புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:
Page 1 of 1 •
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.ரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை:
ஆம் நண்பர்களே…!
‘அம்மா’ என்றழைக்க தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் ‘பாவம் தாயில்லாப் பிள்ளைகள்…” என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் விபரம் தெரியும்வரையில் எங்களைத் தவிர்த்தார். அதே மனநிலையில் தான் நாங்களும் வளர்ந்தோம்.
இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
உங்கள் அனைவரது நோக்கமும், எங்களுக்கு உதவ வேண்டும் என்கிற நினைப்பும், என் அண்ணன் நா.முத்துக்குமார் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில், அவன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது.
சினிமாவை எவ்வளவு நேசித்தானோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதி வந்தான். கோடிக்கணக்கானவர்களின் அன்பைவிட அவன் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை.
ஏழ்மையின் பிடியில் பிறந்திருந்தாலும், எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது. எங்கள் மனநிலை என்றும் பணத்தை பிரதானமாக நினைத்ததில்லை.
விமானங்களில் உயர பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி முட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலைகளின் உஷ்ணத்திற்கும் பழக்கப்பட்டே இருந்தது.
எங்களது தந்தை எங்களை பழக்கியது போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே வளர்த்திருக்கிறோம். எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துவிட்டே இறந்திருக்கிறான்.
கடனில்லாத வாழ்க்கை, யாரேனும் உதவி என கேட்டால் எந்த நிலையிலும் தட்டாமல் உதவி செய்வது என்கிற ஒன்றையே இறக்கும்வரையில் கடைப்பிடித்தவன் அவன். செய்திகளில் வருகிற பல கதை சொல்லிகளின் கட்டுக் கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு.
அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தவறவிட்டதே கிடையாது. அவனது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன்.
அவனது உழைப்பு அசுரத்தனமானது. அதன் வெளிப்பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களை தரையில்தான் வைத்திருந்தோம். தயவு செய்து வரலாற்றில் அவனது வாழ்க்கையை தவறாக இடம் பெறச் செய்து விடாதீர்கள் என்கிற கோரிக்கைக்காகவுமே இக்கடிதம்.
இழவு வீட்டில் இழந்ததைவிட கதைச் சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமே என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பே இந்தக் கடிதம்.
ஒரு மகனாக, அண்ணனாக, கணவனாக, தகப்பனாக உறவுகளின் மீது அவன் கொண்டிருந்த பேரன்பு நிஜம். எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவனது இழப்பிலிருந்து இன்னும் எங்களால் மீள முடியவில்லை.
உங்களது அதீத அன்பினால் பல்வேறு தரப்பிலிருந்து உதவிக் கரங்கள் நீள்வது எங்களை மேலும் சங்கடப்படுத்தவே செய்கிறது. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
யாரையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்துவிட்டே சென்றிருக்கிறான். மற்றெல்லோரையும்விட அவன் எங்கள் மீது கொண்ட அன்பு பெரிது.
என் பதின் வயதுகளில், ”இவன் பேரு ராமசுப்பு..” என்றும், “இது விஜய்” என்றும் தன் நண்பர்களாக அறிமுகப்படுத்தினான். அதன் பின் இயக்குநர் ராம், இயக்குநர் விஜய் என அவர்களஷ் மாறினார்கள். அண்ணனின் நண்பன் எனக்கும் அண்ணன் என்கிற விதிப்படி அன்று முதல் எனக்கும் அண்ணனாகவே தொடர்கிறார்கள். எனவே உங்களது சந்தேகங்களுக்கோ, யூகங்களுக்கே, புனைக் கதைகளுக்கோ எங்களில் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
அவன் மண்ணோடு வீழ்ந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. நெடுமண் கீறி ஆழ புதைத்தபோதெல்லாம், வீழ்ந்து விடாமல் விதையென விருட்சமாய் முளைத்து எழுந்தவன். அவனது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்னும் வெளியாக காத்திருக்கின்றன.
தான் பெற வேண்டிய மூன்றாவது தேசிய விருதுக்கான படமாக ‘தரமணி’யைத் தேர்ந்தெடுத்தும் வைத்திருந்தான். இன்னும் பல நூறு விழுதுகள் தனித் தனி மரமென வரும் காலங்களில் சினிமாவில் அவன் இருப்பை உணர்த்தும் என்றே நம்புகிறேன்.
சுஜாதாவின் ”நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்” என்கிற வரிகளின் நினைவலைகள் கண்களுக்கு நீர் திரையிடுகின்றன.
மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கறுப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்கு ப்ரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது.
அள்ளித் தர அன்புடன்
நா. இரமேஷ்குமார்
முகநூல்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி ,பானு .
அதிகமாக பின்னூட்டங்களிலேயே காணப்படும் உங்களை,
முத்தான ஒரு பதிவை தந்து ,காண வைத்து உள்ளீர் .
அவர் விருப்பப் படியே நடப்போம்
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1218945T.N.Balasubramanian wrote:நன்றி ,பானு .
அதிகமாக பின்னூட்டங்களிலேயே காணப்படும் உங்களை,
முத்தான ஒரு பதிவை தந்து ,காண வைத்து உள்ளீர் .இழவு வீட்டில் இழந்ததைவிட கதைச் சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமே என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பே இந்தக் கடிதம்.
அவர் விருப்பப் படியே நடப்போம்
ரமணியன்
நன்றி ஐயா
நீங்க அத்திப் பூத்தது போல வரும்போது என் பதிவுகள் அதிகம் இருந்தது. நீங்க அதிகம் வரும்போது என் பதிவுகள் அத்திப் பூத்தது போல இருக்கிறது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1218964ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1218945T.N.Balasubramanian wrote:நன்றி ,பானு .
அதிகமாக பின்னூட்டங்களிலேயே காணப்படும் உங்களை,
முத்தான ஒரு பதிவை தந்து ,காண வைத்து உள்ளீர் .இழவு வீட்டில் இழந்ததைவிட கதைச் சொல்லிகளின் ஆதரவு கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமே என அஞ்சுகிறேன். பிள்ளைகளை எங்களது பிள்ளைகளாகவே, எங்களது ப்ரியத்துடனேயே வளர்க்க விரும்புகிறோம். அவர்களது மனதில், வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்க கூடாது என்கிற பதைபதைப்பே இந்தக் கடிதம்.
அவர் விருப்பப் படியே நடப்போம்
ரமணியன்
நன்றி ஐயா
நீங்க அத்திப் பூத்தது போல வரும்போது என் பதிவுகள் அதிகம் இருந்தது. நீங்க அதிகம் வரும்போது என் பதிவுகள் அத்திப் பூத்தது போல இருக்கிறது
உண்மை பானு ...உங்கள் பதிவுகள் எண்ணிக்கையே அதை பறைசாற்றுகின்றன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு பானு.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
நல்ல பகிர்வு. நன்றி.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1