புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
6 Posts - 46%
heezulia
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
372 Posts - 49%
heezulia
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
25 Posts - 3%
prajai
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நேர்மைக் கடைப்பிடி Poll_c10நேர்மைக் கடைப்பிடி Poll_m10நேர்மைக் கடைப்பிடி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மைக் கடைப்பிடி


   
   

Page 1 of 2 1, 2  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 09, 2016 4:40 pm

ஸ்ரீ குருவே நம:
ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)
உலகின் உயர்தனிச் செம்மொழியாம் நம் அமுதத் தமிழில் பெண்பாற் புலவர்களில் நமக்கு மிகவும் அறிமுகமானவர் நமது தமிழ்ப்பாட்டி ஔவையார்தான். அவர் ஒரு சகலகலா வல்லவர். வாழும் மானுடத்திற்கு இல்லறநெறிகளாக ஆத்திச் சூடி, ஞானநெறிகளாகக் கொன்றைவேந்தன், யோக நெறிகளாக விநாயகர் அகவல் ஆகியனவற்றை அவர் தந்தமையை நமது குழுமப் பகிர்வில் முறையே 20.02.2016 முதல் நேற்று ( 05.09.2016) வரைக் கண்டோம்.
கீதை என்றால் ஸ்ரீமத் பகவத் கீதைதான் எல்லோருடைய நினைவிற்கும் வரும். ஆனால் பகவத் கீதையைத் தவிறவும் 1. உதத்திய கீதை, 2. வாமதேவ கீதை, 3. ரிஷப கீதை, 4. ஷடாஜ கீதை, 5. சம்பக கீதை, 6. மங்கி கீதை, 7. போத்திய கீதை, 8. ஆரித கீதை, 9. விருத்திர கீதை, 10. பராசர கீதை, 11. ஹம்ஸ கீதை, 12. கபில கீதை, 13. பிட்சு கீதை, 14. தேவி கீதை, 15. சிவ கீதை, 16. ரிபு கீதை, 17. ராம கீதை, 18. சூர்ய கீதை, 19. வஷ்ட கீதை, 20. அஷ்டாவக்ர கீதை, 21. அவதூத கீதை, 22. உத்தவ கீதை, 23. பாண்டவ கீதை, 24. வியாபன கீதை , 25. பிரம்ம கீதை , 26. உத்திர கீதை; 27 ஸ்ரீகுருகீதை என்றும் , அவற்றிற்கு மேலும் பல்வேறு கீதைகள் உள்ளன.

அதுபோலவே குறள் என்றதும் நம் அனைவருக்கும் நினைவில் வருவது நமது உலகப் பொதுமறையாகும் தமிழ்வேதம் - திருக்குறள்தான். ஆனாலும் கீதையைப்போலவே குறட்பாக்களும் அநேகம் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் நம் தமிழ்ப்பாட்டி ஔவையாருடைய, “ஔவைக்குறள்” ஆகும். ஔவைக்குறளும் முப்பால் கொண்டது . அவை , 1 வீட்டு நெறிப்பால்; 2.திருவருட்பால்; 3 தன்பால் என்பன. ஔவைக்குறளின் உட்பிரிவுகளுக்கும் அதிகாரம் என்றே பெயர். ஒவ்வொரு அதிகாரமும் 10 குறட்பாக்கள் கொண்டவை. முதற்பாலாகிய வீட்டு நெறிப்பால் 10 அதிகாரங்களையும், இரண்டாம் பாலாகிய திருவருட்பால் 10 அதிகாரங்களையும், மூன்றாவது பாலாகிய தன்பால், 11 அதிகாரங்களையும் கொண்டு, மொத்தம் 31 அதிகரங்களில் 310 குறட்பாக்களாக ஔவைக்குறள் என்னும் அற்புத நூல் நிறைவடைகிறது. ஔவைக்குறளும் அற்புத அறிவுத்தெளிவைத் தருவதே.
பெரும் பொருட்செல்வத்தை ஈட்டுவதிலேயே குறிக்கோளாகக் கொண்டு ,இன்றைய உலகம் ஓடுகின்றது - தம் பிள்ளைகளையும் அவ்வாறே ஓட வைக்கின்றது . அதன் விளைவாய்ப் பிள்ளைகளைப் பொருள் ஈட்டும் இயந்திரமாக ஆக்குவதில் பள்ளிக்கல்வி ஆரம்பம் முதலே மானுடம் முழு ஈடுபாடு காட்டுவதால், பெற்றோரும் பிள்ளைகளும் நிலையில்லாத செல்வத்தையே நாடுதலிலேயே தம் முழு கவனத்தையும் ஈடுபடுத்தி, ஆடம்பர வாழ்விலும் ஆரவாரத்திலும் அவ்வாறு சம்பாதித்தப் பொருளைச் செலவழித்து,முடிவில் நிலையான மன நிம்மதியை இழந்து தவிப்பதை பொதுவாக நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோமே தவிற, மாற்றத்திற்கான பிற எதனையும் செய்ய இயலவில்லை.
அந்த மாற்றத்திற்கான ஒரு முயற்சியாகத் தான், நமது தமிழ்நூல்கள் மற்றும் சம்ஸ்க்ருத நூல்கள் ஆகியன காட்டும் நீதிநெறிகளையும், மானுட ஒழுகலாறுகளையும் ஒவ்வொன்றாக அனுதினமும் நமது குழுமப் பகிரிகளில் பகிர்ந்து வருகிறோம். நல்வழிக்கான வித்துக்களை விதைத்து வைப்போம். அது வளர்ந்து முழுமை அடையும் தருணத்தில் அவற்றைப் புரிந்து வாழும் விதியின் பதிவுகளோடு பிறக்கும் மனிதர்களுக்கு அவை பயன்படட்டும். இல்லையேல், ‘நாம் அதற்கு என்செய்வோம்’ என்னும் மனநிம்மதியாவது நமக்குக் கிட்டட்டும் .
அத்தகைய எண்ணத்தில் உதயமாகி , இனி நாம் பார்க்கப்போவதுதான் ஔவைக்குறள்.

என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009 09.09.2016.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 09, 2016 4:47 pm

ஸ்ரீ குருவே நம:
குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது.
உலகெலாம் அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடந்த அந்த ஆதிகாலத்தில், ஞான ஒளியால் பிரகாசித்ததால் நமது நாடு பாரதம் எனப்பட்டது. பாரதம் என்றால் ஒளிரும் பிரகாசம் (Shining Brightness) என்று பொருள். பாரதம், வேதங்களால் பிரகாசித்தது. வேதம் என்றால் உண்மை அறிவு - அதாவது மெய்ஞ்ஞானம் என்று பொருள்.


தோற்றமும் முடிவும் இல்லாததாய் - எப்போதும் மாறாமல் இருப்பது எதுவோ அதுவே சத் – உண்மை; மெய்மை; வாய்மை என்று மூவகையாலும் அழைக்கப்படுவது. அந்த ‘சத்’ பற்றி அறிவதே மெய்ஞ்ஞானம். இதனை நமக்கு அறிவுறுத்திக் கற்பிப்பவரே குரு.

உலகியல் வாழ்விற்கானப் பொருளை அறவழியில் ஈட்டி இல்வாழ்க்கையை வாழ்வதற்கான கல்வியை அளிப்பவர் ஆசிரியர் - ஆசான் எனப்படுபவர். ஆசிரியர் கற்பிக்கும் கல்வியும் அதனால் கிடைக்கும் அறிவும் மாற்றத்திற்குள்ளாவது- மாறிக்கொண்டே இருப்பது- நிலைத்தன்மை இல்லாதது. ஆசிரியர் அளிப்பது வாழ்க்கைக் கல்வி –அதாவது இகக்கல்வி. அக்கல்வியால் அடையப் பெறும் பயன் சிற்றின்பம் . அந்த சிற்றின்பமும் மாற்றத்திற்கு உள்ளாகும் தன்மையானதே.

இல்வாழ்விற்கான அறிவைக் கற்பிக்கும் ஆசிரியர், இவ்வுலகில் மனிதனின் அடிப்படைத் தேவையாகிய அவன் வாழ்வதற்குத் தேவையானப் பொருள் ஈட்ட வகைசெய்கிறார். இக்கல்வியின் பயன் உடம்பிற்கும் உயிருக்கும் ஆனது. ஆனால் ஆசிரியர் என்பவர் குருவாகமாட்டார். ஒருவர் ஆசிரியரும் குருவாகவும் ஆவாராகில் அவர் குரு என்றே அழைக்கப்பட வேண்டியவர். ஒவ்வொரு மனிதனாலும் வணங்கப்பட வேண்டியவர் ஆசிரியர்.

குரு என்னும் சொல் பரந்து விரிந்த பொருள் வளம் கொண்டது - ஆசிரியர், தந்தை, பெரியது, சான்றோன், மூத்தோன், கடவுள் என பொருள் விரிந்து கொண்டே போகும்.ஆக குரு என்ற பதம் ஆசிரியர் என்னும் பொருளையும் தன்னகத்தே கொண்டு அதற்கும் மேலானது. மொத்தத்தில் குரு என்பவர் ஆசிரியரும் ஆவதோடு அதற்கு மேலான நிலையிலும் இருப்பவராகிறார். ஆக ஆசிரியரையும் குரு என்பது வழக்கத்தில் இருந்தாலும் ஆசிரியர் எனப்படுபவர் வேறு - குரு என்பவர் வேறு. ஆசிரியரைவிட குரு மேலானவர். இன்பம் விழையாது இடும்பை இயல்பென்பவரே குரு.

‘கு’ என்றால் அஞ்ஞானமாகிய இருள்- அதாவது அறியாமையில் உண்டாகும் மயக்கம் என்று பொருள். ‘ரு’ என்றால அறிவுடைமையாகிய ஒளி – அதாவது அறிவுத் தெளிவு என்று பொருள் . ஆக, குரு என்னும் பதம் , அஞ்ஞானம் என்னும் மயக்க அறிவைப் போக்கி மெய்ஞ்ஞானம் எனப்படும் தெளிந்த அறிவை அளிப்பவர் என்ற அற்புதப் பொருள் விளக்கம் கொண்டது.

குரு கற்பிப்பது பர வாழ்விற்கானது- அது பரக் கல்வி . மெய்ஞ்ஞானம் என்பதும் அக்கல்விதான் . மெய்ஞ்ஞானம் மாற்றத்திற்கு உள்ளாகாமல் என்றும் ஒன்றேயாக நிலை பெற்று இருப்பது - அதன் பயன் பேரானந்தம்- அதாவது சத்+சித்+ ஆனந்தம் எனப்படும் சச்சிதானந்தம் என்னும் எப்போதும் அழியாத பேரின்ப நிலை. மேலும் குரு என்பவர் மனிதனது உடம்பில் இருப்பதும் இயங்குவதும் ஆகும் ஆத்மாவின் உயர்விற்காக மெய்ஞ்ஞானக் கல்வியைப் போதனையாகவும் சாதனையாகவும் பயிற்றுவித்து , மனிதனுக்கு மீண்டும் பிறவாமை என்னும் ஏற்றத்தைத் தருகிறார். எனவேதான், “குருசாக்ஷாத் பரப்பிரம்ம ஸ்வரூபம்- குருவே மனிதனினுடை மனம் மற்றும் புலன்கள் ஆகிய அனைத்தாலும் அறிந்து கொள்ள முடிவதாவதும் நேரிடையாகவே அறிவுக்குத் தென்படுவதாவதும் ஆகிய பரம்பொருள்” என்று குரு போற்றப்படுகிறார். ஆகையால் மனிதனால் ஆராதித்து வழிபட வேண்டியவர் குரு வாகிறார்.

வேதங்களையும், உபநிஷதங்களையும் முறைப்படி வகுத்துப் பகுத்து உலகிற்கு அளித்த வேதவியாசர், ஸ்ரீகுருதேவரின் மேன்மையை , “ஸ்ரீ குரு கீதை” என்னும் அமரகாவியத்தைக் குருவிற்குச் சமர்ப்பித்துத் தம் மனநிறைவை எய்தினார்.

ஆனால் வேதங்களை மானுடம் யாவையும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி அவற்றின் சாரத்தை வீதிக்குக் கொண்டு வந்த பேரருளாளர் - எளியவர்களின் ஞானபிதா – அத்வைத மேதை – ஸ்ரீ ஆத்சங்கரரோ, யாவரும் குருவின் மேன்மையைப் புரிந்துகொண்டு அம்மாதவனை- அற்புதனை- அறம் உரைத்து ஆத்மனை ஏற்றுவிக்க வந்த ஏந்தலை - ஆராதிக்க வேண்டும் எனத் திருவுளம் பூண்டு, “குரு அஷ்டகம்” என்னும் தம் எட்டே பாடல்களில் ( ஸ்லோகம்) ஸ்ரீகுருதேவரின் அதி மகோன்னத நிலையை உபதேசிகின்றார்.
ஸ்ரீஆதிசங்கரர் அருளிய “ஸ்ரீகுரு அஷ்டகம்” என்னும் அற்புதப் படைப்பாகிய அந்த அமிர்த சாகரத்தில் மூழ்கி அங்கேயே இளைப்பாறலாம் – ஆனந்திக்கலாம்- அனுபவிக்கலாம்.




குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது.
1. शरीरं सुरुपं तथा वा कलत्रं यशश्चारू चित्रं धनं मेरुतुल्यम् ।
मनश्चेन्न लग्नं गुरोरंघ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ –१

சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம் யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்
மன:சேந்ந லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – I
பதப்பொருள் :
முதல் அடி -
शरीरं सुरुपं – சரீரம் சுரூபம் – அழகிய உடல்;
तथा वा कलत्रं – ததா வா கலத்ரம் – அதுபோன்றே அழகிய மனைவி
यशः चारू चित्रं – யஷ: சாரு சித்ரம் – பலவகையான துறைகளில் உயர்ந்த புகழ்
धनं मेरुतुल्यम्- தனம் மேரு துல்யம் – மேரு மலைக்கு நிகரான செல்வம்.
இரண்டாவது அடி –
मनः चेत् न लग्नं – மன: சேத் ந லக்னம் – மனம் பதிக்கப்படவில்லை என்றால்
गुरोः अङ्घ्रि पद्मे – குரோ: அங்க்ரி பத்மே – ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில்
ततः किं ततः किं ततः किं ततः किम् – தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்;

தெளிவுரை :
மானுடனாகப் பிறவி எடுத்த ஒருவன், ஞான போதனையை வாரி வழங்கும் ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில் தன் மனத்தைப் பதித்து, அம்மாதவனிடம் தன்னை முழுமையாகச் சமர்ப்பித்து, அந்த தெய்வீக சன்னிதியில் தன் ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆத்ம ஞானம் பயிலவில்லையாகில் அவன் ,
சிறந்த உடல் அழகை உடையவனாகி, தன் மனைவியும் கூட சௌந்தர்யம் நிறைந்தவளாவதோடு , அவன் பல்லாற்றானும் உயர்ந்த புகழ் அத்தனையும் உடையவனாகவும், தன் வாழ்வில் அனுபவிக்கும் நிமித்தமாக அனைத்துச் செல்வங்களையும் மேருமலைக்கு நிகராகப் பெரும் அளவில் உடையவனாக இருந்தபோதிலும் அவற்றால் யாது பயன்! யாது பயன்! யாது பயன்! யாது பயன்!

விளக்கவுரை:
ஒருவனுடைய உடல் அழகு, அவனது மனைவி மற்றும் குடும்பத்தினரின் உடல் வனப்பு, எல்லாவகையிலும் புகழ், அளவிடற்கரிய பெருஞ்செல்வம் ஆகிய அனைத்தையும் பெற்றிருந்தாலும் ஸ்ரீகுருதேவரை அவன் சரணடைந்து ஆத்ம வித்யா பயின்று பழகவில்லையாகில் முன்சொல்லப்பட்ட அனைத்துச் சிறப்புக்களாலும் அவன் அடையும் முடிவான பயன் என்னவாக இருக்க முடியும் ! (ஏதும் இல்லை).
ஒருவனுடைய அழகு, புகழ், செல்வம் முதலியவற்றால்:
1. தனக்கும் ஆத்ம பயன் கிடைக்கப்போவதில்லை.
2. தன்னைச் சுற்றியுள்ள சுற்றத்தார் மற்றும் நண்பர்களுக்கும் ஆத்ம பயன் கிடைக்கப்போவதில்லை.
3. இயற்கையில் வாழும் ஏனைய பிற உயிர் எவற்றுக்கும் ஆத்ம பயன் கிடைக்கப்போவதில்லை.
4. அவனுடைய மறுமைக்கும் எப்பயனும் கிடைக்கப்போவதில்லை.
என்னும் பொருள் பட, “யாது பயன்” என நான்கு முறை சொல்லப்பட்டமை கவனத்திற்குரியது.
ஸ்ரீ குருவே நம:
என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009 09.09.2016.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 09, 2016 5:15 pm

அய்யா நீங்கள் புதியவர் . ஈகரையின் விதிமுறைகளை படித்து ,அனுசரிக்கவும் .
பதிவர்கள் செளகரியம் கருதி பல பகுதிகள் உள்ளன .
ஆகவே பதிவிடுமுன் ,தலைப்பிற்கு தகுந்தபகுதியில் பதிவிடவும் .
'நேர்மை கடைபிடி '  தலைப்பு அறிமுகப் பகுதியில் இருந்து ஆன்மீகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 09, 2016 7:10 pm

வணக்கம் ஐயா ! அடியன் நமது வலைதளத்திற்குப் புதியவன் என்பதால் எப்படிப் பதிவேற்றம் செய்வது என்பது புரிய வில்லை. அதனால்தான் இந்த குழப்பம். இப்போது கொஞ்சம் புரிந்து கொண்டேன். சிரமத்திற்கு வருந்துகிறேன் நன்றி. வணக்கம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 09, 2016 7:13 pm

மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
உலக மொழிகளில் சூரியனுக்கு நிகரானது என்னும் உயர்ந்த சிறப்பைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒரே மொழி, நமது அமுதத் தமிழாகத்தான் இருக்கமுடியும். இவ்வுண்மையை;
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது
தன்னேர் இல்லாத தமிழ்! - (தண்டியலங்காரம் உரை)
என்கிறது தண்டியலங்கார உரைப்பாடல். நம் தமிழ்தாயின் கருவூல வைப்புக்கள் தான் எத்தனை ! எத்தனை!! அவற்றில் நம் அறிவுக்குப் புலப்படாது சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருப்பு நூட்களாக இருப்பவைதான் எத்தனை !!!

நம்மில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிராத தமிழ்நூல்கள் எண்ணிலடங்கா. அவ்வாறானவற்றுள் ஒன்றுதான் , அன்றைய மாயூரம்- இன்றைய மயிலாடுதுறை முன்சீப் . வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளிய “நீதிநூல்” என்னும் பெயர்கொண்ட அற்புதப் படைப்பு.

நூலாசிரியர் பெயரில் ‘மாயூரம்’ என்று இருந்தாலும் அவர் பிறந்தது குளத்தூர் என்னும் சிற்றூரில்தான். அவர் தாத்தாவாகிய மதுரநாயகம் பிள்ளையின் காலத்திலேயே கிறித்தவ மதத்திற்கு மாறிய குடும்பப் பின்னணி அவருடையது. 11.10.1826ஆம் ஆண்டு வேதநாயகம் பிள்ளை பிறந்தார். 21.07.1889ஆம் ஆண்டு தம் அறுபத்து மூன்றாம் வயதில் மறைந்தார் என்பதும் அவரது தோற்றம்-மறைவு பற்றிய சேகரிப்புத் தகவல்கள்.

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோதே, 1856 ஆம் ஆண்டு , இந்தியாவின் முதல் இந்திய நீதிபதியாகிய சிறப்பிற்குரியவர். தமிழின் முதல் நாவலாகிய ‘பிரதாப முதலியார் சரித்திரத்தை’ எழுதி தமிழில் புதினப் படைப்புக்களுக்கு வித்திட்ட வித்தகர். இவரது படைப்புக்கள் அநேகம் இருப்பினும் நம் கருத்தை முதலில் கவர்ந்தது , அம்மாமேதை எழுதிய “ நீதி நூல்” தான். இந்நூலில்
காப்பு - 2 பாடல்கள்
அவை அடக்கம் - 6 பாடல்கள்
அதிகாரங்கள் ( 45 ) - 530 பாடல்கள்
பின் இணைப்பு - 76 பாடல்கள்
மொத்தம் 612 பாடல்கள் + காப்புச் செய்யுள் 2 ஆக மொத்தம் 614 பாடல்கள் உள்ளன.

இந்நூலுக்குச் சாற்றுக்கவியாக திரிசிரபுரம் – மாவித்துவான்- மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றிய 148 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா , மற்றும் 10 விருத்தப்பாக்களே நூலின் பெருமையைச் சாற்ற வல்லவை. சாற்றுக்கவி எழுதியவர் நம் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையரின் ஆசான் என்றால் பாருங்களேன். அத்துணைப் பெரிய தமிழ் மேதையால் அவ்வளவு நீண்ட சாற்றுக்கவி பாடப்பெற்ற நூல் என்றால் அதன் சிறப்பு எத்துணை உயர்வானதாக இருக்கும்! வைரமோதிரம் பதித்த திருக்கரங்களால் அல்லவா, இந்நூல் ஆசி பெற்றுள்ளது! நாற்பத்தைந்து தனித்தனி பொருட்களில் மிகு எளிய நடையில் வெகு அழகாகவும் அற்புதமாகவும் படைக்கப்பட்டுள்ள இந்நூல், நமக்கு ஒரு திகட்டாத தெள்ளமுதம். மாந்தி மகிழ்வோம் நாளை முதல் , “மறைநெறி நவிலும் நிறைமொழி” என்னும் தலைப்பில்
என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009 09.09.2016.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 09, 2016 9:17 pm

‘கு’ என்றால் அஞ்ஞானமாகிய இருள்- அதாவது அறியாமையில் உண்டாகும் மயக்கம் என்று பொருள். ‘ரு’ என்றால அறிவுடைமையாகிய ஒளி – அதாவது அறிவுத் தெளிவு என்று பொருள் . ஆக, குரு என்னும் பதம் , அஞ்ஞானம் என்னும் மயக்க அறிவைப் போக்கி மெய்ஞ்ஞானம் எனப்படும் தெளிந்த அறிவை அளிப்பவர் என்ற அற்புதப் பொருள் விளக்கம் கொண்டது.

'குரு' விளக்கம் அருமை .நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 09, 2016 10:02 pm


ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)
1.வீட்டு நெறிப்பால்
1.பிறப்பின் நிலைமை.

1. ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன் (1 -01)

தெளிவுரை:
உலகத்தின் தொடக்கத்திற்கும் தொடக்கமாகி , இவ்வுலகத்தின் இருப்புக்கள் அனைத்திற்கும் நேரம், இடம் முதலியவற்றால் முன்னதாகவும், முதன்மையாகவும் இருந்துகொண்டு, எப்போதும் மாற்றத்திற்கும் அழிவிற்கும் உள்ளாகாமல் நிலைத்திருக்கும் பரம்பொருளே(பரமாத்மாவே) இவ்வுலகில் எங்கும் எதிலும் நிலைகொண்டிருப்பதைச் சிந்திப்பதே அறிவு படைத்த மானுடர்கள் அடையும் முதன்மைப்பயன்.

பதப்பொருள் :
ஆதி – தோற்றம்; எழுச்சி.
அறிவு – ஆத்மா
முதல் –நேரம், இடம் முதலியவற்றால் முன்னதாகவும், முதன்மையாகவும் இருப்பது.
எழுத்து –அக்கரம்(அஷரம்) ; எப்போதும் மாற்றத்திற்கும் அழிவிற்கும் உள்ளாகாமல் நிலைத்திருப்பது.
ஓதுதல் -சிந்தித்தல்; தியானித்தல்
நூல் – சாத்திரம்(சாஸ்த்ரம்); கல்வி அறிவு.
பயன் – பலன்.

பதவுரை :
ஆதியாய் நின்ற அறிவு முதலெழுத்து
- பிரபஞ்சத்தினுடைய தொடக்கத்திற்குத் தொடாக்கமாகவும் பரம்பொருள் - நேரம், இடம் முதலியவற்றால் முன்னதாகவும், முதன்மையாகவும் இருந்து கொண்டு, என்றும் எப்போதும் மாற்றத்திற்கும் அழிவிற்கும் உள்ளாகாமல் நிலைத்திருப்பது.
ஓதிய நூலின் பயன்
- சிந்திப்பதே கல்வி அறிவின் முதற் பலன்.

விளக்கவுரை:
பரம்பொருள் மட்டுமே பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்கும் தொடக்கமாவது. ஆகையால் அது தோற்றம் மாற்றம் மறைவு ஆகிய எதுவும் இல்லாது எப்போதும் நிலைத்திருப்பது. அதனைச் சிந்தித்து, உலக இருப்புக்கள் யாவும் பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்ற முடிவுக்கு வருதலே மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கமும் மனிதன் கற்கும் அனைத்துக் கல்வியாலாகும் பலனும் ஆகும் என்பது பொருள்.
உலகத்தில் உள்ள அனைத்துச் சமய நூல்கள், நீதி நூல்கள், பக்திநூல்கள், ஞானநூல்கள், இல்லற மற்றும் துறவற நெறிகளை வரையறுக்கும் நூல்கள் மற்றும் நமது பாரதத்தின் ஞானக் களஞ்சியமாகும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் ஆகிய அனைத்தும் போதிக்கும் அத்தனையையும் பிழிந்து சாராக்கி அந்த மொத்த சாற்றையும் வேதிவினைப்படுத்தி, அதனை ஒரு மிகச்சிறிய குளிகை(capsule) யாக்கி,அதனை மானுடம் ஏற்றுப்பயன்பெற வேண்டும் என்ற நோகக்த்திலும் ஆர்வத்திலும் உலக மானுடம் யாவைக்கும் இந்த அற்புதக் குறளில் அழகாக அளித்துள்ள நம் ஔவைக்கு நமது முதல் வணக்கம்.

என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009 09.09.2016.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 10, 2016 4:15 am

குரு >ஆசிரியர்= ஆசு+ இரியர் > ஆசு -குற்றம் , இரியர் - இல்லாதவர். @ குற்றமற்றவர்தான் ஆசிரியர், மேலும் குற்றம் களைபவராகவும் இருக்கவேண்டும் அவரே நல்லாசிரியர். ஆசானும் ஆவார்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 10, 2016 10:19 am

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)
1.வீட்டு நெறிப்பால்
1.பிறப்பின் நிலைமை.

2. பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு. (1-02)

தெளிவுரை :
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் உலக இருப்புக்கள், தத்தம் நிலையில் இயல்பாகவே மாற்றம் பெறுவதால், பரமாத்மா என்னும் பரம்பொருள் அவ்வாறாகிய மாற்றத்தின் உட்புகுந்து, உயிரினங்கள் தத்தம் உடம்போடு கூடிய பிறப்பு உலகில் உண்டாகின்றது.

பதப்பொருள் :
பரம் – மேம்பட்டதான பரம்பொருள்.
ஆய – அத்தகையது.
சத்தி- ஆற்றல்
உள் - உள்ளே
பஞ்சமாபூதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பெரிய நிலையான இருப்புக்கள்.
தரம் மாறுதல் – தன்னுடைய தன்மையில் மாற்றம்பெறுதல்.
தோன்றும் – வெளிப்படுத்திக் கொள்ளுதல்.
பிறப்பு – உயிர்கள் உடம்பொடு பிறத்தல்.

பதவுரை :
பரமாய சத்தி- பரமாத்மா என்னும் பரம்பொருளாகிய பேராற்றல்.
பஞ்சமா பூதந்தரமாறில்- நிலம் , நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பெரிய ஐம்பூதங்கள்
உள் தோன்றும் பிறப்பு- உள்ளே செல்வதால் பிறவி உண்டாகின்றது.

விளக்கவுரை:
உலகில் காணப்படும் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பிறப்பு எவ்வாறு நிகழ்கிறது என்று வெகு அழகாக இந்த குறளில் சொல்லப்படுகின்றது. பஞ்சீகரணம் என்ற சேர்க்கையில் ஐம்பூதங்களும் தத்தமக்குள் ஒன்றி உலகில் செயல்படுவது நாம் அறிந்ததே.
பஞ்சீகரணம் என்பது இயற்கையில் பஞ்ச பூதங்களும் தம்மில் ஒன்றறோடொன்று கலந்திருத்தல் . பூமி எனப்படும் நிலம் 4/8 பங்கு நிலத்தின் தன்மையும், 1/8 பங்கு நீரின் தன்மையும், 1/8 பங்கு நெருப்பின் தன்மையும், 1/8 பங்கு காற்றின் தன்மையும், 1/8 பங்கு ஆகாயத்தின் தன்மையும் கொண்டது . இவ்வாறே இதர நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியனவும் தத்தம் கூறைப் பாதியாகவும் இன்னொரு பாதியில் மற்ற நான்கையும் 1/8 அவ்வவற்றின் கூறாகத் தம்மில் கொண்டவை.

அத்தகைய பஞ்சீகரண சேர்க்கை, மேலும் வெளித்தூண்டுதல்கள் பிற எதுவும் இன்றி இயல்பாகவே மாற்றம் அடைவதால் உடம்பு என்ற ஒன்று தோன்றுகிறது. அவ்வுடம்பு அந்த பஞ்சபூதங்களின் கலவைக்கு ஏற்றாற்போல், ஓரறிவு முதல் ஆறறிவு வரை யாதாவது ஒரு உடம்பாக அவ்வவற்றின் வினைத் தொகுப்பிற்கு ஏதுவாக அப்பயனைத் தாம், தம்முடைய வாழ்வில் சுகதுக்கங்களாக அனுபவிக்கும் பொருட்டு அவை மாற்றம் பெறுகின்றன. பரம்பொருள் என்னும் பிரபஞ்சப் பேராற்றல் தன் அம்சமாகும் அதன் ஒரு சிறு துளியாக அந்த உடம்பிற்குள் நுழைந்து ஒவ்வொரு உயிரினமும் உடம்பும் உயிரும் பெறுகின்றது.

இவ்வுலகத்தில் தன் பிராரப்த கர்மா எனப்படும் நுகர்வினையை அனுபவிப்பதற்காகவும், அவ்வகை அனுபவித்தலின் போது புதியதாக ஆகாமிய கர்மா என்னும் ஏறுவினையைச் சேகரித்துக் கொள்ளவும் அந்த உடம்பும் உயிரும் சேர்ந்த ஜீவன் உலகில் பிறவி எடுக்கிறது என்னும் அற்புத பொருள் பொதிந்ததும் , மிகு உயர் ஆராய்ச்சிக்கு உகந்ததும் , முதிர்ஞானத்தின் வெளிப்பாடானதும் ஆவது இந்த அற்புதக் குறள்.

என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009 10.09.2016




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 10, 2016 10:22 am

ஸ்ரீ குருவே நம:
குரு அஷ்டகம் – ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது.
2. कलत्रं धनं पुत्रपौत्रादि सर्वं गृहं बान्धवाः सर्वमेतद्धि जातम् ।
मनश्चेन्न लग्नं गुरोरंघ्रिपद्मे ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ – २
கலத்ரம் தனம் புக்ரபௌத்ராதி ஸர்வம் க்ருஹம் பாந்தவா:ஸர்வ மேதத்ஹிஜாதம்
மன:சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் - 2
பதப்பொருள் :
முதல் அடி -
कलत्रं –களத்ரம் – நல்ல குணவதியான மனைவி.
धनं – தனம் – அறவழியில் பெறப்பட்ட நற்செல்வம்.
पुत्रपौत्रादि – புத்ரபௌத்ராதி -அறிவும் திறமையும் நிறைந்த புதல்வர்கள் மற்றும் பெயரப்பிள்ளைகள்.
सर्वं -சர்வம் –ஆகிய எல்லாமும்.
गृहं – க்ருஹம் – கூடவே வாழ்வதற்கு வசதியுடன் கூடிய வீடு;
बान्धवाः – பாந்தவா: - தக்க சமயத்தில் கைகொடுத்து உதவக்கூடிய உறவினர் மற்றூம் நண்பர்கள்
सर्वम् एतत् ति जातम्। - சர்வம் ஏதத் தி ஜாதம் – ஆகிய அனைத்தும் இவ்வுலகில் கிடைக்கப்பெற்று இருத்தல்.

இரண்டாவது அடி –
मनः चेत् न लग्नं – மன: சேத் ந லக்னம் – மனம் பதிக்கப்படவில்லை என்றால்
गुरोः अङ्घ्रि पद्मे – குரோ: அங்க்ரி பத்மே – ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில்
ततः किं ततः किं ततः किं ततः किम् – தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் – அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்;
தெளிவுரை :
ஒருவனுக்கு நல்ல குணவதியான மனைவி, அறவழியில் பெறப்பட்ட நற்செல்வம், அறிவும் திறமையும் நிறைந்த புதல்வர்கள் மற்றும் பெயரப்பிள்ளைகள், ஆகிய எல்லாமும், கூடவே வாழ்வதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு, தக்க சமயத்தில் கைகொடுத்து உதவக்கூடிய உறவினர் மற்றும் நண்பர்கள் ஆகிய அனைத்தும் இவ்வுலகில் கிடைக்கப்பெற்று இருந்தாலும், அவன், ஞான போதனையை வாரி வழங்கும் ஸ்ரீகுருதேவருடைய திருவடித் தாமரைகளில் தன் மனத்தைப் பதித்து, அம்மாதவனிடம் தன்னை முழுமையாகச் சமர்ப்பித்து, அந்த தெய்வீக சன்னிதியில் தன் ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆத்ம ஞானம் பயிலவில்லையாகில், அச்செல்வம் மற்றும் வசதி வாய்ப்புக்கள் அமையப் பெற்ற அவனுக்கு அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்; அவற்றால் யாது பயன்.

விளக்கவுரை:
ஒருவனுக்கு நல்ல வீடு, மனைவி, மக்கள், பெயரப்பிள்ளைகள், செல்வம், சுற்றம், நட்பு என எத்தனை விதமான வசதி வாய்ப்புக்கள் இருந்த போதிலும் அவன் ஸ்ரீகுருதேவரை அடைந்து, அவரைப் பணிந்து ஆத்ம வித்யாவைப் பயின்று பழகாவிடில் அத்தனைச் செல்வச் சிறப்புக்களாலும் அவனுக்கு எந்தவித ஆத்ம பயனும் கிடையாது என்பது பொருள்.
ஸ்ரீ குருவே நம:
என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) ramalingamgpo@gmail.com
புதுச்சேரி 605 009 .
10.09.2016.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக