ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 செகண்ட் கதைகள் !

+2
ayyasamy ram
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

10 செகண்ட் கதைகள் ! Empty 10 செகண்ட் கதைகள் !

Post by krishnaamma Wed Jul 13, 2016 10:06 am

10 செகண்ட் கதைகள் !


அறியாமை

''அம்மா, இதுகூடவா தெரியலை''  மிதுன், தன் அம்மாவுக்குப் புத்தம்புது ஆப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தபோது காலிங் பெல் சத்தம். வாசலில், கிராமத்தில் இருந்து அவனது அத்தையும் மாமாவும். கதவைத் திறந்தவன் கத்தினான், ''அம்மா... யாரோ வந்திருக்காங்க பாரு. எனக்குத் தெரியலை!''

- விக்னேஷ்வரி.


நீதி

நீதிபதி: குனிஞ்ச தலை நிமிராம நிக்கிறாங்க... இவங்களையா டிவோர்ஸ் பண்றீங்க?

அவன்: ஐயா... அவ இப்பக்கூட 'ஜட்ஜ்மென்ட் டே’னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணியிருக்கா!

- நித்யா துரைசாமி.



உபதேசம்

''தண்ணியை வேஸ்ட் பண்ணாமப் பிடிங்கப்பா!'' எனக் கத்திக்கொண்டிருந்தான், வழி முழுக்க தண்ணீரைக் கொட்டிக்கொண்டே வந்த லாரி டிரைவர்!

- எஸ்.சீனிவாசன்.



பரிதவிப்பு

''கையில இன்னும் பட்டாசு மருந்து ஒட்டிட்டு இருக்கு பாரு... கையை நல்லாக் கழுவிட்டு வந்து சாப்பாட்டுல கை வை''   தன் பத்து வயது மகனைக் கடிந்தாள் அந்த விதவைத் தாய், இருவரும் வேலைபார்க்கும் பட்டாசு கம்பெனியின் மதிய உணவு இடைவேளையில்!

- வி.சகிதாமுருகன்



வரம்

''பக்தா... உன் பக்தியை மெச்சினேன்.

என்ன வரம் வேண்டும்?''

''கடவுளே... நீங்க எனக்கு வரம் தந்தீங்கன்னு சொன்னா, ஒரு பய நம்ப மாட்டான். அதனால

ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?''  

- வி.சகிதாமுருகன்


பெற்ற உள்ளம்

''என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுப் போகும் மகனுக்குத் தெரியவே கூடாது, அவனை நான் பக்கத்துத் தெருவில் உள்ள அநாதை ஆசிரமத்தில் இருந்துதான் தத்தெடுத்தேன் என!''

- எஸ்.மோகன்ராஜ்


தலைமை

தன் தலைமையில் வகுப்புத் தோழிகளுடன் அந்தச் சிறிய கிராமத்தை பக்காவாகச் சுத்தம்செய்து, 'க்ளீன் வில்லேஜ்’ புராஜெக்டை வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பினாள் தனிஷா. அம்மா கத்திக்கொண்டிருந்தாள், ''ஏழு கழுதை வயசு ஆகுது... இன்னும் உன் ரூமை சுத்தமாவெச்சுக்கத் தெரியலை. எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது!''

- கே.லக்ஷ்மணன்


வருத்தம்

தனக்கு மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்துவிட்டதற்காக மிகவும் வருத்தப்பட்ட முருகன், பின் தன் வாழ்நாள் முழுக்க வருத்தப்படவே இல்லை!

- செ.ஜெயதுரை


சைலன்ஸ்

'பின் டிராப் சைலன்ஸ்...’ வகுப்பில் ஆசிரியர் சொன்னதும், அனைத்து மாணவர்களும் தனது  மொபைலை சைலன்ட் ஆக்கினர்!

- சாய்ராம்

சம்சாரி

அறுத்த நெல் அனைத்தையும் பண்ணையாருக்கு வட்டியாகக் கட்டிவிட்டு, ரேஷன் கார்டைத் தேடி எடுத்தார் சம்சாரி ராமசாமி, இலவச அரிசி வாங்க!

- வி.சகிதாமுருகன்

நன்றி : whatsup


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by krishnaamma Wed Jul 13, 2016 10:11 am

எல்லா கதைகளுமே அருமையாக இருந்ததால், இங்கு பகிர்ந்தேன் புன்னகை ..................... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by ayyasamy ram Wed Jul 13, 2016 10:28 am

அனைத்தும்... 10 செகண்ட் கதைகள் ! 3838410834 10 செகண்ட் கதைகள் ! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by ayyasamy ram Wed Jul 13, 2016 10:30 am

காதல் கோட்டை... கால்!
-
10 செகண்ட் கதைகள் ! GDWNwnH3Qead5LuztCcC+p221(1)
-

-
`காதல் கோட்டை’ படம் பார்த்துக் கொண்டே
காதலனுடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கிறாள்
கமலி.

- கட்டுமாவடி கவி கண்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by ayyasamy ram Wed Jul 13, 2016 10:33 am

10 செகண்ட் கதைகள் ! DJs2Y5ToTASoynGIpvKX+12512575_1066688020056654_3173238191038678007_n
-

பரிசு
------

'இன்றைக்காவது மகன் கேட்ட 'லவ் பேர்ட்ஸ்’
வாங்கிவிட வேண்டும்’ என யோசித்துக்கொண்டே அலுவலக
லிஃப்ட்டில் ஏறிய நான், பவர் ஷட் டௌன் ஆகி உள்ளே சில
நிமிடங்கள் மாட்டிக்கொண்டு, பின் வெளியே வந்த அந்த நிமிடம்...
பறவைகள் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்!
-
------------------------------------

- சாய்ராம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by ayyasamy ram Wed Jul 13, 2016 10:34 am

10 செகண்ட் கதைகள் ! TvtdL6HsR2JI0dK5AMSg+12651260_1066687326723390_5292202627696100496_n
-
பக்திமான்

மொபைலில் டெம்பிள் ரன்னில் எப்போதும் மூழ்கியிருக்கும்
மகனைப் பார்க்கும்போது ஜோதிடர் சொன்னது நினைவுக்கு
வந்தது,

'உங்க மகன் கோயில் கோயிலா ஏறி இறங்குவான்!’

- சாய்ராம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by krishnaamma Wed Jul 13, 2016 11:42 am

3 ம் 3 முத்துகள் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by ayyasamy ram Wed Jul 13, 2016 11:43 am

விகடனில் வராத பத்து செகண்ட் கதைகள்
---------
விசாரணை
(10 செகண்ட் கதை )
வீட்டுக்கு தெரியாமல் விசாரணை படம் பார்த்துவிட்டு
சிகரெட் பிடித்துக் கொண்டே வந்த வினோத்தை
ஒரு போலீஸ்காரரின் கரங்கள் இறுகப்பற்றின.

பயந்துபோன வினோத் அதிர்ச்சியுடன் "அப்பா" என்றான்
-
---------------------------------

இறுதிச் சுற்று

"இறுதிச் சுற்று வரை உன்னால் தாக்குப் பிடிக்க முடியாது"
என்ற கணவனின் வார்த்தையை பொய்யாக்கி 108 வது
இறுதிச் சுற்றை முடித்து கோவிலில் வேண்டுதலை
நிறைவேற்றினாள் 90 வயது சுந்தரி பாட்டி
-
-------------------------
ஜீவகாருண்யம்

"தம்பி! , அங்கே எறும்புப் புற்று இருக்கிறது பார்த்து
காலை வை" என்ற பெரியவரிடம், இளைஞன் ஏளனத்துடன்,
"ஐயா!எறும்பு கடித்து நான் சாக மாட்டேன்" என்றான்

"உன் கால்மிதிபட்டு எறும்புகள் சாகுமே!"என்றார் பெரியவர்
கவலையுடன்
-


**************************************************
டி.என்.முரளிதரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by krishnaamma Wed Jul 13, 2016 11:58 am

10 செகண்ட் கதைகள் ! 3838410834 10 செகண்ட் கதைகள் ! 3838410834 10 செகண்ட் கதைகள் ! 3838410834 சூப்பருங்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by விமந்தனி Wed Jul 13, 2016 1:10 pm

அறியாமை

''அம்மா, இதுகூடவா தெரியலை''  மிதுன், தன் அம்மாவுக்குப் புத்தம்புது ஆப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தபோது காலிங் பெல் சத்தம். வாசலில், கிராமத்தில் இருந்து அவனது அத்தையும் மாமாவும். கதவைத் திறந்தவன் கத்தினான், ''அம்மா... யாரோ வந்திருக்காங்க பாரு. எனக்குத் தெரியலை!''

- விக்னேஷ்வரி.

பெற்ற உள்ளம்

''என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுப் போகும் மகனுக்குத் தெரியவே கூடாது, அவனை நான் பக்கத்துத் தெருவில் உள்ள அநாதை ஆசிரமத்தில் இருந்துதான் தத்தெடுத்தேன் என!''

- எஸ்.மோகன்ராஜ்
மிகவும் அருமை கிருஷ்ணாம்மா.


10 செகண்ட் கதைகள் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon10 செகண்ட் கதைகள் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031210 செகண்ட் கதைகள் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

10 செகண்ட் கதைகள் ! Empty Re: 10 செகண்ட் கதைகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum