ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின்மை

Go down

குழந்தையின்மை Empty குழந்தையின்மை

Post by சிவா Sat Mar 07, 2009 11:39 am

குழந்தையின்மை அல்லது மலட்டுத் தன்மைக்கு எப்போது ஒரு தம்பதியினர் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்?

ஒரு தம்பதியினர் தொடர்ச்சியாக எவ்வித கருத்தடை முறைகளும் இல்லாமல் ஒரு வருட காலம் தாம்பத்ய உறவு கொண்டிருந்தும் கருத்தரிக்காவிடில் அவர்கள் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

ஏன் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்?

திருமணமான தம்பதியினரில் முதல் மாதத்திலேயே 25 சதவிகிதம் பேர் கருவுறுகிறார்கள். 6 மாதங்களில் 55 சதவிகிதமும், 9 மாதத்தில் 75 சதவிகிதம் பேரும், 1 வருடத்தில் 80 சதவிகிதம் தம்பதியினரும் கருத்தரிக்கின்றனர். எனவே குறைந்த பட்சம் 1 வருடமாவது தானாகக் கருப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

40 வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் 1 வருடம் காத்திருந்து தான் பின்பு ஆலோசனைக்கு வர வேண்டுமா?

சில பிரத்யேகக் காரணங்கள் உடையவர்கள் 6 மாதத்தில் சிகிச்சைக்கு வரலாம். முதலாவதாக வயதான பின்பு திருமணம் செய்து கொண்டவர்கள் விபத்து, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்குள்ளாகி இருந்து கருவுற வாய்ப்பில்லை என்று எண்ணுபவர்களும் 6 மாதத்தில் சிகிச்சைக்கு வரலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின்மை Empty Re: குழந்தையின்மை

Post by சிவா Sat Mar 07, 2009 11:41 am

குழந்தைப் பேரின்மை ஒரு தம்பதியினரை எவ்வாறு பாதிக்கிறது.

இது தம்பதிகளின் வாழ்வில் ஒரு வெறுமை, ஏமாற்றம் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற கவலை. இவற்றால் இவர்கள் வாழ்வில் புயல் வீசுகிறது. தம்பதிகளுக்கிடையே உள்ள உறவிலும் விரிசல் ஏற்படுகிறது.

ஒரு பெண்ணிற்கு தான் தாய் என்ற ஸ்தானத்தை அடைய முடியவில்லை, தான் ஒரு பெண்ணே அல்ல என்ற தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்வும் அடைகின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மனம் உடைந்து போகின்றனர். வாழ்வில் நம்பிக்கை இழந்து போகின்றனர்.

தம்பதிகள் தங்கள் மட்டும் வாழ்க்கை நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப் பட்டு விட்டதாக உணர்கின்றனர். சமுதாயம் தங்களிடம் பாரபட்சமாக நடந்து கொண்டதாக எண்ணுகின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின்மை Empty Re: குழந்தையின்மை

Post by சிவா Sat Mar 07, 2009 12:01 pm

குழந்தைப்பேரின்மை தாம்பத்ய உறவை எவ்வாறு பாதிக்கிறது?


தாம்பத்ய உறவு ஒரு சந்தோஷமான, இயற்கையான தன்னிச்சையான நிகழ்வாக இல்லாமல் ஒரு வேலையாக, நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் செய்யும் கடமையாக அவர்களிடம் மாறி விடுகிறது.

மேலும் செக்ஸ் இன்பத்தை அனுபவிக்காமல் குழந்தை பிறப்புக்கு ஒரு வழி முறையாக தாம்பத்ய உறவு அணுகப்படுகிறது. படுக்கை அறை ஒரு விரும்பத்தகாத இடமாக மாறி விடுகிறது.

கணவனும், மனைவியும் சரிபாதியளவில் குழந்தையின்மைக்கு காரணமாக இருந்தாலும் கூட பின் தங்கிய நாடுகளில் பெண்கள் மீது பழி சுமத்தப்படுவது தவறு. பல நேரங்களில் பெண்கள் மட்டுமே பெண் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற வருவதும், ஆண்கள் சிகிச்சையில் பங்கு கொள்ளாமல் இருப்பதையும் காணலாம்.

சிகிச்சைக்கு வரும்போது தம்பதியினர் இருவரும் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இது அவர்களிடம் புதிய நம்பிக்கையையும், பரஸ்பர ஒத்துழைப்பையும் அதிகமாக்கும்.

யாருக்கு முதலில் சிகிச்சை ஆரம்பிப்பார்கள்?

தம்பதியினர் இருவரையும் சேர்ந்து ஒரு யூனிட் ஆகப்பார்க்க வேண்டும். ஆண் மருத்துவர் கணவரையும், பெண் மருத்துவர் மனைவியையும் பரிசோதித்து மருத்துவர்கள் இருவருமே விவாதித்து சிகிச்சை செய்யும் முறையை முடிவு செய்ய வேண்டும். இந்த அமைப்புக் கொண்ட கருத்தரிப்பு மையங்களில் சிகிச்சை பெறுவதால் தேவையற்ற பரிசோதனைகளும், செலவுகளும் தவிர்க்கப்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின்மை Empty Re: குழந்தையின்மை

Post by சிவா Sat Mar 07, 2009 12:07 pm

குழந்தையின்மைக்கும், சுற்றுச் சூழல் மாசுக்கும் தொடர்பு உண்டா?

குழந்தைப் பேறு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது எனவும், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுதான் இதற்குக் காரணம் எனவும் கூறுகிறார்களே, இது உண்மையா?

ஆம். சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசுக்களால் விந்தணுக்களின் எண்ணிக்கை ஆண்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது. மேலும் விந்துப்பைகள் கீழே இறங்காமல் வயிற்றில் தங்குதல், விந்துப்பைகளில் புற்று நோய் ஆகியவை அதிகமாகி உள்ளது.

வருமுன் காப்பது நல்லதல்லவா? என்ன என்ன காரணங்களை வருமுன் தடுக்க முடியும்?

1) ஆண்களால் பிறந்த உடன் விந்துப்பைகள் கீழே இறங்காமல் இருந்தால் கண்டு பிடித்து சரி செய்தல்

2) M.M.M.- தடுப்பு ஊசி போடுதல்

3) பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுத்தல்

4) கெமிக்கல் தொழிற்சாலையில் பணி புரியும் ஆண்களுக்கு விந்தணுக்குறைவு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தல்

5) சில மருந்துகள் உட்கொள்வதைத் தவிர்த்தல்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின்மை Empty Re: குழந்தையின்மை

Post by சிவா Sat Mar 07, 2009 12:10 pm

பிறக்கும் ஆண் குழந்தைகளின் விந்துப்பைகள் கீழே இறங்க வில்லை என்பதை எவ்வாறு கண்டு பிடிக்க முடியும்?

பிறக்கும் குழந்தைகள் எல்லாவற்றையும் குழந்தை நல சிறப்பு மருத்துவர் பரிசோதனை செய்து ஏதேனும் குறை இருக்கிறதா? என்று கண்டு பிடித்துக் கூறுவார். அவ்வாறு செய்ய இயலாத இடங்களில் அல்லது வீடுகளில் தாய் மூலம் பிரசவம் நடக்கும் கிராமங்களில் பெற்றோரே விந்துப் பைகளைத் தொட்டுப் பார்த்து விரைப்பைகள் இல்லை என்றால் மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும்.

விந்துப்பைகள் கீழே இறங்காமல் இருந்தால் ஏன் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது?

விந்துப்பைகள் உடலின் வெப்பத்தை விட 3 முதல் 5 சென்டிகிரேடு குறைவாக இருந்தால் தான் விந்து உற்பத்தி நன்றாக இருக்கும். இல்லை என்றால் விந்து உற்பத்தியே நின்று விடும். அல்லது குறைந்து விடும். விந்துப்பைகள் வயிற்றிலேயே தங்கி விட்டால் உடலின் வெப்பம் விந்து உற்பத்தியைக் குறைத்து விடும்.

மேலும் உடலின் வெப்பத்தால் விந்துப்பைகளில் புற்று நோய் உருவாக வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் இதைக் கண்டு பிடித்தால் மருந்துகள் மூலமாகவும், தேவை எனில் அறுவை சிகிச்சை மூலமாகவும் விந்துப்பைகளை அதன் இயல்பான இடத்துக்கு கொண்டு வர முடியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின்மை Empty Re: குழந்தையின்மை

Post by சிவா Sat Mar 07, 2009 12:12 pm

சிறிய குழந்கைளில் வேறு என்ன தடுப்பு முறைகள் கடைப்பிடிக்க வேண்டும்?

புட்டாலம்மை வியாதி ஆண்களுக்கு விந்துப்பைகளைப் பாதிக்கவும் பெண்களுக்கு கருமுட்டை வளரும் சினைப் பையைப் பாதித்து குழந்தையின்மையை உண்டு பண்ண முடியும். MMR-தடுப்பூசி மூலம் வாழ்நாள் முழுவதும் இந்த வியாதி வராமல் தடுக்க இயலும். எனவே ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி போட வேண்டும்.

ஆண் குழந்தைகளுக்கு சின்னம்மை (chicken box)- மூலம் விந்துப்பைகள் பாதிக்கப்படலாம். எனவே சின்னம்மை தடுப்பூசியும் போட வேண்டும்.

சிறு வயதில் போடாமல் இருந்து இப்போது புட்டாலம்மை மற்றும் சின்னம்மை வந்தவர்களுக்கு விந்துப்பைகள் பாதிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்டவர்களை தகுதி வாய்ந்த மருத்துவர்களிடம் காண்பித்து ஸ்டீராய்டு மருந்துகள் கொடுப்பதன் மூலம் விந்துப் பைகள் மற்றும் கரு முட்டைப் பைகள் பாதிக்காமல் தடுக்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின்மை Empty Re: குழந்தையின்மை

Post by சிவா Sat Mar 07, 2009 12:15 pm


பால்வினை நோய்கள் (sexually transmitted diseases)- மலட்டுத் தன்மையை உருவாக்குமா?


கொனோயா என்ற வெட்டை நோய் விந்துக் குழாய்களில் சரி செய்ய முடியாத படி அடைப்பை ஏற்படுத்தும். அதே போன்று கிளாமைடியா என்ற நோய் விந்துக் குழாய் சிறுநீர்க்குழாய் ஆகியவற்றில் அடைப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு கருக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.

இதை எவ்வாறு தவிர்ப்பது?

ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பு உறவைத் தவிர்க்க வேண்டும்

தவிர்க்க இயலாமல் உறவு கொண்டால் ஆணுறை அணிந்து உறவில் ஈடுபட வேண்டும்

பால்வினை நோய்கள் தொற்றிக்கொண்டால் முழுமையாகவும், சரியாகவும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ளாமல், யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என எல்லோருக்கும் பால்வினை நோய்களைப் பரப்பக் கூடாது

பெண்களுக்கு கருக்குழாயில் அடைப்பு ஏற்படக் காரணம் என்ன?

பலருடன் உடலுறவு கொள்ளுதல்

பால்வினை நோயின் தாக்கம்

கருக்கலைப்பு

அடி வயிற்றில் செய்யப்படும் அறுவை சிகிச்சை

இவற்றை எல்லாம் முழுமையாகத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தையின்மை Empty Re: குழந்தையின்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum