புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கடல்  நடுவே  முப்பால் வகுத்த  வள்ளுவருக்கு முத்தமிழர்  வடித்த  சிலை. Poll_c10முக்கடல்  நடுவே  முப்பால் வகுத்த  வள்ளுவருக்கு முத்தமிழர்  வடித்த  சிலை. Poll_m10முக்கடல்  நடுவே  முப்பால் வகுத்த  வள்ளுவருக்கு முத்தமிழர்  வடித்த  சிலை. Poll_c10 
87 Posts - 65%
heezulia

29 Posts - 22%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
sram_1977

2 Posts - 1%
Shivanya

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
முக்கடல்  நடுவே  முப்பால் வகுத்த  வள்ளுவருக்கு முத்தமிழர்  வடித்த  சிலை. Poll_c10முக்கடல்  நடுவே  முப்பால் வகுத்த  வள்ளுவருக்கு முத்தமிழர்  வடித்த  சிலை. Poll_m10முக்கடல்  நடுவே  முப்பால் வகுத்த  வள்ளுவருக்கு முத்தமிழர்  வடித்த  சிலை. Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கடல் நடுவே முப்பால் வகுத்த வள்ளுவருக்கு முத்தமிழர் வடித்த சிலை.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 4:57 am

முக்கடல்  நடுவே  முப்பால் வகுத்த  வள்ளுவருக்கு முத்தமிழர்  வடித்த  சிலை. Kural_statue_karunanidhi

முக்கடல்  நடுவே  முப்பால் வகுத்த  வள்ளுவருக்கு முத்தமிழர்  வடித்த  சிலை. Thiruvalluvar_statute
உடன்பிறப்பே,

கண்ணொளி கொண்ட தமிழரெல்லாம் கண்டுகளித்த காட்சி! செவிப்பறை பழுதுபடாத தமிழனெல்லாம் கேட்டு இன்புற்ற நிகழ்ச்சி! இதயமுள்ள தமிழனெல்லாம் உணர்ச்சியால் உந்தியெழுந்து குதித்திட்ட எழுச்சி! ஆம்; முக்கடலும் தம் அலை இதழ்களால் முத்தமிட்டு மயங்கும் குமரிக் கடற்கரையில் முப்பால் யாத்த ஞானத்தமிழ் அய்யன் திருவள்ளுவருக்கு விண்முட்டும் சிலை வடித்து அதைத் திறந்து வைத்திடும் வாய்ப்பு அமைந்ததே; அந்த வாய்ப்பு என் வாழ்நாளில் என் நினைப்புக்கும் உழைப்புக்கும் கிடைத்த வரமல்லவா?

வழக்கமாகக் கதைகளிலும், புராணங்களிலும் வரம் பெறுவோர் எல்லாம் தம்மை வலுப்படுத்திக் கொண்டு தமது ஆதிக்கத்தை அகல விரிப்பதிலேயே அக்கறை தமது ஆதிக்கத்தை அகல விரிப்பதிலேயே அக்கறை செலுத்துவர் ஆனால் எனக்கோ; கிடைத்த வரம், என் அய்யன் திருவள்ளுவனைச் சிலையாகக் கண்டிட; அதுவும் அவன் குறளில் எத்தனை அதிகாரம் இயற்றினானோ அத்தனை அதிகாரம்; அதாவது 133 அதிகாரங்களைக் குறிக்கும் 133 அடி சிலையை இந்திய பூபாகத்தில் வட இமயத்திற்கு நிகராகத் திகழும் தென் குமரியில் நிறுவிட முடியும் என்னால் என்ற வரமல்லவா!

அந்த வரத்தைத் துஷ்பியோகம் செய்யாமல்; அதனை நிறைவேற்றவேண்டுமே யென்பதற்காக இருபத்தி ஐந்து ஆண்டுக்காலம் நித்தமும் தவம் செய்தேன். அந்தத் தவம் பலித்தது; என் தாபம் தணிந்தது. பிறவியெடுத்த பயனைக் கண்டேன் முழுமையாக!

உள்நாட்டு உயர் குணத்தார் - வெளிநாட்டுச் சான்றோராம் வித்தகப் பெருமக்கள் - புகழ்மிக்க அரசியல் தலைவர்கள் - புலமைமிக்கப் பெருங்கவிஞர்கள் தமிழைத் தம் உயிராகக் கொண்ட தகைசால் பேரறிஞர்கள் - என் உயிரினு மேலான உடன்பிறப்புகள் - சாதி மதம் கட்சிமாச்சரியம் அனைத்தும் கடந்த அரசியல் மற்றும் சமுதாயப் பண்பாளர்கள் - சமரச சன்மார்க்க அடியார்கள் - கலைஞர்கள் - இசைவாணர்கள் இன்னோரன்ன எத்தனை எத்தனை தமிழ் நெஞ்சினர் 2000-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 1-ஆம் நாள் இரவு ஏழரை மணிக்கு அய்யனின் சிலை; ஒளி வெள்ளத் திரை கொண்டு திறக்கப்பட்ட காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயினர்!

சிலை திறப்பதற்கான பொத்தானை அழுத்தியபோது என் விரல் என்னையறியாமல் அசைவற்றுப் போனது மட்டுமல்ல; என்னையே நான் மறந்துவிட்டேன். நாயன இசைவாணர்களும், தவுல் வித்வான்களும் அவர்தம் பக்க வாத்தியக்காரர்களுமாக சுமார் முன்னூறுக்கு மேற்பட்டோர்; அய்யனின் சிலை திறக்கப்பட்டபோது இசை முழக்கம் திக்கெட்டும் எட்டிடச் செய்தார்களாம் மறுநாள் காலையில் மற்றவர்கள் சொல்லக் கேட்டுத்தான் 133 நாயன இசை ஒலித்த செய்தியே எனக்குத் தெரியும்; அந்த அளவுக்கு மெய் மறந்து போயிருந்திருக்கிறேன். சுமார் முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறேன்; மறுநாள் ஏடுகளில் (குறிப்பாக முரசொலியில்) முழுப் பேச்சையும் படித்த பிறகுதான் என்ன பேசினேன் என்பது எனக்குத் தெரியும்.

இளமைப் பருவ முதல் எந்தவொரு தத்துவ வித்தகனை இமைப் பொழுதும் மறவாமல்; எழுத்தில், பேச்சில், இயக்கத்தில் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தேனோ யாருக்கு வரலாறு போற்றும் வள்ளுவர் கோட்டம் அமைத்தேனோ யாருக்காக ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் வள்ளுவர் திருநாள் என அறிவித்தேனோ பேருந்துகளிலும் பயணியர் விடுதிகளிலும் ஒழுக்கம் போதிக்கும் குறளை எந்த ஒளிமிகு ஏந்தலுக்காக எழுதச் செய்து உருவப்படத்துடன் அமைத்தேனோ யாருடைய குறளுக்கு குறளோவியம் தீட்டி - பின்னர் 1330 குறளுக்கும் உரையும் எழுதினேனோ; அந்த அய்யன் திருவள்ளுவருக்கு இருபத்தி ஐந்து ஆண்டுக் காலப் பெரு மூச்சுக்குப்பிறகு சிலை அமைந்தது; அதைத் திறந்து வைக்க எனக்கு ஆயுளும் இருந்தது என்கிறபோது என் மனநிலையை வர்ணித்திட தமிழ்த்தாய், தன்னிடமும் சொற்களுக்குப் பஞ்சமென்று சொல்லிவிட்டாளே; நான் என்ன செய்ய!

1975-ஆம் ஆண்டு (31.12.1975) நான் முதல்வராக இருந்தபோது அமைச்சரவைக் கூட்டத்தில் குமரிமுனையில் வள்ளுவர் சிலைஅமைத்திட முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. 1975 டிசம்பர் 31-இல் அறிவிப்பு - அடுத்த 30 நாட்களுக்குள் கழக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது.

நான் முன்னின்று கட்டி முடித்த வள்ளுவர் கோட்டத்திலும் என் பெயர் பொறித்த அடிக்கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்சி கலைக்கப்பட்டதற்கு அடுத்த சில நாட்களுக்குள் எனக்கு அழைப்பு கூடத் தராமல் கோட்டத்தைத் திறந்து முடித்தனர் அன்றைய கோலேந்திகள்!

13 ஆண்டுக் காலம் அந்த வள்ளுவர் கோட்டத்திற்குள் நானும் காலடி எடுத்து வைக்கவில்லை; என் பெயருக்கும் ஓர் அங்குல இடமளிக்க யார் இதயமும் இடங்கொடுக்கவில்லை.

உடன்பிறப்பே, 25 ஆண்டுக்கால வள்ளுவர் சிலை வரலாற்றைச் சிறிது பின்னோக்கிப் பார்த்தால் உனக்கும் ஆறுதலாக இருக்கும், எனக்கும் ஆறுதலாக இருக்கும். உண்மைகள் சிலவற்றையும் உணர்ந்து கொள்ளலாம் ஏனெனில் அனைத்தும் ஆதாரபூர்வமானவை!

1975-ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலையைக் கன்னியாகுமரியில் அமைப்பது பற்றிக் கழக அமைச்சரவையில் முடிவெடுத்து அறிவித்த பிறகு அடுத்த மாதம் (நெருக்கடி காலத்தில்) கழக ஆட்சி கலைக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் ஆட்சி சில காலம் நடைபெற்று 1977-இல் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருகிறார்; தேர்தலில் வெற்றி பெற்று!

1979-ஆம் ஆண்டு கன்னியாகுமரி ரயில்வே தொடக்க விழாவையொட்டி வருகை தந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள், எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் வள்ளுவர் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். எப்போது? சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு! அதாவது 15.4.1979 அன்று!

அதன்பிறகு 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று நான் சிலை திறந்த வரையில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்தளித்துள்ளேன்; அளிக்க வேண்டிய நிலையை சிலர் ஏற்படுத்திவிட்டதால்!

15.4.1979-இல் அடிக்கல் நாட்டி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10.6.1981-இல் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரைத் தலைவராகக் கொண்ட நிபுணர் குழு ஒன்று திருவள்ளுவர் சிலை அமைப்பது பற்றிய பல்வேறு அம்சங்கள், சிலை அமைக்கப்படவிருக்கும் பாறையின் தன்மை, ஆகியவற்றை ஆராய்ந்து, சிலை அமைப்பது பற்றிய திட்டங்கள் மற்றும் செலவு மதிப்பீடுகள் ஆகியவற்றைத் தயாரித்து அரசுக்கு அளிப்பதற்கென அமைக்கப்பட்டது. (அரசாணை எண்:1132, பொது - செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, நாள் 10.6.1981)

அந்த நிபுணர் குழு 12.1.1982-இல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. சிலை அமைப்பதற்கு அந்த நிபுணர் குழு மூன்று வெவ்வேறு வழிமுறைகளை ஆராயந்துள்ளது. 75 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை கல்லால் செய்து நிறுவுவதற்கு சுமார் 331 இலட்சம் செலவு ஆகும் என்றும், அதற்கு 3 வருட காலம் பிடிக்கும் என்றும்; சிலையை வெண்கலத்தால் செய்து நிறுவுவதற்கு சுமார் 364 இலட்சம் ரூபாய் செலவாகும் என்றும், இரண்டு வருட காலத்தில் இதை நிறைவேற்றலாம் என்றும்; செம்பினால் ஆன சிலையை நிறுவ சுமார் 341 இலட்சம் செலவு ஆகும் என்றும், இரண்டு வருட காலத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.

பிறகு 1984-ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலையை 402 இலட்சம் ரூபாய் செலவில் கல்லால் வடிவமைக்கலாமா அல்லது 432 இலட்சம் ரூபாய் செலவில் வெண்கலத்தால் வடிவமைக்கலாமா அல்லது நிதித்துறை கருத்து தெரிவித்தபடி சிலை அமைக்கும் திட்டத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு ஒத்திப்போடலாமா என அன்றை நிதியமைச்சர் நாவலர் திரு.இரா.நெடுஞ்செழியன் அவர்கள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குறிப்பு அனுப்பி அதன் அடிப்படையில் மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து 26.11.1996 அன்று நடந்து அமைச்சரவைக் கூட்டத்தில் திருவள்ளுவர் சிலை பற்றி விவாதிக்கப்பட்டு,

``கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு நிலையான நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து பரிலீக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை செப்புத் தகட்டினால் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கென பொதுப்பணித் துறையின் மூலம் அனுப்பப்பட்ட வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மதிப்பீடு ரூ.432 இலட்சம் ஆகும்'' என்று முடிவு செய்யப்பட்டது.

சிலை செய்து நிறுவும் பணிக்காக அரசாணை நிலை எண்:547 செய்தி, சுற்றுலாத்துறை, நாள் 15.12.1986 வாயிலாக ரூ.432 இலட்சம் ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்பட்டது.

இறுதியாக, சென்னை லார்சன் ஆண்டு டியூப்ரோ நிறுவனம், அல்லது சென்னை சிம்ப்ளெக்ஸ் காண்கிரீட் பைல்ஸ் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் கோரலாம் அல்லது உலகளாவிய அளவில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரலாம் என தலைமைப் பொறியாளர் 21.4.1987 அன்று கருத்துத் தெரிவித்தார். உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரும் கருத்துவிற்கு, அன்னியச் செலாவணி தேவை என்பதால் மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இது சம்பந்தமாக நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை, பாரீஸ் மற்றும் இங்கிலாந்து, சென்று கட்டுமானப் பணிகளில் கையாளப்பட்டுள்ள தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து வர நிபுணர் குழு ஒன்று அனுப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கு மைய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. திரு.ராஜீவ் காந்தி தலைமையிலான மைய அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில் 1989-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தலில் வென்று நமது கழக அரசு பதவியேற்றது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 4:59 am

கல்லில் சிலை அமைப்பதே ஏற்புடையது என்பதாலும், காலங்கடந்து நிற்கும் இந்திய கற்கோயில்கள் போல் கல்லால் சிலை அமைப்பது, நமது கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும் என்பதாலும், தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி முதல்வர், திரு.கணபதி ஸ்தபதி அவர்களுடன் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பேசி ஆலோசனை பெற்று, அதன்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, 10.11.1989 அன்று திரு.கணபதி ஸ்தபதி 1.3.1990 அன்று வரைபடமும், திட்ட மதிப்பீடும் தந்தார்.

17.3.1990 அன்று நிதிநிலை அறிக்கையைச் சட்ட மன்றப் பேரவையில் வைத்தபோது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் நிறுவப்படும் என்று அறிவித்தேன். அது தொடர்பாக 25.3.1990 அன்று திரு. கணபதி ஸ்தபதி அவர்களுடன் விவாதிக்கப்பட்டு திருவள்ளுவர் சிலையினை செம்பால் செய்வதற்குப் பதில் கல்லால் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை அமைக்கும் பணியை திரு. கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்க முடிவு செய்து ஆணை வழங்கப்பட்டது. 6.6.1990 அன்று கன்னியாகுமரியில் சிலை வடிக்கும் பணியை நான் தொடங்கி வைத்தேன்.

இந்த நிலையில் 1991 ஜனவரி 31 அன்று மீண்டும் கழக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது.

அதற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சியில் ரூ. 45 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் 91 முதல் 96 வரை நடைபெற்ற ஐந்தாண்டு கால ஆட்சியில் பணி மந்தமாகி மீண்டும் ஒதுக்கப்பட்ட நிதியும்;

சென்னையில் உள்ள அட்மிராலிட்டி கட்டிடத்தை பழுது பார்க்க ரூ. 18.75 இலட்சம்;

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் திருப்பணிக்காக ரூ. 7.25 இலட்சம்;

சென்னை கோயம்பேட்டில் பழக்கடை கட்டுதல் பணிக்கு ரூ. 14 இலட்சம் வேறு பணிகளுக்கு என திருப்பப்பட்ட காரணத்தால் திரு. கணபதி ஸ்தபதி சிலை அமைப்புப்பணியை 1.3.1995 அன்று அறவே நிறுத்திவிட்டார்.

13.5.1996- இல் நான்காவது முறையாக கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு சிலை அமைப்புப் பணி மீண்டும் தொடங்கியது.

25.6.1997 அன்று என் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிலை அமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுக்ளுக்குள் சிலை அமைப்புப் பணியை முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு, அது தொடர்பாக திரு. கணபதி ஸ்தபதி அவர்களுக்கு அரசே நேரிடையாக இனி நிதியை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

30.7.1997 அன்று சிலை அமைப்புப் பணிக்குரிய திருத்திய மதிப்பீடுகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு, சிலை அமைப்புப் பணிக்கு திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.614 இலட்சம்;

தமிழ்நாடு கட்டுமான கழகம் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு திருத்திய மதிப்பீடாக ரூ. 172 இலட்சம் என நிதி ஒப்பளிப்புச் செய்து ஆணையிடப்பட்டது:

திரு. கணபதி ஸ்தபதி மேற்கொண்ட பணிகளை, ஒவ்வொரு மாதமும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்து, செய்த பணியின் அளவிற்கு ஏற்ப நிதி வழங்கப்பட்டு வந்தது.

6.2.1999 அன்று திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வரும் பாறை அருகேயுள்ள கப்பலோடையை சரி செய்வதற்கு 86 இலட்சம் ரூபாயும், அதற்குத் தேவையான பொருள்களை கரையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு 7 இலட்சம் ரூபாயும், ஆக 93 இலட்சம் ரூபாய் கட்டுமான கழகத்திற்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டது.

19.10.1999 அன்று சிலை அமைப்புப் பணிகள் முற்றுப் பெற்றன.

அதன் பிறகு சுற்றுச் சுவர் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றன.

திருவள்ளுவர் சிலைக்கு மின்விளக்குகள் அமைக்க 19 இலட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டது.

திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் வெடிப்புகளை நிரப்பி சரி செய்வதற்கும், சிலையின் உட்புறத்தில் தேவையான பணிகளுக்கு கட்டுமான பொருட்களையும், சாரப் பொருட்களையும் எடுத்துச் செல்வதற்கும் 44.50 இலட்சம் ரூபாய்க்கு 22.12.1999 அன்று ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

உடன்பிறப்பே, சிலை வரலாறு பற்றிய அனைத்து ஆதாரங்களையும் முறைப்படி எடுத்துரைத்துள்ளேன்.

குமரிமுனையில் கோலாகலமாகத் திறப்பு விழாத் திருவிழா நடைபெறும் வேளையில் குழப்பம் ஏற்படுத்திட சிலர் முயன்றார்களே; அதற்காகத்தான் இந்த விளக்கமும் வரலாறும் தேவைப்பட்டது.

எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை மறைக்க வேண்டுமென்ற குறுகிய மதி எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை. இப்போதும் வள்ளுவர் சிலைக்கருகே அந்த அடிக்கல் இடம் பெறத்தான் போகிறது. காணத்தான் போகிறார்கள். திறப்பு விழா நிகழ்ச்சிப் பந்தலிலேயே அந்தக் கல்லை லட்சக்கணக்கானோர் கண்டுமிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது அவர் பெயர் சூட்டப்பட்ட மருத்துவப் பல்கலைக் கழக மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியது. அவர் மறைந்த பிறகு அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிடாமல் அன்றைய குடியரசுத் தலைவர் திரு. ஆர்.வி. அவர்களை அழைத்து அதனைத் திறந்து வைத்ததும், அந்தப் பல்கலைக் கழகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி அதன் முகப்பில் எம்.ஜி.ஆர் சிலையும் வைத்து குடியரசுத் துணைத் தலைவர் திரு. கிருஷ்ணகாந்த் அவர்களை அழைத்து அதனை திறந்து வைத்ததும் நான்தான்.

திரையுலகம், மற்றும் பல பிரமுகர்கள் ஒருமித்த குரலில் திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்கவேண்டுமென்று எழுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த கால ஆட்சியாளர்கள் தமது பெயரையே வைத்துக் கொண்டார்கள். திரைப்பட நகருக்கு 1996-இல் ``எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்'' என்று பெயர் வைத்ததும் நான்தான் என்பதும் நாட்டுக்கும் நல்லோருக்கும் நன்கு தெரியும்.

என் செய்வது; திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இவ்வளவு சீரும் சிறப்புடன் நடந்துவிட்டதேயென்று சிலருக்கு எரிச்சல்! ஆத்திரம்!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 5:01 am

சிலை வரலாறு பற்றிய அனைத்து ஆதாரங்களையும் முறைப்படி எடுத்துரைத்துள்ளேன்.

அண்டை மாநில ஏடுகளும் அயல்நாட்டுக் தமிழர்களும் அக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது கண்டு சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை!

ஆனால் எனக்கோ; இவர்களின் செய்கையால் எந்த வருத்தமும் இல்லை! சினமுமில்லை! சீற்றமுமில்லை!

அப்படி ஒரு வேளை வேதனையும் மனத்தில் வேகமும் ஏற்பட்டால்கூட அதனைத் தீர்த்து அறவே அகற்றும் ஒரு மருந்தாக உள்நாட்டு வெளிநாட்டுச் சான்றோர் ஆன்றோர்களின் இனிய உரைகளும் கருத்துக்களும் வாழ்த்துக்களும் அமைந்துவிட்டன என எண்ணிப் பூரிக்கின்றேன்.

விழுப்புண் பெற்றவனுக்கு அவன் வேல்விழிக் காதலி வேது கொண்டு ஒத்திடும்போது ஏற்படும் ஒருவிதமான சுகமன்றோ தமிழ் ஆர்வலர்களின் ஆறுதல் வார்த்தைகளால் எனக்கு ஏற்படுகிறது.

இதோ தமிழ்நாட்டு ஏடுகள் மட்டுமல்ல; வடபுலத்திலிருந்து வரும் ஆங்கில ஏடுகள் எழுதியுள்ள நீண்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகளைத் தருகிறேன்; நீயும் உன் போன்ற உடன்பிறப்புகளும் சுவைத்திடுவீர் என்பதற்காக!

``டைம்ஸ் ஆப் இந்தியா'' எனும் பிரபல ஆங்கில நாளேட்டில் 2.1.2000 அன்று சுவாதிதாஸ் என்பவர் எழுதுகிறார்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 5:02 am

``133 அடி உயரமுள்ள தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையைப் புத்தாண்டு நாளன்று தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் கன்னியாகுமரியில் திறந்து வைத்துள்ளார். இந்த மிகச் சிறந்த நினைவுச் சின்னம் தமிழ்ச் சமுதாயப் பண்பாட்டினை மட்டும் உணர்த்துவது அல்ல; ஜைன சமயத்தில் நிலைபெற்ற போதனைகளையும் உணர்த்துவதாகும். அவர் தனது நூலில் ஆதிபகவன் என ஜைன சமயத்தை முதன் முதல் நிறுவிய ஆதிநாதரைக் குறிப்பிடுகிறார். மனித உளவியல் பற்றிய முழுமையான அறிவாற்றலை இவரது அணுகுமுறை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தீமைக்கு எதிராகப் போராடுவதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைப் பண்புகளை மக்களுக்கு அளிப்பதே வள்ளுவரின் அணுகுமுறை''

உடன்பிறப்பே,

வள்ளுவரை பல மதத்தினரும் தமது சமயத்தவர் என்று உரிமை கொண்டாடுவதின் அடிப்படையில் உருவானதுதான் இந்தக் கருத்தும்!

``டைம்ஸ் ஆப் இந்தியா'' மேலும் எழுதுகிறது பார்.

`` முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தில் வளர்ந்திருந்தாலும் திருக்குறளின் ஆழமானதும் தொடர்ச்சியானதுமான தாக்கம் அவருக்கு உணர்வூட்டியுள்ளன. கம்யூனிசக் கொள்கைகளில் ஈ.டுபாடு இருந்தபோதிலும் கருணாநிதி சோதிடத்தில் நம்பிக்கையுள்ளவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று சோதிடர்கள் எச்சரித்த போதிலும் துணைக் கண்டத்தின் முனையில் சிலை திறப்பதில் அவர் காட்டிய உறுதி, அவரது வாழ்க்கையில் மற்றுமொரு முத்திரையாகும்''

உடன்பிறப்பே,
``டைம்ஸ் ஆப் இந்தியா'' கட்டுரையாளருக்கு எனக்கு சோதிடத்தில் நம்பிக்கையுண்டு என்று யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் அவரும் ``சொல்லப்படுகிறது'' என்று மட்டும் எழுதியுள்ளார்.

``ஏசியன் ஏஜ்'' என்ற மற்றொரு பிரபலமான ஆங்கில ஏடு எழுதுகிறது. ஆர். பகவான் சிங் என்பவர் அந்த ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையில் சில பகுதிகளை மட்டும் காண்க.

``இச்சிலைத் திறப்பு விழா நிகழ்ச்சி முதலமைச்சர் திரு. கருணாநிதியின் உடல் நலத்திற்கு உகந்ததல்ல என சோதிடர்கள் எச்சரித்திருந்த போதிலும் கன்னியாகுமரியில் முக்கடல்களும் கூடும் தென்முனையில் 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் முனிவர் திருவள்ளுவரின் சிலையினைப் புத்தாண்டின் தொடக்கத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்துள்ளார்.

சுமார் 7000 ஆயிரம் டன் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலையை அமைப்பது குறித்த சிந்தனை தமிழ் இலக்கியத்திற்குப் பெருந்தொண்டாற்றி வரும் தி.மு.க. தலைவரின் எண்ணத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் 1975-இல் உதித்தது. இது அவரது வாழ்க்கையின் மிகப் பெரிய குறிக்கோளாகும். இச்சிலை திருவள்ளுவருக்குச் செய்யும் மிகப் பெரிய நினைவுச் சின்னமாகும்.

1989-ஆம் ஆண்டில் சிலைக்கு அடிக்கல் நாட்டிய பொழுது திரு. கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலக் கட்டத்தில் அவர் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும், பல கடுமையான சோதனைகளையும், வீழ்ச்சிகளையும் சந்திக்க நேரிட்டது. ஆனால், திராவிட இலக்கிய படைப்பாளி தனக்கு மிகவும் பிடித்தமான இந்தத் திட்டத்தை கைவிட்டு விடவில்லை. 1996-இல் மீண்டும் ஆட்சி அமைந்ததும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பணிகளில் ஒன்றாக பத்து கோடி ரூபாய் செலவில் இச்சிலையினை வடித்தெடுக்க உலக அளவில் சிலை வடிப்பில் தேர்ச்சி பெற்றவரும், தேசிய அளவில் பல பரிசுகளைப் பெற்றுள்ளவருமாகிய திரு. கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. வாஸ்து சாஸ்திர முறைப்படியும், சிலைகளை வடிவமைப்பதில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அண்மைக்காலத் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலும் மிகப் பிரம்மாண்டமான இச்சிலை அமைக்கும் பணி மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது.''

உடன்பிறப்பே, குறளை அவரவர்களும் தமது கோணத்தில் பொருள் கொண்டு பார்ப்பதைப் போலவே; அய்யன் குறளாசானின் கருத்துக்களையும் அந்த அய்யனின் சிலையை அமைத்திட்ட என்னையும் என் இலட்சியங்களையும் அவரவர் கோணத்தில் பார்க்கின்றனர் என்பதற்கு இந்த இரு ஏடுகளின் கட்டுரைகளே தக்க சான்று!

எதுவரையிலும் ஜனவரி 1-ஆம் நாள் குமரி முனையில் திறக்கப்பட்ட வானுயர வள்ளுவர் சிலையை மறுநாள் காலை அருகில் சென்று பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து என் நெஞ்சு ஓயாது உச்சரித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிமிக்க சொற்றொடர் ``ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்பதைப் போல ``அனைரும் சமம்! அய்யன் வள்ளுவனே தெய்வம்!'' என்பதுதான்!

``வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்''

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 5:03 am

திருவள்ளுவர் சிலை வடிவமைப்பின் விளக்கம்
திருக்குறளின் பெருமை

திருக்குறள், மனிதகுலம் என்றென்றம் ஒழுகத்தக்க வாழ்க்கை நெறிகளை உணர்த்திடும் ஓர் உலகப் பொதுமறை எனும் சிறப்பைப் பெற்றதும், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றதுமான ஒப்புயர்வற்ற நீதி இலக்கியமாகும். ஆத்தகைய நெறிகளை அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பிரிவுகளின் கீழ், 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் இவ்வையகத்துக்கருளிய திருவள்ளுவரை காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், கன்னியாகுமரி கடல் வெளியில் அமைந்துள்ள பாறை ஒன்று தாங்கி மகிழ, திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையைப் பெருமுயற்சியெடுத்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

திருவள்ளுவர் சிலையின் அளவுகள்

சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரமோ 95 அடி பிரமாண்டம்! மொத்தத்தில் 133 அடி உயர சிலை வடிவம் கண்கவர் வண்ணம்!!

பீடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் பொலிவுடன் அமைகிறது. இவ்வாறு சுற்றுச்சுவர் கொண்ட பீடமும் சிலையும் அணிமணி மண்டபமாய் அமைந்தெழுந்து, ஆழிசூழ் தென்முனையில் அழகார்ந்த ஓவியமாய் மிளிர்கிறது.

சிலையின் அளவு காட்டும் தத்துவ விளக்கம்
பீடத்தின் 38 அடி உயரமானது அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிப்பாகவும் அமைந்து திகழ்கிறது. ஆம். அறத்தை அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் `வள்ளுவமாகவே' சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலைக்கான கற்களை ஈந்த மலைகள்
சிறுதாமூர், பட்டுமலைக்குப்பம் மலைகள், அம்பாசமுத்திரம் மலைகள்.

சிலை பற்றிய முக்கிய விவரங்கள்

•சிலையின் உயரம் - 95 அடி

•பீடத்தின் உயரம் - 38 அடி

•சிலையும் பீடமும் சேர்ந்து - 133 அடி

•முகத்தின் உயரம் - 10 அடி

•உடல் பகுதியின் உயரம் - 30 அடி

•தொடைப் பகுதியின் உயரம் - 30 அடி

•கால் பகுதியின் உயரம் - 20 அடி

•உச்சந்தலை, கழுத்து, முட்டி மற்றும் பாதமும் சேர்ந்து - 10 அடி

•கைத்தவம் - 10 அடி

•சுவடியின் நீளம் - 10 அடி

•தோள்பட்டையின் அகலம் - 30 அடி

•சிகைப் பகுதி - 5 அடி

•ஆதாரபீடம் உள்ளிட்ட சுற்றுசுவர் - 60அடி * 50அடி

•ஓவ்வொன்றும், ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம் கொண்ட 10 யானைகள்.

•ஆதார பீடம், சிலை மற்றும் சுற்றுச் சுவர் ஆகியவற்றின் மொத்த எடை 7000 டன்.

சிலை அமைப்புத் திட்ட உருவாக்கம்:
மாண்புமிகு தமிழக முதல்வர்
கலைஞர் மு. கருணாநிதி
(31.12.1975)
தலைமை சிற்பி:
திரு. வை. கணபதி ஸ்தபதி
சிலையமைப்புப் பணிகளில் பங்கேற்ற சிற்பியர் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை - 500.

அல்லும் பகலும் அயராது பாடுபட்டு நமது அய்யன் வள்ளுவனுக்குக் காலத்தால் அழியாத நினைவுச் சின்னத்தை; என் இதயம், இறக்கைகள் பெற்றுப் பறந்து மகிழ்கிற அளவுக்கு - என் இரத்த நாளங்களில் இன்ப அருவி பாய்ந்து பரவுகிற அளவுக்கு - என் மேனியின் சல்லி நரம்புகளும் துள்ளிச் சதிராடும் அளவுக்கு - என் சுவாச கோசங்கள் ஆனந்தப் பெருமூச்சால் நிரம்பிப் பிதுங்கிற அளவுக்கு - வடித்தெடுத்து நிலை நாட்டிவிட்டார் வங்கமும் இந்துவும் அராபியும் என முக்கடல் சங்கமிக்கும் குமரி முனைப்பாறை முற்றத்தில்!

- கலைஞர் - முரசொலி - 20 December 1999

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக