புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:28 pm

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 5:42 am

ஐ.எஸ். தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதை பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது:

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அவர்கள் பிடித்து வைத்துள்ள பகுதிகளை மீட்கவும், மேற்கொண்டு தாக்குதல் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அவர்கள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கும் அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்தனர்.

இந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோயல் கோட்லாப் என்ற நிருபரும் மாயமானார்.

இந்த நிலையில் ‘ஐ.எஸ்' தீவிரவாதிகள் ‘யூடியூப்’ மற்றும் ‘அல் புர்கான் மீடியா’ ஆகிய இணைய தளங்களில் ஒரு வீடியோவை ஒளிபரப்பினர். 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் நிருபர் ஜேம்ஸ் போலேயின் தலை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது. தீவிரவாதிகளின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஒபாமா, ஒட்டுமொத்த உலகமே பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலே கொல்லப்பட்ட விதத்தை பார்த்து திகைத்து நிற்கிறது என்றார். கொடூரமான இச்செயலை செய்த இந்த தீவிரவாத புற்றுநோயை ஒழிக்க பொதுவான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும், அப்போது தான் இப்படிப்பட்ட தாக்குதல்கள் பரவாமல் தடுக்க முடியும் எனவும் ஒபாமா மேலும் கூறியுள்ளார்.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 10:38 pm

அமெரிக்க பத்திரிகையாளர் தலையை துண்டித்தது பிரிட்டிஷ் ஜிகாதியா?- ஆய்வில் பரபரப்பு தகவல்

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேவை தலையை துண்டித்து கொலை செய்தது பிரிட்டனைச் சேர்ந்த ஜிஹாதியாக இருக்கலாம் என பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தகவல் வெளியாகி இருக்கிறது.

கிளர்ச்சியாளரின் அடையாளம்!

ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்த கிளர்ச்சியாளரின் அடையாளத்தை விசாரணை அதிகாரிகள் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக தெரிகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்து மீண்ட ஒருவர் அளித்த தகவலின்படி, தன்னை ஜான் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீடியோவில் உள்ள அந்த கிளர்ச்சியாளர் பிரிட்டிஷ் ஜிகாதிகளின் ரிங் லீடர் என சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க உளவு நிறுவனமான எக்.பி.ஐ-யுடன் இணைந்து பிரிட்டனின் எம்-15 புலனாய்வு நிறுவனமும், ஸ்காட்லாந்து நிறுவன போலீசாரும் போலே தலையை துண்டிக்கும் கிளர்ச்சியாளர் அடையாளத்தை காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக 'தி கார்டியன்' செய்தித்தாளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில்தான், கிளர்ச்சியாளர் பிரிட்டிஷ் ஜிஹாதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக சிரியாவில் கடத்தப்படும் வெளிநாட்டவர்களின் உறவினர்களுடன் இணையம் வாயிலாக ஜான் என்ற கிளர்ச்சியாளரே பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே வீடியோவில் இடம்பெற்றுள்ள ஜான் என்பவரும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் ஜான் என்பவரும் ஒரே நபராக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

லண்டன் ஆங்கில உச்சரிப்பு

இதற்கிடையில், மொழியியல் வல்லுநர்கள் சிலர் ஜேம்ஸ் போலே வீடியோவை ஆய்வு செய்துவிட்டு கிளர்ச்சியாளர்கள் பேசுவது லண்டன் ஆங்கில உச்சரிப்பு என தெரிவித்துள்ளனர்.

இது புலன்விசாரணை அமைப்புகளின் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இது குறித்து லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொழியியல் வல்லுநர் கிளேர் ஹர்டகர் கூறுகையில்: "வீடியோவில் பேசிய நபரின் உச்சரிப்பு லண்டன் ஆங்கிலம்தான். அதுவும் குறிப்பாக கெண்ட், எசெக்ஸ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பேசும் உச்சரிப்பை ஒத்து இருக்கிறது" என்றார்.

பிணை கைதியின் தலை துண்டிப்பு வீடியோ பதிவிற்கு முதல் முறையாக ஆங்கிலம் பேசும் கிளர்ச்சியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளாக உள்ள மேற்கத்திய நாடுகளுக்கும் மேலும் வலுவாக தனது எச்சரிக்கையை பதிவு செய்வதற்காகவே என கூறப்படுகிறது.

பிரிட்டனில் பிறந்த 500-க்கு மேற்பட்டோர் ஜிஹாத்திகளாக உருமாறி சிரியா, இராக் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மிரட்டல்:

அமெரிக்க பத்திரிகையாளர் போலேவை கொலை செய்யப்போவதாக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்ததாக அவர் பணியாற்றிய நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரது தலையை துண்டித்து கொலை செய்யும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.

அதில், இராக்கில் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டதை அடுத்து அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே தலையை துண்டித்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்த வீடியோவின் நம்பக்த்தன்மையை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து குளோபல் போஸ்ட் சி.இ.ஓ பிலிப் பல்போனி கூறுகையில்: ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போலேவில் குடும்பத்தாருக்கு கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் கடிதத்தை அனுப்பிவிட்டனர். அந்த மின்னஞ்சல் முழுவதும் வெறுப்பே நிறைந்திருந்தது. கிளர்ச்சியாளர்கள் வேறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

இ மெயில் கிடைக்கப்பெற்ற பிறகு, போலேவை பத்திரமாக மீட்க எங்கள் நிறுவனம் கடும் முயற்சியை மேற்கொண்டது. போலேவை மீட்டுத்தருமாறு சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்திடம் கோரப்பட்டது. இதற்காக பல மில்லியன் டாலர் பணம் செலவழிக்கப்பட்டது என்றார்.

2012-ல் கடத்தப்பட்டார்:

சிரியாவில் உள்நாட்டுப் போரின்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஜேம்ஸை 2012-ம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அதன் பிறகு அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஜேம்ஸ் இடம் பெற்றுள்ள வீடியோ ஒன்றை ஐஎஸ்ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு செய்தி என்ற தலைப்பிடப் பட்டுள்ள அந்த வீடியோவில் பாலைவனப் பகுதியில் ஜேம்ஸ் முழங்காலிட்டு நிற்கின்றார். அவருக்குப் பின்னால் முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர் ஒருவர் கத்தியுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க அரசுக்கும், தனது குடும்பத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்து ஜேம்ஸ் உருக்கமாக பேசுகிறார். பின்னர் அந்த கிளர்ச்சியாளர் ஜேம்ஸின் தலையை கொடூரமான முறையில் துண்டிக்கிறார். அவர் பிணமாக கீழே சாயும் காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 6:25 pm

ஈராக் தீவிரவாதிகள் முற்றுகை அம்ரேலி நகரில் 18 ஆயிரம் யாஷிடி இன மக்கள் வாழ்வதற்காக போராடுகிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  CF9B0A44-C53A-4068-97F6-2A7B70B9D12B_L_styvpfஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூலை தங்கள் பிடியின்கீழ் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து மேலும் தாக்குதல்கள் தொடுத்து நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களை கைப்பற்றினர். அவர்கள் 15 நகரங் களை கைப்பற்றியுள்ளனர். தன்னாட்சி அதிகாரம் படைத்த குர்தீஷ்தானில் தாக்குதல் நடத்தி அங்கும் பெரும்பாலான பகுதிகளை பிடித்தனர். அங்கு வாழும் 'யாஷிடி' என்ற பூர்வீக குடிமக்களை வெளியேற உத்தரவிட்டனர். இதனால் அச்சம் அடைந்த சுமார் 40 ஆயிரம் பேர் சிஞ்சர் மலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அங்கு உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவிக்கும் யாஷிடி' பூர்வீக குடிமக்களுக்கு உணவு, தண்ணீரை விமானங்கள் மூலம் அமெரிக்கா வீசிவருகிறது. சிஞ்சார் மலைபகுதியில் இருந்த ஈராக் முஸ்லீம்கள் ஆயிரகணக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிர்வாதிகளிடம் சரணடைந்து உள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு உள்ள அம்ரேலி நகரில் உள்ள 18 ஆயிரம் 'யாஷிடி' பூர்வீக குடிமக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் மருத்துவ வசதிகள் நிறுத்தி வைக்கபட்டு உள்ளதாக ஈராக்கின் மிகவும் செல்வாக்கான மதகுரு அயதுல்லா அலி அல் சிஸ்தானி கூறி உள்ளார்.

கடந்த 2 மாதங்களாக சன்னி ஜிகாதிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருவதாக 'யாஷிடி' பூர்வீக குடிமக்கள் கூறி உள்ளனர். அம்ரேலி நகரில் வசித்து வரும் டாக்டர்அலி அல்பாயத் கூறும் போது அம்ரேலியில் யார் வாழ்கிறார்கள். இது ஒரு மனிதபிமானமற்ற பேரழிவு ஆகும் 20 ஆயிரம் மக்கள் வாழ்வதற்காக போராடுகிறார்கள்.இங்குள்ள குழந்தைகள் 3 நாட்களு
க்கு ஒரு முறையே சாப்பிடுகிறார்கள்.என்று கூறினார்.

இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் பிலிப் ஹேமண்ட் நிலைமையை கூர்மையாக கவனித்து வருவதாகவும் முற்றுகையிட்ட நகருக்கு உதவிகள் அனுப்ப சர்வதேசத்துடன் இணைந்து முயற்சி எடுத்து வருகிறோம்.

ஆனால் இங்கிலாந்து இஸ்லாமிய போராளிகளை எதிர்த்து போரிட சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்துடன் இணையாது. அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்க அவரது அனுமதி தேவை இல்லை என்று கூறினார்.

டாக்டர் அல்பயத் மற்றும், உறுப்பினர்கள் சிஞ்சார் மலை முற்றுகை குறித்து மேற்கத்திய நாடுகளில் பிரசாரம் செய்ய்து வருகிறார்கள்.

தப்பிக்க பார்த்த ஆயிரகணக்கான 'யாஷிடி' பூர்வீக குடிமக்களுகள் மலையில் இருந்து தள்ளிவிடப்பட்டனர். நூற்றுக்கணக்கான கிராம பெண்கள் கடத்தி செல்லபட்டு பாலியல் அடிமைகளாக பயனபடுத்தப்படுகின்றனர்.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:03 pm

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிட்ட இந்தியர் பலி

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  201408271602191112_Indian-who-joined-ISIS-in-Iraq-killed-Report_SECVPF
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிட்ட இந்தியர் பலியாகினார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசம் கொண்டு வந்து உள்ளனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து இருப்பதாக கடந்த ஜூலையில் பரப்பரப்பு தகவல் வெளியாகியது. இவர்களில் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஏஜாஜ் பக்ருதீன் மஜ்ஜித் என்பவரின் மகன் ஆரிப் என்பதும், மற்ற 3 பேர் தானே நகரை சேர்ந்த தன்வீர் சேக், அமன் நைம், சகீன் பாரூக் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் 20 வயது பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிட்ட மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியாகினார். என்று இணையதள தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த வாலிபர் சண்டையில் பலியாகினார். என்று தீவிரவாதிகள் இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. என்று இணைய தள செய்திகள் தெரிவித்துள்ளனர். இணைய தளத்தில் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஆரிப் பலியாகினார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சகீன் பாரூக், ஆரிப் ஈராக்கில் இருக்கும் இடத்தை அறிந்து அவர் நன்றாக உள்ளாரா என்று விசாரித்துள்ளார். அப்போது ஆரிப் இறந்துவிட்டார் என்று சகீன் பாரூக்கிற்கு தெரியவந்தது. செய்வாய் அன்று தானேயில் உள்ள அவரது வீட்டிற்கு போன் செய்த சகீன் இதனை தெரிவித்தார்.” என்று தன்வீர் சேக் மாமா தெரிவித்துள்ளார். என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் உறுதியான அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இணையதளங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது.




ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 28, 2014 4:38 am

ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு எதிரான போர்: கைகோக்கும் 7 நாடுகள்

வாஷிங்டன், ஆக 28 - தனி நாடு கோரிக்கையோடு இராக்கில் படையெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போராடும் அந்நாட்டின் குர்திஸ் படைக்கு வலுசேர்க்கும் வகையில் அமெரிக்க ராணுவத்துடன், 7 நாடுகளின் படைகள் இணைகின்றன.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சக் ஹேகல் கூறும்போது, "பாக்தாதில் இராக் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் அப்பாவி மக்களை காக்கும் வகையில் மனித நேய அடிப்படையிலான தாக்குதல்களை நடத்துகின்றன. அங்கு உள்ள குர்திஸ் படைக்கு ஆயுத பயிற்சியையும் தளவாடங்களையும் வழங்கி வருகிறோம். இத்துடன் இராக் அரசுக்கு துணையாக அல்பானிய, கனடா, குரோஷியா, டென்மார்க், இத்தாலி, ப்ரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இணைய உள்ளன. இராக் மக்களின் பாதுகாப்புக்காக, இந்த நாடுகள் இணைய முன்வந்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது. இரண்டு வாரங்களுக்கு முன் இருந்தே, இராக்கில் குர்திஸுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமானது. மற்ற நாடுகளும் எங்களுடன் இணைய முன் வந்தால், நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். அமெரிக்கப் படைகளுடன் துணை நிற்க போகும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி" என்றார்.

இராக்கில் ஷியா பிரிவு தலைமையிலான அரசுக்கு எதிராக எழுந்துள்ள ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் சன்னி இஸ்லாமியர்களின் தனி இஸ்லாமிய நாடு அமைக்க பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியா மற்றும் இராக் எல்லைகளில் இவர்கள் பல நகரங்களை வசப்படுத்தி உள்ளனர்.

இராக்கின் கோரிக்கையை அடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக போராடும் குர்திஸ் ராணுவப் படைக்கு வலுசேர்க்க அமெரிக்க ராணுவம் அங்கு தனது தாக்குதலை தொடர்ந்தது.

அமெரிக்கப் படைகள் விரைந்த பின்னர், ஐ.எஸ் வசம் இருந்த மொசூல் அணை மீண்டும் இராக் அரசுப் படையால் மீட்கப்பட்டது. இதனால் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவை தங்களது உள்நாட்டு பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்று கண்டிப்பு தெரிவித்திருந்தனர். அமெரிக்க பத்திரிகையாளர் படுகொலை வீடியோ வெளியீடுக்கு பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

முதற்கட்டமாக இராக்கில் நேற்று முன்தினம் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் முகாம்கள் மீது வான்வழித் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. இந்த தாக்குதலை சிரியாவிலும் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்த அறிவிப்பை வெளியிட வெள்ளை மாளிகை மறுத்தது.

"இராக் மற்றும் சிரியாவில் உளவுப் பணிகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று கூறிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கேத்லீன் ஹேடன், அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்காக, அனைத்து விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறி இருந்தார்.




ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 5:39 pm

ஐ.எஸ்.ஐ.எஸ். மீது நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது: ஒபாமா

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தனக்கு அதிகாரம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இராக்கில் ஆதிக்கம் செலுத்த முயலும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்த சில நேட்டோ நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்களுடன் அந்நாட்டு அதிபர் ஒபாமா பேச்சு நடத்தினார்.

அப்போது, "ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது என்பதை உலகத்துக்கு நிரூபணம் செய்ய செனெட் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால், அதனை நான் வரவேற்பேன்.

ஐ.எஸ்.-ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அதனை முடிவு செய்வதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது.

ஆனால், அமெரிக்கா வலிமை மிக்க நாடு. என்னுடன் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விவகாரத்தில் ஆதரவு கொடுத்தால், நமது தேசத்துக்கு எதிராக பாதுகாப்பு அச்சுறுத்தலை அளித்துவரும் அந்த இயக்கத்தை வீழ்த்தலாம்" என்று அதிபர் ஒபாமா தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் கார்னின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்த விவகாரத்தில் அமெரிக்க மக்களுக்கு அதிபர் ஒபாமா விளக்கம் தர வேண்டிய நிறைய கேள்விகள் உள்ளன.

அமெரிக்க தேசத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், ஏன் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்? ஒபாமாவின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, இது குறித்து அமெரிக்க மக்களிடையே ஒபாமா விளக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 12:52 am


ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் ஈராக் பிரதமர்

ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் ஒரு பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இஸ்லாம் அரசு என அறிவித்து கொண்டனர். ஈராக்கின் குர்திஷ் படையினர் தீவிரவாதிகளிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக அமெரிக்காவின் உதவியுடன் போராடி வருகின்றனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஹெர்ரி தீவிரவாதிகளை ஒழிப்பது குறித்து ஆலோசனை நடத்த இன்று பாத்தாத் சென்று உள்ளார். இது குறித்து ஈராக் பிரதமர் ஹைடர் அல் அபடி கூறியதாவது:-

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிராக போரிட சர்வதேச சமூகம் ஈராக்கிற்கு உதவ வேண்டும்.இந்த புற்று நோயை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையில் எங்கள் பங்கு நாட்டை காப்பது. ஈராக் நாட்டையும்,ஈராக்கியர்களையும் காப்பதில் சர்வதேச சமூகத்திற்கு பங்கு உள்ளது. திடீர் பயணமாக பாக்தாத் வந்து உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஹாரியுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவதிகள் அச்சுறுத்தலில் இருந்து சிரியாவை காப்பாது ஐநா வின் சர்வதேச சமூகத்தின் கடமையாகும். என்று கூறினார்.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:00 am

கணக்குகளை முடக்கினால் டுவிட்டர் ஊழியர்கள் கொலை செய்யப்படுவர் – ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை!

ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் டுவிட்டர் கணக்குகளை முடக்கினால், டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடும் நோக்கில், இரு அமெரிக்க பத்திரிக்கையாளர்களின் தலைகளை கொய்து படுகொலை செய்தனர்.

மேலும், அதனை காணொளியாக பதிவு செய்து டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். மேலும் அவர்கள், அது போன்ற வன்முறையை தூண்டும் பல பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம், அது போன்ற பதிவுகளை வெளியிடும் பயனர்களின் கணக்குகளை முடக்கி வருகின்றது. இதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் ஒரு குறிப்பிட்ட கணக்கிலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மிரட்டல் பதிவில், “போராளிகளின் கணக்குகளை முடக்கினால் டுவிட்டர் ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவர்.உங்களின் மரணம் உங்களின் வாயிற் கதவு அருகே உள்ளது” என்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் அந்த கணக்கையும் உடனடியாக முடக்கியுள்ளது.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 9:58 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் போராட 10 அரபு நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றார் ஜான் கெர்ரி

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். இந்த சுற்று பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போராட பல்வேறு நாடுகள் அளித்துள்ள ஒத்துழைப்பு ஊக்கத்தை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

10 அரபு நாடுகள்

இது குறித்து பி.பி.சி. வெளியிட்டுள்ள செய்தியில், 10 அரபு நாடுகள் உட்பட 40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டணியில் ஒன்றிணைய ஒப்புதல் அளித்துள்ளதுடன் ராணுவ ஒத்துழைப்பு வழங்கவும் சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெர்ரியின் இந்த சுற்று பயணத்தில் முக்கிய அம்சமாக 10 அரபு அரசாங்கங்கள் ஜெட்டா நகரில் வைத்து, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட தங்களது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்து கையெழுத்திட்டுள்ளன என்று தகவல் தெரிவிக்கின்றது.

தலைப்பு செய்தி

இந்த ஒப்புதலை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து, ஈராக், ஜோர்டான், லெபனான், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய 10 அரபு நாடுகள் வழங்கியுள்ளன. வளைகுடா நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் கெர்ரி பெற்றுள்ள வெற்றியை குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை பெண் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ஜெட்டா நகர செய்தி இதழ் ஒன்றில், அமெரிக்க-அரபு கூட்டணி ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க உறுதி எடுத்துள்ளது என்பதை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளதை சுட்டி காட்டியுள்ளார்.



ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக