ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மை கடைபிடி

Go down

நேர்மை கடைபிடி Empty நேர்மை கடைபிடி

Post by Ramalingam K Fri Sep 09, 2016 5:29 pm

குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39
இறைமாட்சி.

உலகில் வாழும் மக்களில் பெரும்பாலோர் பொருள் என்றாலே  மண், பொன் போன்ற செல்வங்களையே  எண்ணுகின்றனர். ஆனால் சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உலகமும் உலகில் இருப்பவை யாவும், ‘பொருள்’ என்னும் மூவெழுத்துக் கொண்ட சிறியதும் ஆனாலும் அகண்டு பரந்த அர்த்தம் உடையதும் ஆகிய  பதத்திற்குள் அடங்குவதாக அமைவன.  உருவாகவும் அருவாகவும் இருப்பதும், மனிதப் புலன்களாலும் மனத்தாலும் அனுபவிக்கப்படுவதும், அவர்களது சுக துக்கங்களின் வெளிப்பாடுகளாக விளைவதுமாக இருக்கும் அனைத்துமே பொருள்தான்.

பொதுவாக பொருள் என்பது மண், பொன் போன்ற உருவமுடையனவாகவும், அறிவு-கல்வி போன்ற உருவம் அற்ற அருவமனதாகவும் அமைந்து மக்களுக்கு இக-பர சுகதுக்கங்களுக்கு அடிப்படைக் காரணமாகின்றது. உதாரணத்திற்கு உண்ணும் உணவு பொருள் எனப்பட்டால், அதை விளைவிக்கவேண்டிய விதை, நிலம், நீர், உரம், காற்று, சூரிய ஒளி, வெப்பம், குளிர்,உழுபவன், விளைபொருளை அறுத்து அனுபவத்திற்குக் கொண்டு வந்து அதனை இறுதியில் ருசித்து உண்டு நன்மையடைதல் வரையிலான அனைத்து செயல்பாடுகளும், அதற்குத் தேவையான உபகரணங்களும் ஆகிய அனைத்துமே  பொருள்தான். இதுபோலவேதான் அனைத்தும் பொருளாகின்றன. ஆக இந்த பரந்த உலகம் பொருளாகவே விளங்குகிறது. இங்கு பொருளைத்தவிற பிறிதொன்றும் இல்லை.

மேலும் , இந்தப் பொருள்  அகப் பொருள் என்றும் பரப்பொருள் என்றும் இருவேறு தன்மைகளைக் கொண்டது. அகப்பொருள் என்பது அனுபவிக்கப்படுவது; பரப்பொருளோ அனுபவிப்பது-அதாவது பொருளால் விளையும் சுக துக்கங்களை அனுபவிக்கும் நுகர்வோன் எனப்படும் ஜீவாத்மா.  

திருக்குறளில்  பொருட்பாலில் அனுபவிக்கப்படும் அகப்பொருள் மட்டுமே விரிவாக அரசு , அமைச்சு,அரண், கூழ், படை, நட்பு மற்றும் குடி என்கிற ஏழு தொகுப்பாக( இயல்)  அமைக்கப்பட்டு,  மொத்தம் 70 வகையில்(அதிகாரங்களாக)   பிரித்து வைக்கப்பட்டுள்ளது. ஆக உலகாயதப் பொருட்களை திருவள்ளுவர் 70 தன்மையனவாக வகைப்படுத்திப் போதிக்கின்றார் என்பது தெளிவு.

பரப்பொருளைத் திருக்குறள் தவிர்த்துள்ளதுபோல்  தோன்றினாலும்,  பரப்பொருளின் சங்கமம் இல்லாத அகப்பொருள் இல்லை என்பதால், அகப்பொருளை அறநெறியோடு கூடி சம்பாதித்து இன்பித்தால், பரப்பொருள் தானாகவே நம்மை நாடி வரும் – அதாவது நமக்குத் தானாகவே அது புலப்படுவதாகும் என்பது வள்ளுவரின் ஏற்கக்கூடியதும், விவாதிக்கப்பட வேண்டாததாகவும் இருக்கும் உறுதியான கருத்து என்பதை ஆன்றவிந்த சான்றோராகும் ஞானியர் அறிவர்.

பொருளே உலகாவதாலும், சுகதுக்கங்களுக்குக் காரணமாவதாலும், ஆசையை உண்டு பண்ணுவதாலும் , பாவ புண்ணிய விளைவுகளை உண்டாக்கி மறு பிறவிக்கு ஜீவனை ஆட்படுத்துவதாலும் அதுவே ஆன்ம முக்திக்குத் தடையாவதாலும், முப்பாலில் பொருட்பால் 70 அதிகரங்களைக் கொண்டு 700 குறட்பாக்களால் விளக்கப்படுவது ஒரு அற்புதம்தாம்.

இனி பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் முதல் அதிகாரமாகவும் ஆனால்  நூலின்  39வது அதிகாரமாக அமைந்திருக்கும் இறைமாட்சியைக் காண்போம்.

இறை என்றால் அரசன், நிர்வகிப்பவன், ஆளுபவன் என்பது பொருள். குடிகளின் நலன் காப்பதில் அரசனும் ஒரு பொருளாகிறான். ஆகையால் அரசன் தனது ஆட்சியை மாட்சிமைபெற நடைப்பிப்பதும் அறத்தோடு கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு பொருளாகிறது. ஏனெனில் அரசாட்சி குடிகளின் சுகதுக்கங்களுக்குக் காரணமாவது என்பது யாவரும் அறிந்ததே.

381. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. - (39-01)

தெளிவுரை :
தன்னையும், தன் குடிமக்களையும் துயரம், அச்சம் போன்ற எதிர்மறை விளைவுகளிலிருந்து  பாதுகாக்கும் திறமை;
தன் குடிமக்கள் தன்னையே முன்னுதாரணமாகக் கொண்டு அறம் சார் நெறி  வாழ வகைசெய்யும் தகைமை;  
தன் அரசாட்சி இனிதே நிர்வகிக்கப்படத் தேவையான பொருள் வளத்தைப் பிற எவர்க்கும் தீமையை உண்டாக்காமல் அறம் சார் வழியில் ஈட்டுவதோடு அதனைப் பெருக்கவும் செய்யும் வல்லமை;
தான் செம்மைசேர் அறிவாற்றல் உடையவனாய், தன்னுடைய ஆணைகளைச் செவ்வனே செய்யும் நிர்வாகிகளைக் கொண்டிருத்தல்;  
நல்லறிவுசால் சான்றோர்களைக் கூடி இருந்து, தேவைப்படும் நேரத்தில் அவர்களது ஆலோசனைகளை ஏற்றுச் செயல்படும் நட்பு மனப்பாண்மை;  
மேலும் வேற்று நாட்டு அரசர்களால் ஏற்படும் தீமை, இயற்கையால் உண்டாகும் பேரிடர், மற்றும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏதும் இல்லாவகையில் நிரந்தரப் பாதுகாப்பு செய்து கொள்ளல் ஆகிய இவ்வாறினையும்,தன்னிடத்தே கொண்டவனே நாட்டை ஆளும் அரசர்களுள் சிறந்தவனாவான்.

பதப்பொருள்:
படை- எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் திறமை.
குடி  - அறம் சார் நெறி வாழும் குடிமக்கள்  
கூழ் – அறம் சார் வழியில் ஈட்டுவதும் பெருக்குவதும் ஆகும் பொருட்செல்வம்;
அமைச்சு – தன்னுடைய ஆணைகளைச் செவ்வனே செய்யும் நிர்வாகிகள்;
நட்பு –   தேவைப்படும் நேரத்தில் சான்றோர்களௌடைய ஆலோசனைகளை ஏற்றுச் செயல்படும் நட்பு மனப்பாண்மை
அரண் -  தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்.
ஏறு – ஏற்றம் உடையவன் ; உயர்தவன்; சிறந்தவன்.
பதவுரை:
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
- தன்னையும், தன் குடிமக்களையும் துயரம், அச்சம் போன்ற எதிர்மறை விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் திறமை; தன் குடிமக்கள் தன்னையே முன்னுதாரணமாகக் கொண்டு அறம் சார் நெறி வாழ வகைசெய்யும் தகைமை;  தன் அரசாட்சி இனிதே நிர்வகிக்கப்படத் தேவையான பொருள்    
வளத்தைப் பிற எவர்க்கும் தீமையை உண்டாக்காமல் அறம் சார் வழியில் ஈட்டுவதோடு அதனைப் பெருக்கவும் செய்யும் வல்லமை;  தான் செம்மைசேர் அறிவாற்றல் உடையவனாய், தன்னுடைய ஆணைகளைச் செவ்வனே செய்யும் நிர்வாகிகளைக் கொண்டிருத்தல்;  நல்லறிவுசால்
சான்றோர்களைக் கூடி இருந்து, தேவைப்படும் நேரத்தில் அவர்களது ஆலோசனைகளை ஏற்றுச் செயல்படும் நட்பு மனப்பாண்மை  மேலும் வேற்று நாட்டு அரசர்களால் ஏற்படும் தீமை, இயற்கையால் உண்டாகும் பேரிடர், மற்றும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏதும் இல்லாவகையில் நிரந்தரப் பாதுகாப்பு செய்து கொள்ளல் ஆகிய இவ்வாறினையும்;

உடையான் அரசருள் ஏறு
- தன்னிடத்தே கொண்டவனே நாட்டை ஆளும் அரசர்களுள் சிறந்தவன் ஆவான்.

விளக்கவுரை:
இல்வாழ்வான் இனிது வாழ, அவனுக்குச் செல்வமாக அமைய வேண்டுவது முதலில் நல்ல ஆளுமைத் திறன் கொண்ட அரசு. ஒரு சிறந்த அரசனுக்கு இருக்கவேண்டுவனவாக இக்குறளில் ஆறுவகைச் செல்வங்கள் குறிப்பிடப்படுகின்றன.

என்றும் பணிவுடன்,    
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.  
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009      09.09.2016.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேர்மை கடைபிடி Empty Re: நேர்மை கடைபிடி

Post by Ramalingam K Sun Sep 11, 2016 2:42 pm

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .

கூடா ஒழுக்கம்

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந் தாரே. திருமந்திரம் - 2067

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
- தம்மைக் கண்காணிப்பவர் எவரும் இல்லை என்று தனிமையில் ரகசியமாகப் பற்பல குற்றங்களை அஞ்ஞானியர் செய்வர்;

கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
- ஆராய்ந்து பார்க்கப்போனால், அனைத்தையும் கண்காணிக்கும் பரம்பொருள் இல்லாத இடம் இப்பிரபஞ்சம் முழுவதும் கிடையாது.

கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
- இவ்வுலகைக் கண்காணித்துக் கொண்டே உலக இருப்புக்கள் அனைத்திலும் தன்னையும் அவற்றுள் கலந்து இருக்குமாறு செய்து கொண்டுள்ளப் பரம்பொருளை

கண்காணி கண்டார் களவு ஒழிந் தாரே
- தம்மை எப்போதும், எங்கும் கண்காணித்துக் கொண்டு இருப்பதாக அறிந்து கொண்ட ஞானியர் தாம் எக்குற்றங்களையும் தம் வாழ்நாளில் செய்ய மாட்டார்கள்.

பரம்பொருள் இல்லாத காலமோ இடமோ உலகில் எங்ஙனமும் இல்லையாதலால், உலகில் வாழும் எல்லோரது செய்கைகளும், சிந்தனைகளும், சொற்களும் பரம்பொருளால் கண்காணிக்கப் படுகிறது என்ற உண்மையை ஞானியர் அறிவர். ஆகையால் அவர்கள் தம் வாழ்நாளில் தவறுகளே செய்வதில்லை.

இம்மந்திரத்தின் உட்பொருள் , நாமும் கவனத்துடன் இருந்து உலக உயிர்கள் எதனுக்கும் தீயன சிந்தியாமை; தீயன சொல்லாமை, தீயன செய்யாமை வேண்டும் என்பதே.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேர்மை கடைபிடி Empty Re: நேர்மை கடைபிடி

Post by Ramalingam K Mon Sep 12, 2016 12:02 am

ஸ்ரீகுருவே நம:

அறிந்து கொள்வோம் ஆன்மீகம் - 1.

ஆன்மீகம் என்றால் என்ன?

ஆன்மீகம் என்னும் பதம் பொதுவாக இறைநம்பிக்கை; இறைவழிபாடு மற்றும் மதச் சார்பான செயல்பாடுகள் என்றே பலராலும் கருதப்படுகிறது. அதுவல்ல ஆன்மீகம் என்பதே உண்மை .

ஒருசிலர் ஆன்மீகத்தை ஆஸ்திகம் என்றும் சொல்கிறார்கள். ஆஸ்திகம் என்னும் சம்ஸ்க்ருத சொல் நம் அமுதத் தமிழில் ஆத்திகம் எனப்படுகிறது. ஆஸ்திகம் என்னும் சொல் அஸ்தி (अस्ति ) என்னும் சம்ஸ்க்ருத வினைச் சொல்லில் இருந்து வந்த பெயர்ச்சொல். இவ்வாறு அமையும் பெயர்ச்சொற்களுக்கு சம்ஸ்க்ருத இலக்கணத்தில் தத்திதாந்தம் என்று பெயர்.

அஸ்தி என்றால் இருக்கிறது என்று பொருள். அதாவது கடவுள் என்னும் ஒன்று இருக்கிறது என்னும் நம்பிக்கைக்கு ஆஸ்திகம் என்று பெயர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஆஸ்திகர்கள் எனப்படுகின்றனர். இறை நம்பிக்கை; இறைவழிபாடு மற்றும் மதச் சார்பான செயல்பாடுகள் எல்லாம் ஆஸ்திகம் என்னும் வரையறையில் வருவன.

கடவுள் இல்லை என்போரும் இருக்கின்றார்களே ! அவர்களை நாஸ்திகர்கள் என்கிறோம். அஸ்திக்கு எதிர்ப்பதம் நாஸ்தி என்பது - அதாவது ந+ அஸ்தி = நாஸ்தி ( न +अस्ति = नास्ति)- இருப்பதில்லை என்பது நாஸ்தி என்பதன் பொருள். ஆகவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நாஸ்திகர்கள் எனப்படுகிறனர்.

கடவுள் பற்றிய இருப்போ அல்லது கடவுள் இன்மையோ என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட சிந்தனை உரிமை - நம்பிக்கை உரிமை . அதில் பிறிதொருவர் தம் கருத்தைத் திணிப்பதே வன்மம்.

இது தவிற வைதீகம் என்று ஒரு பதமும் ஆஸ்திகத்தோடு ஒட்டிக் கொண்டு குழப்பத்தை உண்டுபண்ணுவது. ஆஸ்திகமும் வைதீகமும் ஒன்றுதான் என்று குழம்புபவர்களும் உண்டு.

ஆஸ்திகம் என்பது வேறு. வைதீகம் என்பது வேறு. வைதீகம் என்ற சொல் வேதம் என்னும் இன்னொரு பெயர்ச்சொல்லில் இருந்த வரும் பிறிதொரு பெயர்ச்சொல். வைதீகம் என்றால் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளை அப்படியே ஏற்பது என்று பெயர். அவைதீகம் என்பது வைதீகத்திற்கு எதிரானது. அவைதீகம் வேதக் கருத்துக்களை ஏற்பதில்லை.

ஆக ஆஸ்திகம், வைதீகம் என்பவை இரண்டும் வேறு வேறானவை. அது எவ்வாறு என்று கேட்கத்தோன்றும் . வேதம், பரம்பொருளைப் “ப்ரம்மம்” என்கிறது. அது ஒரு பிரபஞ்சப் பேராற்றல் அவ்வளவுதான். வேதத்தில் கடவுள் வழிப்பாடு இல்லை. இயற்கை வழிபாடு மட்டுமே இருக்கின்றது.

ஆனால் ஆஸ்திகம் வேதத்தோடு தொடர்பு இல்லாதது. ஆஸ்திகம் பற்பல கடவுள்களையும் அவற்றிற்கு உருவங்களையும் கொடுத்திருப்பதோடு தெய்வங்களுக்குள் மானுடர்களைப்போல் உறவு முறை, திருமணம், தெய்வங்களுக்குக் குழந்தைகள், அந்த தெய்வங்களின் வீர தீர சாகசங்கள் எல்லாம் உள்ளன என்பது நாம் அறிந்ததே.

ஆன்மீகம் என்பது இந்த ஆஸ்திகம் , வைதீகம் ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டது. அவை இரண்டும் நம்பிக்கையை அடிபடையாகக் கொண்டவை. ஆனால் ஆன்மீகம் அறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு விஞ்ஞானத்தோடு கூடிய மெய்ஞ்ஞானம்.

ஆன்மீகம் என்னும் பதம் , ஆன்மா + இகம் என்று பிரிக்கப்படலாம். இதில் ஆன்மா என்பது பரம்பொருள் அல்லது பரமாத்மா எனப்படுவது. இது தோற்றம், மாற்றம் மற்றும் மறைவு (அழிவு) என்பன போன்ற எந்த நிலைக்கும் உட்படாததாய் , ஆனாலும் அவற்றிற்கெல்லாம் மூல காரணமாவது என்று அறியத்தக்கது.

இகம் என்றால் இம்மை – அதாவது இப்பிறவி என்பதாகும்.

ஆக ஆன்மீகம் என்பது இப்பிறவியிலேயே பரம்பொருளை அறிந்து கொள்ளுதல் என்று பொருள் படும். பரம்பொருள் அடையப்பட வேண்டியதா அல்லது அறியப்பட வேண்டியதா எனில் அது அறியப்பட வேண்டியதே. எங்கும் இருக்கும் அந்த பரம்பொருளை எங்கு சென்று தேடி அடைவது!

ஆன்மீகத்தைத் தொடர்ந்து சிந்திப்போம் - - - - - -


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேர்மை கடைபிடி Empty Re: நேர்மை கடைபிடி

Post by Ramalingam K Mon Sep 12, 2016 9:43 pm



தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 5 ( விநாயகர் அகவல்) .
தமிழ்ப்பாட்டி தரும் தகைமிகு யோக நெறி
(ஔவையார் அருளிய விநாயகர் அகவல்)

ஒன்றேயாகிய பரம் பொருளை ஔவையார் ஸ்ரீ குருதேவராகவே காண்பதாக அகவல் வரிகள் அமைந்துள்ளன. அகவலின் இறுதி அடி, “வித்தக விநாயக விரைகழல் சரணே” என்று முடிவடைகிறது. ஆகையால் அகவலின் ஒவ்வொரு அடியையும், ‘வித்தக விநாயக’ என்பதைமுன்னிட்டு பொருள் கொள்வது நன்மை பயப்பதாக அமையும். அதன்படி ஔவையார் அருளிய விநாயகர் அகவலின் முதல் இருஅடியின் பொருளைக் காண்போம் :


வித்தக விநாயக!
சீதக் களபச் செந்தா மரைபூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட (2)

பதப்பொருள் :
வித்தகம் - அறிவு; கல்வி; சின்முத்திரை.
சீதம் – குளிர்ச்சி;இன்பம்; இணக்கம்;
களபம் – கலவை ; மேற்பூச்சு
செம்மை - நேர்மை மனக்கோட்டமின்மை; ஒற்றுமை; பெருமை; தூய்மை; அழகு.
தாமரை- திருமகள் ; செல்வம்; ஆபரணம்.
பூ – பூமி; பிறப்பு; மென்மை; அழகு.
பாதம் – யோகவகை; ஒன்றோடொன்று இணைந்து இருத்தல்.
சிலம்பு – ஒலி; முழக்கம்;
இசை – இனிமை.
பாடுதல் –அறம்; ஒழுக்கம்.

தெளிவுரை :
சின்முத்திரையிட்டு அறிவின் திருவுருவாய் விளங்கி மானுடப் புறக்கண்களுக்குக் காட்சியாகும் பரம்பொருளே ! ஸ்ரீகுருதேவா !
உலக மக்கள் யாவரும் ஏற்கும் வகையில் இணக்கம் நிறைந்தவராய், யாவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத பண்புள்ளத்தை ஆபரணமாகக் கொண்டவர் தாங்களே !
இப்பூமியில் மானுட வடிவம் தாங்கி பிறப்பெடுத்தீர்கள். உலக இருப்புக்களின் மீதான பற்றுக்களை நீக்கி, ஆன்ம விடுதலையைக் கொடுக்கவல்ல அஷ்டாங்க யோக நெறிகளைப் பலரும் அறியும் வண்ணம் ஒலிமுழக்கத்கோடு இனிமையுடன் அவ்வொழுகலாறுகளைக் கற்பிக்க வல்லவர் தாங்களே!


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேர்மை கடைபிடி Empty Re: நேர்மை கடைபிடி

Post by Ramalingam K Mon Sep 12, 2016 9:51 pm

தெரிந்துகொள்வோம்தேன் தமிழை – 2 (ஔவைக்குறள்)
ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)
உலகின் உயர்தனிச் செம்மொழியாம் நம் அமுதத் தமிழில் பெண்பாற் புலவர்களில் நமக்கு மிகவும் அறிமுகமானவர் நமது தமிழ்ப்பாட்டி ஔவையார்தான். அவர் ஒரு சகலகலா வல்லவர். வாழும் மானுடத்திற்கு இல்லறநெறிகளாக ஆத்திச் சூடி, ஞானநெறிகளாகக் கொன்றைவேந்தன், யோக நெறிகளாக விநாயகர் அகவல் ஆகியனவற்றை அருளியவர்.
குறள் என்றதும் நம் அனைவருக்கும் நினைவில் வருவது நமது உலகப் பொதுமறையாகும் தமிழ்வேதம் - திருக்குறள்தான். ஆனாலும் கீதையைப்போலவே குறட்பாக்களும் அநேகம் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நம் தமிழ்ப்பாட்டி ஔவையாருடைய, “ஔவைக்குறள்” ஆகும். ஔவைக்குறளும் முப்பால் கொண்டது . அவை , 1 வீட்டு நெறிப்பால்; 2.திருவருட்பால்; 3 தன்பால் என்பன. ஔவைக்குறளின் உட்பிரிவுகளுக்கும் அதிகாரம் என்றே பெயர். ஒவ்வொரு அதிகாரமும் 10 குறட்பாக்கள் கொண்டவை. முதற்பாலாகிய வீட்டு நெறிப்பால் 10 அதிகாரங்களையும், இரண்டாம் பாலாகிய திருவருட்பால் 10 அதிகாரங்களையும், மூன்றாவது பாலாகிய தன்பால், 11 அதிகாரங்களையும் கொண்டு, மொத்தம் 31 அதிகரங்களில் 310 குறட்பாக்களாக ஔவைக்குறள் என்னும் அற்புத நூல் நிறைவடைகிறது. ஔவைக்குறளும் அற்புத அறிவுத்தெளிவைத் தருவதே. சற்றே ஔவைக்குறளையும் ஆராய்வோம்.

வீட்டு நெறிப்பால்
அதிகாரம்1.
பிறப்பின் நிலைமை.

1. ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன் (1 -01)

தெளிவுரை:
உலகத்தின் தொடக்கத்திற்கும் தொடக்கமாகி , இவ்வுலகத்தின் இருப்புக்கள் அனைத்திற்கும் நேரம், இடம் முதலியவற்றால் முன்னதாகவும், முதன்மையாகவும் இருந்துகொண்டு, எப்போதும் மாற்றத்திற்கும் அழிவிற்கும் உள்ளாகாமல் நிலைத்திருக்கும் பரம்பொருளே(பரமாத்மாவே) இவ்வுலகில் எங்கும் எதிலும் நிலைகொண்டிருப்பதைச் சிந்திப்பதே அறிவு படைத்த மானுடர்கள் அடையும் முதன்மைப்பயன்.

பதப்பொருள் :
ஆதி – தோற்றம்; எழுச்சி.
அறிவு – ஆத்மா
முதல் –நேரம், இடம் முதலியவற்றால் முன்னதாகவும், முதன்மையாகவும் இருப்பது.
எழுத்து –அக்கரம்(அஷரம்) ; எப்போதும் மாற்றத்திற்கும் அழிவிற்கும் உள்ளாகாமல் நிலைத்திருப்பது.
ஓதுதல் -சிந்தித்தல்; தியானித்தல்
நூல் – சாத்திரம்(சாஸ்த்ரம்); கல்வி அறிவு.
பயன் – பலன்.

பதவுரை :
ஆதியாய் நின்ற அறிவு முதலெழுத்து
- பிரபஞ்சத்தினுடைய தொடக்கத்திற்குத் தொடாக்கமாகவும் பரம்பொருள் - நேரம், இடம் முதலியவற்றால் முன்னதாகவும், முதன்மையாகவும் இருந்து கொண்டு, என்றும் எப்போதும் மாற்றத்திற்கும் அழிவிற்கும் உள்ளாகாமல் நிலைத்திருப்பது.
ஓதிய நூலின் பயன்
- சிந்திப்பதே கல்வி அறிவின் முதற் பலன்.

விளக்கவுரை:
பரம்பொருள் மட்டுமே பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்கும் தொடக்கமாவது. ஆகையால் அது தோற்றம் மாற்றம் மறைவு ஆகிய எதுவும் இல்லாது எப்போதும் நிலைத்திருப்பது. அதனைச் சிந்தித்து, உலக இருப்புக்கள் யாவும் பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்ற முடிவுக்கு வருதலே மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கமும் மனிதன் கற்கும் அனைத்துக் கல்வியாலாகும் பலனும் ஆகும் என்பது பொருள்.
உலகத்தில் உள்ள அனைத்துச் சமய நூல்கள், நீதி நூல்கள், பக்திநூல்கள், ஞானநூல்கள், இல்லற மற்றும் துறவற நெறிகளை வரையறுக்கும் நூல்கள் மற்றும் நமது பாரதத்தின் ஞானக் களஞ்சியமாகும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் ஆகிய அனைத்தும் போதிக்கும் அத்தனையையும் பிழிந்து சாராக்கி அந்த மொத்த சாற்றையும் வேதிவினைப்படுத்தி, அதனை ஒரு மிகச்சிறிய குளிகை(capsule) யாக்கி,அதனை மானுடம் ஏற்றுப்பயன்பெற வேண்டும் என்ற நோகக்த்திலும் ஆர்வத்திலும் உலக மானுடம் யாவைக்கும் இந்த அற்புதக் குறளில் அழகாக அளித்துள்ள நம் ஔவைக்கு நமது முதல் வணக்கம்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேர்மை கடைபிடி Empty Re: நேர்மை கடைபிடி

Post by Ramalingam K Mon Sep 12, 2016 9:56 pm

தெரிந்து கொள்வோம் தன் தமிழை -4
ஸ்ரீ குருவே நம:
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கைநெறி”
மானுட வாழ்விற்குத் தேவையான அறநெறிகளை நம் அழகு தமிழில் எளிய சொற்களால் இனிய உயர்ந்த பொருளாழத்துடன் கூடிய பாடல்களாகத் தம் நூல்களில் நம் தமிழ்ப்பாட்டி ஆக்கிவைத்துள்ளார். அவர் அபரிமிதமான‌ அறிவாற்றலும், அற்புதமான கவியாற்றலும் வாய்க்கப் பெற்றவர். எளிமை, நேர்மை, தூய்மை, உண்மை ஆகியனவற்றைத் தம் அழகிய சொல்லாற்றலால் நிறைந்த பொருள் வளத்தோடு கூடியதாய் நமக்கு நம் பாட்டி தந்துள்ள பாடல்கள் -‍ குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படும் புறத்திணைப் பாடல்கள் 33, அகத்திணைப் பாடல்கள் 26 என்னும் 59 சங்கப்பாடல்கள் என்றும் , மற்றும் தனிப்பாடல்கள், நீதிநூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்), சமயநூல்கள் (விநாயகர்அகவல், ஔவைகுறள்), சிற்றிலக்கியம் (அசதிக்கோவை, பந்தன அந்தாதி- இவ்விரண்டும் காலத்தால் காணாமல் போனவை) ஆகியன என்றும் சரித்திர ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன.
ஆங்கில வழி கல்விமோகமும், உயர்பதவியும், அதிக பொருளும் தம் பிள்ளைகள் ஈட்டிச் செல்வச் செழிப்புடன் வாழவேண்டும் என்னும் நோக்கத்தால் தற்காலக் கல்விமுறையில் நம் பாட்டிதரும் ஞானத்தை நம்மில் பலரும் மறந்துவிட்டோம் . தற்கால இளைஞர்கள் தம் பிள்ளைகளுக்கும், முதியோர்கள் தத்தம் பெயரக் குழந்தைகளுக்கும் நாள்தோறும் நம் பாட்டி நமக்குச் சொல்லி வைத்துள்ள இல்லற மற்றும் ஆன்மீக வாழ்க்கை நெறிகளை நாளொன்றிற்கு ஒரு கருத்தாக அவர்கள் உள்ளத்தில் ஆழப் பதியவைத்தால் நம் பாரத தேசம் எதிர்காலத்தில் தன் பெயருகேற்றவாறு ஒளிரும் பிரகாசத்துடன் மிளிரும் என்பது நம் நம்பிக்கை. ஔவையின் கருவூலப் பெட்டகத்திலிருந்து காணப்போவது “ஆத்திச்சூடி”என்னும் அற்புதப் படைப்பு. இந்நூல் 108 பாடல்களைக் கொண்ட ஓரடிச் செய்யுள்.

ஆத்தி என்றால் செல்வம், அடைய வேண்டியது என்றும் சூடுதல் என்றால் அணிதல் என்றும் பொருள் கொண்டு ஆத்திச்சூடி என்னும் நூற்பெயர் , “ மானுடம் வாழ்வில் தாம் விரும்பி அணிந்து கொள்ள அடையவேண்டிய செல்வம்” என்ற அற்புதப் பொருள் வாய்ந்தது. இனிப் பாடலைப் பார்ப்போம். முதலில் மங்கல வழ்த்து.
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.
பதப் பொருள்:
ஆத்தி - செல்வம்; அடைய வேண்டியது.
சூடுதல் -அணிதல்
அமர்தல் – பொருந்தல்
தேவன் – சான்றோன்.
ஏத்துதல் – துதித்தல்; புகழ்தல்; உயர்த்திக்கூறுதல்; வாழ்த்துதல்.
தொழுதல் - வணங்கல்.
யாம் –நாம்; தன்மைப்பன்மைப்பெயர்.

தெளிவுரை :
உலகில் மனிதன் அடையவேண்டிய செல்வங்களாக ஆத்திச்சூடி என்னும் இந்நூலில் கூறப்போகின்ற நெறிமுறைகளாகும் அறிவுரைகளை விரும்பிக் கடைப்பிடித்து அவைகளைத் தம் வாழ்நாள் முழுமைக்கும் தமக்கு ஏற்ற ஆபரணமாக அணிந்து அவ்வறநெறிகளுக்குத் தகுந்தாற்போலத் தம் வாழ்வை அவற்றோடு பொருத்தி வாழ்கின்ற மனிதருள் சான்றோனாகிய அந்த உயர் தன்மை உடைய சான்றோனை மீண்டும் மீண்டும் புகழ்ந்து நாம் அனைவரும் வணங்குவோம்.
அதாவது இந்நூலில் சொல்லப்போகின்ற அறநெறிகள் மனிதர்களால் தத்தம் வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு ஏற்றவைகளே. அவ்வாறு வாழப்போகும் மனிதர்களுள் சிறந்த சான்றோனை அவனது புகழ்பாடி நாம் முன்கூட்டியே வணங்குவோம் என்பது கருத்து.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேர்மை கடைபிடி Empty Re: நேர்மை கடைபிடி

Post by Ramalingam K Mon Sep 12, 2016 10:07 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6

ஸ்ரீ குருவே நம:
நன்றே நவிலும் கொன்றை வேந்தன்
(ஔவையார் அருளியது)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி”

மானுடர் யாவருக்கும் ஸ்ரீகுருதேவரே கண்கண்ட தெய்வமாகிறார். அறியாமையகிய இருளை அகற்றி அறிவுடைமை என்னும் ஒளியைத்தூண்டி அதனை ஒவ்வொருவருக்குள்ளும் நிலைபெற வைப்பவர் ஸ்ரீ குருதேவர்.
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் தன்னுடை அன்றைய தினம், தான் எதற்காக எதனையெல்லாம் செய்து முடித்தோம் என்று இரவு படுக்கப்போகுமுன் சிந்தித்தால் அன்றைய நாள் முழுமைக்குமான அவனது உழைப்பின் பலன் அனைத்தும் அவனது வாழ்வில் பசியாற உண்பதற்காகவும் நிம்மதியாக உறங்குவதற்காகவும் மட்டுமே இருக்கும். இவை இரண்டைத் தவிற வேறில்லை. இதில் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பே இல்லை.
குடும்ப வாழ்க்கையில் உண்ணும் உணவிற்கானக் கல்வியைக் கற்பித்து ஒருவரின் வாழ்விற்கு வழிசெய்பவர் ஆசிரியர். மனிதனுக்கு மனநிறைவையும் நிம்மதியான உறக்கத்தையும் கொடுத்துக் கூடவே ஆத்மவிடுதலை என்னும் பிறவா நிலையையும் தரும் ஞானக்கல்வியை அருளுபவர் ஸ்ரீஞானகுரு .

ஞானநூல்கள் பற்பல பலராலும் எழுதப்பட்டிருந்தாலும் எளிமையாகவும், இயல்பாகவும், யாவரும் புரிந்துகொள்ளும் வகையிலும் பொருளாழத்தோடு நமது ஔவைப்பாட்டி அருளிய ஞான நூல்தான் கொன்றை வேந்தன். ஆகையால் நம் தமிழ்ப்பாட்டியின் ஞான சிந்தனைப் பெட்டகமான கொன்றைவேந்தன் என்னும் நூலைத் “ தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி - நன்றே நவிலும் கொன்றை வேந்தன் ” என்ற பொருளில் காண்போம்.

கடந்த 1960களில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் இந்த அற்புத ஞானம் மேம்போக்காக சிறார்களுக்குக் கற்பிக்கப்பட்டதால், அடியனும் ஆசிரியரின் முன் கைகட்டி நின்றுகொண்டு கற்றதுதான் இந்த கொன்றைவேந்தன் என்னும் ஞானக் களஞ்சியம். அறியாப் பருவத்தில் மேம்போக்கான பொருளில் மனப்பாடமாகக் கற்ற இந்த ஞானப் பெட்டகத்தைத் திறந்து நாம் அனைவரும் இப்போது அதன் உண்மைப்பொருளை விளங்கிக் கொள்வோம். நம் குழந்தைகளுக்கும், பெயரப் பிள்ளைகளுக்கும் மற்றும் அனைத்துச் சிறார்களுக்கும் இந்த அமிர்தத்தைக் கற்பிக்க முயல்வோம். அதன் பயனாய் நல்ல மக்கட்செல்வத்தை நம் வீடும் நாடும் பெற்று மேன்மையடைய வேண்டுமென்று ஸ்ரீகுருதேவரைப் பிரார்த்திப்போம். ஸ்ரீகுருவே நம:
கொன்றை வேந்தன்
நூற்பெயர் விளக்கம்
கொன்றை என்றால் மதிமயக்கம். வேந்தன் என்றால் அருமருந்தாக ஆகுபவன். ஆக, கொன்றை வேந்தன் என்றால் மானுடரின் மதிமயக்கத்திற்கான அருமருந்தாகும் ஞானம் என்று பொருள்.
மங்கல வாழ்த்துப் பாடல்
கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
தெளிவுரை :
மானுடரின் மதிமயக்கத்திற்கு அருமருந்தாக விளங்கப்போகும் ( நான் – ஔவையார் - சொல்லஇருக்கின்ற) இந்த ஞான போதனைகளைக் கடைப்பிடித்து வாழும் ஒழுக்க சீலனின் திருவடிகளை எந்நாளும் போற்றி நாம் அனைவரும் வணங்கலாமே.
விளக்கவுரை:
ஔவைப்பிராட்டியார் இப்போதுதான் தன் ஞான போதனையை துவக்குகிறார். மானுடம் இந்த ஞானத்தைக் கடைப்பிடித்து வாழும் என்று நம்புகின்றார். அவ்வாறாகப் பின்னாளில் இந்த ஞான நெறிகளைக் கடைப்பிடித்து இல்வாழ்க்கை வாழவிருக்கும் அந்த உத்தமோத்தமனுக்கு முன்கூட்டி இப்போதே தன்னுடைய வணக்கத்தைச் சமர்ப்பிக்கின்றார். அதோடு அந்த பவித்திரனை நம் அனைவரையும் வணங்குமாறும் வேண்டுகின்றார். ஞானம் பெறுபவன் ஞானியல்லவா ! அதனால் அவன் வயது பேதமின்றி அனைவராலும் அவன் வணங்கத்தக்கவன் ஆகிறான். ஆகவேதான் இந்த முன்னேற்பாடும் அறிவுரையும் நம் தமிழ்ப்பாட்டியிடம் இருந்து வருகின்றன என நாம் தெளியலாம்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேர்மை கடைபிடி Empty Re: நேர்மை கடைபிடி

Post by Ramalingam K Tue Sep 13, 2016 12:03 am

அறிந்து கொள்வோம் ஆன்மீகம் - 1.

யார் மனிதன் ? மனம் என்றால் எது ? அறிவு என்பது என்ன?

மனம் – மனம் என்கிறோமே - அது எது ? நம்மில் எங்கே இருக்கிறது?

மனித மூளையின் இயக்கம்தான் மனம் ( The function of the brain is called Mind). மனித மூளை நம்மிலேயே உயர்வான இடமாகிய தலையில் வெகு பாதுகாப்பாக இருப்பது. மனத்தின் ஆற்றலே அறிவு .
மனித மூளை மூன்று பிரிவுகளை உடையது. அவை சிறு மூளை(cerebellum) ; பெருமூளை (Cerebrum); முகுளம்(Medulla) என்பன.
அவற்றில்
1. சிறுமூளையின் இயக்கம் – மனம் ; மனத்தால் வாழ்பவன் மனத்தன் – மனிதன்.
2. பெருமூளையின் இயக்கம் – புத்தி ; புத்தியால் வாழ்பவன் புத்தன்.
3. முகுளத்தின் இயக்கம் – சித்தம் – சித்தத்தால் வாழ்பவன் சித்தன்

மனம் – ஆசை (பற்று) என்னும் அறிவு வயப்பட்டது.
புத்தி - தர்மம் மற்றும் அதர்மம் பற்றிய பாகுபாடு காணும் அறிவு வயப்பட்டது
சித்தம் – பாவம் மற்றும் புண்ணியம் பற்றிய சிந்தனை வயப்பட்டது.


மனத்தால் ஆசை என்னும் சிற்றறிவு வயப்பட்டு வாழும் மனிதன் – ஜீவாத்மா .
புத்தியால் பகுத்தறிவு என்னும் பேரறிவு வயப்பட்டு வாழும் புத்தன் – மகாத்மா.
சித்தத்தால் மூதறிவு என்னும்
- போதனா ஞானம் பெற்று வாழ்பவன் - ஞானி;
- போதனா ஞானத்தோடு பயிற்சியையும் சாதித்தவன் - வாலறிவன்- யோகி – பரமாத்மா.

இவர்களில் நாம் யார் !!!


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேர்மை கடைபிடி Empty Re: நேர்மை கடைபிடி

Post by Ramalingam K Tue Sep 13, 2016 10:33 pm


மனித உடம்பு மெய்யா அல்லது பொய்யா !

மணிவாசகர், தம் திருவாசகத்தில் , “மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து . . . . .” என்று உடம்பை மெய் என்கிறார். ஆனால் “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்கிறார் பட்டினத்தார்.
இரண்டும் மேலோர் வாக்கு. ஆனால் ஒன்றுக்கொன்று எதிரானதாகின்றனவே.இவற்றில் எது சரி!

பொய் என்றால் மாற்றத்திற்குள்ளாவது. தோற்றமும் மாற்றமும் முடிவும் கொண்டது. உடம்பு , தாயின் கருவிலிருந்து தோன்றுகிறது. பின் வளர்ச்சி என்னும் பெயரில் மாற்றம் அடைகிறது. மரணத்திற்குப் பின் முடிந்து விடுகிறது. ஆகையால் உடம்பு என்பது பொய்தான்.

தோற்றம், மாற்றம், மறைவு என்று எந்த வரையறைக்கும் உட்படாமல் என்றும் நிலைத்திருப்பதே மெய். பரம்பொருள் என்பது மெய். ஆத்மா என்பது பரம்பொருள் . உடம்பிற்குள் இருப்பதும் அவ்வுடம்பை இயக்குவதும் ஆவது ஆத்மா. உடம்பில் ஆத்மா இருப்பதால் அது மெய் என்றும் பேசப்படுகின்றது.ஆக உடம்பை மெய் என்பதும் சரியே.

நம் உடம்பு ஒருகோணத்தில் பார்த்தால் பொய் என்றும் இன்னொரு கோணத்தில் பார்த்தால் மெய் என்றும் காட்சியாகிறது. ஆக நம் உடம்பு பொய்+ மெய் = பொய்மெய் – அதாவது பொம்மை. பொம்மையாகிய இந்த உடலால் வாழும் மானுட வாழ்வு ஒரு பொம்மலாட்டம்தானே. உலகம் என்னும் நாடகமேடையில் நடைபெறும் பொம்மலாட்டம்தானோ நம் மானுட வாழ்வு!


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நேர்மை கடைபிடி Empty Re: நேர்மை கடைபிடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum