ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Poll_c10பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Poll_m10பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே.

4 posters

Go down

பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Empty பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே.

Post by சிவா Thu Aug 18, 2016 6:54 am




அழுக்காறு என ஒரு பாவி ... பொறாமையை இப்படித்தான் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். செல்வத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாது பொறாமை, தீய வழிகளிலும் செலுத்திவிடும் என்கிறார். தீமையே நினைக்கும் பகைவனைக் காட்டிலும் பொறாமையில் புகையும் நண்பன் கொடியவன் என ஆங்கில வழக்கும் இப்பாவியைப் பழிக்கிறது. பொறாமைப்படுவது ஆண்களில் அதிகமா அல்லது பெண்களில் அதிகமா என்பது, முடிவே பெறாத வாதங்களாய் நீள்கிறது. மனதுக்குள்ளே மறைத்துக் கொள்ளத் தெரியாததால், பெண்களின் தரப்புக்கு இதில் பின்னடைவே. 

 தன்னிடம் இல்லாத ஒன்று தனக்கு அருகில் இருப்போரிடம் இருக்கையில் அல்லது தனக்கு கிடைத்திராத ஒன்று அவர்களுக்கு வந்து வாய்க்கையில், அங்கே பொறாமையின் வித்து ஊன்றப்படுகிறது. இவை நடப்பது கண்டும் பொறாமைப்படாதோர், நமக்கு கிடைப்பதை தமக்குக் கிடைப்பதாகக் கொள்பவர்கள் அல்லது தமக்கு யாவுமே வாய்த்துள்ளதென்ற தர்ம நிறைவைப் பெற்றவர்கள். 

 பிறருக்கு கிடைப்பது தமக்கும் கிடைக்க வாய்ப்பிருந்தால் பொறாமைப்படுவது மனித குணம். வாய்க்கவே வாய்ப்பில்லாத ஒன்றைக் கண்டு பொறாமை வரின் அது அறிவீனம். பொறாமையின் படுகையில் தலைப்படுவோர், தம் தரத்தை தாழ்த்தி அறிவைத் தொலைப்பர். அறிவை இழந்து அவர் செய்யும் செயல்களால், மதிப்போடு மாண்பையும் இழப்பர். 

 மதுரையில் ஒரு கருத்தரங்கிற்கு அதிகாரிகள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நானும் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அங்கிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த கல்லூரியில் கருத்தரங்கம். ஒரே இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தாலும், ஒவ்வொரு அதிகாரிக்கும் தனி வாகனம். 

 சக பெண் அதிகாரியை மதுரையில் சந்தித்தேன். பரஸ்பர நல விசாரிப்பிற்குப் பிறகு இருவரும் கருத்தரங்கிற்கு கிளம்பினோம். எங்களைக் கண்டதும் ஏற்பாட்டாளர்கள் இரு வாகனங்களைக் கொண்டு வந்தனர். தனக்கு தரப்பட்ட வாகனத்தில் அமர்ந்த அவர், என்னையும் உடன் வர நிர்ப்பந்தித்தார். பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது பேசிக் கொண்டே செல்வோம் என்று அழைத்தார். எனக்கென வாகனம் தனியாகத் தந்தும் இவர் எனது நண்பர்தான் இவரை நானே என்னுடன் அழைத்துச் செல்கிறேன் என ஏற்பாட்டாளர்களிடம் சொல்லிவிட்டார். மறுக்க முடியாத நிலையில் நானும் அவருடனேயே கிளம்பிவிட்டேன். 

 பயணத்தின்போது, பதினைந்து வருட இடைவெளியை செய்திகள் பரிமாறி அடைத்துக் கொண்டோம். கல்லூரி வந்தவுடன் இறங்கிச் சென்று கருத்தரங்கில் கலந்துகொண்டோம். மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சி நிறைந்ததும் கல்லூரியிலிருந்து வெளியே வந்தோம் அடுத்தடுத்து அதிகாரிகள் அவரவர் வாகனத்தில் அகன்றார்கள். 
 நானும் சக பெண் அதிகாரியும் வாகனத்திற்காக நின்றபோது அங்கே மூன்று யுவதிகள் வந்தார்கள். மூவரும் அக்கல்லூரியிலேயே பயிலும் மாணவிகளாகத் தெரிந்தார்கள். இருவரில் யாரைப் பார்க்க வருகிறார்கள் என்பது முதலில் தெரியவில்லை. அப்பெண்களில் ஒருவர் என்னிடம் கேட்டார், ""நீங்கள் கன்னியாகுமரி கலெக்டர்தானே? உங்களை பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோம். உங்களைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி... எங்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுத் தருவீர்களா? ''

 நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு வந்த இடத்தில் இளம்பெண்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டதில் எல்லையில்லா ஆனந்தம் எனக்கு. அவர்களின் படிப்பு குறித்த விவரங்களைக் கேட்டேன். வாகன வரிசை கடந்து கொண்டிருந்தது எங்களின் வாகனம் வரவில்லை... இரு பெண்களின் நோட்டுப் புத்தகங்களை வாங்கி கையெழுத்திட்டு திருப்பித் தந்தேன். அவர்களை நன்கு படிக்க கேட்டுக் கொண்டேன். சக பெண் அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார். இன்னமும் வாகனம் வந்திருக்கவில்லை. 

 இரண்டு பெண்கள் வாங்கியதைப் பார்த்து மூன்றாவது பெண்ணும் உற்சாகமாகிவிட்டார். தனக்கும் கையெழுத்து வேண்டுமென்று தன்மையாக கேட்டுக் கொண்டார். அவரது நோட்டையும் வாங்கி அதில் வாழ்த்துகளுடன் என்றெழுதி கையெழுத்திட்டு நிமிர்ந்தேன். அதுவரை எனது பக்கத்தில் நின்றிருந்த சக பெண் அதிகாரியைக் காணோம். இளம்பெண்கள் மூவரும் விடை பெற்றுச் சென்றனர். வாகனங்களின் வரிசையும் முடிந்துவிட்டது. என்னுடன் வந்த அதிகாரி அங்கில்லை. எங்களை அழைத்து வந்த வாகனமும் அங்கில்லை. நான் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தேன். 

 ஏற்பாட்டாளர்கள் வந்து விசாரித்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார், ""நீங்கள் அந்தப் பெண்ணுக்கு ஏதோ எழுதித் தருகையில் உங்களின் வாகனம் வந்தது. உங்களுடன் வந்த அதிகாரி அதில் தான் மட்டும் ஏறிச்சென்றுவிட்டார் என்று'' இப்படியும் நடந்து கொள்ள முடியுமா என வியந்தேன். காலையில் அவர் காட்டிய அன்பை நினைத்தேன். இளம்பெண்கள் அங்கே எனக்குத் தந்த அங்கீகாரத்தில் இவரது அன்பை நான் இழந்திருந்தேன். இருவருமே பெண் அதிகாரிகள் எனினும் என்னை மட்டுமே அம்மாணவிகள் அடையாளம் கண்டு கொண்டதை என் சக பெண் நண்பரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

 அங்கிருந்து நான் எப்படி திரும்புவேன் என்பது குறித்த உணர்வேதுமின்றி என்னை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தார். தான் மட்டும் நகரும்போது எனக்கு தகவல் கூட சொல்லவில்லை. காலையில் எனக்காக வந்திருந்த வாகனத்தை அவர்தான் வேண்டாமென சொல்லியிருந்தார். அழைத்து வந்தது போல் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நாகரீகம் கூட மறந்துவிட்டார். 

 இளம்பெண்கள் தந்த இயல்பான பாராட்டு, பல வருட கால நட்பைக் கெடுத்தது. துளி நேரத்தில் துளிர்த்த பொறாமை, பழி தீர்த்துக் கொண்டது. அறிவு முழுக்க அதிர்வுகளோடு பிறிதொரு வாகனத்தில் திரும்பினேன். மூன்று வருடங்கள் கழித்து ஒருநாள் உதவி கேட்டு அவர் வந்தார். இன்னா செய்த அவர் நாண நன்னயம் செய்து ஒறுத்தினேன். 

 நடக்க இருக்கும் நல்லதையும் கெடுக்க நினைப்பர் பொறாமையாளர்கள். நல்ல சம்பந்தம் கிடைக்க இருந்தால் குறைகள் சொல்லி குலைப்பது, நல்ல வாய்ப்பு கிடைக்க இருந்தால் பொல்லவை செய்து தடுப்பது என பொறாமையின் போர்க்குணங்கள் ஆழமானவை. 

 தன்னைப் பற்றிய உயர் மதிப்பீடுகள் இருப்பின் பொறாமைக்கு அங்கே புகலிடமில்லை. சுய மதிப்பீடு அதிகம் உள்ளோர் பொறாமைத் தீயில் பொசுங்குவதில்லை. மாறாக, ஒருவரது உயர்வையோ அல்லது வாய்ப்பையோ கண்டு பாராட்டும் குணம் அங்கே வருகிறது. பெண்களைப் பாராட்டும் பெண்கள் நல்ல சுய மரியாதையும், மதிப்பீடும் மிக்கவர்கள். 

 பாராட்டே கூட சில சமயங்களில் பொறாமையாக பார்க்கப்படலாம். மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது வரப்பெற்ற பணிமாற்றத்தையடுத்து, வாடகை வீட்டில் சிறிது காலம் தங்கி இருக்க நேர்ந்தது. அடுத்த வீட்டினர் தங்கள் மகனின் திருமணத்திற்கு அழைத்தனர். நல்லுறவு பேணும் நல்நோக்கில் அவர்களின் வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். அந்தப் பையனின் தாயார் கொஞ்சம் இளமையாகத் தெரிவார். அவரைப் பாராட்டுவதாக எண்ணிக் கொண்டு, ""சின்னப்பெண் மாதிரி இருக்கிறீர்கள். உங்கள் பையனுக்கு திருமணமா'' என்றேன். அவர் உடனே ""மேடத்துக்கு பொறாமையைப் பாருங்கள்'' என்று சட்டென சிரிப்புடன் சொல்லிவிட்டார். இதற்கு பதில் சொல்ல எனக்கு வரவில்லை. எனது மனமார்ந்த பாராட்டை ஏற்றுக்கொள்ளாமல், நான் பொறாமைப்படும் வகையில் தான் இருப்பதாக அவர் நினைத்தது கண்டு மலைத்தேன். பாராட்டுவதற்கு மட்டுமல்ல, பாராட்டை ஏற்றுக்கொண்டு மகிழ்வதற்கும், நிறைவான மதிப்பீடு அவசியம் என்பதை இந்நிகழ்வு எனக்கு உணர்த்தியது. 

 பொறாமைதானே உயர்வுக்கு வழி என வாதிடுவோரும் பலருண்டு. தனக்கும் கிடைக்க வாய்ப்புள்ள ஒன்று அடுத்தவருக்கு மட்டும் கிடைக்கையில் அதை பொறாமையாகப் பார்க்காமல், ஓர் ஏக்கமாகக் கொண்டிடலாம். அந்த ஏக்கத்தையே கனவாக்கி, அக்கனவை நனவாக்க முயற்சிக்கலாம். ஏக்கமும் கனவும் முயற்சியும் பிறரை, அடுத்துக் கெடுத்து வெறுப்பதில்லை. 

 தன்னிறைவு இருக்குமிடம், பொறாமைக்கு என்றும் களர் நிலம். பிறருக்குக் கிடைப்பதில் மன மகிழ்வும், தமக்கும் கிடைக்கும் என்ற மனத்தெளிவும் பொறாமையை தொலைவில் வைக்கின்றன. பொறாமையற்ற முகமே பொலிவினைப் பெறுகிறது. பொறாமை எனும் அழுக்கு படின், அது பொலிவை இழக்கிறது. அழகான முகம் பெற அனைவருக்கும் ஆசைதான். பொறாமையை நீக்கி வைத்தால் அதுவும் நமக்கு சாத்தியம்தான்
பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்


பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Empty Re: பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே.

Post by ayyasamy ram Thu Aug 18, 2016 7:43 am

பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. 103459460 பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. 3838410834
-
பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Gitf7yWFQd2UchfyjvEh+JOTHI-IAS
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Empty Re: பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே.

Post by M.Jagadeesan Thu Aug 18, 2016 8:41 am

பகிர்வுக்கு நன்றி சிவா !

அய்யன் வள்ளுவர் திருக்குறளில் " பாவி " என்ற சொல்லை இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார்.

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் . ( நல்குரவு - 1042 )

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்று
தீயுழி உய்த்து விடும். ( அழுக்காறாமை - 168)

வறுமை , பொறாமை ஆகிய இரண்டையும் பாவிகள் என்று குறிப்பிடுகிறார் .

மனதிலே ஏற்படும் நான்கு குற்றங்களாக பொறாமை ,ஆசை ,சினம் , இன்னாச்சொல் ஆகியவற்றை வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம். ( அறன்வலியுறுத்தல் - 35 )

மனதிலே ஏற்படும் நான்கு குற்றங்களில் " அழுக்காறு " எனும் குற்றத்தை முதன்மையாக வைத்ததைக் காண்க .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Empty Re: பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே.

Post by விமந்தனி Thu Aug 18, 2016 2:50 pm

தன்னைப் பற்றிய உயர் மதிப்பீடுகள் இருப்பின் பொறாமைக்கு அங்கே புகலிடமில்லை. சுய மதிப்பீடு அதிகம் உள்ளோர் பொறாமைத் தீயில் பொசுங்குவதில்லை. மாறாக, ஒருவரது உயர்வையோ அல்லது வாய்ப்பையோ கண்டு பாராட்டும் குணம் அங்கே வருகிறது. பெண்களைப் பாராட்டும் பெண்கள் நல்ல சுய மரியாதையும், மதிப்பீடும் மிக்கவர்கள்.
சூப்பருங்க பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. 3838410834


பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே. Empty Re: பொறாமை நீக்கின் பொலிவுறும் முகமே.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum