புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 I_vote_lcapசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 I_voting_barசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Balaurushya
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 I_vote_lcapசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 I_voting_barசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 I_vote_lcapசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 I_voting_barசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Aug 07, 2016 10:42 pm

First topic message reminder :

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)

உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
            ஊரார்கண் படட்டும் படட்டும்
            உற்றார்கண் படட்டும் படட்டும்
            ஆடவர்கண் படட்டும் படட்டும்
            உண் கண்ணே பட ட்  டும்
                       
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது.      (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்)  பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா  சீயக்காய்  நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................                     (ஃபாரவர் ( forever)  இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு  இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு,  மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும்  இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே  மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8)  மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.

நரை கூந்தல் - முதுமை

தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ………………………                                                         (நற். 10: 1-4)

என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல்  முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை

அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)

என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.

புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.

கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்

முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)

என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)

சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக்  கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது

அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே          (நற். 141 ; 11 – 12)

என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ  - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)

மேற்குறித்த பாடல்கள்  பொருள்வயிற் பிரிந்தால்  தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.

பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று  கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)

வணர்ந்து  ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்                 (நற். 139; 7- 8)

நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு     ( நற். 197 :5>6)

இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.

கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்

திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில்  ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்

நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)

எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு

                      நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)

தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம்  ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Aug 13, 2016 5:16 pm

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 3 103459460 பின்னூட்டம் எழுதுங்க

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 13, 2016 5:19 pm

ஆமாம் குறுந்தொகையில் குறிஞ்சி நிலப் பாடலாக வருகிறது. மற்ற இரண்டு வரிகளும் நினைவில் இருந்த வரிகள். எந்த இடம் என்று சரியாக ஞாபகம் வரவில்லை என்பதால் தனியாக தந்திருந்தேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 13, 2016 6:59 pm

அருமையான அர்த்தமுள்ள பங்களிப்புகள் .
தொடர்ந்து அனைவரும் பங்கு கொள்ளவும் .

நவீன உலகில் , முடி குறுக்கி ,
பூவை வைக்க முடியில்லாது ,
பூவைகள் எண்ணிக்கை முடிவில்லாது இருக்கிறதே .சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 13, 2016 7:51 pm

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
...உலகம் உன்னை மதிக்கும் - உன்
நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால்
...நிழலும் கூட மிதிக்கும் !

என்ற கண்ணதாசனின் வரிகள் மனிதனுக்கு மட்டுமல்ல : மயிருக்கும் பொருந்தும் . தலையிலே இருக்கின்ற வரையில்தான் மயிருக்கு மதிப்பு ; உதிர்ந்துவிட்டால் அவ்வளவுதான் ! கூட்டித் தள்ளி குப்பையில் சேர்த்துவிடுவோம் .நமக்கு அழகுசேர்த்த மயிரென்று , உதிர்ந்த மயிரை யாரும் பெட்டியில் வைத்துப் பூட்டிப் பாதுகாப்பதில்லை . மனித வாழ்க்கையும் இப்படித்தான் .
செல்வமும் , வறுமையும் சகடக்கால்போல மேலது கீழா , கீழது மேலா மாறி மாறி வரும் .  " செல்வம் " தன் பெயருக்கு ஏற்ப ஓரிடத்தில் நில்லாமல் " செல்வோம் " என்று சொல்லிக்கொண்டே இருக்குமாம் . சேரும்காலம் வந்துவிட்டால் , செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும். கடலிலே கொட்டினாலும் , கரையாது பெருகிக்கொண்டே இருக்கும் . அப்படிப்பட்ட செல்வம் , போகும் காலம் என்று வந்துவிட்டால் , எப்படிக் கட்டிக் காத்தாலும் நம்மைவிட்டுப் போய்விடும் .
வாழ்வாங்கு வாழ்ந்தவன் வறுமையின் பாற்படுவது வெட்கப்படவேண்டிய விஷயமல்ல . அந்த வறுமை எப்படி வந்தது என்பதே கேள்வி . கொடுத்துக் கொடுத்து ஒருவன் ஓட்டாண்டியானால் அது தவறல்ல ! குடித்துக் குடித்து ஒருவன் ஓட்டாண்டியானால்தான் தவறு . வேசி வீட்டிற்குச் சென்று காசைத் தொலைத்தால்தான் தவறு . கோவலனுக்கு ஏற்பட்ட வறுமை நாணத்தக்கது . அறஞ்சாரா நல்குரவு .
சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக் குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்தவன் . அவனுக்கு ஏற்பட்ட வறுமையைக் கண்டு வெட்கப்படுகிறான் . அவனுடைய வாயினாலேயே " இலம்பாடு நாணுத்தரும்
எனக்கு " என்று கூறுகிறான் . இத்தகு மாந்தரை " நிலையின் இழிந்த மாந்தர் " என்று அய்யன் வள்ளுவர் குறிப்பிடுகிறார் . அவர்கள் தலையின் இழிந்த மயிருக்குச் சமானவர்கள் என்பது ஐயனின் கருத்து.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை .

என்பது ஐயனின் வாக்கு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Aug 14, 2016 11:53 am

தோழமைக்கு வணக்கம்
சமூக விழுமியம் : மயிர் எனும் இத்தொடரில் சமூகத்தில் காலந் தோறும் அவ்வுறுப்பிற்கு வழங்கப்பட்டு வந்த மரியாதையினை, அவ்வுறுப்பின்வழி உணர்த்தப்பட்ட மதிப்பீடுகளைத் தெரிந்துகொண்டு அவற்றை முறைப்படி பதிவுசெய்யவேண்டும் என்பதற்காகச் செவ்விலக்கியங்களில் இருந்து தொடங்கியிருக்கிறேன்.
முதலில் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் தொடராக வெளியிட விரும்பி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். நற்றிணை என்றால் அதன் 400 பாடல்களில் இவ்வுறுப்பு குறித்து என்னென்ன பதிவுசெய்யப்பட்டிருக்கிறதோ அவற்றை முதலில் தொகுத்து தரவுகளின் அடிப்படையில் தலைப்பிட்டு எழுதுகிறேன். ஆகையினால் பாடல்களின் துணை இல்லாமல் எழுதுவதில்லை.
நற்றிணையில் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை ஒவ்வொரு இலக்கியத்திலும் உள்ள முழுமையான தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே என் அவா. தங்களைப் போன்ற அறிஞர்களின் கருத்து என் தேடுதலைச் செம்மைப்படுத்தும். இறைவனும் துணைநிற்பாராக.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Aug 14, 2016 11:58 am

பதிவைத் தொடர்ந்து எப்படி செய்வது என்று தெரியாமல்தான் புதிய பதிவில் தொடர்ச்சியைச் சேர்த்தேன். ஒன்றாக இணைத்து விட்ட நிர்வாகக் குழுவிற்கு என் நன்றி .
என் இம்முயற்சிக்குத் துணைசெய்யும் அனைத்து அறிஞர் பெருமக்களுக்கும் நன்றி.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Aug 14, 2016 12:02 pm

பதிவைத் தொடர்ந்து எப்படி செய்வது என்று தெரியாமல்தான் புதிய பதிவில் தொடர்ச்சியைச் சேர்த்தேன். ஒன்றாக இணைத்து விட்ட நிர்வாகக் குழுவிற்கு என் நன்றி .
என் இம்முயற்சிக்குத் துணைசெய்யும் அனைத்து அறிஞர் பெருமக்களுக்கும் நன்றி.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Aug 14, 2016 12:03 pm

நற்றிணையின் தொடர்ச்சி

கூந்தல் விரித்தல், பூச்சூடாதிருத்தல், பூ வாடுதல் - துன்பம்

பொருள்வயிற் பிரிந்து செல்லும் தலைவனுக்குக் கடத்தற்கரிய பாலையின் இடைவழியில் தலைவியின் கலங்கிய தோற்றம் கண்முன் வருகிறது. முன்பு ஒருமுறையும் தான் பிரிவைக் கூறியளவில் தலைவி வருத்த மிகுதியினால் கண்கள் சோர்ந்து போக பின்னப்பட்டிருந்த கூந்தலை விரித்து அதனுள்ளே முகம் மறைத்துப் பெரிதும் கலக்கம் அடைந்தவளாய் வாய்விட்டு அழுது தன்னை நோக்கியதை நினைத்துப் பார்ப்பதாக இளங்கீரனார் எனும் புலவர் இப்படி பாடுகிறார்.

அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே
சேறும் மடந்தை என்றலின் தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூற
பின் இருங் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து
………………………………………………………………………..
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள்நோக்கே (நற். 113: 5 – 12)

இப்பாடலில் தலைவி தன் பின்னிய கூந்தலை விரித்துப் போட்டு அதனுள் முகம் புதைத்து அழுவது என்பது துக்கத்தின் அடையாளமாகக் காட்டப்படுகிறது.

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்ததனால் தலைவியின் கண்ணும் தோளும் மணம் வீசும் கூந்தலும் நலம் இழந்திருப்பதனைத் தாயங் கண்ணனார்.

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழநலம் இழந்து பசலை பாய (நற். 219:1,2)

என்றும் பொதும்பில் கிழார் மகனார்
நெறி இருங் கதுப்பும் , நீண்ட தோளும்
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய (நற். 387: 1,2)

என்றும் தலைவனைப் பிரியும் தலைவியின் நலம் கெடுவதனைக் குறிப்பிடுகின்றனர்.

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி பருவம் கண்டு ஆற்றாளாய் இயற்கையின் மலர்ச்சியைக் கண்டு வருந்துவதாகப் படித்திருக்கிறோம். நற்றிணையின் பாலைப் பாடலொன்று இளவேனில் பருவத்தைக் காணுந்தோறும் அவர் நமை மறந்தார் என வருந்துவதோடு தலைவி, மெல்லிய பாதிரி மலரை வீதி தோறும் விற்றுச் செல்லும் பெண்ணைக் கண்டும் வருந்துவதாகக் குறிப்பிடுகிறது. ஏனென்றால் தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் வருத்த மிகுதியினால் மேனி பசந்து அழகிழப்பது மட்டுமல்ல பெண்கள் கூந்தலில் பூச்சூட்டிக் கொள்ளாமலும் இருந்திருக்கின்றனர். அதனால்தான் தலைவனைப் பிரிந்திருக்கும் நிலையில் பூ விற்கும் பெண்ணைக் காணும் போது தலைவிக்கு வருத்தம் உண்டாவதாகக் கீழ்வரும் பாடல் பதிவு காட்டுகிறது.
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என
இணர் உறுபு உடைவதன் தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி
வால்இதழ் அலரி வண்டுபட ஏந்தி
புதுமலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே. (நற். 118:5 – 11)

வேறொரு பாடலில் தூங்கலோரியார் எனும் புலவர் தலைவன் தலைவி நட்பு அறியப்படும் காலத்தில் வீட்டினர் அவளை இற்செறிப்பு செய்வர். அவ்வமயம் அவளால் தன்னை அழகுபடுத்திக் கொள்ள இயலாது. இற்செறிப்பு நீங்கினால் அழகுபடுத்திக் கொள்ள அவளுக்கு வயலில் விளையும் நெய்தலும் கொரையும் வேண்டும். ஆகையினால் உழவர்களே உழத்தியர்களோடு செல்லும் நீங்கள் களையென்று கருதி அவற்றைத் தூக்கியெறிந்து விடாதீர்கள்.

நீர் உறு செறுவின் நாற முடி அழுந்த, நின்
நடுநரொடு சேறிஆயின்,அவண
சாயும் நெய்தலும் ஓம்புமதி, எம்மில்
மாஇருங் கூந்தல் மடந்தை
ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே. (நற். 60:7 – 11)

என்று தோழி கூறுவதாக வருகின்றது.
மேற்குறித்த பாடல்கள் தலைவனின் பொருள்வயிற் பிரிவை அறியும் நிலையிலும் பிரிந்த நிலையிலும் தலைவியின் கூந்தல் அழகிழந்து காணப்படும் நிலையை உணர்த்துவன.

அதுவல்லாது தலைவன் பரத்தையிற் பிரியும் காலத்தில் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டதனை ஒருசில பாடல்கள் பதிவுசெய்துள்ளன.

பரத்தையிற் பிரிந்த தலைவன் எப்பொழுது வருவான் என்று தன்னை அழகுபடுத்தி தலைவி எதிர்பார்த்திருக்கும் சூழலில் தலைவன் வருகிறான். வந்த பிறகு இதுநாள்வரை அவன் வாராதிருந்த காரணத்தினால் ஊடல்(கோபம்) கொண்ட தலைவி தலைவனிடம்

வெய்யை போல முயங்குதி முனைஎழத்
தெவ்வர்த் தேய்த்த வெச்சேல் வயவன்
மலிபுனல் வாயில் இருப்பை அன்ன, என்
ஒலிபல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! ( நற். 260: 5 – 10)

என்கிறாள். அதாவது, பகை மன்னரை வெற்றி கொண்ட விராஅன் என்னும் வீரனின் இருப்பை நகரம் போன்று என் அழகு இருந்தது. நீ என்னை விட்டு நீங்கியதனால் உன்னை நினைத்து நான் கூந்தலில் சூடிய மலர் வாடிப் போயிற்று. இதற்குக் காரணமான உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று இவ்விதம் கூறி தன் கோபத்தை வெளிப்படுத்துகின்றாள்.

மற்றொரு பாடலில் பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன் வீடு நோக்கி தலைவியைக் காண வருகின்றான். தலைவி ஊடல் கொண்டிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். தலைவியைச் சமாதானம் செய்து அவள் ஊடலைத் தணிக்க விரும்புகிறான். அதற்கு ஏதுவாக வீதியில் அவன்பிள்ளை விளையாடிக் கொண்டிருக்கிறது. அதைக் காணும் தலைவன் தலைவியைச் சமாதானம் செய்ய நல்ல வழி என்றறிந்து குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்தவாறு வீட்டிற்குள் நுழைகிறான்.

குழந்தையை அணைத்தவாறே தன் மனைவியிடம் செல்கிறான். அவளோ அவன் கருத்துணர்ந்து என்னருகில் வருவதற்கு நீ யார் என்று கேட்கிறாள். அந்நிகழ்வைத் தன்னுடன் வந்த பாணனிடம் கூறி என் குழந்தைக்குத் தாயாகிய இவள் கேட்கும் கேள்வியால் எனக்குச் சிரிப்பு வருகிறது. சிரிப்போம் வருவாய் என்று பாணனை அழைக்கிறான். தலைவன் அவ்வாறு சொல்லும்போது தலைவியைச் சமாதானம் செய்ய குழந்தையைச் சுட்டிக் காட்டுவதோடு அவள் அழகிய குற்றமற்ற நெற்றியையும் மணக்கும் கூந்தலையும் உடைய அழகி என்று புகழ்ந்தும் கூறுவதாக மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் எனும் புலவர் பதிவு செய்கிறார்.

பிறை வனப்பு உற்ற மாசு அறு திருநுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
யாரையோ? என்று இகந்து நின்றதுவே! ( நற். 250:7 – 10)

தலைவன் கூற்றாக அமையும் இப்பாடலில் தலைவன் பிரிந்திருந்த நிலையிலும் தலைவியின் கூந்தல் மணமுடையதாக இருக்கின்றது. ஆனால் அவள் மனம்தான் வேறுபட்டுக் காணப்படுகிறது என்று வருவதனால் மற்ற பிரிவுகளில் தலைவன் பிரிவால் மனம் வருந்தி தன் நலம் இழக்கும் தலைவி அவன் பரத்தையிற் பிரியும் போதுமட்டும் வருத்தம் இருந்தாலும் தன்னை அவள் அழகுபடுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்வதில்லை என்பது தெரிகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 14, 2016 1:01 pm

முனைவர் ப.குணசுந்தரி wrote:பதிவைத் தொடர்ந்து எப்படி செய்வது என்று தெரியாமல்தான் புதிய பதிவில் தொடர்ச்சியைச் சேர்த்தேன். ஒன்றாக இணைத்து விட்ட நிர்வாகக் குழுவிற்கு என் நன்றி .
என் இம்முயற்சிக்குத் துணைசெய்யும் அனைத்து அறிஞர் பெருமக்களுக்கும் நன்றி.
உறுப்பினர்களுக்கு உங்களுக்கு உதவ தானே நாங்கள் இருக்கிறோம் புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 14, 2016 1:02 pm

விரித்த கருங்கூந்தல் துன்பத்தின் அறிகுறியாம் . இதை படித்தவுடன் சிலம்பில் வழக்குரைகாதை தான் என் நினைவுக்கு வந்தது .

உடலெங்கும் படிந்த புழுதி . தலைவிரி கோலம் . கையிலே ஒற்றைச் சிலம்பு . கண்களிலே கண்ணீர் . இவற்றையெல்லாம் கண்ட அளவிலேயே " ஏதோ ஒரு தீங்கு நடக்கப் போகிறது " என்பதைக் குறிப்பால் உணர்ந்த பாண்டிய மன்னன் தன் நெஞ்சின் ஆற்றலை இழந்தான் . வாதம் செய்த பிறகு , கண்ணகியின் சொற்களைக் கேட்ட அளவில் தன்னுடைய உயிரையே இழந்துவிட்டான் .

பின்வரும் வெண்பா இதை உணர்த்தும்.

மெய்யிற் பொடியும் , விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் - வையைக்கோன்
கண்டளவே தோற்றான் அக்காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக