புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_lcapநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_voting_barநம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 13 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 13 of 34 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 23 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 23, 2016 2:01 pm

//வலைப்பதிவு ,வலைப்பதிவர் ,வலைப்பதித்தல் என்றே கூறலாமே .//

தாராளமாக சொல்லலாம். வலைப்பூ என்பதில் தான் மொழி-இணைய ஆர்வலர்கள் வலைப்பதிவை தேர்வு செய்ய வேண்டி வந்தது.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 23, 2016 2:59 pm

கோடியக்கரை , கோடிக்கரை - எது சரி ?

கோடிய = வளைந்த என்று பொருள்படும் . ஆனால் அந்த ஊரில் கரை எதுவும் வளைந்து காணப்படவில்லை .
கோடி என்னும் சொல்லுக்கு கடைசி என்ற ஒரு பொருளும் உண்டு . எனவே கோடிக்கரை என்பதே சரியான பெயர் .

பொன்னியின்செல்வன் நாவலில் கல்கி, கோடிக்கரை என்றே குறிப்பிடுகிறார் . இங்குள்ள குழகர் கோவிலை " கோடிக்கரைக் குழகர் " என்று அழைக்கிறார் . சுந்தரர் , தேவாரத்தில் " கோடிக் குழகீர் " என்று இங்குள்ள சிவனை அழைக்கிறார் .


"கதிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதானயலே இருந்தாற் குற்றமாமோ?
கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே?"

"மத்தம் மலிசூழ் மறைக்காடதன் றென்பால்
பத்தர் பலர் பாடவிருந்த பரமா!
கொத்தார் பொழில் சூழ்தருகோடிக் குழகா
எத்தாற் றனியே யிருந்தாய்? எம்பிரானே!"



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 23, 2016 3:34 pm

பொன்னியின் செல்வனில் கொடிக்கரையிருந்து இலங்கை செல்வதாக காட்சிகள் வரும் .
நீங்கள் கூறியபடி , கோடியாக , கடைசி நிலபாகமாக இருக்கலாம் .
ஒரு வேளை, கரையே வளைந்து இருந்து ,ஊரின் பெயர், காரணப் பெயராக இருந்து இருக்கலாம் .
நாளடைவில் /காலத்தால் கடல் கொண்டு இருக்கலாம் .
அனுமானம் தான் ,
தகவலுக்கு நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 23, 2016 3:44 pm

M Jagadeesan wrote:வள்ளுவர் கூட , " கள்ளைக் குடிக்காதே " என்று சொல்லாமல் " உண்ணற்க கள்ளை " என்று சொல்கிறார் .
இதை நாம் தவறு என்று சொல்லமுடியாது . செய்யுளில் தளை தட்டக்கூடாது என்பதற்காக , இலக்கண மீறல்களும், மரபு மீறல்களும் புலவனுக்காக அனுமதிக்கப் படுகின்றன.

" செவிநுகர் கனிகள் " என்று கம்பன் சொன்னதும் , " இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே " என்று பாரதி பாடியதும் , மரபு மீறல் என்றாலும் , அதிலுள்ள கவி நயத்திற்காக , நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம் .

மரபு மீறல் நம் வாழ்க்கையோடு தொன்றுதொட்டு இணைந்த ஒன்று கேட்கும் போது மனம் சந்தோஷப்படுகிறது . தெரிந்தோ தெரியாமலோ  மரபு மீறினால் , jagadeesan அவர்களை துணைக்கு அழைத்துக் கொள்வேன் . அவர் அருகில் இருக்கிறார் . மேலும் வள்ளுவரையும் பாரதியையும் எங்கே தேடுவது . புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 23, 2016 7:36 pm

பித்தலாட்டமா ? பித்தளை ஆடகமா ?- எதுசரி ?

பித்தலாட்டம் -- ஏமாற்று வேலை எனப் பொருள்படும்.

பித்தலாட்டம், இரு வடமொழிச்சொற்களின் கூட்டு: பித்தளா + ஆடகம்.

பித்தளாவைத் தமிழில் பித்தளை என்கிறோம். இது செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகம். ஆடகம் என்பது தங்கம்; இரண்டும் ஒரே நிறமாக இருப்பதால், இதுவா அதுவா என ஐயப்பட இடம் உண்டு. இதைப் பயன்படுத்தி, மோசடிப் பேர்வழிகள், பித்தளையை ஆடகம் என்று சொல்லி ஏமாற்றினால், அது பித்தலாட்டம்.
பித்தளையை ,ஆடகம் என்று சொல்லி ஏமாற்றுபவனைப் " பித்தலாட்டக்காரன் " என்று சொல்கிறோம் .

ஆடகம் என்பது பொன்னின் ஒருவகை .

சாதரூபம் , சாம்பூநதம் ,கிளிச்சிறை , ஆடகம் ஆகியவை பொன்னின் நான்கு வகைகள் .







இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 23, 2016 7:53 pm

ஹிந்தியில் பித்தல் என்றால் பித்தளை

​पिथ्थ्ल​ வார்த்தையின் கடைசியில் உயிர் மெய் எழுத்து வந்தால் அதை மெய்எழுத்தாக பாவிக்க வேண்டும் .
ஆகவே பித்தளா என்பது சரியான பதமாக இருக்காது பித்தல் என்றே இருக்கவேண்டும் என்பது எந்தன் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 23, 2016 8:55 pm

நீங்கள் கூறியது சரிதான் என்பதை உறுதிப் படுத்திக்கொண்டேன் . பித்தள் என்று மாற்றிவிடுங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 23, 2016 10:21 pm

//பித்தளையை ,ஆடகம் என்று சொல்லி ஏமாற்றுபவனைப் " பித்தலாட்டக்காரன் " என்று சொல்கிறோம் .//

அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தொன்றுகிறது ஐயா. பித்தர்-பித்தன் -பித்தம்-பித்தல்- பொருளுடன் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அறிவு நிலை திரிந்து பித்துப் பிடித்தவன் போல் செயல்படுபவன் ,ஏமாற்றுபவன் என்ற பொருளுடன் சொல்லப்பட்டிருப்பதால், தமிழில் பித்தன்-பித்தல் -ஆடகன் என்ற சொல் இருப்பதை காணலாம். பித்தளை என்பதில் இருந்து வருவதற்கு வாய்ப்பில்லை.
பித்தா என்ற தேவாரத்தையும் நோக்கலாம்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 23, 2016 10:29 pm

சிவனை பித்தன் என தாட்சாயணியின் தந்தை இகழ்ந்ததாக ஞாபகம்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 23, 2016 10:57 pm

மூர்த்தி wrote://பித்தளையை ,ஆடகம் என்று சொல்லி ஏமாற்றுபவனைப் " பித்தலாட்டக்காரன் " என்று சொல்கிறோம் .//

அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தொன்றுகிறது ஐயா. பித்தர்-பித்தன் -பித்தம்-பித்தல்- பொருளுடன் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அறிவு நிலை திரிந்து பித்துப் பிடித்தவன் போல் செயல்படுபவன் ,ஏமாற்றுபவன் என்ற பொருளுடன் சொல்லப்பட்டிருப்பதால், தமிழில் பித்தன்-பித்தல் -ஆடகன் என்ற சொல் இருப்பதை காணலாம். பித்தளை என்பதில் இருந்து வருவதற்கு வாய்ப்பில்லை.
பித்தா என்ற தேவாரத்தையும் நோக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1212378

நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை . பித்தலாட்டக்காரன் என்று சிவனைக் குறிப்பிடுகிறீர்களா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 13 of 34 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 23 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக