புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_c10என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_m10என்னைச் சுற்றி உளவுப்படை. Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைச் சுற்றி உளவுப்படை.


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 27, 2016 11:19 pm

உலக மற்றும் தமிழ் செய்திகள்,  தமிழக தொலைக்காட்சி, ஈகரை என இணையத்தில் நேற்றைய தினம் பயணித்த ஒரு மணி நேரத்தில் என்னை உளவு பார்த்த 120 ற்கு மேற்பட்ட இணையப் பக்கங்கள்-பல்வேறு தரப்பட்ட நிறுவனங்கள்-. இதுபோல் இருந்தது.

என்னைச் சுற்றி உளவுப்படை. 74EAkGBWTja8uTilW9iV+beam6

அடுத்து அவர்களை ஓட விரட்டிவிட்டு ஈகரைக்கு மீண்டும் வந்த போது என்னை உளவு பார்த்தவர்கள் 13 இணையப் பக்கங்கள்.(Trackers)

என்னைச் சுற்றி உளவுப்படை. HTcH5r88RdWHPxMJBBXU+beam4

மீண்டும் அடுத்த சில நிமிடங்கள் ஈகரையில்  தனிப்பட்ட -Private mode – மூலம் சென்றபோது என்னை உளவு பார்த்த இணையப் பக்கம் மூன்றே மூன்று தான்.

என்னைச் சுற்றி உளவுப்படை. AEEBQUNSeCPVgGUpTeWL+beam5

இவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்லர். ஒரு சிலரே என்னை உளவு பார்த்து தனிப்பட்ட தகவல்களை பெற்றுக் கொண்டார்கள்.சிலர் தகவல் சேகரிக்காது பார்த்து விட்டு சென்றும்,சிலர் கணினிக்கு தொல்லை கொடுக்கவும் வந்தார்கள். ஆனாலும் அவர்களும் நல்லவர்கள் தான்.
அவர்கள் ஏன் என்னை உளவு பார்க்கிறார்கள்?

உலக இணைய வர்த்தக  வருமானம் 80 பில்லியன்களுக்கு மேல் . இந்தியா 2015 நொவெம்பர் மாதத்தில் 2100 பில்லியன்களை 6,6 %  GDP   இணைய வர்த்தகத்தை நடத்தியது. அதே மாதத்தில் மொத்தமாக இந்தியாவில் இணையப் பார்வையாளர்கள் 375,000,000  பேரும்,அதில் முகநூலை 136,000,000  பேரும் பார்த்தார்கள். மொத்த இந்திய சனத்தொகையில் 23%  ஆகும். ஒவ்வொரு 30 வினாடிகளிலும் 2 மில்லியன் டாலர்கள் இணைய வர்த்தகம் உலகளவில் நடைபெறுகிறது.2020 அளவில் இணைய வர்த்தகம் ஒரு நாளுக்கு 450  பில்லியனாக உயரும்,3G/4G/5G  என இணைய வேகம் அதிகரிக்குமானால் அதை விட அதிகமாகலாம். இந்த வியாபாரம்தான் காரணம்.

இணையத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியை சுற்றியும் இப்படி நிறுவனங்களின் உளவாளிகள் நடமாட்டம்  இருக்கும். இவர்களை  ஓரளவாவது கட்டுப்படுத்தினால், தனிநபர் பாதுகாப்பு மட்டுமல்லாது,உலாவியின் வேகமும் சிறிது அதிகரிக்கும்.அதனால் பாதுகாப்பான நல்ல இணையப் பக்கங்களுக்குச் செல்வது நமக்கும் நல்லது,நம் கணினிக்கும் நல்லதாகும்.

avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Fri Sep 09, 2016 5:27 pm

உளவு செயலிகளை எப்படி இனம் காண்பது?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 09, 2016 5:52 pm

கணினியை திறந்தாலே , உளவாளிகள் ஊடுறுவி விடுவார்கள் போலிருக்கு .
இதில் என்ன ரகசியத்தை காப்பாற்றமுடியும் ?
பேசாமல் பழைய முறையில் கார்டு கவர்களில் பரிமாறிக்கொள்ளவேண்டும் போலிருக்கு .
rudran கேள்விக்கு பதிலை அறிய நானும் ஆவலை உள்ளேன் ,மூர்த்தி .

2 மாதங்களாக காணப்படுவது இல்லையே ....பிசியா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 09, 2016 10:27 pm

வணக்கம்,பரீட்சை காரணமாக வரமுடியவில்லை ஐயா.
அம்மாவிடம் போயே இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. 10-15 நிமிடங்கள் இடைவேளையின் போது வந்து ஏதாவது எழுதும் போது, தப்பாக இருந்து விட்டால் திருத்த முடியாது.அதற்குள் திருத்தும் வசதி போய்விடும்.இந்த திருத்தும் வசதி எவ்வளவு நிமிடங்கள் ஐயா? பின்னர் அந்த விசயமே மறந்து போய் விடும். அதனால் பொறுமையாக எழுத வேண்டும்,நேரம் கிடைக்கும் போது வர வேண்டும் என்பது காரணம். இன்னும் ஒரு மாதம் பின்னர் சரியாகி விடும்.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Sep 09, 2016 10:34 pm

நெடுநாள் கழித்து தங்களை காண்பதில் மகிழ்ச்சி




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 09, 2016 10:38 pm

உளவு செயலிகளை எப்படி இனம் காண்பது?

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவர் போல் நடிப்பார் ஞானதங்கமே............ இப்படி ஒரு சினிமாப் பாடல் வரிகள்.

முகம் தெரியாத இணையத்தில் இருந்து வரும் நான் நல்லவனா இல்லை கெட்டவனா?
கண்டு பிடியுங்கள் ருத்திரன் அவர்களே. உங்களால் முடியாது. இந்த உலகத்தில் எல்லாரும் நல்லவர்களே. சந்தர்ப்பம் வரும் போது கெட்டவராகி விடுகிறார்கள். மது, மாது மாற்றுகிறது என்கிறார்கள். ஆனால் இணையத்தில் மட்டுமல்ல எங்கும் பணம் பெரும் பங்காற்றுகிறது.

உங்களை இணையத்தில் உளவு பார்ப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் அல்லர். பணம் அவர்களை மாற்றி விடுகிறது. சிலர் உண்மையிலேயே நல்லது செய்யவும், சிலர் நல்லது செய்வது போல் வந்து தங்களுக்கு நல்லது செய்யவும் விரும்புகிறார்கள்.

இதில் சிக்கல் என்னவென்றால்,அவர்கள் பணம் சம்பாதிக்க நமது தனிப்பட்ட விபரங்களை திருடி விற்று விடுகிறார்கள்.

உளவு பார்ப்பவர்களை இனம் காணுவது என்பது சுலபமல்ல. பாதுகாப்பு முறை தான் சிறந்த முறையாகும்.உலாவியில் Do Not Track என்பதை அக்டிவ் செய்து கொள்ளலாம். Praivate mode இல் செல்லலாம்(இது குரோம் உலாவியில் Incognito Mode என இருக்கும்). உளவாளிகள் -Trackers-உள்ளே வர விடாமல் Ghostery ,Disconnect என்ற இணைப்பில்-add-on ஒன்றை உலாவியில் இணைத்து தடுக்கலாம்.எப்போதும் admin கணக்கில் செல்லாமல் விருந்தினர்-Guest- கணக்கொன்றை உருவாக்கி பாவிப்பது சிறப்பு.கணினி உரிமையளர்-admin- கண்க்கு ஊடாக உளவு பார்க்க,திருட,(முக்கியமாக் மால்வெயர்,வைரஸ்,ரன்சம்வெயர் உள் நுழைவது மிக சுலபம்) அதிக சந்தர்ப்பம் உண்டு.
அதிகமாக கூகிள்,முகநூல்,ஆன்லைன் வர்த்தகம் தங்கள் வியாபாரத்திற்காக உளவு பார்ப்பது அதிகம்.கூகிள் தேடிபொறிக்குப் பதில் duckduckgo போன்ற சில தேடுபொறிகள் பாதுகாப்பைத் தரும்.

உலாவியில் Tools-Options, Privacy, Show Cookies (or Remove cookies)– இங்கே site என்பதற்குக் கீழே, உங்களை உளவு பார்ப்பவர்கள்,விளம்பரம்,இணையப் பக்கம் போன்றவற்றின் குக்கீஸ் அனைத்தும் இருக்கும். அதில் இரட்டை கிளிக் செய்தால் நீங்கள் சென்ற பக்கத்தின் ஊடாக உள் நுழைந்தவர்கள் பட்டியல் இருக்கும். இது Firefox க்கு ஆனது. குரோம் உலாவியில், Menu- Settings -Show advanced settings -Privacy இங்கே Content settings ஐக் கிளிக் செய்யவும்.அங்கே All Cookies and Site Data என்பதில் விபரம் கிடைக்கும்.

எந்தக் காரணத்திற்காயினும் உளவு பார்ப்பவர்கள் குக்கி வடிவில் வருவார்கள். இந்தக் குக்கிகளில் first-party cookies ,third-party cookies என இரண்டு வகை, அவற்றிலும் session cookie -இவை உலாவியை மூடும் போது அழிந்து விடும்,எந்தத் தகவல்களையும் எடுக்க மாட்டா.சில விபரங்களை எடுக்கும் persistent cookie கள் வந்தட்டில் நீங்கள் அழிக்கும் வரை குடி இருக்கும்.
இதைவிட மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்று மறைந்து காத்திருக்கும் malicious cookies , இவை ஆபத்தானவை.
பொதுவாக குக்கிகள் என்பது இணையப் பக்கத்தை விரைவில் கொண்டு வந்து தர உலாவிக்கும் சேர்வருக்குமொரு இணைப்பாக(சிறிய கோப்பு) இருக்க உருவாக்கப்படுகின்றன.

உதாரணமாக ஈகரை பக்கத்திற்கு முதல் முறை செல்லும் போது, இந்த இணைப்பை சிறிய கோப்பாக-file-உலாவியில் ஏற்படுத்தி வைத்திருக்கும். அடுத்த முறை ஈகரைக்கு செல்லும் போது மிக விரைவாக உங்களை ஈகரையுடன் இணைத்துவிடும். இதுதான் முக்கிய செயல்பாடு.இதைச் செய்பவை நல்ல குக்கிகள்.

ஆனால் சிலர் இதை தப்பாக பாவிக்கிறார்கள்.இப்படி தவறாகப் பாவிக்கப்படும் குக்கிகள் tracking cookies எனச் சொல்லலாம்.இப்படியான சில ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது சத்தமில்லாமல் நுழைந்து விடும். இதை தவிர்க்க அடிக்கடி குக்கிகளை சரி பார்க்கலாம்.வாரம் ஒருமுறையாவது நீக்கி -clear cookies-விடலாம்.

தற்போது காணொளிகள் HTML 5 ஐப் பயன்படுத்துகின்றன. ஆனாலும் இன்னமும் சில அடோப் பிளாஷ் பிளேயரை பாவிக்கின்றன. அப்படியான அடோப் பிளாஷ்-Adobe Flash- காணொளிகள் வேலை செய்யும் போது காணொளியின் மேல் வலது கிளிக் செய்து பாருங்கள்.settings இல், குறிப்பிட்ட இணையப் பக்கம் உங்கள் கணினியில் சிலவற்றை சேமிக்க விரும்புகிறது.allow or deny என இருக்கும். என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது உங்களுடைய உரிமை.

அவர்களை இன்னமும் உள்ளே நுழைந்து அடையாளம் காண, சற்று அதிகமாக விளக்கம் தர வேண்டி இருக்குமே! இன்று வெள்ளிக்கிழமை மதிய உணவு சமயம்.இது போதுமே.

avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Fri Sep 09, 2016 11:13 pm

மிக்க நன்றி நண்பரே, பயனுள்ள தகவல்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 10, 2016 6:50 am

மூர்த்தி wrote:வணக்கம்,பரீட்சை காரணமாக வரமுடியவில்லை ஐயா.
அம்மாவிடம் போயே இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. 10-15 நிமிடங்கள் இடைவேளையின் போது வந்து ஏதாவது எழுதும் போது, தப்பாக இருந்து விட்டால் திருத்த முடியாது.அதற்குள் திருத்தும் வசதி போய்விடும்.இந்த திருத்தும் வசதி எவ்வளவு நிமிடங்கள் ஐயா? பின்னர் அந்த விசயமே மறந்து போய் விடும். அதனால் பொறுமையாக எழுத வேண்டும்,நேரம் கிடைக்கும் போது வர வேண்டும் என்பது காரணம். இன்னும் ஒரு மாதம் பின்னர் சரியாகி விடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1221478

நல்லது மூர்த்தி .
படிக்கும் காலத்தே படிப்புதான் முக்கியம் .அதில் கவனம் செலுத்தவும் .
ஈன்றெடுத்த தாய் மிக முக்கியம் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி ,
மகிழ்ந்து / மகிழ்விக்கவும் . தெய்வத்திற்கு சமமானவர் .
நேரம் கிடைக்கும் போது வரவும் .
திருத்தும் நேரம் , பதிவிட்டபின் 1/2 மணி நேரம் .பிறகு நிர்வாக குழுவினர் மட்டுமே edit பண்ண முடியும் . மறுமொழி பெட்டியில் /பதிவுப் பெட்டியில் தட்டச்சு செய்துவிட்டு , முன்னோட்டத்தை பார்த்தால் , திருத்தவேண்டியவைகளை திருத்தி / சேர்க்கவேண்டியவைகளை சேர்த்து , பதிவிடலாம்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 10, 2016 8:43 am

நல்ல தகவல் .நன்றி .
ரகசியம் காப்பது அவசியம் எனில் ,இணையத்தில் இணையாது இருப்பதே நலம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 10, 2016 10:42 am

Murthy wrote:உளவு செயலிகளை எப்படி இனம் காண்பது?

உங்கள் விளக்கம் அருமையாக புரியும்படியாக இருக்கிறது . No ambiquity .
நம்மை அறியாமலேயே நம்மை பின்தொடர்பவர்களை இனம் காண , நாம் செய்யவேண்டியது என்ன என்பதையும், ஸ்டெப் பய் ஸ்டெப் ,விளக்கிய விதம் நன்றி நன்றி

IE இல் in private ம் Firefox இல் advanced settings privasy ம் ஒன்றுதானா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக