ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி

4 posters

Go down

எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி  Empty எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி

Post by ayyasamy ram Sun Jul 03, 2016 1:03 pm

எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி  WRXLImvHROqmSGQs3XxR+maheryta_2918508f
-
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் எம்எல்ஏ மகன் ஓட்டி வந்ததாக கூறப்படும் கார் மோதியதில் 3 பேர் இறந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நந்த கிஷோர் மஹரியா. இவரது மகன் சித்தார்த் மஹரியா. சித்தார்த் நேற்று அதிகாலை 1.30 மணியவில் ஜெய்ப்பூரின் ஜலுபுரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்தார். காரில் அவரது உறவினர் ஜெயந்த் மற்றும் இருவர் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சி-ஸ்கீம் என்ற இடத்தில் வேகமாக வந்த அவரது கார் எதிரில் வந்த ஆட்டோ மீதும் இதையடுத்து போலீஸ் ரோந்து வாகனம் மீதும் மோதியது.

இதில் ஆட்டோவில் இருந்த இருவர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் இறந்தனர். ஆட்டோவில் இருந்த மேலும் ஒருவர் காயம் அடைந்தார். ஆட்டோவை தொடர்ந்து அந்த கார், போலீஸ் ரோந்து வாகனம் மீது மோதியதில் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீஸார் காயம் அடைந்தனர்.

காயமடைந்த 5 பேரும் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை உதவி ஆணையர் (ஜெய்ப்பூர் தெற்கு) மனீஷ் அகர்வால் கூறும்போது, “கார் மோதியதில் ஆட்டோ 200 அடி தொலைவுக்கு வீசப்பட்டுள்ளது. காரில் இருந்த சித்தார்த், ஜெயந்த் மட்டுமே பிடிபட்டனர். இவர்களில் விபத்து ஏற்படுத்தியதாக சித்தார்த் கைது செய்யப்பட்டார்” என்றார்.

காவல்துறை கூடுதல் உதவி ஆணையர் யோகேஷ் கோயல் கூறும்போது, “விபத்தின்போது சித்தார்த் போதையில் இருந்ததற் கான முகாந்திரம் உள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்காக மருத் துவப் பரிசோதனை மேற்கொள் ளப்பட்டுள்ளது” என்றார்.

இதனிடையே சித்தார்த், தான் கார் ஓட்டி வந்ததாக கூறப்படுவதை மறுத்துள்ளார். மேலும் விபத்தின்போது மது அருந்தியிருந்ததாக கூறப்படு வதையும் அவர் மறுத்துள்ளார்.

இதனிடையே விபத்தில் இறந்தவர்களில் ஜெத்தமல் (40) என்ற ஒருவர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி  Empty Re: எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி

Post by M.M.SENTHIL Sun Jul 03, 2016 1:30 pm

மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கிறது, அதனால்தான் எம்.எல்.ஏ மகன் மூலம் போட்டுத்தள்ளிவிட்டு, கேசை ஒன்னும் இல்லாமல் ஆக்க முயல்கிறார்கள்.

( வேறு என்ன பின்னூட்டம் போட, சாராயக் கடையாலதான் வம்பே வருது அதை மூடச் சொன்னா கேட்கவா போறானுங்க)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி  Empty Re: எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி

Post by M.Jagadeesan Sun Jul 03, 2016 2:15 pm

கைதுசெய்தால் என்ன ? சல்மான்கான் போல இவரும் விடுதலை ஆகப்போகிறார் . இவருக்கு ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய்விடுவார் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி  Empty Re: எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி

Post by T.N.Balasubramanian Sun Jul 03, 2016 6:42 pm

பணக்கார MLA / MLC யின் மகன்கள் எல்லாம் யமனின் இந்திய ஏஜெண்டுகள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி  Empty Re: எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி

Post by M.Jagadeesan Sun Jul 03, 2016 6:47 pm

T.N.Balasubramanian wrote:பணக்கார MLA / MLC யின் மகன்கள் எல்லாம் யமனின் இந்திய ஏஜெண்டுகள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1213965

எமனின் இந்திய ஏஜெண்டுகளில் முன்னிலை வகிப்பவர்கள் மருத்துவர்கள்தான் !

ஆயிரம் பேரைக் ( வேரையல்ல ) கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழி உண்மைதான் போலும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி  Empty Re: எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி

Post by T.N.Balasubramanian Sun Jul 03, 2016 8:44 pm

சமீப காலங்களில் பீஹார் MLC இந்த மகன் , ராஜஸ்தானில் MLA மகன் ,சென்னையில் IT இல் வேலை செய்யும் பெண் குடித்து விட்டு காலை வேளையில் கார்பென்டரை காரை தாறுமாறாக ஒட்டி கொலை செய்தது எல்லாம் பணம் அதிகம் நடமாடுவதால்தான் இந்த கூத்தெல்லாம் .அபரிமிதமான (கள்ளப்) பணத்தை எப்பிடி எல்லாம் செலவு செய்யலாம் என தெரியாமல் ,குடித்து விட்டு ,சீரழிந்து ,சீரழிக்கிறார்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி  Empty Re: எம்எல்ஏ மகன் ஓட்டிய கார் மோதி 3 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum