ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_c10துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_m10துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_c10 
VENKUSADAS
துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_c10துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_m10துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_c10துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_m10துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_c10 
VENKUSADAS
துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_c10துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_m10துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'!

Go down

துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! Empty துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'!

Post by ayyasamy ram Thu Jul 28, 2016 11:04 am


துப்புரவு தொழிலாளர்களின் தோழன்... வில்சனைத் தேடி வந்த 'மகசேசே விருது'! HJTK61LSQiCilo0Z6xWX+bezwada-wilson
-
பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே
விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெஜவாடா வில்சன். ' மனிதக்
கழிவை மனிதனே அகற்றும் முறைக்கு எதிராக சட்டம் கொண்டு
வர கடுமையாகப் போராடி வெற்றி கண்டவர் அவர்.
அவருடைய முயற்சியால்தான் மத்திய அரசு சட்டமே கொண்டு
வந்தது.

இந்தியாவில் சமூக சேவையில் சிறந்து விளங்கும்
பெஜவாடா வில்சனுக்கும் இசைத் துறையில் சிறந்து விளங்கும்
டி.எம்.கிருஷ்ணாவுக்கும் 2016-ம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே
விருது வழங்கப்படுகிறது.

பெஜவாடா வில்சனுக்குக் கிடைத்த விருதை, மனித உரிமை
ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இந்த விருதுக்குப்
பின்னால், பெஜவாடா கடந்த வந்த பாதைகள் அத்தனை வலிகளும்,
துயரமும் நிறைந்தவை.
-
கர்நாடகா மாநிலம், கோலார் தங்க வயல் பகுதியில் பிறந்தவர் வில்சன்.
இவரது பெற்றோர் மனிதக் கழிவை அகற்றும் தொழிலை செய்து
வந்தார்கள். இவரது குடும்ப அங்கத்தினர்களும் இதே பணியில்
ஈடுபட்டிருந்தனர்.

பள்ளி, கல்லூரிகளில் சக மாணவர்கள், 'தோட்டி' என்ற அடைமொழியோடு
அவரைக் கிண்டல் செய்தனர். அவரது பெற்றோரிடம், ' என்னால்
இப்படியொரு பழிச் சொல்லை ஏற்க முடியவில்லை. வேறு தொழிலுக்கு
மாறுங்கள்' எனச் சொல்ல, அவரது பெற்றோர் சமாதானப்படுத்தினர்.
ஒருகட்டத்தில், தற்கொலை முடிவுக்கும் தள்ளப்பட்டார் வில்சன்.
அதன்பிறகு அந்த மன நிலையிலிருந்து விடுபட்டு ஹைதராபாத்,
அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை
பட்டத்தை முடித்தார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யச் சென்றபோது, இவரது
அனுமதியில்லாமலேயே, ' துப்புரவு தொழிலாளி' எனப் பதிவு செய்தார்
அதிகாரி. அங்கேதான் போராட்டத்திற்கான விதை தூவப்பட்டது.
இந்த இழிநிலையை ஒழிக்க வேண்டும் என சபதமெடுத்தார்.

பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தும் மாணவர்கள், துப்புரவு பணிகளுக்குத்
திசை திருப்பப்படுவதைக் கண்டு வேதனைப்பட்டார். ' இவர்களுக்கு
தொழில்கல்வி கொடுத்து வளர்த்தால், வேறு தொழில்களுக்கு மடைமாற்ற
முடியும்' என்பதை அறிந்து கொண்டார்.
சமூகப் பணிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தினார்.

'மனிதக் கழிவை மனிதனே அகற்றுவது தேசத்தின் அவமானம்' எனத்
தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக, 1993-ம் ஆண்டு
இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு
கொண்டு வந்தது.

இதன்பிறகு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரின் துணையுடன் தொடங்கப்பட்ட
'சஃபாய் கர்மச்சாரி அந்தோலன்' அமைப்பின் நிர்வாகியாகவும் களம் இறங்கினார்.
மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்களில்
வழக்குப் போட்டு, சட்டத்தை செயல்பட வைத்தார். ' கழிவு அகற்றும் தொழிலில்
இருந்து மாற்று பணிகளுக்குத் திரும்பியவர்களின் புனர்வாழ்வுக்காக,
மத்திய அரசு அமைத்த கமிட்டியில் பெஜவாடாவின் உழைப்பு அளப்பரியது'
என்கின்றனர் கர்நாடகா மனித உரிமை ஆர்வலர்கள்.
-
இதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்
செயலாளர் ரவிக்குமார், " பெஜவாடா வில்சனுக்கு விருது கிடைத்ததில் மிகுந்த
மகிழ்ச்சி. தண்ணீர் வசதியில்லாத கழிப்பிடங்கள் எங்கு இருந்தாலும்,
அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வைத்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த, 'மனிதக் கழிவை மனிதனே அகற்றும் முறையை
ஒழிக்கும் சட்டத்திற்கு' அவர்தான் தூண்டுகோலாக இருந்தார்.
அவர் அனுபவித்த சாதியப் பாகுபாடுகளின் காரணமாக இருபதாவது வயதிலேயே
இழிதொழில் ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர். கழிவு அகற்றும் தொழில்
உள்ளிட்ட அனைத்து இழிதொழில்களிலுமிருந்தும் தலித்துகள் முற்றாக
வெளியேற வேண்டும்.

அந்தப் போராட்டத்துக்கான உந்துதலை இந்த விருது அவருக்கு வழங்க
வேண்டும்" என்றார் நெகிழ்ச்சியோடு.
-
------------------------

-ஆ.விஜயானந்த்
விகடன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum