புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யாரின் குறையொன்றுமில்லை என்ற நூல் எட்டுத் தொகுதிகளாக உள்ளன. அவை அனைத்தும் அவரது சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த தொடர்பதிவில் தொடர்ந்து அவரது சொற்பொழிவை எழுத்துவடிவில் வாசிக்கப் போகிறோம்.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
1
யமுனை நதி புண்ணியத்தைத் தேடிக் கொண்டது. கோதாவரியோ களங்கத்தைத் தேடிக் கொண்டது! எப்படி என்கிறீர்களா? 'தூய பெருநீர் யமுனைத் துறைவனை...' என்று பாடிய ஆண்டாள், கண்ணனுடைய அவதார காலத்தில் உபகாரம் பண்ணின யமுனை நதிக்கு நற்சான்றிதழ் தருகிறார். என்ன உபகாரம்...?
வசுதேவர் கண்ணனைத் துரக்கிக் கொண்டு நந்த கோகுலத்துக்குப் போகையில், அவர் கேட்காமலே இடுப்பளவுக்கு வடிந்து வழி விட்டது அந்த யமுனா நதி. புண்ணியத்தை, துய்மையைத் தேடிக் கொண்டது.
ஆனால் கோதாவரி நதியோ களங்கத்தைத் தேடிக் கொண்டது. எப்படி..? ஸ்ரீராமாவதாரத்தின் போது ராவணன் சீதாபிராட்டியை அபகரித்துப் போகிறான். அப்போது பிராட்டி கதறி அழுகிறார்: "ஹே, கோதாவரி! நீயும் பெண், நானும் பெண்...எனக்கு நேரும் துன்பத்தை இப்படி நீ பார்த்துக்கொண்டிருக்கியே...? என் பர்த்தா வந்து என்னைத் தேடுவார். அப்போதாவது சொல்லு, ராவணன் என்னை அபகரித்துப் போனான் என்று தவறாமல் சொல்லு."
ராமன் வந்து தேடியபோது, ''சீதையைக் கனடீர்களா?'' என்று மரம் மட்டையையெல்லாம் கேட்ட போது, கோதாவரி பதிலே சொல்லவில்லையாம். ஒரு அலை கூட அடிக்கலை! ராவணனிடம் இருந்த பயத்தினால் பேசாமல் இருந்து விட்டாள்!
உண்மை தெரிந்தவர்கள், உரிய சமயங்களிலே அதைச் சொல்ல வேண்டும். வெளிப்படுத்த வேண்டும். அப்படி யில்லாமல் 'நமக்கு அதில் நேரடி சம்பந்த மில்லை'ன்னு வாய் பொத்தி இருந்துட்டா களங்கம் வந்துடும். அப்பேர்ப்பட்ட களங்கம்தான் கோதாவரிக்கு ஏற்பட்டது.
திரேதா யுகத்திலே கோதாவரிக்கு ஏற்பட்ட இந்தக் களங்கம் கலியுகத்திலே தீர்ந்து போயிற்று. எப்போது தீர்ந்தது என்று கேட்டால், ஸ்ரீவில்லிபுத்துரிலே ஆண்டாள் பிறந்தப்போ, பெரியாழ்வார் அந்தக் குழந்தைக்கு கோதா (கோதை) என்று பெயர் வைத்தாரே. அப்போது தீர்ந்தது கோதாவரியின் களங்கம்!
இந்தக் கதையைச் சொல்லி அடியேன் ஆரம்பிக்கறதுக்கு ஒரு காரணம் இருக்கு. 'நாம சாம்யம் - பெயர் ஒற்றுமை' என்கிறதன் பெருமை நேயர்களுக்குப் புரிய வேண்டு மில்லையா...? அதனால் சொன்னேன்.
நம் குழந்தைகளுக்கும் தெய்வீகத் திருப்பெயர்களைச் சூட்டுவது இந்த நாம சாம்யம் கருதித்தான். பெயர் சூட்டப்படுபவர்களுக்கும் ராமா, கிருஷ்ணா என்று அந்தப் பெயர்களைச் சொல்லி அழைப்பவர்களுக்கும ஒருசேர நன்மைகள் உண்டாகும் என்றுதான்.
‘பாதேயம் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம்' என்கிறது கருடபுராணம். பகவானின் கல்யாண் குணங்களைச் சொல்லும் திருநாமங்கள் ஒரு மூட்டை' என்று இதற்கு அர்த்தம்!
'மூட்டை என்றால் சுமையல்லவா...?' என்று யோசிக்கக்கூடாது! பூர்வகாலத்தில் ஊர் விட்டு ஊர் செல்பவர்கள் நடந்துதான் போவார்கள். கையில் ஒரு மூட்டையை எடுத்துப் போவார்கள். கட்டுச் சாத மூட்டை! வழியிலே குளக்கரையிருக்கும். மரத்தடியில், குளக் கரையில் மூட்டையைப் பிரித்து வைத்துச் சாப்பிடுவார்கள். களைப்பும் தீரும்; போய்ச் சேர வேண்டிய இடத்துக்கும் போய்ச் சேரலாம்.
வாழ்க்கை என்கிற பயணத்துக்கான கட்டுச்சாத மூட்டைதான் புண்டரீகாட்ச நாம சங்கீர்த்தனாம்ருதம். சிரமத்தை, களைப்பை, அலுப்பைப் போக்கும் மூட்டை பெரியாழ்வார் சொல்கிறார் பாருங்கள்:
'நினைந்திருந்தே சிரமம்
தீர்ந்தேன் நேமி நெடியவனே...'
பகவானை எண்ணிக்கொண்டே நாம சங்கீர்த்தனம் பண்ண வேண்டும். சங்கீர்த்தனம் என்றால் இடைவிடாது எப்பவும் சொல்லிக்கொண்டேயிருப்பது என்று பொருள்.
'இடைவிடாது சொல்கிற அளவுக்கு அப்படி என்ன பெருமையிருக்கிறது...? ஏன் சொல்ல வேண்டும்?' என்று தர்க்கம் பண்ணலாம். நமது ஹிந்து மதத்துக்குப் பரம ப்ரமாணம் வேதம் தான். பக்தி, ப்ரபத்தி, சரணாகதி, கர்ம யோகம், ஞானயோகம் - எல்லாம் வேதத்தில் உள்ளவை தான். பகவானே கூட அந்த வேதத்தைத்தான் மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.
ஏகாதசி தினம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ஈரவாடை சேவை. ஆபரணங்களையெல்லாம் களைந்து விட்டு வெறும் துளசி மாலை அணிவித்திருக்கிறார்கள். ஈரம் படிந்த வஸ்திரம் திருமேனியில் கிடக்கிறது. கற்பூர ஹாரத்தி நடக்கிறது. கொள்ளமாளா இன்ப வெள்ளமாய் ஆச்சர்யமாய் தோற்றமளிக்கிறார் பகவான்.
அப்போது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் பெரிய சண்டையே வந்ததாம். 'நான் சுதந்திரன்' என்று வாதாடியதாம் ஜீவாத்மா. 'இல்லை நீ எனக்குக் கட்டுப்பட்டவன்’ என்றான் பகவான். எதுனால அப்படிச் சொல்கிறாய்...? என்று எதிர்த்துக் கேட்டதாம் ஜீவாத்மா.
இந்தச் சமயத்திலே பகவான், நான் சொல்றேன். அதனால் நீ என் அடிமை என்று பதில் சொல்லல்லை.
'வேத மூல ப்ரமாணாத்' என்று பதில் சொல்கிறார்! அதாவது, வேதத்தின் மூலமான ஓம்காரத்தை ஆராய்ந்தால் உன் எதிர்க் கேள்விக்குப் பதில் கிடைக்கும் என்று சத்தியம் பண்ணுகிறார். ஈர ஆடையிலிருந்து ஜலம் சொட்டச் சொட்ட சத்தியம் பண்ணுகிறார்.
'நான்' என்ற சப்தமே ஒலிக்காமல், அந்தப் பெருமானே வேதத்தில் பதில் தேடு' என்று சொன்னதன் மூலம் வேதத்தின் உயர்வைப் புரிஞ்சுக்கணும். அவனையும் நம்மையும் சேர்த்து வைக்கிறது அந்த வேதம்தான்.
அப்பேர்ப்பட்ட வேதத்திலே. திருநாம வைபவம் பற்றிச் சொல்லியிருக்கிறதா...? திவ்யமாய்ச் சொல்லியிருக்கிறது! நம்மைப் பார்த்து ரொம்ப ஆதரவாக அந்த வேதம் சொல்கிறது:
பகவான் கட்டிப் பொன் போலே...
அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே.
கட்டிப் பொன் மிக உசத்தியானதுதான். ஆனால் அதைத் தலையில் வைச்சுக்க முடியுமா? கழுத்திலே போட்டுக்க முடியுமா? அல்லது முதுகிலே தாங்கிக் கொண்டு நிற்கத்தான் முடியுமா?
ஆனால் பகவானின் திருநாமங்களோ உடனே எடுத்தாளக்கூடிய ஆபரணங்கள். அணிந்தும் அணியச் செய்தும் மகிழலாம்; அழகு பார்க்கலாம்.
பிள்ளைலோகாச்சார்யார் தமிழில் மூன்று அழகான சூத்திரங்கள் மூலம் இந்த வேதப் பொருளை விளக்குகிறார்:
'வாச்ய பிரபாவம் போலன்று வாசக பிரபாவம்'
வாச்யன் - பகவான்; வாசகம் - அவன் நாமம். பகவான் கைவிட்டாலும் விட்டுவிடுவான். ஆனால் அவன் நாமம் கைவிடாது.
'அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும் 'ஹே விஷ்ணு! இதை எற்றுக்கொள்' என்று சொல்லி ஹோமம் பண்ணுகிறோம். அவன் எங்கே வேண்டுமானா லும் இருக்கட்டுமே; அவன் பெயரைச் சொல்லி அளிப்பது அவனுக்குப் போய்ச் சேருகிறது.
"திரெளபதிக்கு ஆபத்திலே ஆடை கரந்தது கோவிந்த நாமமிறே' வஸ்திர அபஹரணம் நடக்கும் போது திரெளபதி கூப்பிடுகிறாள்: 'ஹே கிருஷ்ணா. ரக்ஷமாம் சரணாகதாம்.' என்று. ஆனால் பகவான் அவளை ரக்ஷிக்கவில்லை. இதை அந்த பகவானே சொல்கிறார்:
"ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு குறை உண்டு. கிருஷ்ணாவதாரத்திலே திரெளபதியை உடனடியாக ரக்ஷிக்காதது என் குறை. என்கிறார்.
"திரெளபதிக்கு ஆடை சுரந்ததே. உன்னாலன்றி வேறு யாரால் அது சாத்தியமானதாம்...? என்று கேட்டால் பகவான் சொல்கிறார்:
"நானில்லை; என் கோவிந்த நாமம் அவளை ரக்ஷித்தது.'
அதனால்தான் ஆண்டாள் பாடினாள். 'இப்படியெல்லாம் குறைப்பட்டுக் கொள்கிறாயே, உன்னிடம் கூட குறை என்பது இருக்குமா?' என்று
அர்த்தமாகும்படி திருப்பாவையில்
'குறையொன்றுமில்லாத கோவிந்தா' என்று அவனை அழைத்தாள்.
கோவிந்தா என்கிற நாமம் இருக்கும்போது உனக்குக் குறை இல்லை. உன்னை ஆச்ரயிக்கிறவர்களுக்கும் குறையில்லை...' என்றாள்.
பகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும். அவனை விட நம்மிடம் அதிகப் பரிவுடையது அவன் நாமம்.
'எல்லாம் சரிதான். இப்படி இடைவிடாது கோவிந்தா என்று சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டிருந்தால் உலகக் கடமைகளைச் செய்ய வேண்டாமா...? அவனுடைய பல நாமங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளனவே. வாயிலே நுழைய வேண்டாமா? இப்படி நியாயமான சந்தேகங்கள் பல பேருக்கு வரத்தான் செய்யும்.
அவற்றுக்கான பதில்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தொடரும்....
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
2
அதிக சம்ஸ்கிருத ஞானமில்லாத ஒருத்தர். ரொம்பவும் பக்தியோடு தினமும் 108 தடவை சொல்லி வந்தார்.
"பத்மநாபோ, மரப் பிரபு.”
'பத்மநாபோ அமரப் பிரபு! என்று பதம் பிரித்துச் சொல்றதுதான் சரி. அமரர்களின் (தேவர்களின்) பிரபுவே! அரசனே! என்று அதற்கு அர்த்தம்.
ஆனால் 'மரப் பிரபு!'ன்னு தப்பாகப் பதம் பிரித்தவர் மரங்களுக்கு அரசனே என்று அர்த்தம் பண்ணிக் கொண்டார்! அந்த அர்த்தத்துக்கு ஏற்ப, ஊர்க் கோடி யிலிருந்த அரச மரத்தைச் சுற்றி வந்து 'பத்மநாபோ மரப் பிரபு! பத்மநாபோ மரப் பிரபு'ன்னு தினமும் 108 பிரதட்சணம் பண்ணினார்.
அந்த வழியே போன ஒரு சம்ஸ்கிருத பண்டிதர் இதைப் பார்த்து நடுங்கிப் போயிட்டார்.
தவறாக உச்சரித்தவரை நிறுத்தினார். திருத்தினார். "நீர் ரொம்ப உசந்த காரியம்தான் பண்றீர். ஆனால் வாக்கு சரியில்லை. "பத்மனாபோ அமரப்பிரபு! அப்படின்னு சொல்லணும்." என்று கூறி அர்த்தத்தையும் விளக்கினார்.
தவறாக உச்சரித்தவர் ரொம்பவும் வேதனைப்பட்டு, "அடாடா! தெரியாமல் சொல்லிவிட்டேனே. எனக்குப் பாவம் சம்பவிக்குமா?'' என்று கவலையுடன் கேட்டார்.
“அதெல்லாம் சம்பவிக்காது. தெரியாமல் சொன்னதற்கு தோஷமில்லை; இனிமேல் அப்படிச் சொல்லாமல் சரியாகச் சொல்லு." என்றார் திருத்தினவர்.
மறுநாளிலிருந்து திருத்தி உச்சரிக்க ஆரம்பித்தார் முதலாமவர். மரப் பிரபு அல்ல என்பதால் மரத்தைப் பிர தட்சணம் பண்ணுவதையும் நிறுத்திவிட்டார். வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடியே 'பத்மநாபோ அமரப் பிரபு! என்று சொல்லி வந்தார்.
அன்று இரவு, திருத்திய வித்வானின் சொப்பனத்தில் பகவான் வந்தார்.
"உம்மை யாரு சமஸ்கிருதம் படிக்கச் சொன்னா..? அப்படியே படிச்சதுதான் படிச்சீர். அந்த பக்தரை யாரு திருத்தச் சொன்னா..? நீர் திருத்திய பிறகு அவர் மரத்தைப் பிரதட்சணம் செய்யறதை நிறுத்திட்டார். அப்படியானால் நான் மரங்களுக்குப் பிரபு இல்லையா? உமக்கு விஷ்ணு புராணம் தெரியாதா...?”
ஜோதீம்ஷி விஷ்ணு:
புவனானி விஷ்ணு:
வனானி விஷ்ணு?:
என்று பராசர மஹரிஷி சொன்னது தெரியாதா? (ஜோதீம்ஷி-ஒளி, புவனானி-உலகங்கள்; வனானி-காடுகள்) நீர் திருத்திச் சொன்னதால் 108 பிரதட்சணங்கள் செய்யறதை அவர் நிறுத்தினார். திரும்பவும் போய் அவரிடத்திலே சொல்லும்.. மரப் பிரபு: என்றே சொல்லச் சொல்லு.” என்று கோபித்துக் கொண்டார் பகவான்.
குழந்தை சரியாக உச்சரிக்காவிட்டாலும் மகிழ்ச்சியோடு நாம் கேட்கவில்லையா...? அது போல்தான் எல்லையற்ற கருணையுடைய பகவானும் நம்மைக் குழந்தைகளாய்ப் பாவித்துக் கேட்கிறான்.
ஒருவருக்கு 'க்ரு என்று சொல்ல வராது. 'க' வரும் இடத்தில் எல்லாம் 'த' என்று உச்சரிப்பார். அவருக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்க முயன்றார் ஒரு வித்வான்.
"ஸ்ரீ கிருஷ்ணாய நம:'' என்பதற்கு பதில் “ஸ்ரீ திருஷ்ணாய நம:'' என்று தவறாகவே உச்சரித்தார் மாணவர். ''உமக்கு என்னால் சொல்லித் தர முடியாது...'' என்று சலித்துக் கொண்டார் வித்வான்.
அங்கே இன்னொரு வித்வான் வந்தார். "அவர் ஸ்ரீ த்ருஷ்ணயே என்றே சொல்லட்டும். பாதகமில்லை...” என்றார் அந்த இரண்டாவது வித்வான்.
"ஏன்.?”
“ஸ்ரீ திருஷ்ணாய என்றால், ஸ்ரீயினிடத்திலே திருஷ்ணை உடையவன் என்று அர்த்தம்... (ஸ்ரீ-மகாலஷ்மி; திருஷ்ணை-அன்பு) அவர் சொல்வதும் பகவானையே குறிக்கும்..” என்றார்.
இந்தக் கதைகளைச் சொல்வதாலே, மந்திரங்களை, பகவான் நாமத்தைத் தப்பும் தவறுமாகச் சொல்லலாம் என்று அர்த்தம் இல்லை. அறியாமையாலும் இயலாமையா லும் அவ்வாறு தவறாகச் சொன்னாலும், மனத்திலே அவன் நினைவு ஆத்மார்த்தமா இருந்தால் அதை அவன் அப்படியே ஏற்பான் என்கிறதுக்காகச் சொன்னது.
அடியேன் திருப்பதி போயிருந்த சமயம். சுவாமி புஷ் கரணியில் ஸ்நானம் பண்ணப் போனேன். அப்போது அங்கே தெனாலியிலிருந்து வந்த ஒரு குடும்பம், முடி கொடுத்து விட்டு ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தது.
அந்தக் குடும்பத் தலைவர் முங்கி எழுந்து, தலைக்கு மேல் கைகூப்பி "கோஹிந்தா! கோஹிந்தா...!" என்று பெருமானை அழைத்துக் கொண்டிருந்தார்.
''கோஹிந்தா இல்லை; கோவிந்தான்னு சொல்லணும்..” என்று அவரைத் திருத்த அடியேன் எழுந்தேன். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் என்னை ஸ்தம்பித்துப் போகப் பண்ணின.
"ஏழுமலையானே! ஒவ்வொரு வருஷமும் இதே நாளில் உனக்கு வந்து முடிகொடுத்து விட்டு உன்னை சேவிச்சுட்டுப் போகிறேன். போன வருஷம் போலவே இந்த வருஷமும் நான் சந்தோஷமா இருக்க அனுக்கிரஹம் பண்ணு.” என்று உரக்க பிரார்த்தனை செய்தார் அந்த பக்தர்.
'அவரைத் திருத்தணும்' என்று எழுந்தவன் உடன் அப்படியே உட்கார்ந்து விட்டேன். போன வருஷமும் அந்த பக்தர் கோஹிந்தா கோஹிந்தான்னு தானே பகவானைக் கூப்பிட்டிருப்பார். அதற்காக பகவான் அவருக்கு அனுக்கிரஹம் பண்ணாமல் விட்டு விடவில்லையே... 'கோஹிந்தா'ன்னு சொன்னதற்கே ஒரு வருஷம் ஆனந்தமாக அவர் இருந்திருக்கிறாரே! இந்த வருஷமும் போன வருஷத்தைப் போன்ற சந்தோஷத்தைத் தானே பக்தர் கேட்கிறார்...!
இதை உணர்ந்ததும், அவரைத் திருத்தணும் என்கிற என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். எம்பெருமானுக்கு நம்மிடத்திலே என்ன வாத்ஸல்யம்! (கருணை) என்று சிலிர்ப்பு வந்தது.
பாண்டித்யம் இல்லாவிட்டாலும் பகவான் நாமத்தைச் சொல்லலாம். ஆனால் அதை இடைவிடாது சங்கீர்த்தனம் பண்ணனும்னு போன வாரம் சொன்னது எப்படி சாத்தியப்படும்...?
இதற்குத்தான் நாம சங்கீர்த்தனத்தை நமக்கு வாழ்க்கை முறையாகவே வைத்திருக்கிறது.
பெருமாளை எழுந்தருளப் பண்ணுகிறவர்களுக்குத் தோளிலே காய்த்துப் போயிருக்கும். அதுபோல நாம சங்கீர்த்தனத்தைப் பழக்கமாகப் பண்ணிக் கொள்ளணும். 'நாவிலேயே தழும்பு ஏற்பட்டுப்போகும் அளவுக்கு திரு நாமத்தை உச்சாடனம் பண்ணனும்; எத்தனை தடவைன்னு கேட்கக் கூடாது' என்கிறார், திருமங்கையாழ்வார்.
தழும்பு எப்படி உண்டாகும்? மீண்டும் மீண்டும் சொல்வதால். அதற்குத்தான் நியமம் ஏற்பட்டிருக்கிறது.
எழுந்திருக்கும் போது - துயிலெழும்போது, ஹரிர் ஹரி, ஹரிர் ஹரி: என்று ஏழு தடவை சொல்ல வேண்டும். உரக்க, பெரிசா சொல்லணுமா? மனசுக்குள்ளே சொன்னால் போதாதா? மனசுக்குள்ளே சொன்னால் பலன் நமக்கு மட்டும். பெரிசா சொன்னா அக்கம் பக்கத்திலே இருப்போரும் அதைக் கேட்டபடி எழுந்திருப்பார்கள். பரோபகரமாகவும் இருக்கும்.
வெளியிலே கிளம்பிப் போகும்போது 'கேசவா' என்று உச்சரிக்கணும்.
திருவனந்தபுரத்து அனந்த பத்மநாபசுவாமி குறித்து நம்மாழ்வார் பாடுகிறார்:
'கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன...'
'கேசவா' என்று சொன்னால் இடர்களெல்லாம் கெடுமாம். அதனால்தான் ஒரு காரியமாகப் புறப்படும் போது 'கேசவா' என்று அழைப்பது.
ஆண்டாள் இந்த அனுஷ்டானத்தைக் கடைப்பிடித் திருக்கிறார்.
''கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்...''
என்கிறது திருப்பாவை. ''கேசவா கேசவா என்று பாடிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம். நீ அதைக் கேட்டும் கிடந்துறங்குகிறாயே...'' என்று துயிலெழுப்புகிறார்.
அடுத்தது உணவு கொள்வதற்கு முன்னால் 'கோவிந்தா' என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும். கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தவனை இப்படி அழைப்பதன் மூலம் நித்ய அன்னம் கிடைக்க உத்தரவாதம் செய்து கொள்கிறோம்.
சிரமம் இல்லை, கஷ்டமான நியமமில்லை. ஹரீ, கேசவா, கோவிந்தா, மாதவா என்று எளிய நாமங்களை நாம் தினமும் செய்கிற காரியங்களோடு சேர்த்து விட்டிருக்கறதாலே எந்தவிதக் கூடுதல் முயற்சியு மில்லாமலே நாம சங்கீர்த்தனம் நடைபெற்று விடுகிறது.
ஆனால் சொல்கிற அந்த நேரத்திலே மனசு அளவு கடந்த பக்தியிலே நிரம்பியிருக்கணும். ''சொல்லிப் பார்ப்போமே, பலனிருக்கிறதாவென்று.” அப்படின்னு பரீட்சார்த்தமாகச் சொல்லக்கூடாது.
காரணம், அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை: 'சர்வோத்தமஸ்ய கிருபையா...' சர்வ உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மை உச்சரிக்க வைப்பதும் அவனுடைய கிருபைதான். கருணைதான்!
முதலிலே இந்த நித்ய காரியங்களுடனான நாம உச்சாடனத்தைப் பழகிக் கொண்டு விட்டால் மனசு மேலும் மேலும் அந்த சத் அனுபவத்தைக் கேட்கும். அந்த மனசுக்கு தெய்வானுபவம் தரக்கூடியதாய் அமையப் பெற்றது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
//'அவரைத் திருத்தணும்' என்று எழுந்தவன் உடன் அப்படியே உட்கார்ந்து விட்டேன். போன வருஷமும் அந்த பக்தர் கோஹிந்தா கோஹிந்தான்னு தானே பகவானைக் கூப்பிட்டிருப்பார். அதற்காக பகவான் அவருக்கு அனுக்கிரஹம் பண்ணாமல் விட்டு விடவில்லையே... 'கோஹிந்தா'ன்னு சொன்னதற்கே ஒரு வருஷம் ஆனந்தமாக அவர் இருந்திருக்கிறாரே! இந்த வருஷமும் போன வருஷத்தைப் போன்ற சந்தோஷத்தைத் தானே பக்தர் கேட்கிறார்...!
இதை உணர்ந்ததும், அவரைத் திருத்தணும் என்கிற என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். எம்பெருமானுக்கு நம்மிடத்திலே என்ன வாத்ஸல்யம்! (கருணை) என்று சிலிர்ப்பு வந்தது//
எனக்கு மிகவும் பிடித்தது .
அருமையான முயற்சி தமிழ்நேசன் . வாழ்த்துக்கள் . கண்டிப்பாக வாசிக்கிறோம் .
வி பொ பா .

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மிக அருமையான முயற்சி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
ஸ்ரீனிவாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205638தமிழ்நேசன்1981 wrote:ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யாரின் குறையொன்றுமில்லை என்ற நூல் எட்டுத் தொகுதிகளாக உள்ளன. அவை அனைத்தும் அவரது சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த தொடர்பதிவில் தொடர்ந்து அவரது சொற்பொழிவை எழுத்துவடிவில் வாசிக்கப் போகிறோம்.
மிக்க நன்றி நேசன்... தொடருங்கள் ..........நான் எங்க அப்பாவின் தொகுப்பில் இருந்து கொஞ்சம் படித்து இருக்கேன் ............முக்கூர் மிகப்பெரிய மஹான் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முடிந்ததும் PDF ஆக தருகிறீர்களா நேசன், அல்லது நான் சேமித்துக் கொள்ளட்டுமா? .............கொஞ்சம் சொல்லுங்களேன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205962krishnaamma wrote:முடிந்ததும் PDF ஆக தருகிறீர்களா நேசன், அல்லது நான் சேமித்துக் கொள்ளட்டுமா? .............கொஞ்சம் சொல்லுங்களேன்
முடிந்து உடன் பிடிஎப் செய்கிறேன் அம்மா. சேமிக்க வேண்டாம்.
மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளது. ஒவ்வொரு பாகம் முடிந்த உடன் அதை பிடிஎப் ஆக செய்து தருகிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவரின் கதாகாலட்ஷேபங்கள் அனேக வருடங்கள் கேட்டிருக்கேன்; அப்படியே வளர்ந்திருக்கேன் நேசன், அவருக்குப் பிறகு வேறு யார் சொல்வதும் என் மனதுக்கு பிடிக்கலை..............அப்படியொரு பாண்டித்தியம், வர்ஷமாய் பொழிவார்............அவர் சொன்னது இன்றும் என் மனதில் இருக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்....நான் இவர் கதைகள் கேட்டது 70 களில் ...........85 இல் கல்யாணம் ஆனதும் சமாஜம் போவது விட்டுப்போச்சு, நாங்க ஹைதராபாத் போய்விட்டோம்......இப்போது போல whatus up இல்லையே அப்போ ...........அதனால் கதை கேட்பது விட்டுப்போச்சு.........கேட்டாலும் பிடிக்கலை
.
.
.
.
.
அப்புறம் இப்போ சிலவருடங்களாகத் தான் வேளுக்குடி கிருஷ்ணன் மாமா கதை சொல்லும் பாங்கு பிடித்து கேட்கிறேன்
.
.
.
.
.
அப்புறம் இப்போ சிலவருடங்களாகத் தான் வேளுக்குடி கிருஷ்ணன் மாமா கதை சொல்லும் பாங்கு பிடித்து கேட்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205963தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205962krishnaamma wrote:முடிந்ததும் PDF ஆக தருகிறீர்களா நேசன், அல்லது நான் சேமித்துக் கொள்ளட்டுமா? .............கொஞ்சம் சொல்லுங்களேன்
முடிந்து உடன் பிடிஎப் செய்கிறேன் அம்மா. சேமிக்க வேண்டாம்.
மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளது. ஒவ்வொரு பாகம் முடிந்த உடன் அதை பிடிஎப் ஆக செய்து தருகிறேன்.
மிக்க நன்றி நேசன் ..............
.
.
உங்களுக்கு ரொம்ப புண்ணியம் , ஷேமமாய் இருப்பீர்கள் !....என் மனமார்ந்த வாழ்த்துகள் ! ........... GOD BLESS YOU !
.
.
.
வி.பொ.பா.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2