Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சான்றோர் வாழ்வில்... பழைய மேசை
2 posters
Page 1 of 1
சான்றோர் வாழ்வில்... பழைய மேசை
ஒரு சமயம் கும்பகோணம் காலேஜில் மேசை, நாற்காலி
போன்ற சில மரச்சாமான்களை ஏலம் போட்டார்கள்.
தியாகராச செட்டியார் பயன்படுத்திய மேசையும் அவற்றில்
இருந்தது.
தமக்கு வேலை பண்ணிவைத்த தியாகராச செட்டியாரிடம்
பெரிதும் நன்றியறிவுடையவர் ஆசிரியர். அவரை நினைவுகூரத்
தம்முடைய வீட்டுக்குத் "தியாகராச விலாசம்' என்று பெயர்
வைத்தார். அவருடைய வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.
ஆகவே, தியாகராச செட்டியார் பல காலம் இருந்து பாடம்
சொல்லும்போது, அவரது கைப்பட்ட அந்த மேசை ஆசிரியருக்குப்
புனிதமான பண்டமாகத் தோன்றியது. அந்த மேசையும் ஏலத்திற்கு
வருகிறது என்று தெரிந்தவுடன், அதை ஏலம் எடுத்துத் தம் வீட்டிற்குக்
கொண்டுவந்து விடலாம் என்று ஆசிரியர் போனார்.
ஆனால், ஏலம் கேட்கப் போன போதுதான், முதல் நாளே அந்த
மேசையை வேறு ஒருவர் வாங்கிக்கொண்டு போய்விட்டார் என்ற
செய்தி ஆசிரியருக்குக் கிடைத்தது. அதனால், ஆசிரியர் மிகவும்
ஏமாற்றம் அடைந்தார்.
"அது எங்கே போயிருக்கும்? யார் அதை வாங்கிக்கொண்டு போனார்?'
என்பனவற்றை எல்லாம் விசாரித்தார். பிறகு யானையடி குதிரையடித்
தெருவிலுள்ள இராமசாமி நாயுடு என்பவர் அதை வாங்கிக்கொண்டு
போய் இருப்பதாகத் தெரிந்தது. அதை வாங்கினவர் விலாசம்
தெரிந்தவுடன் கொஞ்சம் பணம் அதிகமாகக் கொடுத்து, அவரிடமிருந்து
மேசையைத் தாம் வாங்கி வந்துவிடலாம் என்ற தீர்மானத்தில்,
இராமசாமி நாயுடுவைத் தேடிச் சென்றார்.
அவரைச் சந்தித்து, ""நீங்கள் வாங்கின விலையைவிட நான் அதிகமாகக்
கொடுக்கிறேன். அந்த மேசையை எனக்குக் கொடுத்துவிடுங்கள்'' என்று
கேட்டார்.
"அது எப்படி? நான் எனக்கு வேண்டுமென்றுதானே அதை வாங்கி
வந்திருக்கிறேன். அதை விட்டுவிட எனக்கு மனமில்லை'' என்று சொல்லி
விட்டார் இராமசாமி நாயுடு. ஆசிரியருக்கு மிகவும் வருத்தம் உண்டாயிற்று.
ஆயினும் மனம் தளரவில்லை. அடுத்தடுத்துப் பல நாட்கள் அவருடைய
வீட்டிற்குச் சென்று கேட்டு வந்தார்.
"நீங்கள் மேஜை வேண்டும் என்றுதான் வாங்கி வந்தீர்கள், இதுவோ பழைய
மேசை. நீங்கள் புதியதாகவே ஒரு மேசையை வாங்கிக் கொள்ளலாம்.
எனக்கோ இது குண்டும் குழியுமாக இருக்கிற பழைய மேசையாகத்
தோன்றவில்லை. தியாகராச செட்டியாரின் கைப்பட்ட புனிதமான பூஜைப்
பொருளாகத் தோன்றுகிறது. என்ன விலை சொன்னாலும் நான் தருகிறேன்.
தயை செய்து அதை எனக்கு அளிக்க வேண்டும்'' என்று கெஞ்சாதக்
குறையாகக் கேட்டார்.
இராமசாமி நாயுடு மனம் இரங்கி அந்த மேசையைக் கொடுப்பதாகத்
தோன்றவில்லை. ஆசிரியர் அவர்மேல் ஒரு செய்யுளை இயற்றித் தம்
விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டார். வாய்ப்பேச்சுக்கு இரங்காத
அவர், தம்மேல் பாடப்பெற்ற தமிழ்ச் செய்யுளைக் கேட்டவுடன், மனம்
இரங்கி அந்த மேசையை ஆசிரியருக்கு விற்றுவிட முன்வந்தார்.
அந்த மேசையை வாங்கிக்கொண்டு வந்து தம் வீட்டில் போட்ட பிறகுதான்
ஆசிரியப் பிரானுக்கு ஏதோ ஒரு புதிய ராஜ்யத்தைப் பிடித்தது போன்ற
மகிழ்ச்சி ஏற்பட்டது.
-
-----------------------------------
-வாகீச கலாநிதி கி.வா.ஜகன்நாதனின் "என் ஆசிரியப்பிரான்' என்ற
நூலிலிருந்து...
Re: சான்றோர் வாழ்வில்... பழைய மேசை
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|