புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Poll_c10புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Poll_m10புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Poll_c10புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Poll_m10புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 05, 2016 8:41 am

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்  HE8cHEKbSKWClIKvclWh+audi1
-
சென்னையில், கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில்
காரை ஓட்டித் தொழிலாளியைக் கொலை செய்த ஆடி கார் ஐஸ்வர்யா,
தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

' இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கே தவித்து
வருகிறது இறந்து போனவரின் குடும்பம்' என வேதனைப்படுகின்றனர்
திருவான்மியூர் பகுதி மக்கள்.

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை
அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார்
சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த வர்த்தக ஆலோசர் வில்சனின்
மகள் ஐஸ்வர்யா.
இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார்.
'வீக் எண்ட் பார்ட்டி' என்ற பெயரில் நண்பர்களோடு குடித்திருக்கிறார்.
மறுநாள் அதிகாலையில் தரமணி வழியாக அதிக வேகத்தில் காரை
ஓட்டிக் கொண்டு வந்தவர், முனுசாமி என்ற தொழிலாளி மீது காரை
மோதியிருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே முனுசாமி பலியாகி
விட்டார்.

இதையடுத்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்
பட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில், முனுசாமியின் மரணத்தால் சோகத்தில்
மூழ்கியிருக்கிறது திருவான்மியூர் டி.டி.கே காலனி. அந்தக் குடும்பமே
முனுசாமியின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறது. அவருடைய மனைவி
கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார்.

முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இளைய மகள் திவ்யா 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது எதிர்காலமே
கேள்விக்குறியாகிவிட்டது.
-
முனுசாமியின் நண்பர் நாராயணனிடம் பேசினோம்.
" முனுசாமி மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியாது. கொஞ்ச நேரம்
கிடைச்சாலும், ஏதாவது ஒரு வேலை செஞ்சுட்டு இருப்பார். கார்பெண்ட்டர்
வேலை, லோடு தூக்குவது என தினமும் 500 ரூபாய்க்கு மேல் வருமானத்தைப்
பார்த்துடுவார். தெருவுக்குள் அவர் இருக்கும் இடமே தெரியாது.
அவர் செத்துப் போனதுக்குப் பிறகுதான், ஊர்ல பல பேருக்கு அவரைத்
தெரியுது. இரண்டு குழந்தைகளை வச்சுட்டு முனுசாமி குடும்பமே கஷ்டப்படுது.
இதுவரைக்கும் யாரும் வந்து பாக்கலை. குடிச்சுட்டு வண்டி ஓட்டுன பொண்ணு
மேல, கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க. அது ஒண்ணு மட்டும்தான் ஆறுதலா
இருக்கு.
-
இறந்துபோன அன்னைக்கு இறுதிக் காரியம் செய்வதற்குக்கூட
அந்தக் குடும்பத்திடம் பணம் இல்லை. சம்பவம் நடந்த அன்னைக்கு
140 கிலோமீட்டர் வேகத்துல அந்தப் பொண்ணு வண்டி ஓட்டிட்டு
வந்திருக்கு. இவர் பிளாட்பாரத்துலதான் நின்னுக்கிட்டு இருந்தார்.
இந்த மாதிரி பொண்ணுங்க, பையன்களுக்கு வாரக் கடைசின்னா
இதே வேலையா போயிடுச்சு.

அவர் இறந்துட்டதால, அவரோட மனைவி மூணு மாசத்துக்கு எங்கேயும்
வேலைக்குப் போக முடியாது. ஏதாவது இழப்பீடு கொடுத்தாதான்,
அந்தக் குடும்பம் கரை சேரும்" என்றார் வேதனையோடு.

கிண்டி போக்குவரத்துக் காவலர்களிடம் பேசியபோது,
" அன்றைக்கு ஐஸ்வர்யா, சுஷ்மா உள்ளிட்ட மூன்று பெண்கள் குடித்து
விட்டு வண்டி ஓட்டியுள்ளனர். இதில், தொழிலதிபரின் மகள்தான்
வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். வார இறுதியில் குடிப்பதும் சினிமாவுக்குப்
போவதும்தான் இவர்களுடைய பொழுதுபோக்கு. வாகனத்தை ஓட்டிய
ஐஸ்வர்யா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.
விசாரணை நடந்து வருகிறது" என்கின்றனர்.

பழைய மகாபலிபுரம் சாலையைக் கடப்பது அப்பகுதி மக்களுக்கு
தினம்தினம் பெரும் துன்பமாகவே முடிகிறது. பணம் படைத்தவர்கள்
ஏற்படுத்தும் மரணம் என்பது, அந்த நேரத்தின் ஒரு செய்தியாக மட்டுமே
மாறிப் போவது வேதனையான விஷயம். ஐஸ்வர்யா போன்ற செல்வந்தர்
வீட்டுப் பெண்களின் வழக்குகள், சல்மான் கானின் வழக்கு போல மாறி
விடக் கூடாது என அச்சப்படுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
-
---------------------------------

-ஆ.விஜயானந்த்
விகடன்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jul 05, 2016 9:57 am

ஆடி தள்ளுபடியில் ஆடி காரை வாங்கி,
ஆட்டம் பாட்டம் ஆனவ போதை தாங்கி,
ஆடி அசைந்து காரை ஒட்டி,
ஆங்கே அற்பன் மேலே காரை ஒட்டி,
ஆங்கே பறித்தது உயிரை மதுவே.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Tue Jul 05, 2016 10:30 am

முதல் வகுப்பு சிறை என்ன கவலை. பாவம் அந்த ஏழை குடும்பம் அவர் பிள்ளைகள்

“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”

எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 05, 2016 10:55 am

குடித்துவிட்டு ,கொடுக்கிற போஸைப் பாரு !
மனுநீதி சோழன் வழக்கப்படி ,
காலைகளையும் கைகளையும் எடுக்கவேண்டியதுதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2016 11:31 am

சல்மான்கான் வழக்கு போல இல்லாமல் இருந்தால் சரி .. நீதி துறையே செய்வீர்களா ..நீங்க செய்வீர்களா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Jul 05, 2016 1:58 pm

காப்பீட்டு தொகையும் இறந்தவரின் குடும்பத்திற்கு கிடைக்காது .ஏனேன்றால் குடித்துவிட்டு வாகனம் ஒட்டி விபத்திர்க்குளானால் காப்பீட்டு நிறுவனமும் காப்பீட்டு தொகையை குடுக்காது.தொழிலதிபர் கையிலிருந்து தான் நஷ்ட ஈடு குடுக்கவேண்டும்.அந்த நாள் வரை முனுசுவாமியின் குடும்பத்தின் கதை என்னவாகும்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 05, 2016 4:27 pm

மணிக்கு 140 கிமீ வேகம் அதிர்ச்சி என்றால் சுமாரா ஒரு வினாடிக்கு (கண்ணை மூடி திறக்கும் நேரத்தில்) 40 - 50 மீட்டர் கார் பயணிக்கும்.
நம்ம ஊர் சாலைகள் இந்த வேகத்தை தாங்குமா , இதற்கென்றே பிரத்யோக சாலை குறியீடுகள் இருக்குதா? இவ்வளவும் இருந்தாலும் குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் வந்தால் எங்கேயிருந்து சாலையில் வரும் வாகனங்களையோ அல்லது பாதசாரிகளையோ பார்க்க முடியும் ?!

இந்த காட்டெருமைக்கு தண்டனை கொடுப்பதை விட இவ அப்பனை பிடித்து நாலு அறை கொடுத்து பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வாங்கி கொடுக்க வேண்டும்.

பாவம் 11 வகுப்பும் 6 ஆம் வகுப்பும் படிக்கும் அந்த பிள்ளைகள் , இனி எந்த mechanic கடையில் கிரீஸ் துடைக்க போறானோ , அவன் தங்கை எந்த பணக்காரன் வீட்டில் பாத்திரம் கழுவ போகிறாரோ தெரியவில்லை அழுகை

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jul 05, 2016 9:56 pm

என்னங்க கொடுமை அய்யோ பாவம் >>>மனிதாப மானம் என்ன விலைனு கேட்கிற காலமாய் போச்சே????!!!!!!!சட்டத்திற்கு யாரும் பயப்பிடலனு தெரியுது?>>>>>>>>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக