புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
25 Posts - 69%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
361 Posts - 78%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
8 Posts - 2%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 17 of 34 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 25 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 26, 2016 11:54 pm

நிறைய பதிவுகள் படிக்கணும், படித்து நாளை பின்னூட்டம் போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 6:44 am

சில ஆண்டுகளுக்கு முன்பு , ரஜினி நடித்து வெளிவந்த படத்தை " எந்திரன் " என்ற பெயரிலேயே வெளியிட்டார்கள் . யந்திரன் என்ற பெயரில் வெளியிடவில்லை.

இயேசு என்றோ அல்லது ஏசு என்றோதான் எழுதுகிறோம் . யேசு என்று யாரும் எழுதுவதில்லை . யசோதா என்று எழுதுவது மக்களிடையே நிலைபெற்றுவிட்டது . எனவே அதை எசோதா என்று எழுதும்போது , நமக்கு வித்தியாசமாகத் தெரிகிறது .

ரவி என்ற பெயரை இரவி என்று எழுதினால் என்ன சிக்கல் ? இரவி என்றால் சூரியன் .

வாக்கு என்னும்சொல் இன்னும் பேச்சு வழக்கில் வரவில்லையே !
ஓட்டு போட்டாயா ? என்றுதான் சொல்கிறோமே தவிர , வாக்கு போட்டாயா ? என்று யாரும் கேட்பதில்லையே !
அதுவரையில் " ஓட்டு " என்னும் சொல்லை நாம் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் . இன்னும் சொல்லப் போனால் " ஓட்டு " என்னும் சொல் தமிழோடு தமிழாகக் கலந்துவிட்டது என்றே சொல்லவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 7:55 am

"கந்தனும் , இராமனும் மற்றும் முருகனும் வந்தனர் . " என்று எழுதுவது சரியா ?

kandhan , Ramman and Murugan came என்று எழுதுவது ஆங்கில முறை . ஆங்கிலத்தில் and என்பதைத் தமிழில் "மற்றும் " என்று மொழிபெயர்த்து சேர்க்கின்றனர் . இது தேவையில்லை .

கந்தனும் , இராமனும் , முருகனும் வந்தனர் என்று எழுதுவதுதான் தமிழ் மரபு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 29, 2016 5:01 pm

வாதிடுவது என் நோக்கமல்ல,சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதே என் நோக்கமாகும்.சில மாதங்களுக்கு முன்னர் -சென்ற ஆண்டு??- ஒரு தமிழ் தொலைக்காட்சியில் தமிழ் உச்சரிப்பு பற்றிய சந்தேகத்திற்கு, தமிழக தமிழ் பேராசிரியர்கள் இருவர் தந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே என் கருத்து மேலே தரப்பட்டுள்ளது.

வோட்டு ஓட்டு என்பதை நான் அவர்களிடம் கேட்கவில்லை.வாக்கு பாவனைக்கு வந்து பலகாலமாகி விட்டது. வாக்குச்சீட்டு,வாக்களிப்பு,வாக்குச்சாவடி என சொற்கள். நீங்கள் சொல்வது போல் வோட்டு Vote எனச் சொல்வது குறைவே தவிர இல்லை என்று சொல்ல முடியவில்லை.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 29, 2016 5:02 pm

உயிர் எழுத்து அ-ஒள; க, த, ந, ப, ம, ச, ஞ, ய, வ, ங என்னும் பத்து மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும் , இவை தவிர உள்ள ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை.

யவணர் ,யவை போன்றவை தமிழ் சொற்களாகும். இப்படி ய வில் வரமுடியும். ….இது அவர்கள் கருத்து.

பன்னீ ருயிருங் க ச த ந ப ம வ ய
ஞ ங வீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல்.

அதாவது, பன்னீர் உயிரும் - பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் , க ச த ந ப ம வ ய ஞ ங ஈரைந்து உயிர் மெய்யும் - ககர முதல் ஙகரம் ஈறாகச் சொல்லப்பட்ட பத்து உயிர் ஏறிய மெய்யெழுத்துக்களும், மொழி முதல் - சொல்லுக்கு முதலாகும் .

அடை , ஆடை , இடை , ஈடு , உடை , ஊடல் , எடு , ஏடு , ஐயம் , ஒதி , ஓதி , ஒளவியம் எனவும் களி , சவடி , தளிர் , நலம் , படை , மலை , வளம் , யவனர் , ஞமலி , அங்ஙனம் எனவும் வரும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 29, 2016 5:04 pm

ரவி - இரவி நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒரு பெயர்ச்சொல்லை மாற்றி எழுதும் போது அலுவலக சிக்கல் வர வாய்ப்புண்டு என்றும் அப்பெயருள்ளவர்கள் இரவி என சொல்வதை ஏற்றுக் கொண்டால் சரிதான் என்றார்கள்.

ரவி என்று தங்கள் பெயரை உச்சரிக்க வேண்டுமென்று 379,000 பேர் இணையத்தில் கருத்து கூறி இருக்கிறார்கள். உங்களை இரவி என அழைக்கலாமா என்று கேட்டதற்கு தமிழ் ஆர்வம் உடைய 312 பேர் ஆம் என சொல்லி இருக்கிறார்கள். ரவியா இரவியா?

பிறமொழிச் சொற்களை, அவை எந்த மொழிச் சொல்லானாலும்,உச்சரிக்கும் போது அப்படியே உச்சரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.உயிர்ப்பலி- பலி- என்பதை bhaபலி எனவும்,பூசை-பலி என்பதை paபலி எனவும் உச்சரிக்க வேண்டும்.

குண்டு-Bomb, குணம் இவற்றை கு-KU என உச்சரிக்கக் கூடாது என்றும், GHUண்டு எனவே உச்சரிக்க வேண்டும்.குண்டும் குழியும் இங்கே kuண்டு என வர வேண்டும் என்கிறார்கள்.

இவற்றை புரிந்து கொள்ளும் அளவிற்கு நான் தமிழ் கற்கவில்லை.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 29, 2016 5:44 pm

படிக்க படிக்க சுவாரசியமான விஷயங்கள் மேலே (மண்டையில்) பதிவாகிகொண்டிருக்கிறது. தொடருங்கள்.



நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 17 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:21 pm

இனிமேல் நானும் "இரமணியன்" என்றே முடிக்க வேண்டுமோ ?

ரமணியன் (379001 இல் ஒருவன்)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:30 pm

யினியவன் wrote:
M.Jagadeesan wrote:
யினியவன் என்று எழுதக்கூடாது .

தெரிந்தே தான் அய்யா எழுதுகிறேன் புன்னகை

சொன்ன பேச்சு கேட்டிருந்தா எப்பவோ உருப்பட்டிருப்பேன் புன்னகை

இனி உருப்பட்டு என்ன ஆகப்போகிறதுன்னு அப்படியே இருக்கிறேன் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212640

இனி உருப்பட்டு என்ன ஆகப்போகிறதுன்னு

"யினி உருப்பட்டு என்ன ஆகப்போகிறதுன்னு" இப்பிடி இருந்திருக்கணுமோ?

ரமணியன்

@யினியவன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:38 pm

யினியவன் wrote:
மூர்த்தி wrote:
யினியவன் என்பது அவர் எண்சோதிடத்தை வைத்து மாற்றி இருப்பார்.

ஹா ஹா ஹா

இல்லை இல்லை - சாதி மத சோதிட நம்பிக்கை அற்றவன் - அதான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212645


சாதி இரண்டொழிய வேறில்லை என்று கேள்விப் பட்டுள்ளேன் .
அந்த சாதி இல்லையே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 17 of 34 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 25 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக