புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
1 Post - 3%
viyasan
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
21 Posts - 4%
prajai
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தலைவன்! Poll_c10தலைவன்! Poll_m10தலைவன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவன்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 1:53 am

நாளை புதிய புராஜெக்ட் மேனேஜர் வரப் போறார் என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு மாதச் சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் என்பதை, எச்.ஆரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம்.

'வரவிருக்கும் புதிய புராஜெக்ட் மேனேஜர், தன் புதிய யோசனைகளால் சரியும் நம் நிறுவனத்தின், 'இமேஜை' தூக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கு; அவருக்கு, உங்களோட முழு ஒத்துழைப்பை தரணும்...' என்று, ஒரு வாரத்திற்கு முன்பே, நிர்வாக இயக்குனர் எங்களிடம் கூறியிருந்தார்.

எங்கள் என்றால் நான், சொர்ணலதா, ராகுல் மற்றும் பிரகாஷ். இதைக் கூறிய போது, நிர்வாக இயக்குனரின் முகத்தில் மர்ம புன்னகை!

அடுத்தநாள், அப்புன்னகைக்கான அர்த்தம் புரிந்தது. எங்கள் அணிக்கு, தலைமை பொறுப்பை ஏற்க இருப்பது ரவிகிரண் என்ற தகவலை அறிந்ததும் அதிர்ச்சியில் திணறி விட்டோம்.

இதே நிறுவனத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தவன் தான் ரவிகிரண். எங்களை விட ஜூனியர்; ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இங்கு வேலையை விட்டு விட்டு, வேறொரு நிறுவனத்தில் சேர்ந்தான். இத்தனைக்கும் அங்கும் இதே ஊதியம், இதே போன்ற பதவி தான்!

இப்போது அவன் எங்கள் நிறுவனத்தில் எங்களுக்கே லீடராக வரவிருக்கிறான். ''பாக்காமல் கீ போர்ட்டை கூட கையாளத் தெரியாது அவனுக்கு...'' என்று அங்கலாய்த்தான், பிரகாஷ்.

''கிறுக்கு பிடிச்ச மாதிரி பேசுவான்,'' என்றாள் சொர்ணலதா. ''டார்கெட்டை எப்படி அடையணும்ங்கிற வழிமுறையை எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும், சரியா புரிஞ்சிக்க மாட்டான்,'' என்றான் ராகுல்.

'அவனை எப்படி இங்கே மறுபடியும் சேர்த்துக் கொண்டனர்...' என்று மனதுக்குள் குமுறினோம்.
மறுநாள், கையில் பூங்கொத்துடன் காத்திருந்த நிர்வாக இயக்குனர், ''நம்மோடு மீண்டும் பணியாற்ற போகிற ரவிகிரணுக்கு, உங்களில் யார் இந்த பூங்கொத்தை கொடுக்கப் போறீங்க...'' என்று கேட்டார்.

நால்வரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டோம். அப்பார்வையில் மறுப்பு இருந்ததை, நிர்வாக இயக்குனர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

''தீபக்... நீங்களே அவருக்கு பூங்கொத்தை கொடுங்க,'' என்று என்னிடம் கொடுத்தார்.
வெறுப்பாக இருந்தது; கூடவே, 'எப்படி இவனுக்கு கீழே வேலை செய்யப் போறேன்...' என்று தர்மசங்கடமாகவும் இருந்தது.

முன்பு எங்களுடன் பணியாற்றிய போது, பலமுறை அவனுக்கும், எனக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. நாங்கள் எல்லாம் வேலை நேரம் முடிந்த பின்னரும், வேலை செய்து கொண்டிருப்போம். அவன் சரியாக மாலை, 5:30 மணிக்கு கிளம்பி விடுவான்.

குடும்பச் சுமை எதுவும் கிடையாது. டென்னிஸ் விளையாடப் போவான்; எனக்கும் நீச்சலில் ஈடுபாடு உண்டு. ஆனால், இந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தபின், எதற்கும் நேரமில்லாமல் போய் விட்டது.

மேலிடத்தில் ரவிகிரணைப் பற்றி மூன்று முறை புகார் செய்துள்ளேன். இரு முறை, நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளான். ஆனால், இப்போது நடப்பது நேரெதிராக அல்லவா நடக்கிறது.

'நம்ம தலைமை நிர்வாக அதிகாரியின் மகளுக்கு திருமணம் நிச்சயமாச்சுன்னு சொன்னாங்களே... ஒரு வேளை இந்த ரவிகிரண் தான் மாப்பிள்ளையோ...' என்ற சந்தேகத்தை எழுப்பினான் ராகுல்; அப்படியெல்லாம் இல்லை என்பதும் தெரிந்து விட்டது.

ரவிகிரண் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், அவன் கை குலுக்கி, வரவேற்றார், நிர்வாக இயக்குனர்.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 1:54 am

அவன் முகத்தில், கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருக்கும் என எதிர்பார்த்தோம். தான் வேலையை விட்டுப் போன நிறுவனத்துக்கு, மீண்டும் அதிக சம்பளத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோமே எனும் சங்கட உணர்ச்சி, துளியும் இல்லை.

நான் கொடுத்த பூங்கொத்தை வாங்கி பக்கத்தில் வைத்தான். நிர்வாக இயக்குனரை பார்த்து தலையசைத்தான்; 'அப்ப நீங்க கிளம்பலாமே...' என்கிற பாவம், அதில் புலப்பட்டது. சிறிதும் அவமானமோ, கோபமோ படாமல் நிர்வாக இயக்குனர் அங்கிருந்து கிளம்பியது, எங்களுக்கு வியப்பாக இருந்தது.

''மறுபடியும் உன்னை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி,'' என்றபடி கைகுலுக்கினோம். வேறு வழி!
தலையை மட்டும் அசைத்து, புதிய புராஜெக்ட் பற்றி பேச துவங்கினான். எனக்குள் கட்டுக்கடங்காத கோபம்; என்ன ஒரு திமிர்!

இவனுக்கு கீழே வேலை செய்யப் போவதே கசப்பை தந்தது. அன்று மதிய உணவு கூட, சரியாக இறங்கவில்லை. வழக்கத்தை விட, இரு கோப்பை காபிகளை அதிகமாக குடித்தோம்.

சரியாக மாலை, 5:30 மணிக்கு கிளம்பி விட்டான் ரவிகிரண். நாங்களும் கிளம்ப துவங்கினோம். 'கூடுதல் நேரம் உட்கார்ந்து வேலை செய்ததற்கு என்ன அங்கீகாரம் கிடைத்து விட்டது. எதற்காக நேர்மையாகவும், அதிகப்படியான நேரமும் இந்த நிறுவனத்துக்கு உழைக்க வேண்டும்...' மனதுக்குள் பொருமினேன்.
அப்போது, அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த நிர்வாக இயக்குனர், எங்கள் அறைக்குள் எட்டிப் பார்த்து, ''எப்படி இருக்கிறார் உங்க புதிய மேனேஜர்?'' என்று கேட்டார்.

இதை, பிரகாஷால் தாங்க முடியவில்லை. ''பிரமாதமாக இருக்கார்; நாங்க தான் முட்டாள்கள்; அதனால்தானே, விசுவாசம் இல்லாமல் ஓடிப் போன ஒருத்தனுக்கு, எங்கள விட இரு மடங்கு சம்பளம் கொடுத்து, மீண்டும் அழைச்சுட்டு வந்திருக்கீங்க,'' என்றான் எரிச்சலுடன்!

சட்டென நின்ற நிர்வாக இயக்குனர், ''எல்லாரும் என்னோட கேபினுக்கு வாங்க; ரெண்டு நிமிஷம் உங்க கூட பேசணும்,'' என்றார்.

கேபினுக்குள் சென்று அமர்ந்தோம்; காபி வரவழைத்தார்.
''ரவிகிரண் தனித்துவம் மிக்கவன்; அற்புதமான யோசனைகளை கொண்டவன். அவன் நமக்கு கிடைத்திருக்கும் சொத்து. அதை நீங்க உணரணும்,'' என்றார்.

அலட்சியமாக சிரித்தோம். ஒருவருக்கொருவர் கேலியாக பார்த்துக் கொண்டோம். நிர்வாக இயக்குனர் புரிந்து கொண்டார்.

''இங்கே அவன் வேலையில் இருக்கும் போது இல்லாத ஞானோதயம் இப்போது எப்படி உண்டானது என்கிறீர்களா... இந்த வேலையை விட்டு, போட்டி நிறுவனத்தில் அவன் சேருவதாக முடிவு எடுத்து, ராஜினாமாவை என்னிடம் கொடுத்த போது, என்னிடம் அவன் சொன்னது இதுதான்...

'இன்னும் ஒரே வருஷத்துல இந்நிறுவனத்துக்கே மறுபடி வருவேன். நானாக வர மாட்டேன்; நீங்களாகவே என்னை கூப்பிடுவீங்க. அங்கு எனக்கு கிடைக்கும் சம்பளத்தைப் போல, இரு மடங்கு அதிகம் தர தயாராக இருப்பீங்க...' என்றான். எனக்கு அப்போது விளங்கவில்லை. ஆனால், அவன் சொன்னதை நடத்தி காட்டி விட்டான்,'' என்றவர், காபியை பருக துவங்கினார்.

'இதென்ன வேடிக்கை... ஏதோ சவால் விட்டு போயிருக்கான். இவரும் அதற்கு எதிரான சவால் விடாமல், வளைந்து கொடுத்ததை, பெருமையாக பேசுகிறாரே...' என நினைத்தேன்.
நிர்வாக இயக்குனர் தொடர்ந்தார்...

''கீழ் மட்டத்தில் வேலை செய்வதை அவன் விரும்பலை; அவனைப் பொறுத்தவரை, அதிக வேலை செய்வதைவிட, 'க்ரியேடிவாக' சிந்தித்து, அதற்கு தீர்வு காண்பது தான் சிறந்த வழின்னு நினைக்குறான்; நம் போட்டி நிறுவனத்தில் சேர்ந்தவன், இந்த ஒரு வருஷத்துல, பல மேம்பாடுகளை செய்துள்ளான்.

அதனாலே அங்க அவனுக்கு ஏகப்பட்ட பாராட்டு,'' என்றவர், அதோடு நிறுத்திக் கொள்ளாமல், ''நாமெல்லாம் ஆற்றைக் கடக்க, கஷ்டப்பட்டு ஒரு படகை தயார் செய்தோம்; ஆனால், அவனோ, எப்படியும் நதிக்கு சற்று தள்ளியாவது பாலம் இருக்கும் என்பதை அனுமானித்து, அப்பாலத்தை பயன்படுத்திக் கொண்டான். நாமோ, படகை தயாரிப்பதில், அவன் உதவவில்லை என்று, அவனை குறை கூறினோம்,'' என்றார்.

நாங்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றோம். ஒப்புக்கு, 'நாம்' என்று அவர் கூறினாலும், அவர், எங்களை தான் விமர்சிக்கிறார் என்பது புரிந்தது.

சொர்ணலதாவால் தாங்கிக் கொள்ள முடியாமல், ''அவ்வளவு ஐடியாக்காரன் என்றால், நம் நிறுவனத்தில் வேலை செய்த போதே, அந்த புதுமையான ஐடியாக்களை பகிர்ந்து கொண்டிருக்கலாமே,'' என்றாள்.
''தன்னுடைய சீனியர்கள், இங்கே தன் கருத்துகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க மாட்டார்கள் என்கிற எண்ணம், அவனுக்கு இருந்திருக்கலாம்,'' என்றார் எங்களை உற்றுப் பார்த்தபடி!

நாங்கள் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். பின், பிரகாஷ் சீற்றத்துடன், ''போட்டி நிறுவனத்தில் இவனுக்கு அவ்வளவு அங்கீகாரம் என்றால், அங்கேயே இருந்திருக்கலாமே...'' என்றான்.

சில நொடிகள் யோசித்த நிர்வாக இயக்குனர், பின், ''யார் கண்டது... 'இன்னும் ஒரே வருஷத்துல இங்கேயே, மறுபடியும் சேருவேன். ஜெனரல் மேனேஜராக பத்து மடங்கு சம்பளத்தில்...' என்று, அந்த நிறுவனத்தில், சவால் விட்டு வந்திருக்கிறானோ என்னவோ...'' என்றார் புன்னகையுடன்!

அருண் சரண்யா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 14, 2016 3:50 pm

கிடைத்தது போதும் என்று திருப்தி அடையாமல்,
தன்னை உயர்த்திக் கொள்ளுபவரின் கதை...
-
தலைவன்! 3838410834
-
ஒரு உண்மை சம்பவம்
-
காலஞ்சென்ற கிராம நிர்வாக அலுவலரின் மகன்,
கருணை அடிப்படையில் தந்தை பார்த்து வந்த
கிராம நிர்வாக அலுவலர் வேலையைக் கேட்டு
மனு செய்து அலுத்துப் போய்....
-
பின்னர் அரசு தேர்வு எழுதி கிளார்க் வேலையில்
சேருகிறார்...
-
பின்னர் வெவ்வேறு தேர்வு எழுதி உயர்ந்த பதவியில்
அமருகிறார்...
-
தற்போது தமிழில் ஐ ஏ எஸ் தேர்வு எழுதி தேர்வாகி விட்டார்...!
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக