ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.

Go down

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். Empty அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.

Post by ayyasamy ram Wed 25 May 2016 - 10:34

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். StEiquIgR3m8eCeh6hx7+actingLife_SECVPF
-
‘‘நான் நடிகையாக காரணமாக இருந்தவர்
பிரியங்கா சோப்ரா. எனக்கு சினிமாவில்
நடிக்கும் ஆசையெல்லாம் இருந்ததில்லை.

ஆனால் என்னை தேடி வந்த வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள நினைத்தேன். அதன் விளைவு, நடிகையாகி
விட்டேன்’’ என்று மனதில் இருப்பதை பட்டென்று
சொல்கிறார், பிரபல இந்தி நடிகை பரினிதி சோப்ரா.

அவரிடம் சில கேள்விகள்:

நீங்கள் சினிமாவிற்கு வர பிரியங்கா சோப்ரா எப்படி
உதவினார்?

-
“நான் லண்டனில் ஒரு வங்கியில் பணிபுரிந்து
கொண்டிருந்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு
மும்பை வந்து உறவினரான பிரியங்கா சோப்ராவுடன்
தங்கியிருந்தேன்.

மும்பையில் வேலை தேடினேன். பிரியங்கா அப்போது
என்னை தயாரிப்பாளர் யஷ்ராஜூவிடம் அறிமுகப்
படுத்தி வைத்தார். நான் வேலை தேடுவதாய் அறிந்த
அவர், அவரது நிறுவனத்தில் என்னை மக்கள் தொடர்பு
அதிகாரியாக நியமித்தார்.

நான் அந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தபோது
ஒருநாள், என்னை சந்தித்த மனிஷா சர்மா தான்
படமெடுக்கப்போவதாகவும் அதில் நடிக்க விருப்பமா
என்றும் கேட்டார்.

நான் தயங்கி நிற்க, பிரியங்கா என்னை உற்சாகப்படுத்தி,
‘சரி என்று கூறி நீ ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு போ..!
நீ தேர்வானால் நடிப்பதா? வேண்டாமா? என்று முடிவு
செய்யலாம்’ என்று அனுப்பிவைத்தார்.

முதல் முயற்சியிலேயே தேர்வான நான் முழுநேர
நடிகையாகிவிட்டேன்’’
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83929
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். Empty Re: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.

Post by ayyasamy ram Wed 25 May 2016 - 10:35

முதலில் உங்களுக்கு நடிக்க தயக்கம் இருந்ததற்கு
என்ன காரணம்?


‘‘எனக்கு அடர்த்தியான மேக்கப் போட்டு கொள்ள
எரிச்சலாக இருக்கும். இதுவரை நான் அப்படி மேக்கப்
போட்டதேயில்லை. அதுதான் என் தயக்கத்திற்கு
முதல் காரணம்.

ஆனால் இப்போது சினிமா என்னை தன்வசப்படுத்தி
விட்டது. சினிமா இழுத்த இழுப்புக்கெல்லாம் நான்
ஆடிக்கொண்டிருக்கிறேன்’’

உங்கள் உடல் எடை ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறதே
அதற்கு என்ன காரணம்?


‘‘நான் நடிக்கவந்த பின்புதான் என் உடல் எடை
கூடிவிட்டது. அதனால் ரொம்ப தவித்துப்போனேன்.
எனக்குப் பிடித்த உடைகள் எதையும் அணிய முடிய
வில்லை. எல்லோரும் என்னை பார்த்து கேலி
செய்ததால் கடுமையான மன உளைச்சலுக்கு
ஆளானேன்.

இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை
உணர்ந்து, இழந்த தன்னம்பிக்கையை முதலில்
மீட்டெடுத்தேன். உணவு, உடற்பயிற்சி, ஓய்வு
மூன்றிலும் முழுகவனம் செலுத்தி மீண்டும் உடல்
எடையை குறைத்துவிட்டேன்.
இப்போது நிம்மதியாக இருக்கிறேன்’’
-
------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83929
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். Empty Re: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.

Post by ayyasamy ram Wed 25 May 2016 - 10:37

இடையில் படவாய்ப்புகள் குறைந்ததும்,
திடீரென்று வெளிநாட்டிற்கு ஓடிவிட்டீர்களே?

--
‘‘ஆமாம். அதற்காக நான் கவலைப்படவில்லை.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்துக்
கொண்டிருந்தேன். அதனால் என் உடல்நிலை பாதிக்கப்
பட்டது. என்னை கவனித்துக் கொள்ள நேரம்
கிடைக்கவில்லை.

72 மணிநேர தொடர் படப்பிடிப்பைக் கூட முடித்துக்
கொடுத்திருக்கிறேன். இதனால் மிகவும் சோர்ந்து
போனேன். சற்று இடைவெளியை விரும்பினேன்.

இடைப்பட்ட காலத்தில் ஓய்வெடுத்து, உடல் நிலையை
கவனித்தேன். அப்போது விளம்பரப்படங்களில் நடித்துக்
கொண்டிருந்தேன். பின்னர் இடைவெளியை சரிசெய்து
நடிக்கத் தொடங்கிவிட்டேன்’’
-
தற்போது நிறைய நடிகைகள் வருகிறார்கள். வந்த
வேகத்திலே காணாமலும் போய்விடுகிறார்களே?

--
‘‘அதற்கு காரணம் ரசிகர்கள்தான். அவர்களது ரசனை
காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. புதிது
புதிதாக அவர்கள் நடிகைகளை எதிர்பார்க்கிறார்கள்.

இன்னொரு பக்கம் நடிகைகளிடம் மிகுந்த போட்டி
ஏற்பட்டிருக்கிறது. நடிகைகள் அந்த போட்டியை சமாளித்து
முன்னேறவேண்டும். சினிமாவில் புதியவர்களுக்கு
வாய்ப்பு தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அப்போதுதான் வித்தியாசமான நடிப்பை பார்க்கமுடியும்’’
-
--------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83929
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். Empty Re: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.

Post by ayyasamy ram Wed 25 May 2016 - 10:38

நடிகை என்றால் தொடர்ந்து ரசிகர்களின்
பார்வையில் இருந்துகொண்டிருக்க வேண்டுமா?

‘‘அப்படித்தான் எல்லா நடிகைகளும் நினைக்கிறார்கள்.
ஆனால் நடிகை எப்போதும் ரசிகர் களின் கண்களில்
பட்டுக்கொண்டிருப்பதைவிட, அவரது நடிப்பு எப்போதும்
ரசிகர்களின் மனதில் பதிந்துகொண்டே இருக்கவேண்டும்.

சிறந்த நடிப்பை யாராலும் மறக்க முடியாது.
நடிகைகளுக்கும்–ரசிகர்களுக்கும்
இடையே உள்ள பந்தம் உறுதியானது. இடைவெளி
விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் அவர்கள் ஏற்றுக்
கொள்வார்கள்.

விட்ட இடத்திலிருந்து தொடர முடிகிறது. திருமணமாகி
திரையை விட்டு விலகிய நடிகைகள்கூட மீண்டும்
நடிக்க வந்து வரவேற்பை பெறுகிறார்களே..!’’

லட்சியவாதியாக நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள்
மத்தியில் செல்வாக்கு உயரும் என்பது சரியா?


‘‘அப்படி ஒரு எண்ணத்தை நான் வளர்த்துக்கொள்ள
வில்லை. அந்த கருத்தை நான் நம்பவில்லை. பெண்ணை
மையப்படுத்திய பிரதான கதாபாத்திரம் கிடைத்தால்
மகிழ்ச்சி.

கிடைக்காவிட்டால் கவலையில்லை. கிடைக்கும்
எந்தவொரு கதாபாத்திரத்திலும் நம் திறமையை பதிவு
செய்யவேண்டும். குறிப்பிட்ட ஒன்றிற்காக காத்திருந்து
இருப்பதை இழக்கக் கூடாது’’
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83929
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். Empty Re: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.

Post by ayyasamy ram Wed 25 May 2016 - 10:39

நடிகையாக இருப்பதால் என்ன லாபம்?

‘‘நடிப்பை தவிர்த்து மற்ற வேலைகளிலும்
பணம் சம்பாதிக்கலாம். ஆனால் எப்போதும்
ஒரு நடிகை விழிப்புடன் இருக்கவேண்டும்.

எப்போதும் வெளிச்சத்தில் இருக்கிறோம் என்ற
உணர்வு நம்மை ஒழுங்காக இயங்க வைக்கும்.
இரண்டு வருடகால இடைவிடாத ஓட்டத்தில்
என்னை நான் கவனிக்க மறந்துவிட்டேன்.

இப்போது பயிற்சி செய்து எடையை குறைத்து
விட்டேன். எப்போதும் ஆரோக்கியமாகவும்
அழகாகவும் இருக்கவேண்டும் என்ற உணர்வு
நடிகையாக இருப்பதால் கிடைத்த லாபம்.

ஒரு நடிகைக்கு நடிப்பு என்பது உயிர். அழகு
என்பது உடல். இரண்டும் சேர்ந்ததுதான் நடிப்புத்
தொழில். பொதுவாகவே கதாநாயகி என்றால்
அழகாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகி
விட்டது’’
-
----------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83929
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். Empty Re: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.

Post by ayyasamy ram Wed 25 May 2016 - 11:56

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். UqHI9h2jTBayfwJaXf1e+NTLRG_150501171852000000
-
அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். 5ZgaUFMeSz6vls94w45v+parineeti_chopra
-
நடிகை பரினிதி சோப்ரா.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83929
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர். Empty Re: அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum