ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு குத்தமாய்யா?

Go down

இது ஒரு குத்தமாய்யா? Empty இது ஒரு குத்தமாய்யா?

Post by ayyasamy ram Sun Aug 14, 2016 1:56 pm

இது ஒரு குத்தமாய்யா? BL7yAa8tTD28NrRmexlG+ld4492
-
‘எல்லா பெண்களும் நச்சரிப்பதாக சொல்வதை ஏற்க முடியாது…
சில திருமணமாகாத பெண்களும் இருக்கிறார்கள்!’ என்று நான்
விளையாட்டாக நண்பர்களிடம் சொல்வதுண்டு.
-
பெண்களிடம் உங்களுக்கு பிடித்த, பிடிக்காத குணங்கள்
என்னென்ன என்று ஆண்களை கேட்டுப் பார்த்தால், பிடித்த
குணங்களில் ‘பொறுமை’யும், பிடிக்காதவற்றில் ‘நச்சரிப்பு’ம்
கட்டாயம் இருக்கும். அம்மா மேல் பாசமாக இருக்கும் பிள்ளைகள்
கூட ‘எங்க அம்மான்னா எனக்கு ரொம்ப இஷ்டம். என்ன, சில
விஷயங்கள்ல ஓவரா நச்சரிப்பாங்க. அதான் பிடிக்காது’ என்பார்கள்.
-

உண்மையில், பெண்கள் நச்சரிக்கிறோமா?
அல்லது ஏன் அப்படி ஒரு பேர் வாங்கி வைத்திருக்கிறோம் என்று
யோசிக்கிறோமா? இங்கே யாரும் நச்சரிக்க வேண்டும் என்று
நச்சரிப்பதில்லை. ஆனாலும், நாம் இயல்பாகச் செய்யும் சில
செயல்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எரிச்சலூட்டு பவையாக
இருக்கின்றன.
-
அதைத்தான் அவர்கள் அப்படி பெயரிட்டு வைத்திருக்கிறார்கள்.
சரி… பொதுவாக எந்தெந்த விஷயங்கள் பொதுவாக மற்றவர்க்கு
எரிச்சலூட்டுபவை என்று பார்க்கலாம்.
-

‘தூங்கி எழுந்து வந்தா ஃபேன ஆஃப் பண்ணிட்டு வர்றதில்லையா?’
,‘பைப்ப சரியா மூடணும்னு ஏழு கழுதை வயசாகியும் தெரியல!’
, ‘காபி குடிச்சதும் சின்க்ல போடுங்கன்னு தினம் தினமா சொல்லணும்?’
, ‘ஈர டவல பெட்ல போடறீங்க. இப்படித்தான் உங்கம்மா வளர்த்து
வச்சிருக்காங்க. எங்க வீட்லலாம்…’

இது ஒரு விதம். சொல்லுவதென்னவோ சரியான விஷயங்கள்தான்.
சொல்லும் தொனியில்தான் நாம் நச்சரிப்பதாக தோன்ற வைத்து
விடுகிறோம்.

‘மறக்காம பால் கார்ட ரென்யூ பண்ணிடுங்க. போன வருஷம்
மே மாசம் நினைவிருக்கில்ல? நீங்க விட்டுட்டதால, அந்த மாசம்
பூராவும் அதிக விலை கொடுத்து வாங்கினோம்’இங்கேயும்
நினைவுபடுத்துதல் என்ற நல்ல விஷயத்தைத் தாண்டி, போன
வருடம் நடந்ததை இன்னமும் குத்திக்காட்டுவதையே ஆண்கள்
கவனிப்பார்கள்.

இன்னும் பல நேரங்களில், ஆண்களுக்கென சில பிரத்யேகமான
உலகமும் ரசனையும் இருப்பதை மறந்துவிடுகிறோம்.

நமக்கு சீரியல் என்றால் அவர்களுக்கு கிரிக்கெட், நியூஸ்.
அந்த நேரத்தில், ‘என்னதுக்கு டி.வி.யவே முறைச்சுகிட்டிருக்கீங்க?
பக்கத்துல குழந்தை மூத்திரம் அடிச்சு வச்சிருக்கறது தெரியாம?’
என்றால், அவர்கள் உங்களை மூத்திரத்திலிருந்து
காப்பாற்றுவதாகவா நினைப்பார்கள்? அவர்கள் ரசனைகளை
நீங்கள் மதிப்பதில்லை என்றுதான் நினைப்பார்கள்.

‘எதாவது சொல்லி உனக்கு நான் கிரிக்கெட் பார்க்கவிடாம
பண்ணிடணும். அதான?’ என்ற பதில் அடுத்த நிமிடமே எதிர்பார்க்கலாம்.
-


Last edited by ayyasamy ram on Sun Aug 14, 2016 2:04 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது ஒரு குத்தமாய்யா? Empty Re: இது ஒரு குத்தமாய்யா?

Post by ayyasamy ram Sun Aug 14, 2016 1:57 pm

ஆண்களுக்கு நண்பர்கள் முக்கியம். நமக்கு ஒரு தோழியும்
அல்லது நட்புவட்டமும் இப்போது இல்லை என்பதற்காக
ஆணுக்கும் அப்படி இருக்கக்கூடாது என நினைப்பது
சுயநலமல்லவா?

மணிக்கணக்காக பேச அவர்களுக்குள் விஷயமிருக்கும்.
சொல்லப்போனால், நம்மிடம் சொல்லாத பல விஷயங்களை
நண்பனிடம் விவாதிப்பார்கள்.

அதற்காக குடும்பம் முக்கியமில்லை என்பதில்லை,
அதற்காகத்தான் ஓடி ஓடி உழைக்கிறார்கள். அதற்காக
எல்லாவற்றையும் நம்மிடமே பகிர வேண்டும் என நினைப்பது
ஒரு வகை பொஸஸிவ்னஸ்.
அதை அவர்கள் கண்டிப்பாக விரும்புவதில்லை.

சரி… நச்சரிப்பதாகவே பேர் வாங்கிவிட்டதாக நினைத்துக்கொ
ள்வோம். அதை எப்படி மாற்றுவது?


1. முதலில் திரும்பத் திரும்ப சொல்வதை விட்டுவிடுங்கள்.
உதாரணமாக ‘பென்சில் பாக்ஸை ஸ்கூல் பேக்கில் எடுத்து
வச்சுக்கோ’ என்று பல முறை சொன்னால்தான் மகள் எடுத்து
வைக்கிறாள் என்றால், கொஞ்ச நாள் எடுத்துப் போகாமல்
இருக்கட்டும்.
-
அப்படி செய்வதால் ஏற்படும் சிக்கல்களை சந்தித்ததும்,
அதை தினமும் எடுத்துச்செல்வது பற்றின எண்ணம் தானாகவே
தோன்றிவிடும்.
-

2. கணவரிடம், இன்று பால் கார்டு வாங்க கடைசி நாள் என்பதை
நினைவு படுத்த வேண்டும் என்றால், ஒரு முறை நேரில் சொல்லி
விட்ட பிறகு, ஒரு சீட்டில் எழுதி அவர் பையில் வைக்கலாம்.
அல்லது இருக்கவே இருக்கிறது குறுஞ்செய்தி.
-

3. இதை எல்லாவற்றையும் மீறி அவர்கள் அதை செய்ய மறந்தால்,
சொல்லிக் காட்டாதீர்கள். அமைதியாக இருந்தால், அவர்களுக்கே
தன் செயல் குறித்த குற்ற உணர்வும், அதை எப்படி சரி செய்யலாம்
என்ற எண்ணமும் ஏற்படும். ‘
-
அடுத்த முறை பால் கார்ட கடைசி நாள் வரை வச்சுக்க வேண்டாம்.
முன்னாடியே கட்டிடறேம்மா’ என்பார். அந்த இடத்தில் ‘சரிங்க’ என்று
சொல்லி அதை முடித்து விடுங்கள்.
-

4. இவ்வுலகின் எல்லா அம்மாக்களுக்கும் ஆகப்பெரிய கோபம்எ
ன்பது, கூப்பிட்டவுடன் சாப்பிட வராததாகத்தான் இருக்கிறது.
நமக்கு நம் வேலை முடிய வேண்டும்… போலவே அவர்களுக்கு
அவர்கள் வேலை.
-
அதனால், இருக்கவே இருக்கிறது ஹாட்பேக். போட்டு வைத்து
விடுங்கள். பசித்தாலும் சாப்பாட்டை நினைக்காத மனித இனம்
இன்னும் படைக்கப்படவில்லை. தானாக வருவார்கள்.
-


Last edited by ayyasamy ram on Sun Aug 14, 2016 2:02 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது ஒரு குத்தமாய்யா? Empty Re: இது ஒரு குத்தமாய்யா?

Post by ayyasamy ram Sun Aug 14, 2016 1:59 pm

5. பாத்ரூமில் மணிக்கணக்காக தனியாக இருப்பது,
மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்று
கொண்டிருப்பது, நண்பர்களோடு நேரம் செலவிடுவது,
-
ஞாயிறுகளில் சோம்பேறித்தனமாக இருப்பது
என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியம். இதில்
தலையிடுவதையும் கிண்டலடிப்பதையும் தவிர்க்கப்
பாருங்கள்.
-

6. தகுந்த காரணமின்றி அலுவல் நேரத்தில் அழைக்க
வேண்டாம். ‘என்னாங்க… நாளன்னைக்கு அட்சயதிருதியை,
மறந்துறாதீங்க!’ வகை தகவலுக்கெல்லாம் அவர் வீட்டுக்கு
வந்து பயம் கொள்ளட்டும்.

மற்ற தகவலுக்கு இருக்கவே இருக்கிறது குறுஞ்செய்தி அல்லது
வாட்ஸப். ‘என் வைஃப் பொதுவா ஆபீஸ் டைம்ல போன் பண்ண
மாட்டா. அப்படி பண்றான்னா எதாவது முக்கியமானதாத்தான்
இருக்கும்’ என்று உங்களவர் எண்ண தொடங்கிவிட்டார் என்றால்,
அங்கே உங்கள் வார்த்தைக்கான முக்கியத்துவமும் கூடி விடும்.
-
7. கூச்சலிடாதீர்கள். அப்போதைக்கு அது தீர்வாக அமைந்தாலும்,
நாளடைவில் அதுவும் பலனலிக்காமல் போகும். மேலும், உங்கள்
அக்கம்பக்கத்து வீடுகளில் எப்படியும் தொலைக்காட்சி இருக்கும்.
நீங்கள் தரும் என்டெர்டெயின்மென்ட் வேறு அவர்களுக்கு
தேவையில்லை.

வேலைக்கு செல்லும் பெண்களை விட, குடும்பத்தலைவியாக,
ஒரு நாளின் பாதி நேரம் தனியாக இருப்பவர்கள் அதிகம்
நச்சரிப்பவர்களாக மாறிவிடுவதாக ஆராய்ச்சி சொல்கிறது.
-

அது ஏன் என்று யோசித்தால், ஒரே மாதிரியான வேலையை
குடும்பத்தலைவிகள் தொடர்ச்சியாக வருடக்கணக்காக
செய்கிறார்கள். அதில் நாளடைவில் சலிப்படைகிறார்கள்.
மேலும், பெரும்பாலான பெண்களுக்கு, வீட்டில் அவர்கள்
செய்யும் பல விதமான வேலைக்கு உரிய அங்கீகாரமோ
பாராட்டோ கிடைப்பதில்லை.
-
இது அவர்களை மனரீதியாக வலுவிழக்கச் செய்கிறது.
தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக, தன் கருத்து
யாருக்கும் தேவைப்படாத ஒன்றாக முதலில் கற்பனை
செய்து கொள்கிறார்கள்.
-
பின் தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து விடும் ஒரு
கணத்துக்காக, தரையில் கிடக்கும் ஈர டவலுக்காக
காத்திருக்க தொடங்குகிறார்கள். மனிதர்களுக்கே
உரித்தான ஓர் எதிர்பார்ப்பும் குணமும் தன்னோடு
பழகுபவர்கள் தன்னை முக்கியமானவராக கருதவேண்டும்,
மரியாதையாக நடத்த வேண்டும் என்பது. பெண்கள் மட்டும்
விதிவிலக்கல்ல.
-
தன்னம்பிக்கையோடு இருங்கள். இந்த உலகில் யாரொருவரும்
அதிகப்படியாக படைக்கப்படவில்லை. உங்கள் வேலையில்
சின்னச் சின்ன கற்பனைகளை புகுத்தி உற்சாகத்தை கூட்டுங்கள்.
-

உங்களுக்கென சில மணித்துளிகளை ஒதுக்கி, உங்களுக்கு
பிடித்ததை செய்யுங்கள். மனம் விட்டு பேசக்கூடிய ஒரு
நட்பையாவது கண்டுபிடியுங்கள். கடைசியாக, ‘நான்தான்
இங்கிட்டு கரடியா கத்திட்டு இருக்கேன்’ என்று சொல்லிக்
கொண்டிருக்காதீர்கள்.

நீங்கள் கரடி போல் கத்துவதாக உங்களுக்கே தோன்றும் போது,
அதை ஏற்றுக்கொள்வது வீட்டிலுள்ளவர்களுக்கு கஷ்டமா என்ன?
-

(சிந்திப்போம்!)

விக்னேஸ்வரி சுரேஷ் – தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது ஒரு குத்தமாய்யா? Empty Re: இது ஒரு குத்தமாய்யா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum