ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

+14
Rathinavelu
கார்த்திக் செயராம்
Dr.S.Soundarapandian
prajai
விமந்தனி
kandhasami saravanan
சசி
Hari Prasath
krishnaamma
siva.c.r
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
18 posters

Page 19 of 34 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 26 ... 34  Next

Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Thu Jun 30, 2016 10:39 am

கார்த்திக் செயராம் wrote:அய்யா /ஐய்யா எது சரி?
அய்யப்பன்/ஐயப்பன் எது சரி?
மேற்கோள் செய்த பதிவு: 1213398

பன்னீருயிரும் மொழி முதலாகும் .

என்ற தொல்காப்பிய சூத்திரப்படி பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் மொழிக்கு முதலாக வரலாம்.

அய்யா, ஐயா , அய்யப்பன் , ஐயப்பன் என்று எழுதலாம்.

அவ்வை , ஒளவை என்பதுபோல எழுதலாம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by krishnaamma Thu Jun 30, 2016 10:41 am

M.Jagadeesan wrote:
கார்த்திக் செயராம் wrote:அய்யா /ஐய்யா எது சரி?
அய்யப்பன்/ஐயப்பன் எது சரி?
மேற்கோள் செய்த பதிவு: 1213398

பன்னீருயிரும் மொழி முதலாகும் .

என்ற தொல்காப்பிய சூத்திரப்படி பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் மொழிக்கு முதலாக வரலாம்.

அய்யா, ஐயா , அய்யப்பன் , ஐயப்பன் என்று எழுதலாம்.

அவ்வை , ஒளவை என்பதுபோல எழுதலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1213410

மிக்க நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by Guest Thu Jun 30, 2016 1:28 pm

உலகமயமாக்கல் சினிமா போன்ற சில காரணங்களா,ல் முற்றாக தமிழ் இலக்கண மரபுப்படி எழுத முடிவதில்லை. ஆதார்,பான் இலக்கம் போன்றவற்றில் சிலர் சிரமப்பட்டதை பத்திரிகையில் படித்திருக்கிறேன். பெயர் அளவில் சில சிரமம் வரவே செய்கிறது. இரமணியன்,செகதீசன் எழுதலாம்,ஆனாலும் ஜெகதீசன்,ரமணியன் என்று இருக்கட்டுமே!

நல்ல தமிழ் சொற்களை கெட்ட சொல் ஆக்கி விட்ட நிலையில்,இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

கூந்தலுக்கு முடி என்ற சொல்லை எந்த இலக்கியத்திலும் பாவிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.தலைமயிர்,கூந்தல் என்பதுதான் தமிழ் சொல் என்பதும்,முடி என்பது கூந்தலை அள்ளி தலைமேல் முடிந்தால் மட்டுமே முடி என்றும் காரணப் பெயராகி நிற்கிறது.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்,நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்.........

சினிமாவும் நடிகர்களும் சொல்வதே வேதவாக்காகி விட்டது.
avatar
Guest
Guest


Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by Guest Thu Jun 30, 2016 1:29 pm

center,centre இரண்டும் ஒரே பொருளுடைய சொல்தான். அமெரிக்கர்கள் center என எழுதுகிறார்கள் சில இடங்களில் மாற்றி centre எனவும் எழுதுகிறார்கள்.பிரிட்டன்-பிரிட்டனுடன் தொடர்பில் இருந்த கனடா இந்தியா போன்ற நாடுகள்,ஐரோப்பிய நாடுகள் centre என எழுதுகிறார்கள்.இதைப் போலவே வேறு பல சொற்கள் பிரிட்டன்-அமெரிக்க ஆங்கில சொற்களில் வேறுபாடு உண்டு.

harbour – harbor ; colour – color ;theatre-theater ;licence-license ;neighbour-neighbor இப்படி இரண்டையும் மாற்றி பயன்படுத்துகிறார்கள்.MS-Word இல் எழுதும் போது சில சமயம் இப்படியான சொற்களின் கீழ் சிவப்பு கோடிட்டுக் (spell check) காட்டுவதை பார்த்திருக்கலாம்.

avatar
Guest
Guest


Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by Guest Thu Jun 30, 2016 1:34 pm

H என்ற ஆங்கில எழுத்தை எச் என உச்சரிக்காது ஹெச் என சிலர் முக்கியமாக குழந்தைகள் உச்சரிக்கின்றனர். H -ஹெச் என உச்சரிப்பது ஐரிஷ் மக்களாகும். ஐரிஷ் ஆங்கிலத்தில் ஐரிஷியர்கள் ஹெச் எனவே உச்சரிக்கின்றனர். அது இன்று பிரிட்டனில் இலண்டனில் சிலரிடம் வழக்கத்தில் வந்து விட்டது. இலண்டனுக்கு வெளியே சுற்றி உள்ள இடங்களில்- எச் எனவே உச்சரிக்கின்றனர்.ஐரிஷ் நாட்டு ஆசிரியர்கள் ஆசிரியதொழில் காரணமாக இலண்டனை நோக்கி வந்ததன் எதிரொலி இந்த ஹெச் உச்சரிப்பு, குழந்தகளிடமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் பற்றி சொல்லும் இடத்தில் ஆங்கிலம் பற்றி சொல்லியதற்கு மன்னிக்கவும்.
avatar
Guest
Guest


Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by T.N.Balasubramanian Thu Jun 30, 2016 6:25 pm

hour ஹவர் என்று உச்சரிப்பதை தவிர்க்க கூறுகின்றனர் .
(h நிசப்தம் ) ஆர் என்றே உச்சரிக்க பரிந்துரைக்கப் படுகிறது .
1 1/2 ஆர் கழித்து வருகிறேன் என்பதே சரி .

[quote="மூர்த்தி
"]தமிழ் பற்றி சொல்லும் இடத்தில் ஆங்கிலம் பற்றி சொல்லியதற்கு மன்னிக்கவும்.

அவசியம் கருதி பதிவிட்டவை புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by விமந்தனி Thu Jun 30, 2016 7:21 pm

உவமானம் - உவமேயம்
உபமானம் - உபமேயம்
- இவற்றில் எது சரி...?


நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by Guest Thu Jun 30, 2016 7:52 pm

ஒரு புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள்-உவமேயம், அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள் -உவமானம் (உபமானம்- ஒப்புமை, உபமேயம் -விளக்கப் படும் பொருள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அகர முதல எழுத்தெல்லாம் -உவமானம்,
ஆதி பகவன் முதற்றே உலகு - உவமேயம்

சம்ஸ்கிருத இலக்கியங்களில் உபமானம் உபமேயம் என பாவிக்கப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.
தமிழில் உவமானம்-உவமேயம் ,அதனால் இரண்டுமே சரியானவை எனக் கருத முடியும் என்பது என் கருத்தாகும். சரியா?
avatar
Guest
Guest


Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Thu Jun 30, 2016 8:21 pm

விமந்தனி wrote:உவமானம் - உவமேயம்
உபமானம் - உபமேயம்
- இவற்றில் எது சரி...?
மேற்கோள் செய்த பதிவு: 1213500

இரண்டுமே சரிதான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by M.Jagadeesan Fri Jul 01, 2016 6:37 am

[quote="T.N.Balasubramanian"]hour ஹவர் என்று உச்சரிப்பதை தவிர்க்க கூறுகின்றனர் .
(h நிசப்தம் ) ஆர் என்றே உச்சரிக்க பரிந்துரைக்கப் படுகிறது .
1 1/2 ஆர் கழித்து வருகிறேன் என்பதே சரி .

[mention]மூர்த்தி
[/mention] wrote:
தமிழ் பற்றி சொல்லும் இடத்தில் ஆங்கிலம் பற்றி சொல்லியதற்கு மன்னிக்கவும்.

அவசியம் கருதி பதிவிட்டவை புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1213488

ஒரு சொல்லை தனியாக உச்சரிப்பதற்கும் , வாக்கியத்தில் வைத்து உச்சரிப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

Honest Man - ஹானஸ்ட் மேன்
இதுவே வாக்கியத்தில் வரும்போது
He is an honest man - ஹி ஈஸ் என் ஆனஸ்ட் மேன் .

Historical event - ஹிஸ்டாரிக்கல் ஈவென்ட் .
இதுவே வாக்கியத்தில் வரும்போது
It is an historical event - இட் ஈஸ் என் இஸ்டாரிக்கல் ஈவென்ட் .

Hour - ஹவர்
இதுவே வாக்கியத்தில் வரும்போது
Sixty minutes make an hour - சிக்ஸ்டி மினிட்ஸ் மேக் என் ஆர் .

என்று வரும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 19 Empty Re: நம் தமிழை முறையாக அறிவோமே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 34 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 26 ... 34  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum