ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்பு என்ன?

+4
ஜாஹீதாபானு
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty எதிர்பார்ப்பு என்ன?

Post by T.N.Balasubramanian Sun May 22, 2016 7:29 pm

First topic message reminder :

எதிர்பார்ப்பு என்ன?

சிலர் விரும்பி இருக்கலாம்
சிலர் விரும்பாதிருந்திருக்கலாம் .
எது எப்பிடியோ நாளை முதல் செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் .
தமிழகத்தை மேலும் மேலும் முன்னேற்ற , அவரிடம் பல எதிர்ப்பார்ப்புகள் இருக்கின்றன .
எதை செய்தால், அவர் நீடிக்க முடியும் . மக்கள் இடத்தில் /தேசிய அளவில் தமிழ்நாட்டை
பற்றி உயர்வாகப் பேசவைக்க முடியும் .

ஈகரை உறவுகளே ,உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன ?

ஆரம்பிக்க , இரெண்டொரு எதிர்பார்ப்புகள் என்னிடமிருந்து . மேலும் தொடரும் .
உங்கள் எதிர்பார்ப்புகளை எழுதுங்கள் . நாமும் விவாதிக்கலாம் .

1. சொன்ன வாக்குறுதிகளை , ஒரு கால அளவு வைத்து , வெளிப்படையாக கூறி ,நிறைவேற்றுங்கள் .
2. ஊழல் மிக்க அரசு என்று கூறுகிறார்கள் . அதை ,இல்லை ,இல்லவே இல்லை எனும்படி ஆட்சியை  
அமைத்து வெளி உலகுக்கு நிருபியுங்கள் .
3. தனிமனித புகழ்ச்சியை அறவே ஒழியுங்கள் .
4. மந்திரிகள் செயல்பட விடுங்கள் . ஒழுங்காக செயல்படுகிறார்களா என்பதை கண்காணித்து ,
திருத்துங்கள் . எல்லாவற்றிற்கும் அம்மா அம்மா என்று தலைப்புக்கு  பின் ஒளிய அனுமதிக்காதீர்கள்  .
அவர்கள் நிமிர்ந்து நிற்க ,பயிற்சி அளியுங்கள்

மேலும் .............தொடருங்கள் , உறவுகளே
உங்கள் எண்ணத்தை பகிரவும் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon May 23, 2016 1:53 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by krishnaamma Mon May 23, 2016 9:57 pm

T.N.Balasubramanian wrote:உங்கள் பொன்னான கருத்துகளையும் கூறலாமே ,க்ரிஷ்ணாம்மா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1208237

எழுதுகிறேன் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by சிவனாசான் Tue May 24, 2016 8:16 pm

தகுதி யானவர்குக்கு  நலதிட்டம் சென்றால் நல்லது. தனம் மூலம் நலம் செல்வதை கண்டிக்கனும். ஊழல் லஞ்சம் இன்றி ஊழியர்கள் செயல்பட இரும்பு  கரம் எடுத்து செயல்படனும். 2016 பிபரவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு ஊதியம் பெற்றுள்ளதை திரும்ப அரசுக்கு செலுத்திட ஆணை பிறப்பிக்கனும். இல்லையேல் தன் கடமையை உணர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணி செய்தவர்களுக்கு பத்து நாள் ஈட்டிய விடுப்பு வழங்க ஆணை பிறப்பிக்கனும். இதுதான் நியாயமாகும். கண்டிப்பாக செய்யனும் ...........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by T.N.Balasubramanian Tue May 24, 2016 9:18 pm

பேஷ் பேஷ் PST Rajan ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by krishnaamma Wed May 25, 2016 1:08 am

எனக்கு 2 , 3 சொல்லணும் ஐயா புன்னகை @T.N.Balasubramanian

1. முதலில் முடிந்தால் பிளாஸ்டிக் உபயோகத்தை ஒழிக்கணும், அது முடியாத பக்ஷத்தில் குப்பைகளை நல்லபடி  கையாள மாநகராட்சி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். அதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மக்கும் குப்பைகளை அததற்கான  குப்பைத்தொட்டிகளில்  மட்டுமே போடணும்.   ரோட்டில் போட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்.

இதை எதுக்கு சொல்கிறேன் என்றால், மழைநீர் செல்ல முடியாத படி இந்த பிளாஸ்டிக் கவர்கள் தான் சாக்கடைகளை அடைத்துக் கொள்கின்றன, அதனால் தான் பாதி தொல்லை. அதை சரிவர அகற்றிவிட்டாலே, மழைநீர் சாக்கடைகள் வழியாக பெரும்பாலும் போய்விடும்.

போன மழை லிருந்து சென்னை மக்கள் எதுவுமே கற்கவில்லை என்பது இப்போது பெய்த 2 நாள் மழைலேயே தெரிந்து விட்டது.......கோபிக்கவேண்டாம், பள்ளிக்கரணை  இல் இந்த மழைக்கே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விட்டது என்று பேப்பரில் போட்டிருக்காங்க, பக்கத்திலேயே குப்பை மேட்டில் ஒரு டன் பிளாஸ்டிக்   கழிவுகள் சோகம் .......அது தான் சொல்கிறேன், முதலில் குப்பைகளை ஒழுங்காக  அகற்றினாலே பாதி ப்ரோப்ளேம் solved .

"நீ என்ன குப்பை கொட்டறேன்னு பார்க்கறேன்" என்று வாய் வழக்காய்  சொல்வார்கள் முன்பு..... அதாவது, ஒரு வீட்டு தலைவி, என்ன குப்பை இல் போடுகிறாள் என்று பார்த்தே அவள் குடித்தனம் பண்ணும் லட்சணத்தை சொல்லிவிடலாம் என்று அர்த்தம்....இது வீட்டுக்கு மட்டும் இல்லை நாட்டுக்கும் பொருந்தும்.

அதனால், முதலில் மாநகராட்சி   ஊழியர்களுக்கு 'டிவைன்' கட்டணும்.

2. MNC , கால் சென்டர்  ஆளுங்க மட்டும் தான் இரவு நேரப் பணி  பார்க்கணுமா?............இவங்களையும் பார்க்க சொல்லணும்.....தேர்தல் நேரத்தில் ரோடு போடலை?........மின்னல்  வேகத்தில்..........அது போல எல்லா ரோடுகளும் , இரவோடு இரவாக பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் போடப்படவேண்டும் . அதுவும் END  TO  END .

அது கான்கரீட்  ரோடானாலும் சரி, பிளாஸ்டிக் ரோடானாலும் சரி ( இப்போ மத்திய அரசு பிளாஸ்டிக் ரோடுகள் போடச்  சொல்கிறது )

இதனால் தேவை இல்லாமல் மண், குப்பைகள் சாக்கடைகளை அடையாது....இரவே தெருக்களை கூட்டும் பணிகளும் நடக்கவேண்டும். ...அப்போது தான் இவர்களின் வசதிக்காக  எல்லா ரோட்டு விளக்குகளும் எரியும்..........எனவே, தெருவிளக்குகள்  பிரச்சனையும் தொலையும்.....என்ன சரிதானே? புன்னகை

மீதி அடுத்த பதிவில் ! புன்னகை


Last edited by krishnaamma on Thu May 26, 2016 12:05 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by krishnaamma Wed May 25, 2016 1:24 am

3. அடுத்தது, எல்லோரும் சொல்லும் ஏரி குளங்களை தூர் வாரணும் என்று தான் நானும் சொல்கிறேன். தானாகவே கழிவுகள் எல்லாம் அடித்து சென்றது கூவம் ஆற்றில்.............நதியும் சுத்தமானது.......அதை அப்படியே பாதுகாத்திருக்கலாம், ஆனால் செய்தோமா ?......3 மாதங்களில் மீண்டும் கழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டன அந்த ஆற்றை சோகம்.............ரொம்ப மோசம்.........ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

தூங்கிக் கொண்டிருக்கும் அரசு விழிக்கணும்.............ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டும் போறாது, மணல் கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கணும். இனி எவரும் ஆற்றின் வழித்தடத்தை பிளாட் போட்டு விடாத  அளவுக்கு சட்டங்கள் கடுமையாக கொண்டுவரணும். வார்டு கவுன்சிலர் முதல்,  அமைச்சர்கள்  வரை அனைவரையும் நன்கு வேலை வாங்கணும்.

அவர்கள் ஜெயித்து வந்த தொகுதி தூய்மையாக இல்லாத பக்ஷத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும், அருமையான சுகாதாரமான தொகுதிகளுக்கு பரிசுகள் வழங்கலாம். முன் மாதிரி தொகுதி என்று பேர் தரலாம்.

4. மழை நீர் சேகரிப்பு இன்னும் நடை முறையில் இருக்கா என்று தெரியலை, இல்லா திருந்தால் அதை மீண்டும் நடை முறை படுத்தலாம். 2003 இல் எங்களை வாட்டர் ஹார்வெஸ்ட்  போட்டோக்கள்  இணைத்தால் தான் tax  கட்ட முடியும் என்று சொன்னார்கள் .............அது போல இப்போது சூரிய மின்தகடுகள் பொருத்தி னால் தான் ஆச்சு என்று கட்டுப்பாடு விதிக்கலாம்.

வருடம் 365 நாளும் அடிக்கும் .......கொளுத்தும்  வெயிலை உபயோகிக்காமல் வீணடிக்கிறோம் நாம். ...அவ்வாறில்லாமல், அனைவருக்கும் மானிய விலை இல்  தகடுகள் தந்து பொருத்தும்படி கட்டாயப்படுத்தலாம். இதனால் மின்சார வாரியத்தை  சார்ந்து இருப்பது குறையும்.

இப்போதெல்லாம், இன்வேர்டர் இல் செயல் படும் fridge  கள் கூட வந்து விட்டன.எனவே சூரிய சக்தி லும் அவை இயங்கும்..........வெறும் AC  க்கு மட்டுமே நாம் EB  யை சார்ந்து இருக்கும்படிக்கு நேரும். அப்படி இருக்கும் பக்ஷத்தில் இது அருமை தானே? புன்னகை

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 NYm3Ucj2Q4SianuQzUWe+Ci_kkDEUgAEgg6i

இது போல பொது இடங்களிலும் செய்யலாம். ஆறுகளின் மேலே இது போல அமைக்கப் போவதாய் பேப்பரில் படித்தேன், வரவேற்கிறேன்............ நன்றி  அன்பு மலர்

தொடரும்............புன்னகை


Last edited by krishnaamma on Thu May 26, 2016 12:07 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by krishnaamma Wed May 25, 2016 1:37 am

5. இது ரொம்ப முக்கியமானது.......மது என்னும் அரக்கன் பற்றியது.............இதைப் படிப்படியாக குறைக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள், முதல் கட்டமாக கடைகளின்  நேரத்தை குறைத்திருக்கிறார்கள்.அது மட்டும் போறாது.......... கூடாது கூடாது கூடாது

"கண்டிப்பாக கடைகளில் மட்டுமே குடிக்கணும்" என்றும் சட்டம் கொண்டு வரணும்....இல்லாவிட்டால் மறுநாள் மதியம் வரை சும்மாவா இருப்பான்?.......ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்வார்களே?......அதனால், இதுவும் அவசியம் செய்யணும் ............

அப்போதான் மதியம் வரை ஏதோ கொஞ்சமாவது வேலை வெட்டி பார்ப்பார்கள்.

பெட்ரோல் தனியாக பாட்டில்களில் தரமாட்டார்கள் இல்லியா அது போல இதையும் செய்யணும்....செய்வார்களா? ஜாலி ஜாலி ஜாலி

தொடரும் ...............

ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டதா ஐயா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by M.Jagadeesan Wed May 25, 2016 2:29 pm

நான்காம் முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நான் , மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புவது என்னவென்றால் .....

1.இனிவரும் தேர்தலில் , வோட்டுக்குப் பணம் கொடுத்து , ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக ஆக்கமாட்டேன் .

2. இலவசங்கள் கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக மாற்றமாட்டேன் . மக்கள் அனைவரும் சொந்தக்காலில் நிற்பதற்குத் தேவையான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் .

3. முந்தைய அரசு விட்டுச்சென்ற மக்கள்நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவேன் . காழ்ப்புணர்ச்சிக் காரணமாக அவைகளைக் கிடப்பில் போடமாட்டேன் .

4. காமராஜர்போல பட்டி தொட்டியெல்லாம் சென்று மக்களைச் சந்திப்பேன் . காணொளிக் காட்சி மூலம் ஆட்சி நடத்தமாட்டேன் .

5. என்னுடைய ஆட்சியிலே இனிமேல் ஊழலுக்கு இடமில்லை. நானோ அல்லது அமைச்சர்களோ மாத சம்பளத்தைத் தவிர ஒரு பைசாகூட லஞ்சமாகப் பெறமாட்டோம் . ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அமைச்சர்கள் மற்றும் MLA க்களின் சொத்து விவரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் .

6. கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டசபையை , முதல்வரின் புகழ்பாடும் பஜனைக் கூடமாக மாற்றி விட்டதற்காக வருந்துகிறேன் . இனி சட்டசபையில் எதிர்க் கட்சிகள் பேசுவதற்கும் வாய்ப்பளிக்கப்படும். ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று உறுதியளிக்கின்றேன் .

7. அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்தப்படும் 110 விதியின் கீழ் , அற்பமான அறிவிப்புகளைச் செய்யமாட்டேன் .

8. எதிர்க் கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு , அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்களே இனிமேல் பதிலளிப்பார்கள் . தலையாட்டி பொம்மைகளாக அமைச்சர்கள் இருக்கமாட்டார்கள் .

9. குனிந்து குனிந்து வணக்கம் செலுத்தி முதுகு வளைந்துபோன அமைச்சர்களும் , அதிகாரிகளும் இனிமேல் அவ்வாறு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் .

10. காரணமில்லாமல் அமைச்சர்களையோ அல்லது அதிகாரிகளையோ நான் மாற்றமாட்டேன். அவ்வாறு மாற்றும் பட்சத்தில் அதற்கான காரணத்தை மக்களுக்குத் தெரிவிப்பேன் .

11. இனிமேல் என்னுடைய பேச்சில் நான், எனது, என்னால்தான் என்ற ஆணவதொனி இருக்காது; அடக்கம் , பணிவு மட்டுமே இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

12. வள்ளுவர் கூறியதுபோல காட்சிக்கு எளியனாக நான் இருப்பேன் . யாரும் என்னை எளிதில் சந்திக்கலாம் .

13. எதற்கெடுத்தாலும் மோடிக்குக் கடிதம் எழுதுகின்ற வழக்கத்தை விட்டொழிப்பேன் . தேவையானால் நானே டெல்லிக்குச் சென்று மோடியைச் சந்தித்துப் பேசுவேன் .

14. நான் செல்லும் வழிகளில் இனிமேல் ஆடம்பரமான விளம்பரங்கள் இருக்காது.

15. மக்களால் நான் ; மக்களுக்காக நான் என்பதே எனது கொள்கை. நான் தவ வாழ்வு வாழ்வதால் எனக்கு இவ்வளவு சொத்துக்கள் தேவையில்லை . நான் வசிக்கின்ற போயஸ்கார்டன் வேதா நிலையமே எனக்குப் போதும். மற்ற சொத்துக்களைஎல்லாம் நாட்டுக்காக அர்ப்பணம் செய்யப் போகிறேன் .

16. நடந்துகொண்டு இருக்கின்ற சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஒருவேளை நான் சிறை செல்ல நேரிட்டால் அதற்காக யாரும் கவலைப்படவேண்டாம் . என் விடுதலைக்காக யாரும் அலகு குத்துதல் , தீச்சட்டி ஏந்துதல் , மண்சோறு சாப்பிடுதல் , அங்கப் பிரதட்சணம் செய்தல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம் . அது நாம் சார்ந்திருக்கின்ற திராவிடக் கொள்கைக்கு முரணானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .


MIND VOICE : மக்களுடைய காதுகளில் தேவையான அளவுக்குப் பூ சுற்றிவிட்டேன். உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிகின்ற வரைக்கும் இப்படியே Maintain பண்ணுவோம் .அதற்கப்புறம் நம்முடைய சுயரூபத்தைக் காட்டவேண்டியதுதான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by T.N.Balasubramanian Wed May 25, 2016 5:24 pm

நம்பர் 8 , நானும் வரவேற்கிறேன்
நம்பர் 13, மோடி என்று இல்லை , மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு எழுதி ,அவர்கள் மூலம் தான் , சில வெளிநாட்டு பிரச்சனைகளை தீர்க்கமுடியும் . மாநிலங்களுக்கு அந்த வசதி கிடையாது .

உங்கள் எதிர்ப்பார்ப்பை அவர் கூறுவது போல் எழுதி உள்ளீர் புன்னகை புன்னகை மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by ராஜா Wed May 25, 2016 7:36 pm

M.Jagadeesan wrote:MIND VOICE : மக்களுடைய காதுகளில் தேவையான அளவுக்குப் பூ சுற்றிவிட்டேன். உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிகின்ற வரைக்கும் இப்படியே Maintain பண்ணுவோம் .அதற்கப்புறம் நம்முடைய சுயரூபத்தைக் காட்டவேண்டியதுதான் .
இந்த பொம்பளையின் மனநிலையை மிகசரியாக கணித்துள்ளீர்கள் ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by Dr.S.Soundarapandian Mon Sep 04, 2017 9:46 pm

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 3838410834 எதிர்பார்ப்பு என்ன? - Page 2 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எதிர்பார்ப்பு என்ன? - Page 2 Empty Re: எதிர்பார்ப்பு என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum