ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?!

2 posters

Go down

என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Empty என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?!

Post by Powenraj Fri May 27, 2016 6:58 pm

என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! P32a

கொடுமை:

‘என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவில் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்துசெல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக சொல்ல முடியும்’ என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா. அவர் இன்று உயிரோடிருந்திருந்தால், ‘ஒரு பெண், தனியாக பேருந்தில் எந்தவித உரசல்களும் இல்லாமல் என்று பயணம் செய்ய முடிகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக சொல்ல முடியும்’ என மாற்றிச் சொல்லியிருப்பார்.

ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் பேருந்தில் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண். இன்னும் ஐந்து நிமிடங்களில் இறங்கிவிடுவாள். அதனால் அதற்கு முன்பே அவளைப் பற்றி சொல்ல வேண்டும். திருமணமாகி கணவர் வெளிநாட்டுக்கு பிழைப்புக்காக சென்றுவிட, கோவையில் பெண்களுக்கான  ஒரு சுமாரான விடுதியில் தங்கி, ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கிறாள். ஈரோட்டிலிருந்து கோவைக்கு குடும்பத்தைப் பார்க்கவேண்டி வாரம் ஒரு முறை பயணிக் கிறாள். மூன்று மணிநேர பேருந்துப் பயணம்.

கோவைக்குப் பக்கத்து மாவட்டங்கள் எல்லோமே சனிக்கிழமைகளில் தூரமாகிவிடும் என்பார்கள். வார இறுதியில் சொந்த ஊருக்குக் கிளம்புவோரின் எண்ணிக்கைதான் காரணம். காத்திருந்த பஸ் வந்தபின் கூட்டம் கட்டி ஏறும். கால் மாற்றி கால் மாற்றி தவம்செய்வதைப்போல கிடைத்த இடத்தில் மூன்று மணி நேரத்தை நின்றே கடத்துவது என்பது, நிச்சயம் போன ஜென்மத்தில் வாங்கிவந்த ஏதோ ஒரு சாபமாகத்தான் இருக்க முடியும். ஒருவேளை உட்கார ஸீட் கிடைத்தால் அருகில் ஆண் - பெண் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. கால் வலி ஒவ்வொரு முறையும் நரக வேதனையைத் தருவதால் ஸீட் கிடைத்தால் உட்கார்ந்துவிடுவாள். சில நேரங்களில் நல்ல மனிதர்கள் அமைந்துவிடுவார்கள். ஆனால், பலநேரங்களில் மிக மோசமான பயண அனுபவமாக இருக்கும்.

அருகில், பின் இருக்கையில் என அமர்ந்திருக்கும் ஆண் கள் இடுப்பைத் தொடுவது, காலை வருடுவது என பாலியல் சீண்டல்களை ஆரம்பிப்பார்கள். முறைப்பு மட்டும் இவளின் பதிலாக இருக்கும். சில கேடுகெட்ட ஜென்மங்கள் தொடர்ந்து சில்மிஷங்களைத் தொடரவும் செய்யும். இதுபோன்ற கஷ்டங்களை அவளுடைய கடந்த மூன்று வருட பயண வாழ்க்கையில் நிறையவே பட்டிருக்கிறாள். ஆரம்பத்தில் தேளின் கொடுக்கைப்போல அவளைக் கொட்டிய அந்த வருடல்கள், போகப்போக கம்பளிப்பூச்சியின் ஊர்தல் போலத்தான் தெரிகிறது.

முதல்முறை கோபப்பட்டு பஸ்ஸில் கூச்சல் போட்டிருக்கிறாள். தனக்கு ஆதரவாக யாரேனும் பேச வருவார்கள் என்ற நினைப்பில் ஒருமுறை பஸ்ஸில் சண்டை போட்டதும், அதற்கான மோசமான எதிர்வினையும் ஞாபகத்தில் வந்து போனது. ‘விடும்மா... அதான் தெரியாமப் பட்ருச்சுனு சொல்றார்ல. இப்ப என்ன கற்பா பறிபோச்சு, இப்படி கூச்சல் போடுற?’ என்ற ஒரு பெருசின் குரலும், ‘சௌகரியம் இல்லைனா கார் வாடகைக்கு எடுத்துப் போகவேண்டியதுதானே... எதுக்கு கவருமென்ட் பஸ்ல வர்றீங்க? உங்க ஒரு ஆளுக்கோசரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விட முடியாது’ என்ற கண்டக்டரின் கேலி வார்த்தைகளும் அவளை அதன்பிறகு கையாலாகாதவளாகவே ஆக்கிவிட்டன.

ஒருமுறை தன்னைப் பாலியல் தொந்தரவு செய்தவனைப் பார்த்து, ‘கண்டர்கிட்ட சொல்லவா?’ என மிரட்ட, ‘போடி, கண்டக்டர் உன் புருஷன் பாரு... அப்படியே வந்து என் தலையை சீவிடுவான்’ எனக் கேலி செய்ததையும், அதை அந்தப் பேருந்தில் யாரும் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்ததையும் நினைத்துப் பார்த்து ரொம்பவே மனம் வெதும்பிப்போனாள். நாளடைவில் இந்தத் தீண்டல்களுக்கு காந்திய வழியில் எதிர்வினையாற்ற பழகிவிட்டாள். அதாவது, ஒரு முறைப்புடன் தள்ளி உட்கார்வது மட்டுமே இப்போதைய தீர்வாக வைத்திருக்கிறாள்.

சில நேரங்களில் குடிகாரர்களின் பக்கத்தில் உட்காரும் சூழலில், உள்ளுக்குள் கனன்ற நெருப்பை விழுங்கிக்கொண்டு அப்படியே எழுந்து எவ்வளவு நேரம் என்றாலும் மூட்டெலும்பு தேய நின்றபடி பயணம் செய்யப் பழகிக்கொண்டுவிட்டாள். சரி, நின்றாலாவது சும்மா இருப்பார்களா? `இடிஅமீன்கள்', `தடவல் தாண்டவராயன்கள்' நிறைய பேர் மூச்சுக்காற்றை கழுத்துவரை பரவவிட்டு நெருங்கி நின்று மரண அவஸ்தையைக் கொடுப்பார்கள். எல்லாவிதமான சீண்டல்களுக்கும் முறைப்பையே பதிலாக வைத்து மனதுக்குள் புழுங்கியபடி இடம் மாற்றி கால் மாற்றி நிற்க எத்தனிப்பாள்.

இதுபோன்ற பாலியல் ரீதியான அத்துமீறல் களை பேருந்தில் அச்சமின்றி நிகழ்த்தும் கேடுகெட்ட ஜென்மங்கள் பல. இந்தப் பெண்ணைப்போல எத்தனையோ பெண்கள் தங்களைச் சுருக்கிக்கொண்டு, கண்டும் காணாமல் மன்னித்து விடுவதால்தான் இதையே சலுகையாக எடுத்துக்கொள்கின்றன அந்த மிருகங்கள்.

See also: பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும் பாதிக்கப்பட்ட பெண்!

ரயில்களில் இருப்பதுபோல பாலியல் தொந்தரவுகளை சந்திக்கும் பெண்களுக்கான புகார் சேவை எதுவும் பேருந்து பயணத்தின்போது ஒரு பெண்ணுக்குக் கிடைப்பது இல்லை. ‘தகுந்த சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்’, ‘குடித்திருந்தாலோ டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ பேருந்திலிருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் இறக்கிவிடப்படுவீர்’ என எழுதப்பட்டிருப்ப தோடு சரி. பயணத்தில் திருக்குறளைவிட, ஒரு பெண்ணின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா?

நாமறிந்த வகையில் தமிழ்நாட்டில் ஓடும் எந்தப் பேருந்திலும் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கான புகார் எண்களோ அதற்கான விழிப்பு உணர்வு எச்சரிக்கை வாசகங்களோ இல்லை. அவ்வளவு ஏன், அதைப்பற்றி பேசக்கூட இங்கு யாருக்கும் அக்கறையும் நேரமும் இல்லை. யாரோ சில நடத்துநர்கள் இதுபோன்ற பாலியல் சீண்டல்களைக் கண்டிக்கிறார்கள் என்பது மட்டும்தான் ஆறுதல். அப்படி என்றால் பேருந்துப் பயணத்தின்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்கள் எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டுமா?

இது சமூகத்தின் அசிங்கம்!

‘‘நடவடிக்கை எடுக்கப்படும்!’’

காவல்துறை உயர் அதிகாரியான சிபிசக்ரவர்த்தியின் கவனத்துக்கு, இந்த பேருந்துப் பயண பாலியல் அத்துமீறல்களைக் கொண்டுசென்றோம்.  

‘‘பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகத் தீவிரமான பிரச்னை இது. பெண்களுக்கான பாதுகாப்பை காவல்துறை எப்போதும் உறுதி செய்யும். ஏற்கெனவே பெண்களுக்கான புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து துரித வேகத்தில் செயல்பட்டு வருகிறோம். இனிமேல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை தனி புகார் எண் செயல்படுத்தி அதற்கான தனிப்படை அமைக்கும். பேட்ரோல் வாக னங்கள் மூலம் புகார் பெறப்பட்ட அடுத்த சில மணித்துளிகளில் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்பு உணர்வு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். எல்லா மாவட்டங்களிலும் இதை செயல்படுத்த, காவல்துறையின் மேலிடத்துக்கும் பரிந்துரை செய்கிறேன்.

இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை எடுக்கும் வகையில், இதை எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தமைக்கு அவள் விகடனுக்கு நன்றி!’’ என்றார் சிபிசக்ரவர்த்தி.

பயணங்களின்போது பெண்கள் சந்திக்கும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும், நம் கோபத்தையும் சமூக வலைதளங்களில் #AriseAgainstAbuse என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளாக பதிவுசெய்யலாமே ஃப்ரெண்ட்ஸ்!

நன்றி- அவள் விகடன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Empty Re: என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?!

Post by krishnaamma Sat May 28, 2016 1:47 am

ரொம்ப அருமையான பகிர்வு ராஜ்..........மிக்க நன்றி !...........நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
படிக்கவே ரொம்ப கஷ்டமாய் இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum