லது பிறரை அத்தகைய ஞானத்தின் வழி வாழுமாறு எடுத்துரைப்பதோ அவருக்கு இயலாதவகையில் மிகவும் அரிய செயலாகிவிடும்

விளக்கவுரை :
கல்வியை முறைப்படி கற்க இயலாமல், கேள்வி ஞானத்தால் வாழ்பவர்கள், அக்கேள்வி ஞானத்தை மிகவும் நுட்பமாகக் கேட்டு ஆராய்ந்து தெளியவேண்டும் என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 14, 2016 5:23 pm

இது ஒரு பெரும் விந்தையாகவே இருக்கின்றது.

இடும் பதிவுகள் அன்று மட்டுமே தளத்தில் இருந்து பின்வரும் நாட்களில் எங்கோ பறந்துவிடுகின்றன.

ஆத்திச் சூடியில் கண்ட அனுபவம் குறளிலும் தொடர்கின்றது- ஏனோ



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக