ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

2 posters

Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 9:20 am


என்னுடைய எல்லை என்று
தெரிந்து கொண்டு தான்
-
நீ நுழைகிறாய்
உன்னுடைய உடைமையை
கவர்ந்திழுக்க
நான் விழைகிறேன்
-
உனது தரப்பு
நியாயத்தைச் சொல்ல
நீ முயற்சிக்கிறாய்
-
உன்னால் இழந்தவற்றை
நான் கணக்கிடுகிறேன்
-
ஏமாற்றுவதை ஒரு தொழிலாகவே
நீ செய்கிறாய்
-
எனக்கு சிலுவையை
கொடுத்துவிட்டு நீ
கிரீடத்தை அணிந்து கொள்கிறாய்
-
மோதுபவர்களை எதிர்த்து
நிற்காமல் முதுகில் குத்தும்
துரோக வரலாறு உன்னுடையது
-
இரக்கப்பட்டு ஆடைகளைக்கூட
ஈந்துவிட்டு கெளபீனதாரியாகத்
திரியும் வாழ்க்கை என்னுடையது.
-
----------------------------
- ப.மதியழகன், மன்னார்குடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 9:21 am



இரவலரும் புரவலரும் இருந்தனர்
மன்னராட்சியில்
கொடை வள்ளலாய் இருந்தனர்
மன்னர்களும்
-
கேட்க நன்றாகத் தானிருக்கிறது
காலமும் மாறித்தான் விட்டது
இன்று குடியாட்சி மக்களே
குடியாட்சி!
-
நமக்காக, நம் ஆட்சி!
யாசகம் எதற்கு?
கொடையும் எதற்கு?
யார் போடும் பிச்சையும் எதற்கு?
-
நம் உரிமைகளை
எதற்கு யாசிக்க வேண்டும்?
யாரிடம் யாசிக்க வேண்டும்?
யோசிக்க மட்டும் வேண்டும்
-
யோசித்துச் செயல்பட வேண்டும்!
-
------------------------------

- கிரேஸ் பிரதிபா.வி, அட்லாண்டா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 9:21 am



ஏரியெல்லாம் வீட்டு மனையாச்சி
வீடெல்லாம் மழை நீராச்சி
வீடெல்லாம் நீரென்று புலம்பும் மனிதா
மழை தங்கும் இடத்தில் தான்
மனை வாங்கினாய் மறந்தாயோ!
-
மழை வெள்ளத்தை சபிக்காதே தமிழா
நீ திருடிய ஏரியையும் குளத்தையும்
தேடியலையுது மழை நீர்
கொட்டும் நீரை யெல்லாம்
வைக்க இடமில்லாமல்
கொடுத்து விட்டாய் கடலுக்கு
-
மீண்டும் கன்னட நாட்டிடம் கையேந்துவாய் நீருக்கு
மூத்த குடி மூத்த குடி என்று மார்தட்டும் தமிழா
முன்னோர் செய்ததெல்லாம் மூடிமறைத்தாய்
அதன் பலன் நீர்க்காடாய் நகரங்கள்
-
கல்லணை கட்டிய கரிகாலன் நாட்டிலே
நீர் தேக்க வழியில்லை நீரெல்லாம் கடலிலே
சுயநலமில்லா தமிழனெல்லாம்
சுயநலமாகிப் போனதேன்
-
வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ் குடி
இனி வாழ்வாதாரம் தேடுமோ
திருத்திக்கொள் தமிழா இன்னும் காலமிருக்கு
வருங்கால சந்ததியையாவது வாழவிடு.
---------------

கோபாலகிருஷ்ணன்  (கோகி), திருவண்ணாமலை


Last edited by ayyasamy ram on Mon Aug 29, 2016 9:27 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 9:24 am


தந்தையே உயிர்ப்பைத் தந்தான்;
தாயவள் ஊனைத் தந்தாள்;
முந்தையன் உணர்வைத் தந்தான்;
முழுவுரு மனிதன் என்னும்
விந்தையாய் மண்ணிற் சேர
விளிக்கவோர் பெயரும் சேரும்;
சொந்தமாய் ஏதும் அற்ற
தொடர்கதை இரவல் வாழ்க்கை (1)
--
ஆவதன் கன்றாய் மாறி
அருந்துவோம் இரவற் பாலை;
பூவதைத் தொடரும் நெல்நாம்
புசித்திடும் இரவற் சோறு;
பாவதில் நெய்த ஆடை
பருத்தியின் இரவல் நூலால்;
தேவைதான் வசிக்க வீடு,
செய்வதும் மரம்மண் தானே (2)
-

கல்வியை யாரோ ஈவர்,
கருத்ததை சேர்த்துப் பார்ப்போம்;
அல்லதும் நலமும் வாழ்வில்
அடுத்தவர் கொடுத்துச் செல்வர்;
செல்வமும் இரந்தி ரந்து
செலும்வரை சேர்த்த தன்றோ?
இல்லவே இல்லை என்றே
இடைவிடா திரந்து வாழ்வோம் (3)
-
ஊனதன் செல்கள் யாவும்
உணவதின் சக்தி ஏற்கும்;
மேனிறம் முன்னோர்த் தோலின்
மரபுதன் குணத்தை ஒக்கும்;
தானெனும் செருக்கில் மீசை
தழைத்திட உதட்டின் ஓரம்,
நானெனும் எண்ணம் ஏனோ
நம்நிலை மறந்து நிற்கும் (4)
-

வாலிபம் வந்த பின்னே
வளர்த்தவர் பெண்ணை ஈவார்;
தாலியாற் சொந்தம் ஆவாள்,
தாவென இரப்போம் அன்பை;
கோலமாய் அமைந்த வாழ்வில்
குழந்தையை இரந்து கொள்வோம்;
பாலகன் வளரும் போழ்து
பார்என இரந்து நிற்போம் (5)
-
மண்ணதில் வீழ்ந்த போது
வளர்ந்திட இரந்த காற்று;
விண்ணவன் மீட்டுச் செல்ல
விழைகுவான் கொடுத்த மூச்சை;
கண்ணெதிர் உயிரும் மீளும்,
காயமும் மறையும் மண்ணுள்;
உண்மையாய் நமது வாழ்வின்
உடமைகள் ஏதும் உண்டோ? (6)
-

வந்ததன் நோக்கம் என்ன?
வரவென ஏதும் இல்லை;
மந்தையாய் வாழ்வோம், மாய்வோம்;
மனமெலாம் நிறைந்து நிற்கும்
சிந்தனை என்னும் ஒன்றே
சேர்த்ததென் றெண்ணும் வேளை
தந்தவன் அணுகு கின்றான்,
தாவெனக் கேட்ப தற்கோ? (7)
-
-----------------------------------

- சந்தர் சுப்ரமணியன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:27 pm

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum