ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது முக நூல் அல்ல. தமிழனை இணைக்கும் தமிழன்டா செயலி.

Go down

இது முக நூல் அல்ல. தமிழனை இணைக்கும் தமிழன்டா செயலி. Empty இது முக நூல் அல்ல. தமிழனை இணைக்கும் தமிழன்டா செயலி.

Post by Guest Wed Aug 10, 2016 10:07 pm

தமிழர்கள் தங்கள் சிந்தனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு கலந்துரையாடி, தமிழ் சமூகத்தில் முன்னேற்றத்தை நிலைநாட்ட, பெங்களூரில் வசிக்கும் மதுரைக்காரர் சாம் இளங்கோ'வின் 'கஸ்ப் டெக்னாலஜி சொலுஷன்ஸ்' (Cusp technology solutions) நிறுவனம் உருவாக்கியுள்ளது தான் 'தமிழன்டா' எனும் ஆப்.

   "இந்நிறுவனங்களில் பணிபுரியும் நம் தமிழர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குள் தோன்றிய ஆதங்கம்; வெவ்வேறு நாட்டின் பல்வேறு ஸ்தாபனங்களுக்கு உழைக்கும் நாம், ஏன் நம் மொழி, சமூகத்திற்கு என்று ஒன்றுமே செய்ததில்லை..?"

கூகிள் ப்ளே ஸ்டோரில் 'தமிழ் சார்ந்த ஆப்கள்' என்று தேடி பார்த்தோமெனில், தமிழ் மொழி கற்க உதவும் ஆப், தமிழ் மொழி பெயர்ப்பு அல்லது சமையல் குறிப்புகள் ஆப்கள் என சின்ன பயன்பாட்டு செயலிகளும்; செய்தி ஊடக ஆப்களும் மட்டும் தான் இருக்கின்றன.

"நம் தமிழ்நாட்டின் அதே அளவிலான 75 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி முதலிய நாடுகளில் மென்பொருட்கள் எல்லாம் அவர்தம் மொழியிலே இருப்பதால், சமூகம் வலிமை வாய்ந்ததாய் அழியாமல் வளர்ச்சி கண்டு வருகிறது,"

பெரும்பாலான நம் மக்கள் அனைவரிடமும் ஸ்மார்ட் போன்கள் இருப்பதால், நமக்கு இணைந்து இருப்பதிலோ, இணையத்தை பயன்படுத்துவதற்கோ எந்த தடையும் இல்லை. நம் தென்னிந்திய பகுதியில் இருக்கும் 90 சதவீத மக்களுக்கு கல்வியறிவு இருக்கிறது. ஆனால், 10 சதவீத மக்களுக்குதான் சரளமாக ஆங்கில மொழி புலமை உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில், நம்முள் மொழி இணைப்பு துண்டித்து இருப்பதால், சமூகமும் முன்னேற்றம் காணாமல் இருக்கிறதோ எனும் ஆதங்கம் மட்டும் பல வருடங்களாக நமக்குள் இருக்கிறது. பழி கூறுவதை விட, அதற்கு நாமே ஒரு வழி உருவாக்க முடிவு எடுத்தோம்.

2000 வருடங்களுக்கு முன் தமிழானது எல்லா துறையிலும் முதன்மை நிலையில் இருந்தது. நாம் எழுதினால் அது காவியம், கட்டிடம் கட்டினால் அது ஆலயம் என எண்ணற்ற புகழ்பெற்று சிறந்து விளங்கினோம். ஆனால், இக்காலத்தில் நாம் பின்தங்கி போய்விட்டோமோ? என்ற வருத்தம் உள்ளது. தொழில் நுட்பம் எனும் கருவியைக் கொண்டு, மறுபடியும் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் புகழையும் மீட்டெடுக்க முடியுமா எனும் கேள்விக்கான விடை முயற்சி தான், இந்த 'தமிழன்டா' ஆப் உதிர்த்ததற்கான காரணம்.

இதைத்தான் நாங்கள் தொழில் முனையவும் எங்கள் மூலக் காரணமாக எடுத்துக்கொண்டோம். மொழி தடையை உடைத்து, இணையம் மூலம் தமிழ் சமூக மக்களை ஒன்று சேர்க்கும் முயற்சியே தமிழன்டா.

கடந்த வருடம் ஜூலை மாதம் எங்கள் தொழில் முனையும் பணிகள் துவங்கப்பட்டன. அக்டோபர் மாதம் தொடங்கி, இவ்வருடம் ஜனவரி மாதத்தில் தமிழன்டா செயலி தயாரானது. மார்ச் மாதத்தில் அதனை மேலும் மேம்படுத்தி, 100 பயனர்கள் கொண்டு, அதன் பயன்பாட்டை சோதித்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது.

நான், என் தோழர்கள் ராம் குமார், அம்ப்ரீஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் நடராஜன் ஆகியோர் தமிழன்டா ஆப் உருவாக்கிய நிறுவனத்தின் நிறுவனர்கள். இதன் நிறுவனர்கள் இயக்குனர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளான ஏப்ரல் 14இல் வெளியிட்டோம். வெளியிட்ட இரண்டரை மாதத்திற்குள் 5000 பயனர்களை, நாங்கள் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துகள், சிந்தனைகள், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் மற்றவர்களுக்கு நண்பர்களாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவரின் கருத்துக்களைத் தொடர்ந்து தெரிந்து கொள்ள, அவர்களை தொடர்ந்தால் (Follow) போதுமானது. அக்கருத்தை பற்றின பதில் கருத்தை அதன் கீழே உள்ள கமென்ட் பாக்ஸில் பதிவிடலாம். டீ-கடை பென்ச்-இல் பேசிக்கொள்வது போன்ற சூழலை தான், நாங்கள் உருவாக்க விரும்புகிறோம்.

தொழில்நுட்ப அறிமுகம் இல்லாத தமிழர்களை இந்த தளத்தில் இணைப்பதுதான், இவை அனைத்தைவிட மிகப்பெரிய சவாலாய் உள்ளது. இதற்கு ஒரு தீர்வை தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது உள்ளடக்கம் மேம்பாட்டாளர்கள் என எட்டு பகுதி நேர ஊழியர்களைக் கொண்டு, இயங்கி வருகிறோம். இந்தச் செயலியை ஆன்ட்ராய்ட் கூகுள் ப்ளே ஸ்டோர்களிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களிலும் இருந்து டவுன்லோட் செய்ய முடியும்.
நிறைவேற விரும்பும் எதிர்கால கனவுகள்!

   "யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற வேண்டும்" என இதேப்போல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளின் சமூகத்தையும் வலிமை ஆக்கும் ஆப்களை இனிவரும் காலத்தில் உருவாக்க உள்ளோம்.

"உற்றாரும் சுற்றாரும் எனக்கு உறுதுணையாய் இருக்கின்றார். முதல் தலைமுறை தொழில்முனைவோரான எனக்கு என் மனைவியின் ஒத்துழைப்பு, பக்கபலம். என் அம்மா தமிழ் ஆசிரியராவார். அவர் இளங்கோவடிகள் மீது கொண்ட பற்றால், 'சாம் இளங்கோ' என்ற எனக்கு பெயர் சூட்டினார். அப்பெயரின் பலனை நான் இப்பொது செய்வதாக உணர்கிறேன்.

"இறந்த பின் சரித்திரம் எழுதப்படுவதை விட, வாழும் போதே சிறிய அளவிலேனும் சாதனை புரிந்து சரித்திரம் படைக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செயலாற்றி வருகிறேன். இதே போல் பலரும் சரித்திரம் படைக்க என் வாழ்த்துக்கள்,",

என்று பூரித்து பேசினார் சாம் இளங்கோ.

நன்றி இணையம்.
avatar
Guest
Guest


Back to top Go down

இது முக நூல் அல்ல. தமிழனை இணைக்கும் தமிழன்டா செயலி. Empty Re: இது முக நூல் அல்ல. தமிழனை இணைக்கும் தமிழன்டா செயலி.

Post by ChitraGanesan Thu Aug 11, 2016 10:40 am

நன்பர்கள் இணைந்து பார்த்து சொல்லுங்கள்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் *
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» உடையார் வெறும் நாவல் அல்ல...கடவுள் நூல்! - பாலகுமாரன்
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum