Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தமிழை முறையாக அறிவோமே !
+14
Rathinavelu
கார்த்திக் செயராம்
Dr.S.Soundarapandian
prajai
விமந்தனி
kandhasami saravanan
சசி
Hari Prasath
krishnaamma
siva.c.r
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
18 posters
Page 2 of 34
Page 2 of 34 • 1, 2, 3 ... 18 ... 34
நம் தமிழை முறையாக அறிவோமே !
First topic message reminder :
காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்
இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.
இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.
மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .
இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.
எடுத்துக் காட்டு:
கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.
நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.
பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .
பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.
கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.
பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.
மேல் + படிப்பு - மேற்படிப்பு
மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று
கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.
பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.
இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.
காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.
எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.
உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
இப்போது " கள் " உண்ணும் பழக்கம் இல்லை என்றே எண்ணுகிறேன் . அதான் டாஸ்மாக் வந்துவிட்டதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
இந்த விவாதத்திற்கு வேறொரு கோணம் உள்ளது
என்பது என் தாழ்மையான கருத்து.
சைகைகளாலும் முக பாவங்களாலும் தன் எண்ணங்களைப்
பரிமாறிக் கொண்டிருந்த பழங்கால மனிதன், சற்று
நாகரிகமடைந்ததும் மொழி என்ற ஒன்றை முதன்முதலில்
தன் கூட்டத்தினரிடையே அடிப்படையான
கருத்துப் பரிமாற்றலுக்காக ஏற்படுத்திக்கொண்டான்.
அக்காலங்களில், இலக்கணம் என்று ஒன்று இல்லாமல்தான்
மொழி இருந்தது.
இலக்கணம் இல்லாமலிருந்தாலும், மனித குலத்தின்
கருத்துப் பரிமாற்றத் தேவைகளை மொழி நிறைவேற்றியது.
நாட்பட நாட்பட, இலக்கியமும், இலக்கியத்தை நெறிப்படுத்த
இலக்கணமும் தோன்றின.
மொழிக்கு இலக்கணம் அவசியமானது என்றாலும்,
மொழியின் முக்கிய அவசியம் இருவரிடையே
( அல்லது பலரிடையே ) கருத்துப் பரிமாற்றம்தான்.
இலக்கண ரீதியாக ஒன்றை எழுதி ( அல்லது பேசி )
சொல்லப்படும் கருத்து படிப்பவரையோ
( அல்லது கேட்பவரையோ ) சென்றடையாமல்
இருந்தால் அங்கு மொழியின் பயனே
கேள்விக்குறியாய்விடுகிறது.
காலத்துக்கேற்ப எந்த ஒரு மொழியும்
வளைந்து கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.
அவ்வாறு வளைய மறுக்கும் மொழி
வழக்கொழிந்து போகிறது ( சமஸ்கிருதம் போல ).
இன்று சென்னை போன்ற பெரிய நகரங்களில்
( சொல்லப் போனால் தமிழகம் முழுவதுமே ),
எந்த ஒரு தொழிலாளியிடம் வேலை வாங்கியாக
வேண்டும் என்றால் அவர்களுக்குப் புரியும்
"சென்னைத் தமிழில்" பேசியே செய்விக்க முடியும்.
இலக்கணச் சுத்தமாகப் பேசினால் நம்மை ஏற இறங்கப்
பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள்.
"காற்பந்து" மிகக் குறைவான இடங்களிலேயே
செல்லுபடியாகும்.
புரியும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால்
"கால்பந்து" தான்.

siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
ஒரு சொல்லை பேச்சு வழக்கில் கொண்டுவர வேண்டுமானால் , முதலில் அச்சொல்லை " அச்சில் " ஏற்றவேண்டும் . அதாவது பாட புத்தகங்களில் கொண்டுவரவேண்டும் .
இப்போது " பேருந்து " "கணினி " , " மிதி வண்டி " , மாற்றுத் திறனாளி " ஆகிய சொற்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன .
இதுபோல " காற் பந்து " என்ற சொல்லையும் பாட புத்தகங்களில் புகுத்தினால் , மக்கள் அந்தச் சொல்லுக்குப் பழக்கமாகி விடுவர் .
இப்போது " பேருந்து " "கணினி " , " மிதி வண்டி " , மாற்றுத் திறனாளி " ஆகிய சொற்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன .
இதுபோல " காற் பந்து " என்ற சொல்லையும் பாட புத்தகங்களில் புகுத்தினால் , மக்கள் அந்தச் சொல்லுக்குப் பழக்கமாகி விடுவர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மேற்கோள் செய்த பதிவு: 1211488siva.c.r wrote:
இன்று சென்னை போன்ற பெரிய நகரங்களில்
( சொல்லப் போனால் தமிழகம் முழுவதுமே ),
எந்த ஒரு தொழிலாளியிடம் வேலை வாங்கியாக
வேண்டும் என்றால் அவர்களுக்குப் புரியும்
"சென்னைத் தமிழில்" பேசியே செய்விக்க முடியும்.
இலக்கணச் சுத்தமாகப் பேசினால் நம்மை ஏற இறங்கப்
பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள்.
.
சென்னைத் தமிழ் , தமிழ்நாடு முழுவதும் செல்லுபடியாகாது என்பது என் தாழ்மையான கருத்து. தமிழ்மொழியை எவ்வளவு சிதைக்க முடியுமோ , அவ்வளவு சிதைத்துப் பேசுவதுதான் " சென்னைத் தமிழ் "
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
ஜெகதீசன் அவர்கள் சொல்வதே ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். சிவா அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இன்னொரு விசயம் வரலாற்றுக் கூற்றின்படி சமஸ்கிருதம் பல சந்தர்ப்பங்களில் வளைந்து கொடுத்திருக்கிறது. மாற்றம் பெற்றிருக்கிறது.
மற்றைய மொழிகளில் இலக்கணப் பிழைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம் தமிழில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்றாகி விட்டது.
எல்லா மொழிகளிலும் இரு கிழைகள் உண்டு.தொல்காப்பியம் தமிழை இருவகைகளாக பிரித்தது. ஒன்று செந்தமிழ் (இலக்கியத்தமிழ்). இரண்டு கொடுந்தமிழ் (பேச்சுத்தமிழ்). பேச்சுத்தமிழை வட்டார வழக்காகப் பயன்படுத்தலாம்.தவறில்லை. ஆனால் எழுதும் போது இலக்கணப் பிழை இன்றி எழுதுவதே மரபாகும். எழுத்துத்தமிழ்-உரைநடைத்தமிழ் ஒரே மாதிரியாக இருப்பதால் உலகம் எங்கும் வாழ்பவர்களால் படிக்க முடியும். இன்று உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள். சென்னைத் தமிழில் எழுதினால் யார் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.
சென்னையில் இருப்பவர் திருநெல்வேலிக்கு சென்று வேலை பார்த்தால் அவர் தமிழ் இவருக்குப் புரியாது. எழுதுவது வேறு பேசுவது வேறு. கூடவே பேச்சுத்தமிழ் நேருக்கு நேர் பேசுவதாகும்.தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்ளவும் முடியும். எழுத்துத்தமிழ் அப்படி அல்ல. எங்கோ இருக்கும் ஒருவருடன் எந்தக் காலத்திலும் பயன்படுத்துவதாகும்.
நிலை மொழி இறுதியில் லகர, ளகரம் இருப்பின் (ல்,ள்) வருமொழி முதலில் க,ச,த,ப வரும்போது இந்த ல்,ள் என்பவை ற், ட் ஆகத் திரியும் என்பது பொதுவிதி.
கால்(நிலை மொழி)+பந்து (வருமொழி) = காற்பந்து என்பதே இலக்கணப்படி சரியாகும்.
பல் + பொடி= பற்பொடி
முள்+செடி=முட்செடி
வருமொழி முதலில் தகரம் (த)வரின் அது றகர, டகரமாக மாறும்.
புல்+தரை= புற்றரை
நல்ல தமிழ் சொற்கள் இன்று காணாமல் போய் விட்டது. நல்ல தமிழை இலக்கணப் பிழை இன்றி எழுதுவதே சிறப்பாகும்.

Guest- Guest
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
அணுகுண்டா-அணுக்குண்டா- எது சரி?
தங்கக் காசு - தங்கத்தினால் ஆகிய காசு
வெள்ளிக்கொலுசு - வெள்ளியால் ஆகிய கொலுசு
பிளாஸ்டிக் வாளி - பிளாஸ்டிக்கினால் ஆகிய வாளி
எனவே
அணுவினால் ஆகிய குண்டு என்பதால் அணுக்குண்டு என்பதே சரி; ஒற்றெழுத்து மிக வேண்டும்.
தங்கக் காசு - தங்கத்தினால் ஆகிய காசு
வெள்ளிக்கொலுசு - வெள்ளியால் ஆகிய கொலுசு
பிளாஸ்டிக் வாளி - பிளாஸ்டிக்கினால் ஆகிய வாளி
எனவே
அணுவினால் ஆகிய குண்டு என்பதால் அணுக்குண்டு என்பதே சரி; ஒற்றெழுத்து மிக வேண்டும்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
கட்டடமா,கட்டிடமா-எது சரி?
கட்டடம் என்றால் கட்டிய வீடு ; அதாவது BUILDING
கட்டு+இடம் = கட்டிடம்.. அதாவது, கட்டுவதற்கு உரிய இடம். அதாவது PLOT
என் வீடு ஒரு அழகான கட்டடம் என்று சொல்லவேண்டும் .
என் வீடு ஒரு அழகான கட்டிடம் என்று சொல்லக்கூடாது .

மேற்கோள் செய்த பதிவு: 1211495மூர்த்தி wrote:ஜெகதீசன் அவர்கள் சொல்வதே ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். சிவா அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இன்னொரு விசயம் வரலாற்றுக் கூற்றின்படி சமஸ்கிருதம் பல சந்தர்ப்பங்களில் வளைந்து கொடுத்திருக்கிறது. மாற்றம் பெற்றிருக்கிறது.
மற்றைய மொழிகளில் இலக்கணப் பிழைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம் தமிழில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்றாகி விட்டது.
எல்லா மொழிகளிலும் இரு கிழைகள் உண்டு.தொல்காப்பியம் தமிழை இருவகைகளாக பிரித்தது. ஒன்று செந்தமிழ் (இலக்கியத்தமிழ்). இரண்டு கொடுந்தமிழ் (பேச்சுத்தமிழ்). பேச்சுத்தமிழை வட்டார வழக்காகப் பயன்படுத்தலாம்.தவறில்லை. ஆனால் எழுதும் போது இலக்கணப் பிழை இன்றி எழுதுவதே மரபாகும். எழுத்துத்தமிழ்-உரைநடைத்தமிழ் ஒரே மாதிரியாக இருப்பதால் உலகம் எங்கும் வாழ்பவர்களால் படிக்க முடியும். இன்று உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள். சென்னைத் தமிழில் எழுதினால் யார் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.
சென்னையில் இருப்பவர் திருநெல்வேலிக்கு சென்று வேலை பார்த்தால் அவர் தமிழ் இவருக்குப் புரியாது. எழுதுவது வேறு பேசுவது வேறு. கூடவே பேச்சுத்தமிழ் நேருக்கு நேர் பேசுவதாகும்.தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்ளவும் முடியும். எழுத்துத்தமிழ் அப்படி அல்ல. எங்கோ இருக்கும் ஒருவருடன் எந்தக் காலத்திலும் பயன்படுத்துவதாகும்.
நிலை மொழி இறுதியில் லகர, ளகரம் இருப்பின் (ல்,ள்) வருமொழி முதலில் க,ச,த,ப வரும்போது இந்த ல்,ள் என்பவை ற், ட் ஆகத் திரியும் என்பது பொதுவிதி.
கால்(நிலை மொழி)+பந்து (வருமொழி) = காற்பந்து என்பதே இலக்கணப்படி சரியாகும்.
பல் + பொடி= பற்பொடி
முள்+செடி=முட்செடி
வருமொழி முதலில் தகரம் (த)வரின் அது றகர, டகரமாக மாறும்.
புல்+தரை= புற்றரை
நல்ல தமிழ் சொற்கள் இன்று காணாமல் போய் விட்டது. நல்ல தமிழை இலக்கணப் பிழை இன்றி எழுதுவதே சிறப்பாகும்.
மூர்த்தி அவர்களின் விளக்கத்திற்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நம் தமிழை முறையாக அறிவோமே !
மடிக்கணினியா அல்லது மடி கணினியா - எது சரி ?
இரண்டும் சரிதாம்; ஆனால், வேறு வேறு பொருள்.
மடியின் கண் (மீது ) வைத்துப் பார்த்தால் ஒற்றெழுத்து மிக வேண்டும் (மடிக்கணினி).
ஒற்றெழுத்தினை மிகாமல் எழுதினால் மடிக்கப்படும் கணினி என்று பொருள்.
மடித்த, மடிக்கிற, மடிக்கும் கணினி என்று வினைத் தொகையாகவும் கருதலாம்.
மடிக்கணினி = மடியின் கண் வைத்துப் பார்க்கப்படும் கணினி
மடிகணினி = மடித்த, மடிக்கிற மடிக்கும் கணினி
முன்னது ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; பின்னது வினைத்தொகை.

என் மகனா அல்லது எனது மகனா - எது சரி ?
திருமண அழைப்பிதழில் சிலவற்றில் " என் மகனுக்கும் " என்று போடுகிறார்கள் . சிலவற்றில் " எனது மகனுக்கும் " என்று போடுகிறார்கள் . இவற்றில் எது சரி ?
உயர்திணைக்கு முன்னே " என் " போடவேண்டும் , அஃறிணைக்கு முன்னே " எனது " போடவேண்டும் .
என் மகன் ,
என் மகள் ,
என் மனைவி
என்று எழுதவேண்டும் . இதுவே அஃறிணையாக இருந்தால்
எனது ஆடு
எனது மாடு
எனது வீடு
என்று எழுதவேண்டும் .
ஒரு பெண் , " எனது கணவன் " என்று சொன்னால் , அவள் கணவனை மதிக்கவில்லை என்று பொருள் .ஆடு , மாடுகளுக்கு சமமாகக் கணவனைக் கருதுகிறாள் என்பது பொருள் .

Similar topics
» தமிழர்களே தமிழை அவமதிப்பதா!
» தமிழ்நாடே! தமிழை நடு!
» தமிழை வாழ விடுவோம்!
» தமிழை வாசிக்க வைப்போம்...
» தமிழை குழப்பும் பெயர்கள்
» தமிழ்நாடே! தமிழை நடு!
» தமிழை வாழ விடுவோம்!
» தமிழை வாசிக்க வைப்போம்...
» தமிழை குழப்பும் பெயர்கள்
Page 2 of 34
Permissions in this forum:
You cannot reply to topics in this forum