ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்! Poll_c10அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்! Poll_m10அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!

2 posters

Go down

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்! Empty அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!

Post by ayyasamy ram Mon Sep 05, 2016 7:31 am

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்! 7D50VjOQ4eaT1FbNYCTK+teresa-3_2998608g_2998616f(1)
-
மறைந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமைதிக்கான
நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு
ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில்
நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தெரஸாவுக்கு
போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி கெüரவித்தார்.

தெரஸாவின் 19-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (செப். 5)
அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அவரது சேவையைப் போற்றும்
விதமாக அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

“”கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிர்வதிக்கப்பட்டவரான தெரஸாவை
புனிதராக அறிவிக்கிறோம்” என்று போப் பிரான்சிஸ் லத்தீன் மொழியில்
அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தாயன்பின் வடிவமாகவும், ஏழைகளின் ஆதரவு சக்தியாகவும் விளங்கியவர்
அன்னை தெரஸா. அவரை “புனிதர் தெரஸா’ என்று நாம் அழைப்பதற்கு
சிரமமாக இருக்கலாம்.

அவரது புனிதத்தன்மை எப்போதும் நமக்கு அருகிலேயே இருப்பதால்,
நாம் நம்மை அறியாமலேயே அவரை அன்னை தெரஸா என்று
அழைக்கிறோம்.

“ஒருவருடைய மொழி தெரியாவிட்டாலும், அவரைப் பார்த்து புன்னகைப்பேன்’
என்று தெரஸா கூறுவார். அதேபோல், நாமும் அவரது புன்னகையை
உளப்பூர்வமாக சுமந்து சென்று, நமது வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும்
மக்களிடம், குறிப்பாக துன்பத்தில் உழல்பவர்களிடம் உதிர்ப்போம்.

இந்திய நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் தெரஸா தொண்டாற்றியது,
ஏழைகளின் அருகில் இறைவன் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது என்றார்
போப் பிரான்சிஸ்.

இந்த விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஸ்பெயின் நாட்டு அரசி சோஃபியாவும்
விழாவில் கலந்து கொண்டார்.

இதுதவிர, தெரஸாவின் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அமைப்பைச் சேர்ந்த
கன்னியாஸ்திரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்த அமைப்பில்
தங்கியுள்ள ஏழை மக்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து
கொண்டனர். பின்னர், அந்த ஏழைகளுடன் போப் பிரான்சிஸ் உணவருந்தினார்.
அவர்களுக்கு கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் விருந்து உபசரித்தனர்.

இந்தியாவில் இருந்து…: விழாவில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
டெரீக் ஓ’ பிரையன், சுதீப் பந்தோபாத்யாய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பிறகு செயின்ட் பீட்டர் சதுக்கத்திலும்,
அதனைச் சுற்றியுள்ள தெருக்களிலும் திறந்த வேனில் பயணம்
செய்து ஆயிரக்கணக்கானோரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

கொல்கத்தாவிலும்…: இதனிடையே, வாடிகன் நகரில் நடைபெற்ற
வண்ணமயமான விழா, கொல்கத்தாவிலும் பிரதிபலித்தது.
கொல்கத்தாவில் தெரஸாவின் சேவை அமைப்பின் தலைமையகத்தில்
அமைந்துள்ள அவரது கல்லறையில் பூச்செண்டுகள் வைத்தும்,
மெழுகுவர்த்திகள் ஏற்றியும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

“”மகிழ்ச்சியும், ஆசிர்வாதமும், நன்றியுணர்வும் நிறைந்த நாள் இது”
என்று அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்ட மூத்த சகோதரி லிஸா
கூறினார்.

மாசிடோனியாவில் கடந்த 1910-ஆம் ஆண்டில் பிறந்த அன்னை தெரஸா,
தனது 19-ஆவது வயதில் கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா
வந்தார். பின்னர் கொல்கத்தா நகரில் “மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ என்ற
சேவை அமைப்பைத் தொடங்கிய தெரஸா, ஏழைகளின் துயரம்
போக்குவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சுமார்
40 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது வாழ்நாளின் பெரும்பகுதியை
இந்தியாவிலேயே கழித்தார்.

அவருடைய அளப்பரிய சேவையைக் கெüரவிக்கும் வகையில்,
கடந்த 1979-ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
வழங்கப்பட்டது.

அவர், கடந்த 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு இரண்டு முறை அற்புதங்களை நிகழ்த்தியதாக,
கடந்த 2003-ஆம் ஆண்டில் அப்போதைய போப் ஜான் பால், தெரஸாவுக்கு
அருளாளர் பட்டம் அளித்தார். அதைத் தொடர்ந்து, தெரஸாவுக்குப் புனிதம்
பட்டம் அளிக்கப்படும் என்று போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம்
அறிவித்திருந்தார்.

———————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்! Empty Re: அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!

Post by M.Jagadeesan Mon Sep 05, 2016 7:49 am

அன்னை தெரஸாவுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் , மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ,வாடிகன் நகரம்சென்று கலந்து கொள்கிறார் .

ஆனால் இங்கோ தமிழ்நாட்டில்

அப்துல்கலாம் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஒரு முதல்வருக்கு நேரமில்லை ! வோட்டுப்போட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum