புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
113 Posts - 75%
heezulia
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
1 Post - 1%
Pampu
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
278 Posts - 76%
heezulia
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுகதை : அம்மா ! Poll_c10சிறுகதை : அம்மா ! Poll_m10சிறுகதை : அம்மா ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை : அம்மா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:55 am

சிறுகதை : அம்மா !

பிள்ளையின் வாயிலிருந்து நீர் ஒழுகியபடி இருந்தது. சட்டை நனைந்துவிடாமல் இருக்க ஒரு துண்டை எடுத்துப் போர்த்திவிட்டான் குமார். தலை நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்தது.

வாய் ஏதோ புலம்பிக் கொண்டே இருந்தது. அதட்டவும் முடியவில்லை. அதட்டினால் சிரித்தாலும், சிரிப்பான். கோபம் வந்து, கத்தி அமர்க்களம் செய்தாலும் செய்வான்.

வந்த இடத்தில் தேவையில்லாத பிரச்னை வேண்டாம் என்று நினைத்தான் குமார். பிறந்த ஒரே பிள்ளை இப்படி இருப்பது துக்கத்தைக் கொடுத்தது. சுயபச்சாதாபம் மிகுந்து, கண்களில் நீர் வந்தது.

இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும் என்றே தெரியவில்லை. 'அம்மா வருவாங்க. உட்காருங்க' என்றுதான் சொன்னார்கள். இல்லத் தலைவியின் பெயர் கூடத் தெரியவில்லை. யாரைக் கேட்டாலும் அம்மா என்றுதான் சொல்கிறார்கள். அதையேதான் பக்கத்து வீட்டுக் காரரும் சொன்னார்.

'லேடீஸ் இல்லாம உங்களால தனியா உங்க பிள்ளைய பாத்துக்க முடியாது. உள்ள பூட்டி வச்சுட்டு வேலைக்கு போறீங்க. ரொம்ப கத்தி அமர்க்களம் செய்யறான். அம்மாவோட அன்பு இல்லத்துல விட்டுடுங்க. அப்பப்ப போயி பார்த்துக்கலாம்'

'என்னால ரொம்ப பணமெல்லாம் குடுக்க முடியாது சார். உங்களுக்கே தெரியும். இவன் வைத்தியத்துக்காக நெறைய செலவு பண்ணிட்டேன். நானும் பெரிய வேலையெல்லாம் பார்க்கலை. சாப்பாட்டுக்கு வருது. அவ்வளவுதான்'

அன்பு இல்லாம் வெறும் பணத்துக்காக நடக்கறது இல்லை. தைரியமாப் போங்க.
அவர் கொடுத்த தைரியத்தில் கிளம்பி வந்தாகிவிட்டது. அப்பாவை விட்டு விட்டு, வேறு இடத்தில் இருப்பானோ தெரியவில்லை.

'சார், அம்மா வர்றாங்க' பக்கத்தில் வந்த குரல் குமாரின் மௌனத்தை கலைத்தது. பிள்ளையை நேராக உட்கார வைத்தான். வாயைத் துடைத்து விட்டான்.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் கம்பீரத்துடன் நடந்து வந்த அவளைப் பார்த்து, கூப்பின கைகள் அப்படியே நின்றன. எங்கேயோ பார்த்த முகம் என்று, மூளை செய்தி சொல்ல, நினைவலைகள் சுற்றி முடிந்தன. கல்யாணியா? என்ற கேள்வியும், பதிலும் ஒன்றாகவே முடிந்தன. இப்படிக் கூட காலம் சுழலுமா என்ன? இதே கல்யாணியை மணம் முடிக்க மறுத்து உதறின தினம் நினைவுக்கு வந்தது.

தன் ஒரே மகன் குமாருக்கு மீனாட்சி பார்த்த பெண்தான் கல்யாணி. எங்கெங்கு தேடியும், சரியான வரம் அமையாததால், அரைமனதுடன் கல்யாணியை மருமகளாக்க முடிவு செய்திருந்தாள்.

கிராமத்தில் பெண் வீட்டில் திருமணம். ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்க, பெண் வீட்டிற்குச் சொந்தம் என்று சொல்லி கொண்டு வந்த பழைய தோழி நீலா, மீனாட்சியை அடையாளம் கண்டு கொண்டு வந்து பேசினாள்.

மீனா, உன் பிள்ளை குமாருக்கு என்ன குறைச்சல்? ஏன் இப்படி ஒரு இடம் முடிவு பண்ணின? பெண்ணோட அப்பா, பள்ளிக்கூட வாத்தியார்தான். இவளுக்குக் கீழே இரண்டு தங்கைகள், பத்தாதுன்னு, ஒரு தம்பி வேற என்று கிசுகிசுத்தாள்.

எங்கெங்கேயோ தேடினேன் நீலு. என் பிள்ளைக்கு சரியா வரன் அமையல. இனிமே என்னடி பண்ண முடியும்? நிச்சயம் வேற முடிஞ்சாச்சு. சரின்ன விட வேண்டியதுதான்.

ஏன் விடணும்? என்னோட நாத்தனார் பொண்ணு இருக்கா. அவளை குமாருக்கு முடிச்சு வைக்க நானாச்சு. ஒரே பொண்ணு பிக்கல் பிடுங்க கெடையாது.

ஆசையில் மனம் தடுமாறியது. ஆனால் திருமணத்தை நிறுத்துவது எப்படி? அதற்கான வழியையும் நீலாவே சொன்னாள்.

தொடரும் ...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:55 am

'இந்த பாரு, கல்யாணிக்கு அந்த மூன்று நாள் பிரச்னை இருக்கு. மாசா மாசம் உட்கார மாட்டா. குழந்தை பிறக்கும்னு என்ன நிச்சயம்? என் ஒரே பிள்ளைக்கு வாரிசு வேண்டாமான்னு?' கேளு, கூட நானும் பேசறேன். கல்யாணத்தை நிறுத்திட்டு, ஊருக்குப் போயிடு. சத்தமெல்லாம் அடங்கினதும் என் நாத்தனார் பொண்ணை முடிச்சுக்கலாம்.

மினாட்சியின் மனம் மாறியதும், பிள்ளையின் மனத்தை மாற்றியதும், திருமணத்தை நிறத்தினதும் நடந்தது. கல்யாணியின் அப்பா எவ்வளவு கெஞ்சினார்.

இது பெரிய பிரச்னை இல்லம்மா. டாக்டர் கிட்ட காண்பிச்சிட்டோம். சில பேருக்கு இப்படித்தான் இருக்குமாம். ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை நிறுத்தாதீங்கம்மா! இவளுக்குப் பின்னால இரண்டு தங்கைகள் வேற இருக்காங்க.... கண்ணில் நீர் வழிய கல்யாணியின் அம்மா கெஞ்சினாள்.

ஆனால் மீனாட்சியின் காதில் எதுவும் ஏறவில்லை. உறவினர் கூட்டத்தை அழைத்துக் கொண்டு வெளியேறினவளைத் தடுத்து நிறுத்தியவன் கல்யாணிதான்.

'இந்தக் கல்யாண ஏற்பாடுகளுக்கு, எங்கப்பா பணம் செலவழிச்சிருக்கா, கல்யாணத்தை நிறுத்தினதுக்கு நஷ்டஈடு கொடுத்துட்டுப் போங்க.' அறைந்தாற்போல் வந்தது கட்டளை.

பணம் நான் தரேன். வீசிப் போட்டுட்டு வந்துடு என்று நீலா கொடுத்த பணத்தை வாங்கி கல்யாணியிடம் கொடுத்தாள் மீனாட்சி. அந்த இடத்தை விட்டு கிளம்பின போது, குமார் கல்யாணியின் கண்களைச் சந்திக்க நேர்ந்தது. அதில் கண்ணீரும், கலக்கமும், இல்லை. 'நீயெல்லாம் ஒரு மனிதரா?' என்ற கேள்வி இருந்தது. கொஞ்சநாள் மனம் குற்ற உணர்ச்சியில் தவித்தது. போகப் போக எல்லாம் மறந்து போனது.
'சார், அம்மா உங்களைக் கூப்பிடறாங்க...'

பையனை அழைத்துக் கொண்டு, இயந்திரம் போல் உள்ளே சென்றேன். பிள்ளையைப் பற்றின விவரம் சொன்னேன். 'இவன் இப்படி ஆயிட்டான்கற துக்கத்துல, என் பெண்டாட்டி, தற்கொலை பண்ணி செத்துட்டா, அம்மாவும் காலமாயாச்சு. இவனையும் பார்த்துக்கிட்டு என்னால வேலைக்கும் போக முடியலை. வேலைக்குப் போனாதான் சாப்பாடுங்கற நிலை.'

கல்யாணி உதவியாளரை அழைத்தாள். பையனைச் சேர்த்துக் கொள்ளும் விதிமுறைகளைச் சொன்னாள். அந்தக் கேள்வியைக் குமாரால் தவிர்க்க முடியவில்லை.

'நான் யாருன்னு அடையாளம் தெரியறதா?'

'கல்யாணம் பண்ணிக்கறேன்னு வந்துட்டு கேன்சல் பண்ணிட்டுப் போனீங்களே.. நல்லா ஞாபகம் இருக்கு. நானே உங்களைப் பார்த்து நன்றி சொல்லணும்னு நினைப்பேன். இப்ப இப்படி ஒரு சந்தர்ப்பம்.'

நன்றி எதற்கு?

அதையும் அவளே சொன்னாள். 'கல்யாணம் திடீர்னு நின்னு போன அதிர்ச்சியில் எங்கப்பா படுத்த படுக்கையாயிட்டார். உங்ககிட்ட கேட்டு வாங்கின பணத்துல தம்பி, தங்கைகளைக் கரையேற்றினேன். ஏனோ கல்யாணத்துல நாட்டம் வரலை. இரண்டு குழந்தைகளை வச்சு இந்த இல்லம் ஆரம்பிச்சேன். இப்ப 300 குழந்தைகள் இருக்காங்க. அத்தனை குழந்தைகளுக்கும் நான் அம்மா. அதுவும், பெற்றோர்கள் கவனிக்க முடியாமல் உதறின குழந்தைகள்.

அம்மான்னா அன்பு; அக்கறை; கருணை. குறைகளோட அணைச்சுக்கற பெருந்தன்மை இவைதான். இங்க இருக்கற குழந்தைங்க மனவளர்ச்சி குறைந்தவங்க. ஆனால், அன்பை காட்டினா பல மடங்கா திருப்புறதுல, முழு வளர்ச்சி அடைஞ்சவங்க. இவங்க அத்தனை பேரும் என்னை அம்மான்னு கூப்பிடும்போது சிலிர்த்துப் போயிடுது.

ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியுமா?ங்கிற சந்தேகத்துல என்னை நிராகரிச்சீங்க. 300 குழந்தைகளுக்கு அம்மாவாகற பாக்கியம் தந்த உங்களுக்கு நன்றி சொல்லித்தானே ஆகணும்?' கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், குமார் தலைகுனிய கம்பீரமாக நடந்தாள் கல்யாணி.

ர. கிருஷ்ணவேணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 18, 2016 7:41 am

சிறுகதை : அம்மா ! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 9:32 am

நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக