புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
36 Posts - 44%
heezulia
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
22 Posts - 27%
mohamed nizamudeen
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
4 Posts - 5%
prajai
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
2 Posts - 2%
Raji@123
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
158 Posts - 41%
ayyasamy ram
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மலேசிய செய்திகள் - Page 9 I_vote_lcapமலேசிய செய்திகள் - Page 9 I_voting_barமலேசிய செய்திகள் - Page 9 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய செய்திகள்

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:42 pm

First topic message reminder :

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு!

கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் கோளின் அடிப்படையில் வெளியிட்ட தகவலின் படி, ரியாவில் ரோகான் ஹிலிர் பகுதியில் சுமார் 54 இடங்களில் காட்டுத் தீ எரிவது கண்டறியப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 16, 2021 9:26 pm

பாஸ், அம்னோ, பெர்சத்து – தனி தனியாகப் சிறப்பு கூட்டத்தை நடத்தின

நாட்டின் அரசியல் முன்னேற்றங்களைத் தொடர்ந்து, பல அரசியல் கட்சிகள் இன்று சிறப்பு கூட்டங்களை நடத்தின.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், அஹ்மத் ஃபட்லி ஷாரி, ​​பாஸ் தங்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

“ஆமாம், ஒரு சிறப்பு கூட்டம் நடந்தது,” என்று அவர் சுருக்கமாக கூறினார்.

அதேக் கட்சியைச் சேர்ந்த தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர், சே அப்துல்லா மாட் நாவியும் இதை உறுதிப்படுத்தினார். இருப்பினும், சுயத் தனிமைப்படுத்தலில் இருந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்றார்.

இதற்கிடையில், அம்னோ அரசியல் பணியகம், இன்று பிற்பகல் புத்ரா உலக வாணிக மையத்தில், கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தியது.

அதைப் போலவே, பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான், கட்சியின் உயர்மட்டத் தலைமை மன்றமும், இன்று பிற்பகல் இயங்கலையில் கூட்டம் நடத்தியதாகத் தெரிவித்தார்.

“பெர்சத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இயங்கலையில் கூட்டம் நடத்தியது. பெர்சத்து உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், தலைமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

“முடிவு கிடைத்தவுடன், துணைத் தலைவர் ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் கூறினார்.

மலேசிய செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:22 pm

105 எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒன்றுபட்டு அன்வாருக்கு ஆதரவு

எதிர்க்கட்சிகளின் 105 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அன்வருக்கு இப்போது உள்ள ஒரே பணி, மக்களவையில் பெரும்பான்மை பெற குறைந்தது ஆறு எம்.பி.க்களைப் பெறுவதுதான்.

88 பக்காத்தான் ஹராப்பான் எம்பிக்களைத் தவிர, அன்வருக்கு இப்போது வாரிசான், பெஜுவாங், சரவாக் பெர்சத்து கட்சி மற்றும் இரண்டு சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் உறுதிப்படுத்தின.

முன்னதாக, வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால், தகுதியான ஆதரவைப் பெறத் தவறியதை அடுத்து, அவரது கட்சி அன்வாருக்கு ஆதரவளிக்கும் என்பதை உறுதி செய்தார்.

அன்வாருக்கு ஆதரவாக எஸ்டியில் கையெழுத்திட்டதை வாரிசான் தலைமை வீரா முகமது அஸிஸ் ஜம்மான் உறுதிப்படுத்தினார்.

“பந்து இப்போது அன்வாரின் கைகளில் உள்ளது,” என்றார் அஸிஸ்.

அன்வார் தற்போது முன்னணியில் இருப்பதாக நம்பப்படும் அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்புடன் போட்டியிடுவார்.

அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் (தே.மு.) ஆதரவைத் தவிர, பாஸ் மற்றும் பெர்சத்து ஆகியோரின் ஆதரவையும் இஸ்மாயில் சப்ரி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜிபிஎஸ் -ஐச் சேர்ந்த எம்.பி. ஒருவர், இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்க கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது, இது அம்னோ துணைத் தலைவருக்கு அரசாங்கத்தை அமைக்க போதுமான ஆதரவை அளிக்கும்.

இருப்பினும், ஜிபிஎஸ் தலைவர் அபாங் ஜோஹரி ஓபேங், ஊடகங்களுக்கு வெளியிட்ட ஓர் அறிக்கை கேள்விக்குறியை எழுப்பியுள்ளது, அவர்கள் இந்த விஷயத்தை “யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஞானத்திற்கு” விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர்.

இது பிரதமர் வேட்பாளர் தேர்வில், ஜிபிஎஸ் நடுநிலை வகிப்பதாக சிலரால் கூறப்படுகிறது.

பின்னர், அபாங் ஜோஹாரியும் பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாடிலா யூசோஃப்-உம் ஜிபிஎஸ் எஸ்டியை அரண்மனையில் ஒப்படைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், அக்கூட்டணி யாரை ஆதரித்தது என்பதை வெளிப்படுத்த, அந்த இரண்டு ஜிபிஎஸ் தலைவர்களும் மறுத்துவிட்டனர்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று மாலை 4 மணிக்கு முன்னதாக, தங்களுக்கு விருப்பமான பிரதமர் வேட்பாளரைத் தெரிவிக்க வேண்டுமென இஸ்தானா நெகாரா நேற்று அறிவுறுத்தியது.

மலேசிய செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:23 pm

பிரதமராக இஸ்மாயில் சப்ரி – பாஸ் ஒருமனதாக ஆதரவு

அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமராக ஆதரிக்கவும் பரிந்துரைக்கவும் பாஸ் இன்று ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது.

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், கட்சி பிரமாண அறிக்கையுடன் (எஸ்டி) தயாராகி வருவதாகக் கூறினார்.

“பாஸ் ஒருமனதாக இஸ்மாயில் சப்ரியை ஆதரிக்கிறது, நாங்கள் சில நாட்களுக்கு முன்பாகவே எஸ்டியை முடித்துவிட்டோம்,” என்று இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் சுருக்கமாகக் கூறினார்.

முன்னதாக, மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை இழந்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்த முஹைதின் யாசினுக்குப் பதிலாக, பெரா நாடாளுமன்ற உறுப்பினரை அம்னோ ஒருமனதாக ஆதரித்ததாகக் கூறப்பட்டது.

15 அம்னோ எம்.பி.க்கள் முஹைதீனின் தலைமைக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதை அடுத்து தேசியக் கூட்டணி (பிஎன்) அரசு கவிழ்ந்தது.

பாஸ், கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முவாஃபாகாட் நேஷனல் கூட்டணியை உருவாக்கிய அம்னோவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:24 pm

முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதற்கு அம்னோ ஓர் உடன்பாட்டை எட்டியதாகக் கூறப்படுகிறது.

அம்னோ வட்டாரங்களின்படி, கோலாலம்பூரில் இப்போது நடந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் விளைவாக இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் முகாம் உட்பட, இஸ்மாயில் சப்ரிக்கு அனைத்து, 38 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இருக்கும் என்று அம்னோ ஆதாரங்கள் கூறின.

அம்னோவில் பிளவுகளைத் தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், அம்னோ உச்சமன்றச் செயற்குழு உறுப்பினர், அர்மாண்ட் அஸா அபு ஹனிஃபா, முகநூல் பதிவு ஒன்றில், அந்தப் பெரா எம்.பி.க்கு 115 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அது உண்மையாகிவிட்டால், அம்னோ துணைத் தலைவர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற இந்த எண்ணிக்கை போதுமானதாக இருக்கும்.

இதற்கிடையில், அம்னோவின் ஒப்புதலுடன் முடிவு பற்றி கேட்டபோது, அஸலினா ஓத்மான் “ஆம்” என்றார்.

இதற்கிடையில், செம்புராங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் ஹுசைன், தற்போது தான் முன்னுரிமை அளிக்க விரும்புவது, நாட்டின் அரசியல் நிலைத்தன்மை என்றும், யாங் டி-பெர்த்துவான் அகோங் எடுக்கும் முடிவு அச்சூழ்நிலையை உருவாக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும், மிக முக்கியமான பிரச்சினையில் நாடு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

நேற்றிரவு அம்னோ எம்.பி.க்களுக்கிடையேயான சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது, ​​”அரசியல் விளையாட்டுகள் போதும்,” என்றார்.

மலேசிய செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:26 pm

பிரதமரைத் தேர்வு செய்வதில் மாமன்னரின் வித்தியாச அணுகுமுறை

அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் இந்த முறை மாமன்னர் சில வித்தியாசமான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அடுத்த பிரதமராக யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை சத்திய பிரமாணக் கடிதம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 16) அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பல்வேறு விவரங்களும் தெரிவிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை ஆகஸ்ட் 18-ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் அரண்மனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாமன்னரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரைத் தாங்கள் பிரதமராகத் தேர்வு செய்தோம் என்ற விவரத்தை வெளியிடக் கூடாது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 20-ஆம் தேதி மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பை அரண்மனை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2021 8:09 pm

இஸ்மாயில் சாப்ரி : நாட்டின் 9-வது பிரதமர்!

மலேசிய செய்திகள் - Page 9 UTGPUeM

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து நாட்டின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சாப்ரியை மாமன்னர் நியமித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி பிரதமராக மான்னரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம் பிற்பகல் 4.30 மணியளவில் நிறைவடைந்தது.

சுமார் 2 மணி நேரக் கூட்டத்திற்குப் பின்னர் மலாய் சுல்தான்களின் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அரண்மனையிலிருந்து வெளியேறின.

நாட்டின் 9-வது பிரதமர் குறித்த முடிவை விவாதிக்க மலாய் ஆட்சியாளர்கள் இன்று கோலாலம்பூரில் மாமன்னரின் தலைமையில் ஒன்று கூடினர்.

பெர்லிஸ், கிளந்தான், ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சுல்தான்கள் இன்றைய ஆட்சியாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மலேசிய செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 20, 2021 10:04 pm

இஸ்மாயில் சாப்பிரி அவர்களுக்கு  அன்பு மலர் அன்பு மலர்

(மாணிக்கம் நடேசன் அய்யா அவர்களும் இந்த பதவிக்கு போட்டிப்போட போவதாக சொன்னாரே.
நான் கூட அவருக்குதான் எந்தன் ஒட்டு என வேறு கூறி இருந்தேன்.என்னாயிற்று?)

@சிவா

  @மாணிக்கம் நடேசன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 19, 2022 11:27 pm

மலேசியாவின் சில மாநிலங்களில், தீவிரச் சிகிச்சைப் பிரிவுகளின் படுக்கைகளில் பாதிக்கும் மேற்பட்டவை நிரம்பிவிட்டன.

நேற்று, அங்கு சுமார் 28,000 பேருக்குப் புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

ஜொகூர் மாநிலத்தின் தீவிரச் சிகிச்சைப் பிரிவுகளின் 70 விழுக்காட்டுப் படுக்கைகள் நிரம்பிவிட்டதாக Malay Mail தெரிவித்தது.

மற்ற நோயாளிகள் பிரிவிலும் படுக்கைகள் முற்றிலும் நிரம்பியுள்ளன.

கிளந்தான், பேராக் மாநிலங்களிலும் அதே நிலை நீடிக்கிறது.

தேவையேற்பட்டால், எல்லா நோயாளிகளுக்கும் போதுமான படுக்கைகளுக்கு உடனே ஏற்பாடு செய்யமுடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

மலேசியாவில் பிள்ளைகளிடையே பத்து விழுக்காட்டுக்கும் சற்று அதிகமானோருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக Malay Mail அறிக்கை தெரிவித்தது.

இம்மாதத் தொடக்கத்தில், ஐந்திலிருந்து 11 வயது வரையுள்ள பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

COVID-19ஐ நிரந்தர நோயாகக் கருதும் நிலைக்குத் தயாராகிறது மலேசியா.

அங்கு, பதின்ம வயதினரில் சுமார் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.

மலேசிய செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 20, 2022 9:28 am

Code:
COVID-19ஐ நிரந்தர நோயாகக் கருதும் நிலைக்குத் தயாராகிறது மலேசியா.

எல்லா தேசத்திலும் வெளியே வராத உண்மை இதுதான்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 13, 2023 1:00 pm

பிந்துலு பள்ளியில் மாணவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியர் கைது

சிபு: பிந்துலு, சபா உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த பல மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தாய்லாந்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

Bintulu OCPD Suppt Batholomew Umpit வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) ஒரு அறிக்கையில், சந்தேக நபர் ஜனவரி 12 அன்று பிந்துலுவில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறினார். சந்தேகநபர் ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உம்பிட் தெரிவித்தார்.

அவர் மீண்டும் ஜனவரி 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மேலும் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று அவர் கூறினார். சந்தேக நபர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (சட்டரீதியான கற்பழிப்பு) மற்றும் பிரிவு 14 (ஏ) மற்றும் 15 (ஏ) பாலியல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் 2017 (AKSTK).

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 ஐந்தாண்டுகளுக்கு குறையாத மற்றும் 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அளிக்கிறது. பிரிவு 14(a) AKSTK, 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்குகிறது அதே சமயம் பிரிவு 15(a) க்கு 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது RM20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தகவல்களின்படி, கிளந்தானை சேர்ந்த ஆசிரியர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தக் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது

மலேசிய செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக