புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 17:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 11 I_vote_lcapசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 11 I_voting_barசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 11 I_vote_rcap 
70 Posts - 36%
heezulia

65 Posts - 33%
Dr.S.Soundarapandian

36 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 11 I_vote_lcapசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 11 I_voting_barசமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) - Page 11 I_vote_rcap 
321 Posts - 48%

212 Posts - 32%

66 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

Karthikakulanthaivel

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Mon 8 Aug 2016 - 0:12

First topic message reminder :

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)

உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
            ஊரார்கண் படட்டும் படட்டும்
            உற்றார்கண் படட்டும் படட்டும்
            ஆடவர்கண் படட்டும் படட்டும்
            உண் கண்ணே பட ட்  டும்
                       
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது.      (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்)  பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா  சீயக்காய்  நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................                     (ஃபாரவர் ( forever)  இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு  இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு,  மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும்  இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே  மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8)  மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.

நரை கூந்தல் - முதுமை

தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ………………………                                                         (நற். 10: 1-4)

என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல்  முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை

அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)

என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.

புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.

கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்

முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)

என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)

சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக்  கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது

அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே          (நற். 141 ; 11 – 12)

என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ  - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)

மேற்குறித்த பாடல்கள்  பொருள்வயிற் பிரிந்தால்  தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.

பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று  கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)

வணர்ந்து  ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்                 (நற். 139; 7- 8)

நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு     ( நற். 197 :5>6)

இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.

கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்

திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில்  ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்

நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)

எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு

                      நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)

தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம்  ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu 6 Oct 2016 - 23:10

தொடர்ச்சி

கூந்தல் மணம்
இளங்கீரனார் எனும் புலவர் இயற்கைப்புணர்ச்சியில் கூடி நீங்கும் தலைவன் தலைவியின் கூந்தல் மணம் நினைத்து தன் நெஞ்சிற்குச் சொல்லுவதாகப் பாடலைப் பாடியிருக்கின்றார். அப்பாடல் வருமாறு,

யான் நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல்
வளம்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல் வார்த்தன்ன,
நல்நெறியவ்வே,நறுந் தண்ணியவே.    (குறுந். 116)

இப்பாடலில் தலைவன் தலைவியோடு கூடியிருந்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அவளை விட்டு நீங்கியபின்னும் நினைத்து ஏங்குவதற்குக் காரணமாகின்றது. தலைவியை நினைக்குந்தோறும் அவனுக்கு நினைவில் நிற்பது அவளது கூந்தல். அதனைத் தேம்பாய் கூந்தல் என்கிறார். அதாவது வண்டுகள் மொய்க்கும் தன்மையுடைய கூந்தல் என்பது பொருள். மேலும் அவளின் கூந்தல் வளம் பொருந்திய சோழரின் தலைநகரமான உறையூரின் பெரிய நீர்த்துறைகளில் காணப்படும் நுண்மையான கரிய மணல் போன்று அடர்த்தியாய் நல்ல மணமுடையதாகவும் இருப்பதாகக் கூறுப்படுகிறது. இங்குத் தலைவியின் கூந்தலிலிருந்து வெளிப்படும் மணம் வண்டுகள் மொய்க்கக் கூடியதாக இருக்கின்றது என்பதனால் அன்றலர்ந்த மலரை அவள் சூடியிருக்கின்றாள் என்று கருத இடம்தருகின்றது.

பரணர் தம் பாடலில் பெண்ணின் கூந்தலிலிருந்து வரும் மணம் குறித்த பதிவுடைய பாடல் ஒன்றைப் பதிவு செய்கிறார். தலைவியின் உறவைப் பெற விரும்பும் தலைவன் எவ்வழியிலும் அவள் ஊடல் மாறாதிருக்கும் சூழலில் தன் நெஞ்சிற்கு உரைப்பதாக வரும் பாடல் இது.

………………………………………………………………………மனைமரத்து
எல்லுறும் மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே ?  (குறுந். 19: 3 – 5)

இப்பாடல் அடிகளுக்கு உரையாசிரியர் மனைத்தோட்டத்தில் உள்ள மரத்தின்மீது படர்ந்துள்ள முல்லை மணம் கமழும் பலவாகப் பிரிக்கப்பட்டுள்ள கரிய கூந்தலை உடைய தலைவி நமக்கு இனி எத்திறத்தில் உரிமை உடையவளாக இருப்பாள் என்று தலைவன் வருந்துவதாகப் பொருள் தருகின்றார்.

இதில் முல்லை மலரைச் சூடியதால் அவளின் கூந்தல் மணக்கிறதா? அல்லது இயற்கையிலேயே தலைவியின் கூந்தல் முல்லை மணம் உடையதாக இருக்கின்றதா? என்று அறியமுடியவில்லை. ஆனால் உரையின் இறுதியில் உரையாசிரியர் மௌவல் போல மணம் வீசும் கூந்தலுடையாள் என்பதற்குத் தலைவியின் கூந்தலின் இயற்கை மணத்தைப் பாராட்டினான் என்று குறிப்பிடுகின்றார். (பக்.62 குறுந்தொகை பகுதி – 1 என்.சி.பிஎச் வெளியீடு) இதனால் பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்பது போன்ற கருத்து பதிவு செய்யப்படுகிறது.

மேற்குறித்த பாடலடிகளுக்கு டா. உ. வே. சா அவர்கள் நெஞ்சே  மனைப் படப்பையில் உள்ள மரத்தின்மீது படர்ந்த ஒளியை உடைய முல்லை மலர்கள் மணம் வீசுதற்கிடமாகிய பலவாகிய கரிய கூந்தலை உடைய இவள், நம் திறத்தில்  எத்தகைய உறவினை உடையவளோ! ஏதிலள்போலும்  என்று உரை தருகின்றார். மேலும் மௌவல் நாறும் கூந்தல் என்றது, முல்லையை அணிந்தமையால் அமைந்த மணத்தை உடையதென்றபடி, கற்பிற்கு அறிகுறியாக மகளிர் முல்லை மலரைச் சூடுதல் மரபு; ‘கற்பின் மிகுதி தோன்ற முல்லை சூடுதல் இயல்பு’(சிறுபாண். 28-30, ந.) எல் - ஒளி (தொல் .753); இரவுமாம். பனிச்சை முதலிய ஐந்து பகுதிகளை உடையதாதலின் பல் கூந்தல் என்றான். யாரளோ என்றது பண்டையளல்லள் என்றபடி; இச் சொல் யாரென்றது அள்விகுதி ஏற்று இடம் குறித்து நின்றது, யாரை என்பது போல என்று விளக்கமும் தருகின்றார். (தமிழ் இணையக் கல்விக்கழகம் குறுந்தொகை, டா. உ.வே.சா உரை, பக். 46,47)

இருவர் உரைகளில் டா. உ.வே.சா அவர்களின் உரையே ஏற்புடையதாக இருக்கின்றது.

தொடரும்...........

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 6 Oct 2016 - 23:54

"ஒருவன் " என்பதை பரம்பொருள் என்ற தங்களது கருத்து ஏற்கத்தக்கதே !

ஒருவன் வாளி என்பதை ஒரு + வன் + வாளி எனப்பிரித்து

ஒரு வலிமை பொருந்திய அம்பு என்று பொருள் காண்பார் டாக்டர் . வ . சுப . மாணிக்கம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri 7 Oct 2016 - 8:15

M.Jagadeesan wrote: "ஒருவன் " என்பதை பரம்பொருள் என்ற தங்களது கருத்து ஏற்கத்தக்கதே !

ஒருவன் வாளி என்பதை ஒரு + வன் + வாளி எனப்பிரித்து

ஒரு வலிமை பொருந்திய அம்பு என்று பொருள் காண்பார் டாக்டர் . வ . சுப . மாணிக்கம் .
[You must be registered and logged in to see this link.]

நன் அமுதத் தமிழின் சொல் வளமும் பொருள் வளமும் அற்புதம். எப்படிப் பொருள் கொண்டாலும் ஏற்புடைத்தாவது என்பது தமிழியின் மென்மையையும் அதே சமயம் அற்புத வன்மையையும் புலப்படுத்தி, தான் மட்டும் கம்பீரமாக உயர்ந்து நிற்பது. இந்த எண்ணமே மெய்சிலிர்க்கும் அனுபவமும் ஆகிறது.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sat 15 Oct 2016 - 11:51

தொடர்ச்சி தொடர் - 4

பனம்பாரனார் எனும் புலவர் தலைவியின் கூந்தல் நரந்தம் எனும் புல்லின் மணமுடையதாகவும் கருமையுடையதாய் கற்றையாகவும் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல் (குறுந்.52: 3)

மாதீர்த்தன் எனும் புலவர் தம் பாடலில் கூந்தல் பற்றிய பதிவொன்றைத் தருகின்றார். தோழி தலைமகனுக்குக் குறிப்பால் குறியிடம் தெரிவிப்பதாகப் பாடல் வருகின்றது. அப்பாடல் வருமாறு,

…………………………………………. பொழில்; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்

இப்பாடலில் வரும் கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும் என்பதற்கு உ.வே.சா அவர்களின் ஆராய்ச்சி உரை பதிப்பில் கூழைக்கேர் மணங்குறுகம், கூழைக்கேரு மணங்குணர்கஞ் என்று பல பிரதிகளின் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் பாடலில் கூழைக் கெருமண் கொணர்கம் சேறும் என்றே அவர் பதிப்பித்துள்ளார். இவ்வடிக்கு அவர் நாங்கள் எமது கூந்தலுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு எருமண்ணைக் கொணர் வேமாய் அங்கே செல்வேம் எனப் பொருள் தருகிறார். ( உ.வே.சா ஆராய்ச்சி உரைப்பதிப்பு பாடல் 113 க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழகம்)

முனைவர் வி.நாகராசன் அவர்கள் இவ்வடிக்கு நாங்கள் எங்கள் கூந்தலில் சூட்டுவதற்காகச் செங்கழுநீர் மலர்களைப் பறிக்கச் செல்கின்றோம் என்று உரைதருகின்றார். (பக். 273, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2004) மேலும் சொற்பொருள் தரும் பகுதியில் எருமணம் என்பதற்குச் செங்கழுநீர் மலர், எருவாகிய மண் (களிமண்) என்றும் விளக்கப் பகுதியில் மகளிர் தம் கூந்தலின் எண்ணெய்ப்பசை, சிக்கு ஆகியவற்றை நீக்குவதற்காகக் களிமண்ணைத் தேய்த்து நீராடுவது வழக்கு. இதனைச் சிற்றூர்களில் இன்றும் காணலாம் என்ற உ.வே.சாவின் கருத்தையும் எடுத்துக்காட்டுகின்றார். (பக்.274,273 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2004, உ.வே.சா ஆராய்ச்சி உரைப்பதிப்பு பாடல் 113 க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழகம்) என்றாலும் உ.வே.சா அவர்களின் கருத்தை ஏற்காமல் தான் ஒரு தனிப்பொருளைத் தருகின்றார். காரணம் எருமணம் என்பதற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி Red Indian Water Lily, Nymphaea Lotus rubra என்றும் செங்குவளை என்று பிங்கல நிகண்டும் குறிப்பிடுகிறது. (பக். 533, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்)

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியும் இப்பொருளையே தருகின்றது. பக். 246, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்)  ஆகையினால் அகராதிகள் தரும் பொருளைக் கருத்தில்கொண்டு உரையாசிரியர் இப்பொருளைப் பதிவு செய்துள்ளார் என்று தோன்றுகிறது.இவற்றிலிருந்து பெண்கள் கூந்தலில் செங்குவளைச் சூட்ட பொழிலுக்குச் சென்றார்கள் என்று கொண்டாலும் அல்லது கூந்தலில் பூச  களிமண்ணைக் கொண்டுவரச் சென்றார்கள் என்று பொருள் கொண்டாலும் இரண்டும் பொதுவில் பெண்கள் தங்கள் கூந்தல் மணம் பெறுவதற்கான பொருளைக் கொண்டுவரச் சென்றதையே உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

தொடரும்.................

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 15 Oct 2016 - 12:13

நதிக்கரையில் மண் பூசி குளிக்கும் மக்கள் கண்டதுண்டு .
கூந்தலுக்கு களிமண் பூசி குளிப்பது அறியாத விஷயம் .
தகவலுக்கு நன்றி .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 15 Oct 2016 - 12:26

ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த நார்த்தை என்பதுதான் நரந்தம் என்று விக்கிப்பீடியாவில் உள்ளது . அது புல்வகையா அல்லது மலரா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat 15 Oct 2016 - 12:55

T.N.Balasubramanian wrote:

நதிக்கரையில் மண் பூசி குளிக்கும் மக்கள் கண்டதுண்டு .
கூந்தலுக்கு களிமண் பூசி குளிப்பது அறியாத விஷயம் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

இது அனுபவத் தகவல்தான் ஐயா !
எங்கள் கிராமத்து ஏரிகளிலும் ஏரிவாய்க்கால்களிலும் இப்படியும் தாய்மார்களும் பெண்களும் 1960 களில் குளித்தது உண்மைதான்

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 15 Oct 2016 - 14:28

மாதீர்த்தனார் பாடலில் பாடபேதம் உள்ளதாக டாக்டர் உ .வே .சா .குறிப்பிடுகிறார் . எருமணம் என்ற சொல்லுக்கு செங்கழுநீர்ப்பூக்கள் என்ற கருத்து ஏற்புடையதாக உள்ளது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat 15 Oct 2016 - 14:49

சிகைக்காய்த்தன்மை செங்குவளைப் பூக்களுக்கும் இருப்பதுதான்.

எருமண்ணும் , செங்குவளைப் பூக்களும் ஆகிய இரண்டுமே இப்பாடலுக்கு ஏற்புடையன. கூந்தலின் எண்ணெய்ப் பிசுபிசுப்பைப் போக்குவன.

இவை இரண்டுமே குளிக்கும் இடைத்திலேயே எளிதில் கிடைப்பன. ஆதலால் குளிக்கச்செல்லும்போது தனியே கவனமாகக் கொண்டு செல்லத்தேவையற்றவை.

இருகைவீசி நடந்து சென்று ஆனந்தக் குளியலுக்குப் பின் அகம் திரும்பலாம்- இருபாலரும்.

+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue 18 Oct 2016 - 1:26

ஜகதீசன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள்
ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த நார்த்தை என்பதுதான் நரந்தம் என்று விக்கிப்பீடியாவில் உள்ளது . அது புல்வகையா அல்லது மலரா ? என்று கேட்டுள்ளீர்கள்

நரந்தம் என்பது புல்வகை. இப்புல்லினை மான்கள் விரும்பியுண்ணும் என்று சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன.

நன்றி.

Sponsored content

PostSponsored content

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக