ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

4 posters

Go down

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! Empty கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

Post by பாலாஜி Mon Aug 29, 2016 4:45 pm

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! P19a


கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

ச.ஸ்ரீராம்


கிரெடிட் கார்டு - இன்று அனைவருக்கும் மிகச் சுலபமாக கிடைக்கக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. வங்கிகளே போன் செய்து ‘உங்களுக்கு கிரெடிட் கார்டு’ வேண்டுமா? எனக் கேட்டு வீட்டுக்கே  கொண்டு வந்து தந்துவிடும் அளவுக்கு எளிமையான விஷயமாக மாறிவிட்டது. மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பது கௌரவமாக மாறிவிட்டது. ஆனால், இதனை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள்.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் இதோ...

1.அளவுக்கு மீறி செலவழிக்காதீர்கள்!

நமது சேமிப்பில் இல்லாத அளவு தொகையைத் தாண்டி செலவு செய்யதான் கிரெடிட் கார்டு. இப்படி ஒரு வசதி கிடைப்பதினாலேயே அதிக தொகையை செலவழிக்கலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் தேவைக்கேற்ப, உங்களால் திரும்பக் கட்ட முடிகிற அளவுக்கான பணத்தை  மட்டுமே கிரெடிட் கார்டு மூலம் எடுத்துப் பயன்படுத்துங்கள்.

உதாரணமாக, உங்களுக்கு ரூ.50,000 கிரெடிட் லிமிட் இருந்தால், இவ்வளவு பணத்தை யும் எடுத்துச் செலவு செய்ய வேண்டும் என்பதில்லை.  உங்கள் தேவை ரூ.10,000 என்றால் அதற்கு மட்டும் செலவு செய்யுங்கள்.

2.கிரெடிட் கார்டு பில் கட்டுவதை தள்ளிப் போடாதீர்கள்!

கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்ததற்கான பில்லை அதன் கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லை எனில், மாதம் 3% வரை வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

ஓர் ஆண்டு முழுவதும் என எடுத்துக்கொண்டால் சுமார்       36 - 40% நீங்கள் வட்டி செலுத்த நேரிடும். இதனால் உங்களது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டு, உங்களால் வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை ஏற்படக் கூடும்.

3. தவணைத் தேதி மற்றும் வட்டியில்லாக் காலம்!

உங்களுடைய தவணைத் தேதி மற்றும்  வட்டியில்லாக் காலம் எப்போது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு கிரெடிட் கார்டுக்கு வட்டியில்லாக் காலம் என்பது 55 நாட்கள் எனக் கொண்டால், ஒருவர் 1-ம் தேதி வாங்கும் பொருளுக்கு அடுத்த மாதம் 24-ம் தேதி வரை வட்டியில்லாக் காலம் இருக்கும். ஆனால், அவரே  ஒரு பொருளை 15-ம் தேதி வாங்குகிறார் என்றால் அவருக்கு 40 நாட்கள்தான் வட்டியில்லாக் காலம் கிடைக்கும்.

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டியில்லாக் காலம் என்பது பணம் செலுத்தும் நாள், நீங்கள் பொருள் வாங்கிய தேதி ஆகியவற்றைப் பொறுத்து மாறும்.  இதனைச் சரியாக புரிந்து கொள்ளாமல் போனால்,  தேவை இல்லாமல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

4. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்காதீர்கள்!

வங்கிகள் உங்களது பரிவர்த்தணை அளவைக் கூட்ட உங்களுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும். கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி தரப்பட்டிருக்கும். இந்த வசதியை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள். இதனால்  உங்கள் வட்டியில்லாக் காலமும் பாதிப்படையும். சில நேரங்களில் உங்களுக்கு இது தேவையற்ற‌ சுமையாக மாறும். கிரெடிட் கார்டில் பணம் எடுத்த அடுத்த நொடியில் இருந்தே வட்டி கணக்கிடப்படுவது துவங்கிவிடும் என்பதை மறக்கக் கூடாது.  

5. பல கிரெடிட் கார்டுகள் வேண்டாம்!

உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே கிரெடிட் கார்டை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கித் தேவையற்ற சிக்கலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

இதற்கான தவணைத் தேதி, பில் கட்டணம் என பல விஷயங்களில் சிக்கித் தேவையில்லாத கடன் சுமையில் மாட்டிக்கொள்ளும் நிலை உருவாகும்.

6.   நண்பர்கள்,   உறவினர் களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

உங்களிடம் கிரெடிட் கார்டு உள்ளது என்றால் உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கும்  உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

ஒருவேளை அவர்கள் உங்களது கிரெடிட் லிமிட் முழுவதுக்கும் பொருளை வாங்கி விட்டால் நீங்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். தவிர, அவர்கள் பணத்தைத் திரும்பச் செலுத்த தாமதப்படுத்தினால் அது உங்களுக்கு கூடுதல் சுமையாக மாறும்.  

7. இம்பல்ஸ் பர்ச்சேஸ்களை தவிருங்கள்!

ஷாப்பிங் மால் போகும்போது அல்லது ஏதாவது பெரிய பர்ச்சேஸ் செய்யும்போது ‘நம்மிடம்தான் கிரெடிட் கார்டு உள்ளதே’ என்று பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம்.  இல்லையெனில் 1,000 ரூபாய்க்கு செய்ய வேண்டிய செலவுகளை உங்களது இம்பல்ஸ் காரணமாக 1,500 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் உங்கள் பர்சேஸை இம்பல்ஸாக அதிகரிக்காதீர்கள்.



8. ஆஃபர்களுக்கு தலை சாய்க்காதீர்கள்!

பே-பேக் ஆஃபர், ரூ. 10,000-க்கு மேல் பர்ச்சேஸ் செய்தால் ஆஃபர் என பல ஆஃபர்களை  ஆன்லைன் நிறுவனங்கள் அளிக்கும். அதனையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களது பர்ச்சேஸ் அள‌வைக் கூட்டாதீர்கள்.

உதாரணமாக, நீங்கள் வாங்க வேண்டிய பொருள் 8,000 ரூபாய்க்குத்தான் என்றால் 10,000 ரூபாய் ஆஃபருக்காக ஆசைப்பட்டு மேலும் 2,000  ரூபாயைச் செலவழிக்காதீர்கள். கூடுதலாக நீங்கள் செலவு செய்வதால், நீங்கள் கூடுதலாக  வட்டி கட்ட வேண்டியிருக்கும்.  அதனால் ஆஃபர்களில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்.

9. தினசரி செலவுகளுக்கு பயன்படுத்தாதீர்கள்!

கிரெடிட் கார்டுகளை சரியான செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். தினசரி செலவுகளுக்குப் பயன்படுத்த துவங்காதீர்கள். அது அதிகப் படியான செலவுகளையும், சிறு சிறு செலவுகளாக சேர்ந்து, மிகப் பெரிய தொகையை உங்கள் கணக்கிலும் எடுத்துக் கொண்டு விடும்.

10. விதிமுறை, நிபந்தனைகளை கட்டாயம் படியுங்கள்!

கிரெடிட் கார்டுக்கான விதிமுறைகள், நிபந்தனைகளை  கட்டாயம் படியுங்கள். உங்கள் கார்டுக்கு உள்ள சலுகைகள் பற்றி தெரியாமல் அதில் எக்கச்சக்கமாக பொருட்களை வாங்கிக் குவித்து விட்டால், பின்னர் தவணைத் தொகை செலுத்தும்போது விழி பிதுங்கி நிற்பீர்கள்.

சுருக்கமாக, உங்கள் கிரெடிட் கார்டு பில் உங்களை பயமுறுத்துகிற மாதிரி இல்லாமல் இருந்தாலே போதும்!

ந,விகடன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! Empty Re: கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

Post by T.N.Balasubramanian Mon Aug 29, 2016 5:49 pm

நல்லத் தகவல் .

க்ரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை தவிர்த்து ,
பணம் தேவைப்படுகிறது என்றால் , டெபிட் கார்ட் மூலம்
எடுத்துக் கொள்வது நல்லதில்லையா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! Empty Re: கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

Post by M.Jagadeesan Mon Aug 29, 2016 7:01 pm

நான் கிரெடிட் கார்டு வைத்துக்கொள்வதில்லை .DEBIT கார்டு மூலம் பணம் எடுத்து செலவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளேன் .நம் இருப்பில் உள்ளதொகையும் ATM மூலமாகத் தெரிந்துகொள்ளலாம் .

CREDIT கார்டு தேவையற்ற பொருட்களை வாங்க வழிவகுக்கும். வரவுக்குமேல் செலவு செய்பவர்கள்தான் கிரெடிட் கார்டு வைத்துள்ளனர்.

ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை .

என்பது ஐயனின் வாக்கு.

பொருள் வரும்வழி சிறிதாக இருந்தாலும் பாதகமில்லை; பொருள் போகும் வழி பெரிதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் . அப்படி இருந்தால் துன்பம் வராது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! Empty Re: கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

Post by பாலாஜி Tue Aug 30, 2016 12:42 pm

M.Jagadeesan wrote:நான் கிரெடிட் கார்டு வைத்துக்கொள்வதில்லை .DEBIT கார்டு மூலம் பணம் எடுத்து செலவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளேன் .நம் இருப்பில் உள்ளதொகையும் ATM மூலமாகத் தெரிந்துகொள்ளலாம் .

CREDIT கார்டு தேவையற்ற பொருட்களை வாங்க வழிவகுக்கும். வரவுக்குமேல் செலவு செய்பவர்கள்தான் கிரெடிட் கார்டு வைத்துள்ளனர்.

ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை
போகா றகலாக் கடை .

என்பது ஐயனின் வாக்கு.

பொருள் வரும்வழி சிறிதாக இருந்தாலும் பாதகமில்லை; பொருள் போகும் வழி பெரிதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் . அப்படி இருந்தால் துன்பம் வராது .
மேற்கோள் செய்த பதிவு: 1220362

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! 3838410834


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! Empty Re: கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

Post by ஜாஹீதாபானு Tue Aug 30, 2016 4:11 pm

நல்ல தகவல் நன்றி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! Empty Re: கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum