ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்

3 posters

Go down

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Empty படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்

Post by Guest Wed Jun 15, 2016 4:20 pm


ஆச்சிமா என அழைக்கப்படும் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய பல கதை,கட்டுரை,நாவல்களில் நான் சமீபத்தில் படித்த அவரின் முதல் நாவல் காதலா கடமையா,மற்றும் மகிழம்பூ என்னைக் கவர்ந்தவை. இவர் யார்?

நாகூரில் உள்ள கிறித்துவ தெருப்பள்ளியில் மூன்றாவது படித்தவர் ஆச்சிமா சித்தி. அதற்கு மேல் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. பன்னிரண்டு வயதில் திருமணம், ஐந்து ஆண்டுகளில் நான்கு குழந்தைகளுடன் விதவைக் கோலம். அவ்வளவுதான் அவரின் வாழ்க்கை. பதினாறு வயதில் எழுதத் தொடங்கினார்.

முதல் நாவலான காதலா கடமையா என்ற நாவலுக்கு உவேசா முன்னுரை எழுதியதே அந்த நாவலுக்கு கிடைத்த சிறப்பாகும். ஆனால் நாவல் எழுதியதை அதுவும் காதல் என்ற தலைப்பில், தெரிந்து கொண்ட இஸ்லாமியப் பெண்கள் கூட்டம் எதிர்ப்பு தெரிவிக்க குவிந்ததாம்.

கேள்விகளைக் கேட்டே அறிவை வளர்த்தவர் சித்தி ஜுனைதா.மீன் சாப்பிடக் கூடாது என வைத்தியர் சொன்னதற்கு அவர் வைத்தியரிடம் கேட்ட கேள்விகள் சந்தேகங்கள் என்ன தெரியுமா? இளநீர் குடிக்கலாமா? கிணற்று நீரை கைகால் கழுவ பயன்படுத்தலாமா? மீன் ஆகாதென்றதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றுதானே பார்க்கிறீர்கள்? சம்பந்தம் உள்ளது. மீன் சாப்பிடுகின்ற ஒருவன்தானே மரத்தின்மீதேறி இளநீர் பறிக்கிறான்? அவன் கையால் பிடித்த அரிவாளால் வெட்டப்பட்ட தேங்காயினுள் உள்ள இளநீரை குடிக்கலாமா? நாகூரில் கடல் உள்ளது-ஆற்று நீரும் கடல் நீரும் சங்கமமாகின்றது. - அதில் உள்ள மீன்களின் மேல் பட்ட தண்ணீர்தானே கிணற்றுக்கும் வரும்? அதைப் பயன்படுத்தலாமா? என்று கேட்டாராம்.

இப்படி எல்லாம் சிந்திப்பதை விட மீனே சாப்பிடலாம் என்றாராம் வைத்தியர்.

ஆச்சிமா அவர்கள் நோய்வாய்ப்பட்டு 19-3-1998 அன்று இரவு 10 மணி அளவில் (ஹிஜ்ரி 1418, துல்காயிதா மாதம், பிறை 19/20 ல்) இறைவனடி சேர்ந்தார்கள்.

1928 இல் வெளியிடப்பட்ட காதலா கடமையா என்ற நாவலுக்கு உவேசா வின் முன்னுரை இது..............

இப்போது சில காலமாக ஆண் பாலாரைப் போலவே பெண் பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண் பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்ட மட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு.

சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய "காதலா கடமையா" என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஓவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய 'நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது. பொது மக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்.
ஆங்காங்குச் சில எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் உள்ளன. அவை அடுத்த பதிப்பில் நீக்கப்படுமென்று நம்புகிறேன்.

இந்தப் பெருமைக்கிடையில் கிடைத்த எதிர்ப்பை இப்படி சொல்கிறார் சித்தி ஜுனைதா........
அச்சில் வந்த என் முதல் எழுதோவியத்திற்கு பிற ஊர்களில் எப்படியோ? ஆனால், என் சொந்த ஊரில், நாகூரில் எதிர்ப்பு என்றால்..ஊரே திரண்டு கும்பல் கும்பலாக என்னைப் பார்க்கவந்து கேலி செய்தது!

இந்தப் படிக்காத இலக்கிய மேதையை நினைவு கூருவதில் மகிழ்ச்சியே.

கொடுமைகள் படுகொலைகள் சித்திரவதைகள் ஆதி அமெரிக்கக் குடிகளுக்கு செய்து கொடூரமாக நடந்த கொலம்பசிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ,மின் அஞ்சலைக் கண்டு பிடித்த சிவா ஐயாத்துரைக்கு கொடுக்கவில்லை. மறந்தே விட்டோம்.

இலக்கியவாதிகளை நல்ல மனிதர்களை எப்போதாவது நினைவில் கொண்டு தமிழை எழுத்து மொழியாக்கினால தமிழுக்கும் நல்லது.
avatar
Guest
Guest


Back to top Go down

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Empty Re: படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்

Post by ராஜா Wed Jun 15, 2016 4:28 pm

அரிய தகவல் , பகிர்வுக்கு மிக்க நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Empty Re: படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்

Post by T.N.Balasubramanian Wed Jun 15, 2016 4:46 pm

நல்லத் தகவல் ,நன்றி .மூர்த்தி .
சித்தி ஜூனைத பேகம் ஒரு வேளை , சித்திக் ஜூனைதா பேகமாக இருப்பாரோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Empty Re: படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்

Post by ayyasamy ram Wed Jun 15, 2016 5:56 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் ,நன்றி .மூர்த்தி .
சித்தி  ஜூனைத பேகம் ஒரு வேளை , சித்திக் ஜூனைதா பேகமாக இருப்பாரோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211287
-
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  00q7XiFvQLHlQadPT1Lw+sithijunaithabegam
-
சித்தி  ஜூனைதா பேகம் என்பதே சரியான பெயர் ஆகும்
-

இவரைப்பற்றி நாகூரு ரூமி  மற்றும் ஜே.எம்.சாலி விரிவாஉக எழுதியுள்ளார்கள்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Empty Re: படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்

Post by ayyasamy ram Wed Jun 15, 2016 6:02 pm

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!
ஜே.எம்.சாலி - தினமலர் 13-11-2011
-

-----------------------------------

-
"காதலா, கடமையா?' - விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல்.
தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில்,
அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்...
-
"சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி
எழுதிய, "காதலா, கடமையா?' என்ற தலைப்புடன் கூடிய அபிநவ
கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும்
உண்டாயின.
-
மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்
மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது.
இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது.
கதை போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய
நூல்களிலிருந்து மேற்கோள் கொடுத்திருப்பது, இந்நூலை
எழுதியவருக்கு தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சி உண்டு
என்பதைக் காட்டுகிறது!'
-
தமிழில், முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா,
21 வயதில், "காதலா, கடமையா?' நாவலை எழுதினார். மூன்றாம் வகுப்பு
வரை தான் படிப்பு. அனுபவப் படிப்பே படைப்புத் திறனுக்கு காரணம் எ
ன்று எழுதி வைத்திருக்கிறார்.
அன்றாடம் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர் இவர்.
-
சித்தி ஜுனைதா, 1917ல் நாகூரில் பிறந்தார்.
16 வயதில் எழுதத் தொடங்கினார். "காதலா, கடமையா?'
18 அத்தியாயங்களைக் கொண்ட சரித்திரப் புதினம்.
-
மதுரை பின்னணியில் எழுதப்பட்ட, இந்த நாவலை, எழுத்தாளர்
புதுமைப்பித்தன் விமர்சித்து எழுதியுள்ளார். "முஸ்லிம் பெண்டிர் எழுத
முன் வருவதை நாம் வரவேற்கிறோம்...' என்று அவர் பாராட்டினார்.
-
இந்த நாவலின் கதைச் சுருக்கமே எம்.ஜி.ஆர்., நடித்த, "நாடோடி மன்னன்'
திரைப்படத்திற்கு மூலக் கதையாக அமைந்தது என்று கூறப்பட்டது.
அதற்கு கதை, வசனம் எழுதிய ரவீந்தர் இதை ஒப்புக் கொண்டார்.
நாகூரைச் சேர்ந்த ரவீந்தரின் இயற் பெயர் காஜா முகைதீன்.
சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத்
தென்றல், சித்தி ஜுனைதா எழுதிய விறுவிறுப்பான குறுநாவல்.
1947 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு சுருக்கமான
முன்னுரையை எழுதியிருக்கிறார்.
-
"சரிதைகளையும் சமூகச் சீர்திருத்த நவீனங்கள், கட்டுரைகள்,
சிறுகதைகள் முதலியவைகளையும் புதுமுறையில் எழுதி வெளியிட
முயற்சிக்கிறோம். இத்தகைய பணி, ஆண் மக்களை விட, பெண்
மக்களுக்கே ஏற்புடையது. ஆண் மக்கள் ஜாதி சமயத்தால் தூண்டப்பட்டு,
சரித்திர உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதலாம்.
-
பெண் மக்கள் இயல்பாகவே ஆழ்ந்து சிந்திக்கும் மனத்தன்மையும்,
இரக்கமும் உடையவர்கள். எனவே, புத்துலகம் - புது மாற்றம் விழையும்
முஸ்லிம் உலகம் - மறுமலர்ச்சி விரும்பும் தமிழர் தம் நாடு பெண்
எழுத்தாளர்களை வரவேற்குமாக!'
-
மகிழம்பூ நல்ல வரவேற்பைப் பெற்ற மற்றொரு நாவல். மலைநாட்டு மன்னன்,
ஹலீமா அல்லது கற்பின் மாண்பு, வனஜா அல்லது கணவனின் கொடுமை,
பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம் முதலான தொடர்கதைகளையும்,
சிறுகதை களையும், அவர் காலத்துக்கு ஏற்ற பாணியில் பத்திரிகைகளில்
எழுதினார்.
-
பல பத்திரிகைகளில் கட்டுரை களையும் எழுதிக் குவித்தார் சித்தி ஜுனைதா.
பெண்கள் சினிமா பார்க் கலாமா, பாராளப் பிறந்தவள் பேயாட் டம் போடுவதா,
இஸ்லாமும் பலதார மணமும், முஸ்லிம் பெண்மணி களும், விவாக விலக்கும்
போன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைகளும், அவற்றில் அடங்கும்.

பல கட்டுரைகளின் தொகுப்பு நூலாக, "இஸ்லாமும், பெண்களும்' வெளிவந்தது.

திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு வரலாற்று நூலை, 1946ல் அவர்
வெளியிட்டார். பல மகான்களின் வரலாற்றை கட்டுரைத் தொடராக
பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

அவருடைய சொந்த வாழ்க்கை எப்படி?
-
அவரின், 12 வயதில் திருமணம். கணவர் பகீர் மாலிமாருடன் நான்கைந்து
ஆண்டுகளே வாழ்ந்தார். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, விதவையானார்.
பிறகு, எழுத்தும், படிப்பும், பிள்ளை வளர்ப்புமே சித்தி ஜுனைதாவின்
வாழ்க்கையாகி விட்டது.
இவருடைய தம்பிகளும் பிரபலமானவர்கள். ஒருவர், இன்றைய கவிஞர் நாகூர் சலீம்.
பிரபல மான எழுத்தாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக விளங்கிய தூயவன் -
அக்பர் இன்னொரு தம்பி. ஆட்டுக்கார அலவேலு, மனிதரில் மாணிக்கம்,
பொல்லாதவன், வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த், கேள்வியும் நானே
பதிலும் நானே, உள்ளம் கவர் கள்வன் போன்ற திரைப் படங்களுக்கு வசனம்
எழுதி தயாரிப் பாளராகவும் அவர் இருந்தார்.
தூயவனின் துணைவியே எழுத்தாளர் கே.ஜெய்புன்னிசா.
-
"காதலா, கடமையா?' நாவலையும், மற்ற படைப்புகளையும் ஒரு தொகுப்பாக
வெளி யிட்டுள்ளார் சித்தி ஜுனைதாவின் தங்கை மகன் நாகூர் ரூமி.
82 வயதில், (19.3.1998) காலமாவதற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரை,
சித்தி ஜுனைதா சலிப்பில்லாமல் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தார்.
=
=============================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Empty Re: படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்

Post by T.N.Balasubramanian Wed Jun 15, 2016 6:16 pm

நல்ல விரிவான தகவல்கள் அய்யாசாமி ராம் . படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Empty Re: படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum