ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

4 posters

Go down

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு  Empty பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Post by ayyasamy ram Thu May 26, 2016 11:22 pm



பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி
மாணவர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என தாக்கல்
செய்யப்பட்ட மனுவுக்கு, ஜூன் 15-க்குள் அரசின் கருத்தை
தெரிவிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த
ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
இந்தியாவில் பல்வேறு மதம், சாதிய அமைப்புகள் உள்ளன.

இதன் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்
பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், சகோதரத்துவம்,
சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கையின் அடிப்படையில்
சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறது.

தமிழகம் சமூக நீதி, ஒற்றுமையை நிலைநாட்டும் முன்னோடி
மாநிலமாக திகழ்கிறது. கடந்த 1973-ஆம் ஆண்டு, ஜூலை  
2-ஆம் தேதி தமிழக கல்வித் துறை ஒரு அரசாணையை பிறப்பித்தது.

இதில், ‘தனது சாதி, மதம் போன்ற விவரங்களை பள்ளிச்
சான்றிதழில், பள்ளி மாற்றுச் சான்றிதழில் ஆகியவற்றில்
குறிப்பிட விரும்பவில்லை எனில், அதை கல்வி நிறுவனங்கள்,
பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’ என்று அரசாணையில்
குறிப்பிடப்பட்டு உள்ளது.

முக்கியத்துவம் பெற்ற இந்த அரசாணையை பற்றி, பொது மக்கள்
மத்தியில் விளம்பரம் செய்யவில்லை. ஆகையால், பெரும்பாலான
மக்களுக்கு அரசாணை குறித்து தெரியவில்லை.

இந்த நிலையில், 1973-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை
வலியுறுத்தி, மீண்டும் 2000-ஆம் ஆண்டு ஜூலை 31- இல் மற்றும்
ஒரு அரசாணையை தமிழக கல்வித் துறை வெளியிட்டது.
இது குறித்தும், பெரியளவில் மக்களிடம் முன்னெடுத்து
செல்லவில்லை.

ஆகையால், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழில்(டி.சி.யில்) கண்டிப்பாக சாதி,
மதத்தை குறிப்பிட  வேண்டும் என்று மாணவர்களையும்,
அவர்களது பெற்றோர்களையும் நிர்பந்தம் செய்கின்றனர்.

சாதி, மதம் போன்றவற்றை கைவிட வேண்டும் என்று
நினைக்கும் மக்கள் விரக்திக்கு ஆளாகின்றனர்.

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்க மாணவர்களை
நிர்பந்தம் செய்யக்கூடாது என்று, கடந்த 5-ஆம் தேதி உயர்
கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர்
உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனிப்பினேன்.
இதற்கு, இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை.

இட ஒதுக்கீடு சலுகைகளை பெற விரும்பும் நபர்களை தவிர,
பிற மாணவர்களை பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி, மத
விவரங்களை தெரிவிக்க வேண்டும்  என்று வற்புறுத்த கூடாது
என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில்
கோரினார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன்
ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர்
சத்திய சந்திரன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, மனுவுக்கு தமிழக அரசின் கருத்தைக் கேட்டு
தெரிவிக்கும்படி அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு
நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட
விசாரணையை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
---------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Post by விமந்தனி Fri May 27, 2016 12:02 am

சரி டிசியில் எழுதவில்லை...... அப்ப எப்படி வேலைக்கு மனு போடுவதாம்? ஜனங்கள் முடிவு செய்தால் போதாது. அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஜாதி, மதம் என்று இருக்கும் ஒரு கேள்வியையே எல்லா மனுக்களிலும் நீக்கம் செய்யவேண்டும். கலப்புத்திருமணங்களினாலோ அல்லது மக்கள் இப்படி நந்து கொள்ளவதினாலோ எல்லாம் இது ஒழிந்து விடாது.


பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Post by krishnaamma Fri May 27, 2016 12:11 am

விமந்தனி wrote:சரி டிசியில் எழுதவில்லை...... அப்ப எப்படி வேலைக்கு மனு போடுவதாம்? ஜனங்கள் முடிவு செய்தால் போதாது. அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஜாதி, மதம் என்று இருக்கும் ஒரு கேள்வியையே எல்லா மனுக்களிலும் நீக்கம் செய்யவேண்டும். கலப்புத்திருமணங்களினாலோ அல்லது மக்கள் இப்படி நந்து கொள்ளவதினாலோ எல்லாம் இது ஒழிந்து விடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1208730

ம்.. சரியா சொன்னீங்க, 'ஜாதி' எதிலுமே இருக்கக்கூடாது தான் ............இப்படி கொஞ்சமாய் சொன்னால் போறாது...மொத்தமாய் ஒழியாது .............முன்பு 70 களில் சொன்னார்கள் கலப்புத் திருமணங்களை ஆதரியுங்கள் ஜாதி ஒழிந்து விடும் என்று........... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு இன்று வரை ஒன்றும் முடியலை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Post by சிவனாசான் Fri May 27, 2016 5:48 am

இட ஒதுக்கீடு என்ற சலுகையை ஒழித்தாலே இவை எல்லாம் தானாகவே மறைந்து விடும். அரசாங்கமே ஜாதிக்கு ஊக்கம் \ சலுகை அளிப்பது வேதனைக்குறியது அய்யா>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு  Empty Re: பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை தெரிவிக்க நிர்பந்திக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹெச் 1பி பணியாளர்களை கைது செய்யக் கூடாது: அமெரிக்காவில் வழக்கு
» சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு
» கொரோனா பரவல் காரணமாக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை
» மிருகங்களுக்கு கணக்கெடுப்பு நடத்தப்படும்போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் கூடாது : லாலு
» பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum